இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு

இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு
கூகுளின் குரோம் பிரவுசர் வெளியானபின் பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஆப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக முதன் முதலாகப் பலர் நாடிய தொகுப்பு ஆப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஆப்பரா பிரவுசரைப் பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச் சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வார்கள்.

இருப்பினும் குரோம் வெளியானபோது ஏற்பட்ட சலசலப்பு என்றைக்கும் ஆப்பராவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து மறைவிலேயே அவ்வளவாகப் பேசப் படாமல் இருந்த ஆப்பராவிற்கு தற்போது புதிய பல பரிமாணங்கள் தரப்பட்டுள்ளன.

இத்தொகுப்பின் (டெஸ்க்டாப் பதிப்பு 9.6) இந்திய மொழி தொகுப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இவை கிடைக்கின்றன. இதன் மொபைல் பிரவுசர் பதிப்பான ஆப்பரா மினியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதால் ஆப்பரா பிரவுசர் தயாரிப்பவர்கள் இந்திய மொழிகளில் ஆர்வம் கொண்டு இவற்றை வடிவமைத்துள்ளனர்.  இந்திய மொழிகளில் கிடைக்கும் வசதியுடன் இதனை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுடன் இணைந்தும் பயன்படுத்தலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கான பதிப்பினை http://www.opera.com  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்தும் மொபைல் போனுக்கான பதிப்பினை http://www.operamini.com/pc/ generic/generic_advanced_midp_2/ என்ற தளத்திலிருந்தும் இலவசமாக இறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ஆப்பராவின் அவதாரம் பலரைப் பேசவைத்துள்ளது. இதன் புதிய வெளியீட்டிற்கென இந்தியா வந்த இதன் தலைவர் டெட்ஸ்னர் இது பற்றி பத்திரிக்கையாளர்களுடன் மனந்திறந்து உரையாடினார்.
முதலில் ஆப்பராவின் சிறப்பம்சங்கள் சில:
* ஆப்பரா லிங்க் பயன்படுத்தி பல்வேறு கம்ப்யூட்டர்களிடையே புக்மார்க்குகளை சிங்க்ரனைஸ் செய்திடலாம்.

* இதில் இணைந்துள்ள இமெயில் புரோகிராமினைப் பயன்படுத்தி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இமெயில் அனுப்பலாம்.

* இணையத் திருடர்களிடமிருந்து உங்கள் பெர்சனல் தகவல்களைக் காப்பாற்றும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* படங்களைத் தேவைப்பட்டால் மட்டுமே கொடுப்பதன் மூலம் பேண்ட்வித் திறனைக் காப்பாற்றுகிறது.

* இதன் டவுண்லோட் மேனேஜர் டவுண்லோட் செய்யப்படுகையில் இடைவெளி ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது.

* ஆப்பரா 9.6 குறைந்த மெமரி உள்ள பழைய கம்ப்யூட்டர்களிலும் சிறப்பாக இயங்குகிறது.

* முழுத் திரையையும் பயன்படுத்தி இணைய தளங்களைக் காட்டும் திறனும் இதற்கு உள்ளது.

* ஆப்பரா எப்போதும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கென ஒரு பிரவுசரைவடிவமைக்கும். பின் அதிலேயே சில மாற்றங்கள் செய்து மொபைல் போனுக்கும் மாற்றி அமைக்கும். ஏனென்றால் அப்போதுதான் அதனைப் பயன்படுத்துபவர் களுக்கு அது எளிதாக இருக்கும்.

* ஆப்பரா முழுமையான ஓப்பன் சோர்ஸ் புரோகிராமாக இருக்காது. ஏனென்றால் அனைத்து பிரவுசர்களுமே ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் பின் போட்டியும் அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் புதிய அனுபவும் கிடைக்காமல் போய்விடும். போட்டி இருந்தால் தான் ஒன்று மற்றவற்றைக் காட்டிலும் நல்லது என்று தெரிய வரும்.

* ஆப்பரா பிரவுசர் ஐ–போனில் கிடைக்காது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டு மற்றவற்றை அனுமதிக்க வேண்டும்.

* ஆப்பரா பல காலமாக தந்து வந்த அம்சங்களையே காட்டி பயர்பாக்ஸ் அல்லது குரோம் மீடியாக்கள் மூலமாக சலசலப்பை ஏற்படுத்தியபோது ஆப்பரா என்றும் அமைதியாகவே இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களிடையே செய்தி பரவியதனால் குரோம் வெளியான போது ஆப்பராவை டவுண்லோட் செய்தவர்கள் எண்ணிக்கை 20% உயர்ந்தது. ஒவ்வொரு போட்டி பிரவுசரும் வெளியாகும்போது இது நடப்பது வாடிக்கையாகி விட்டது.

