Daily Archives: ஓகஸ்ட் 14th, 2008

6thpaycommission Cabinet approves pay commission report-fullreport

A wage hike higher than those recommended by the Sixth Pay Commission, marginal increase in annual increments and the payment of arrears in cash are some of the sweeteners incorporated in the proposal for Thursday’s Cabinet meeting after Prime Minister Manmohan Singh’s intervention

The new pay package for the 55 lakh Central government employees, to be announced on August 15, proposes a 20 per cent raise over the pay bands Continue reading →

அரிசி, ரவையில் வண்டா? : இதப் படிங்க முதல்ல… : “கிச்’ டிப்ஸ்

அரிசி, ரவையில் வண்டா? : இதப் படிங்க முதல்ல… : “கிச்’ டிப்ஸ்

*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. Continue reading →

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…
திருமணமான உடனேயே, பெரும் பாலானோர் தனிக் குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர் களை பிரிந்து வாழ் கின்றனர். வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற் றோர் மிகவும் வேதனையடை கின் றனர். இந்த வேதனை அவர்களை மன உளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்: Continue reading →

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?
எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன் றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது. Continue reading →

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஒன்று தானா? : அசட்டை கூடாது

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஒன்று தானா? : அசட்டை கூடாது

*உட்கார்ந்து எழுந்திருக் கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன் பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது.

* தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான். Continue reading →

கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ், பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு,காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்

கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்
பல மாடல்களில் யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை விற்பனைக்கு அனுப்பி வரும் கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் DT100, DT101   மற்றும் DT400   என்ற பெயர்களில் மூன்று டேட்டா யு.எஸ்.பி. டிரைவ்களைக் கொண்டு வந்துள்ளது.

DT100 16  ஜிபி டேட்டா வரை கொள்ளக் கூடியது. இவற்றில் மைகோ சிங்க் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிரைவில் உள்ள இமெயில் செட்டிங்ஸ் அமைப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். இதில் 20mbps  வேகத்தில் பைல்கள் படிக்கப்படுகின்றன. எழுதும் வேகம் 10mbps  இவற்றில் உள்ள செக்யூர் ட்ராவலர் புரோகிராம் உள்ளிருக்கும் டேட்டாவிற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு அளிக்கிறது.  DT400 விண்டோஸ் மட்டுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைந்து செயல்படுகிறது. DT 100   மூடி இல்லாமல் இழு வகையில் திறந்து செயல்படும் வகையில் சிறியதாகவும் உள்ளது. DT 101  பல வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்து டிரைவ்களும் ஐந்தாண்டு வாரண்டியில் கிடைக்கின்றன. எந்த நேரமும் இது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.DT 100   மற்றும் DT 400   டிரைவ்கள் 2,4,8 மற்றும் 16 ஜிபி கொள்ளளவு திறனுடன் பல மாடல்களில் கிடைக்கின்றன. DT 101  2,4, மற்றும் 8 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. அவற்றிற்கேற்ப இவை விலையிடப்பட்டுள்ளன.

பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு

இரு வாரங்களுக்கு முன் பல புதிய வரவுகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 3 அதிரடியாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் அறிமுகமாகியது. இப்போது இதன் அடுத்த பதிப்பு சில மாற்றங்களுடன் சென்ற ஜூலை 16ல் வெளிவந்தது.

இது பயர்பாக்ஸ் 3.0.1. நீங்கள் நினைக்கலாம், வந்து சில வாரங்களுக்குள் பதிப்பு 3க்கு புதியதாக என்ன கிடைக்கப் போகி றது என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் சில விஷயங்கள் புதியதாகக் கிடைத்துள்ளன. பல பாதுகாப்பு விஷயங்கள் நிலைப்படுத் தப்பட்டுள்ளன. மேலும் பல சின்ன சின்ன பிரச்னைகள் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப் பட்ட கருத்துக்களிலிருந்து கண்டறியப் பட்டு வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பயர் பாக்ஸ் 2 பதிந்த டைரக்டரியிலேயே பயர்பாக்ஸ் 3 பதிந்தவர்கள் தங்களின் பயர்பாக்ஸ் 2 தொகுப்பு அதிலிருந்து சரியாக இயங்கவில்லை என்று குறை சொன்னார்கள். அது தற்சமயம் களையப்பட்டுள்ளது. அதே போல இணைய தள தகவல்களைப் பிரிண்ட்டிற்கு எடுத்துச் செல்கையில் குறிப்பிட்ட பகுதி தளத்தின் நடுவாக இருந்தால் அச்சேற வில்லை என்ற குறை பரவலாகச் சொல்லப் பட்டது. இதுவும் தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய  http://www.mozilla.com/enUS/ firefox/3.0.1/releasenotes/  என்ற தளத்திற்குச் செல்லவும். இங்கேயே பதிப்பு 3.0.1ஐ இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் இன்னும் பயர்பாக்ஸ் பதிப்பு 2 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா! உங்களுக் கும் ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு ஜூலை 16 அன்று தரப்பட்டுள்ளது.
ஒரு சில விஷயங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன என்றாலும் அவை முக்கிய மானவையே. எனவே இறக்கிப் பதிந்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பதிப்பிற்கான உதவிடும் மையத்தினை மொஸில்லா வரும் டிசம்பர் வரையே இயக்கிடும். அதன் பின்னர் இதற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. அதன் பின் அனைவரும் பயர்பாக்ஸ் 3க்கே செல்ல வேண்டும்.

காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்
பென் க்யூ நிறுவனம் உலகின் மிக ஸ்லிம்மான எல்.சி.டி. மானிட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  BenQ V2400W  என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச தடிமன் 24 மிமீ. இதன் அகலம் 24 அங்குலம்.

ஏரோ டைனமிக் வளைவுகளுடன் பளபளக்கும் கருப்பான வண்ணத்தில் மிக மெல்லிய நீல எல்.இ.டி. விளக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேபிட் ஹீட் சைக்கிள் மோல்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஸ்குரூ போல்ட் எதுவுமின்றி அழகாகக் காட்சி அளிக்கிறது. இதனை ஐந்து வெவ்வேறு வகையில் செட் செய்து கொள்ளலாம். இதன் காண்ட்ராஸ்ட் விகிதம் 4000:1. இந்த மானிட்டரின் விலை ரூ.25,000.
இந்தியாவில் ட்ரான்ஸெண்ட் நிறுவனம் தன்னுடைய காம்பேக்ட் பிளாஷ் 300 எக்ஸ் மெமரி கார்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 16 ஜிபி கொள்ளளவு உடையது. இதில் விநாடிக்கு 45 எம்பி அளவில் தகவல் பரிமாறிமிகச் சிறப்பான வகையில் செயல்படும் ரீட் / ரைட் ஹெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தற்போது காம்பேக்ட் கார்ட்களில் அதிக வேகம் தரப் பயன்படுத்தப்படும் அல்ட்ரா டி.எம். ஏ. மோட் 5 (Ultra DMA mode 5)  இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் போட்டோ கிராபர்கள் தொடர்ந்து போட்டோக்களை எடுக்கலாம். அதே போல வீடியோ காட்சிகளையும் இடைவெளி இன்றி எடுத்துக் கொண்டே இருக்கலாம். இதில் உள்ள பிழை திருத்துவதற்கான Error Correction Code   புரோகிராம் இணைக்கப் பட்டுள்ளது. தகவல்கள் பரிமாறப் படுகையில் ஏற்படும் பிழைகளையும் இது கண்டறிந்து உடனே திருத்துகிறது. ஏறத்தாழ 130 கார்டுகளை சோதனை செய்ததில் சிறப்பிற்கான முதல் இடத்தைப் பெற்றது. 4 ஜிபி கார்ட் ரூ. 4,000, 8 ஜிபி ரூ.6,000 மற்றும் 16 ஜிபி ரூ.11,000 விலையிடப்பட்டுள்ளன. Continue reading →

கம்ப்யூட்டர் பதில்கள்

கேள்வி: பல இணைய தளங்களைப் பார்வை யிடுகையில் இந்த இடத்தில் கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தால் உடனே ஏதாவது அனிமேஷன் புரோகிராம் இயங்குகிறது. இதனை கிளிக் செய்திடுகையில் என்ன நடக்கிறது?

பதில்: இது குறித்து கொஞ்சம் விவரமாகத்தான் எழுத வேண்டும். உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வெப் பிரவுசிங்கில் ஈடுபடுகையில் அதில் ஏதேனும் பிளாஷ் Continue reading →

விண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்

விண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்

உங்கள் நண்பர்களுக்கு அடிக்கடி இமெயில் அனுப்பி செய்திகளை, தகவல்களை அனுப்புகிறீர்கள். ஒரு சில வேளைகளில் நேரில் பேசியது போல பேசுவதையே அனுப்பினால் என்ன? என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் அதனையே மற்றவர்களும் எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கேட்கலாம். Continue reading →

ஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா? சிஸ்டம் சந்தேகங்கள்

ஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா?
சிஸ்டம் சந்தேகங்கள்

விண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. Continue reading →

புதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க

புதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க
புதியதாக கம்ப்யூட்டர் ஒன்றினை உங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கு வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் திட்டத்துடன் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது உங்கள் மகன் அல்லது மகள் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டப்படிப்பிற்கு பயன்படுத்த வாங்கி தந்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் ஸ்பை வேர் எதுவும் வந்திடுமோ என்று பயப்படுகிறீர்களா?
Continue reading →