கம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும்
கேள்வி: C:/Temp, C:/Windows/Temp போன்ற போல்டர்களில் ஏராளமான பைல்கள் உள்ளன. அவற்றை அழிக்கலாமா?
பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பல அப்ளிகேஷன்களும் தங்கள் தேவைக்கேற்ப பல தற்காலிக பைல்களை உருவாக்கி இந்த போல்டர்களில் போட்டு வைத்திருக்கும்.
இந்த பைல்களை அவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அழிக்க முடியாது; பயன்படுத்தாத பைல்களை அழிக்கலாம். கம்ப்யூட்டர் பூட்டாகும் பொழுது F8 கீயை அழுத்தி Command Prompt மெனுவைத் தேர்வு செய்து டாஸில் நுழையுங்கள். அங்கிருந்து மேற்கூறிய டைரக்டரிகளில் உள்ள பைல்களை அழியுங்கள். அதற்கான கட்டளையைச் சரியான பாத் இணைத்து கொடுக்க வேண்டும்.
கேள்வி: இன்டர்நெட் பிரவுசரில் .com என்று முடியும் தளங்களுக்கு அதன் பெயரை மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும் http://www. மற்றும் com இணைத்துக் கொள்ளப்படும் என குறிப்பு தந்தீர்கள். அதிகம் பயன்படும் .net .org போன்ற துணைப் பெயரில் முடியும் தளங்களுக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளனவா? அவற்றைத் தெரிவிக்கவும்
பதில்: சரியான கேள்வி. இதனைக் கூறவில்லையே என இடித்துரைப்பது போல் உள்ளது. ஓகே, “www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “www” and “.org” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும்.
கேள்வி: பவர் கண்டிஷனிங் செயலை யு.பி.எஸ். மட்டுமே செயல்படுத்துமா? இது கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒரு ஆங்கில நூலில் படித்தேன். விளக்கம் அளிக்கவும்.
பதில்: யு.பி.எஸ். மின்சாரம் தடைபடும் சமயத்தில் தன்னிடமுள்ள பேட்டரியிலிருந்து மின்சக்தியை இணைத்துள்ள சாதனங்களுக்குத் தரும் ஓர் சாதனமாகும். பவர் கண்டிஷனிங் என்பது பொதுவான ஒரு சொல். கம்ப்யூட்டருக்கு வருகின்ற மின்சாரத்தைச் சீராக அதனுள் கொண்டு சென்றால் தான் அது ஒழுங்காக இயங்கும். இல்லை என்றால் அதன் பகுதிகளுக்கு கேடு வரும். மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது.
Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர். இதனை சர்ஜ் புரடக்டர் போன்ற சாதனங்களாலும் வழங்க முடியும்.
கேள்வி: கம்ப்யூட்டர் மலரில் தந்த டிப்ஸ் படி =now() என்ற கட்டளை கொடுத்தேன். நான் பைல் தயாரித்த தேதி கிடைத்தது. ஆனால் ஒர்க் ஷீட்டில் அந்த தேதி அவ்வப்போது என்று திறக்கிறோமோ அந்த தேதிக்கு மாறுகிறது. எனக்கு பெரும்பாலும் ஒர்க்ஷீட்டில் கொடுத்த தேதி தான் வேண்டும். அதற்கு என்ன செய்வது? கட்டளை என்ன?
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். =now() என்ற கட்டளைக்கு அன்றாட தேதி மாறத் தான் செய்திடும். தயாரிக்கும் நாளுடைய தேதி வேண்டும் என்றால் அந்த செல்லில் கண்ட்ரோல் மற்றும் செமிகோலன் கீகளை அழுத்துங்கள். அன்றைய தேதி கிடைக்கும். பின் இது மாறாது.
கேள்வி : நார்டன் 360 பயன்படுத்தி என் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அழித்தேன். ஆனால் குறிப்பிட்ட நாளுக்குப் பின் அது இயங்கவில்லை. டாலரில் பணம் கட்டச் சொல்லி செய்தி வருகிறது. தேதியை மாற்றி அன் இன்ஸ்டால் செய்து பார்த்தும் வேலை நடைபெறவில்லை. வேறு வழி இருக்கிறதா? அல்லது இதே போன்ற வேறு இலவச சாப்ட்வேர் தொகுப்பு இருக்கிறதா?
பதில்: நீங்கள் குறிப்பிடும் நார்டன் 360 இலவசமாக 15 நாட்களுக்குத் தான் கிடைக்கும். அதன் பின் நீங்கள் தேதியை மாற்றினாலும் செயல்படாது. இந்த முயற்சியை விட்டுவிடுங்கள். இலவச ஆண்டி வைரஸ் தொகுப்பு வேண்டும் என்றால் AVG AntiVirus Free Edition எனஅழைக்கப்படும் ஆண்டி வைரஸ் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தலாம். பயன்படுத்த எளிதானது; இதனுடைய அப்டேட் அன்றாடம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை இயக்க கம்ப்யூட்டரில் அதிக இடமும் தேவைப்படாது. இதனைப் பெற http://free.grisoft.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகவும்.
கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் அன்றைய தினத்தை இன்ஸெர்ட் செய்திடும் குறிப்பு தந்த நீங்கள் வேர்டில் ஏன் தரவில்லை? தருமாறு வேண்டுகிறேன். (நான் வேர்ட் 2003 வைத்து உபயோகப்படுத்தி வருகிறேன்.)
பதில்: பலமுறை கம்ப்யூட் டர் மலரில் இதற்கான தகவல் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இதோ இன்னொரு முறை தருகிறேன். நீங்கள் பயன்படுத் தும் வேர்ட் 2003 தொகுப்பில் இந்த வசதி மிகவும் விஸ்தாரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு எங்கு தேதி மற்றும் நாளினை இடைச் செருக வேண்டுமோ அங்கு கர்சரை நிறுத்தவும். பின் மெனுவில் Insert என்னும் பிரிவை அழுத்தி அதில் “Date and Time” என்று தரப்பட்டிருப்பதனைக் கிளிக் செய்திடவும்.
இப்போது Avail able Format என்ற பிரிவில் 16 வகையான பார்மட்டுகள் இருக்கும். நேரத்தைக் கூட அமைக்கலாம். அருகேயே என்று ஒரு பிரிவு இருக்கும். நீங்கள் தமிழ் மொ ழிக்கான செட்டிங்ஸ் அமைத்திருந்தால் தமிழிலும் நாள், கிழமை,நேரம் கிடைக்கும். இவற்றைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்தால் அந்த பார்மட் படி நாள், தேதி, நேரம் அமைக்கப்படும். இதில் இன்னொரு வசதியும் உள்ளது. Upadate Auto matically என்று இருப்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் ஒவ்வொரு முறை டாகுமெண்ட்டைத் திறந்து எடிட் செய்து மீண்டும் மூடும்போது தேதி, கிழமை நேரம் தானாக மாற்றப்படும்.
[…] கம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும் […]