* ஒவ்வொரு முறை போட்டி பிரவுசர் வருகையிலும் அதனை ஒரு பயமுறுத்தலாகத்தான் ஆப்பரா எடுத்துக் கொள்கிறது. ஆனால் புதிய பிரவுசர் வருகையில் ஆப்பராவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. ஏனென்றால் புதிய பிரவுசர்களின் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் மீடியாக்களும் மக்களும் ஆப்பராவைப் பற்றி அதிகம் பேசுகின்றனர்.

* பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆப்பராவினை 2.5 லிருந்து 3 கோடி பேர் வரை பயன்படுத்துகின்றனர். மொபைல் போனுக்கான பிரவுசரைப் பொறுத்தவரை ஆப்பரா மினி மற்றும் ஆப்பரா மொபைல் முன்னணியில் உள்ளது.

* ஆப்பரா மினி மற்றும் ஆப்பரா மொபைல் பிரவுசர்கள் மிகக் குறைந்த அளவிலான பேண்ட் வித் கொண்டு இயங்கும் மொபைல் போன்களில் கூட நல்ல பிரவுசிங் அனுபவத்தினைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கை பயர் போன்ற பிரவுசர்கள் அதிக அளவிலான பேண்ட் வித் மற்றும் அதிக அளவில் டேட்டாவினைக் கையாளும் திட்டங்களைக் கொண்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. ஆப்பரா பிரவுசர்கள் குறைந்த பேண்ட்வித் உள்ள இடத்திலும் சிறப்பாகச் செயல்படும். அதிக பேண்ட் வித் கிடைக்கும்போது இன்னும் திறனுடன் செயல்படுகிறது.

* இதுவரை இல்லாத வகையில் மக்கள் அதிகமான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறார்கள். டெலிவிஷனில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்துதல் கூடுதல் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் பிரவுசரின் பயன்பாட்டில் பல புதிய பரிமாணங்கள் உருவாகி வருகின்றன. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் புதியவழிகளோ வகைகளோ ஏற்படுவது இல்லை.

ஆப்பராவின் சண்டிகார் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. இந்தியாவில் ஆப்பராவின் பயன்பாடு குறித்து அந்த நிறுவனம் அதிக மகிழ்ச்சியில் உள்ளது. அதன் விளைவுதான் இந்திய மொழிகளில் இதன் பதிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆப்பரா நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் பல ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. டாட்டா இண்டிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பார பிரவுசர்களை விற்பனை செய்திடும்போதே பதிந்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது. இது போல உலக அளவில் 30 நிறுவனங்களுடன் ஆப்பரா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

எக்ஸெல் செல் கொஞ்சம் பார்மட்டிங்

எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் உள்ள டேட்டா ( எண் அல்லது சொற்கள்) வில் ஒரு பகுதியினை மட்டும் பார்மட் செய்திட திட்டமிட்டால் என்ன செய்யலாம்? எடுத்துக் காட்டாக செல் ஒன்றில் மூன்று சொற்களில் ஒரு பெயர் இருக்கலாம். அதில் ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் போல்டாகவோ அல்லது சாய்வாகவோ அல்லது வேறு எழுத்து வகையிலோ அமைக்க வேண்டும் என்றால் முடியுமா? இந்த சந்தேகம் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவருக்கு வர அவர் முயற்சித்துப் பார்த்தார். செல்லைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தால் அனைத்துமே பார்மட் ஆகிறதே என்று முதல் முயற்சியிலேயே சந்தேகப்பட ஆரம்பித்தார். ஆனால் பின்னர் பாதி அளவில் செயல்பட முடிந்ததைக் கண்டு பிடித்தார்.

முதலில் செல்லை ஜஸ்ட் அப்படியே தேர்ந்தெடுக்காமல் அதன் மீது டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கர்சர் செல்லினுள் சென்றுவிடும். இதன் மூலம் செல்லினுள் உள்ளதை நீங்கள் எடிட் செய்திட முடியும். அல்லது செல்லைத் தேர்ந்தெடுத்த பின் பார்முலா பாருக்குள் கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திடலாம். இப்போது கர்சரைப் பயன்படுத்தி நீங்கள் எதனை எடிட் செய்திட வேண்டுமோ அதனை மட்டும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின் பார்மட்டிங் ஆப்ஷனைப் பெறுங்கள். இதனைப் பெறவும் இரு வழிகள் உள்ளன. Format  மெனு சென்று Format Cells  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு கண்ட்ரோல் + 1 அழுத்தலாம். இப்போது தேவையான பார்மட்டிங் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறினால் நீங்கள் விரும்பிய பகுதியில் பார்மட்டிங் முடிந்திருக்கும்

%d bloggers like this: