கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ், பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு,காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்

கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்
பல மாடல்களில் யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை விற்பனைக்கு அனுப்பி வரும் கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் DT100, DT101   மற்றும் DT400   என்ற பெயர்களில் மூன்று டேட்டா யு.எஸ்.பி. டிரைவ்களைக் கொண்டு வந்துள்ளது.

DT100 16  ஜிபி டேட்டா வரை கொள்ளக் கூடியது. இவற்றில் மைகோ சிங்க் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிரைவில் உள்ள இமெயில் செட்டிங்ஸ் அமைப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். இதில் 20mbps  வேகத்தில் பைல்கள் படிக்கப்படுகின்றன. எழுதும் வேகம் 10mbps  இவற்றில் உள்ள செக்யூர் ட்ராவலர் புரோகிராம் உள்ளிருக்கும் டேட்டாவிற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு அளிக்கிறது.  DT400 விண்டோஸ் மட்டுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைந்து செயல்படுகிறது. DT 100   மூடி இல்லாமல் இழு வகையில் திறந்து செயல்படும் வகையில் சிறியதாகவும் உள்ளது. DT 101  பல வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்து டிரைவ்களும் ஐந்தாண்டு வாரண்டியில் கிடைக்கின்றன. எந்த நேரமும் இது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.DT 100   மற்றும் DT 400   டிரைவ்கள் 2,4,8 மற்றும் 16 ஜிபி கொள்ளளவு திறனுடன் பல மாடல்களில் கிடைக்கின்றன. DT 101  2,4, மற்றும் 8 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. அவற்றிற்கேற்ப இவை விலையிடப்பட்டுள்ளன.

பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு

இரு வாரங்களுக்கு முன் பல புதிய வரவுகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 3 அதிரடியாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் அறிமுகமாகியது. இப்போது இதன் அடுத்த பதிப்பு சில மாற்றங்களுடன் சென்ற ஜூலை 16ல் வெளிவந்தது.

இது பயர்பாக்ஸ் 3.0.1. நீங்கள் நினைக்கலாம், வந்து சில வாரங்களுக்குள் பதிப்பு 3க்கு புதியதாக என்ன கிடைக்கப் போகி றது என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் சில விஷயங்கள் புதியதாகக் கிடைத்துள்ளன. பல பாதுகாப்பு விஷயங்கள் நிலைப்படுத் தப்பட்டுள்ளன. மேலும் பல சின்ன சின்ன பிரச்னைகள் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப் பட்ட கருத்துக்களிலிருந்து கண்டறியப் பட்டு வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பயர் பாக்ஸ் 2 பதிந்த டைரக்டரியிலேயே பயர்பாக்ஸ் 3 பதிந்தவர்கள் தங்களின் பயர்பாக்ஸ் 2 தொகுப்பு அதிலிருந்து சரியாக இயங்கவில்லை என்று குறை சொன்னார்கள். அது தற்சமயம் களையப்பட்டுள்ளது. அதே போல இணைய தள தகவல்களைப் பிரிண்ட்டிற்கு எடுத்துச் செல்கையில் குறிப்பிட்ட பகுதி தளத்தின் நடுவாக இருந்தால் அச்சேற வில்லை என்ற குறை பரவலாகச் சொல்லப் பட்டது. இதுவும் தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய  http://www.mozilla.com/enUS/ firefox/3.0.1/releasenotes/  என்ற தளத்திற்குச் செல்லவும். இங்கேயே பதிப்பு 3.0.1ஐ இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் இன்னும் பயர்பாக்ஸ் பதிப்பு 2 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா! உங்களுக் கும் ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு ஜூலை 16 அன்று தரப்பட்டுள்ளது.
ஒரு சில விஷயங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன என்றாலும் அவை முக்கிய மானவையே. எனவே இறக்கிப் பதிந்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பதிப்பிற்கான உதவிடும் மையத்தினை மொஸில்லா வரும் டிசம்பர் வரையே இயக்கிடும். அதன் பின்னர் இதற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. அதன் பின் அனைவரும் பயர்பாக்ஸ் 3க்கே செல்ல வேண்டும்.

காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்
பென் க்யூ நிறுவனம் உலகின் மிக ஸ்லிம்மான எல்.சி.டி. மானிட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  BenQ V2400W  என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச தடிமன் 24 மிமீ. இதன் அகலம் 24 அங்குலம்.

ஏரோ டைனமிக் வளைவுகளுடன் பளபளக்கும் கருப்பான வண்ணத்தில் மிக மெல்லிய நீல எல்.இ.டி. விளக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேபிட் ஹீட் சைக்கிள் மோல்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஸ்குரூ போல்ட் எதுவுமின்றி அழகாகக் காட்சி அளிக்கிறது. இதனை ஐந்து வெவ்வேறு வகையில் செட் செய்து கொள்ளலாம். இதன் காண்ட்ராஸ்ட் விகிதம் 4000:1. இந்த மானிட்டரின் விலை ரூ.25,000.
இந்தியாவில் ட்ரான்ஸெண்ட் நிறுவனம் தன்னுடைய காம்பேக்ட் பிளாஷ் 300 எக்ஸ் மெமரி கார்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 16 ஜிபி கொள்ளளவு உடையது. இதில் விநாடிக்கு 45 எம்பி அளவில் தகவல் பரிமாறிமிகச் சிறப்பான வகையில் செயல்படும் ரீட் / ரைட் ஹெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தற்போது காம்பேக்ட் கார்ட்களில் அதிக வேகம் தரப் பயன்படுத்தப்படும் அல்ட்ரா டி.எம். ஏ. மோட் 5 (Ultra DMA mode 5)  இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் போட்டோ கிராபர்கள் தொடர்ந்து போட்டோக்களை எடுக்கலாம். அதே போல வீடியோ காட்சிகளையும் இடைவெளி இன்றி எடுத்துக் கொண்டே இருக்கலாம். இதில் உள்ள பிழை திருத்துவதற்கான Error Correction Code   புரோகிராம் இணைக்கப் பட்டுள்ளது. தகவல்கள் பரிமாறப் படுகையில் ஏற்படும் பிழைகளையும் இது கண்டறிந்து உடனே திருத்துகிறது. ஏறத்தாழ 130 கார்டுகளை சோதனை செய்ததில் சிறப்பிற்கான முதல் இடத்தைப் பெற்றது. 4 ஜிபி கார்ட் ரூ. 4,000, 8 ஜிபி ரூ.6,000 மற்றும் 16 ஜிபி ரூ.11,000 விலையிடப்பட்டுள்ளன.

%d bloggers like this: