இமெயில் முகவரி திருட்டு

இமெயில் முகவரி திருட்டு
திடீரென வழக்கத்திற்கு மாறாக சிலருக்கு அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். ஒரு சிலர் கவலைப் படுவார்கள். ஒரு சிலர் காரணத்தை ஆய்வு செய்வார்கள்.நம் வாசகர்கள் பலர் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய இமெயில் முகவரிகளை தேவையில்லாமல் பல வெப் சைட்டுகள் பயன்படுத்துகின்றனவோ என கவலைப்பட்டு எழுதி, இதனைக் கண்டு பிடிக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். உங்கள் இமெயில் முகவரிகளைப் பயன் படுத்தும் வெப்சைட்டுகள் சிலவற்றை நீங்கள்நிச்சயமாய்க் கண்டறியலாம். ஆனால் அனைத்து ஸ்பேம் மெயில்களும் எங்கிருந்து வந்தன என்று கண்டறிவது சற்று கஷ்டமான செயல்.

முதலில் உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் பயன்படுத்தும் சர்ச் இஞ்சினில் உங்களுடைய இமெயில் முகவரியினை டைப் செய்து உங்கள் முகவரி எங்கெல்லாம் இருக்கிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது எனக் கண்டறியவும். இந்த தேடல் முடிவுகள் மூலம் எந்த எந்த தளங்கள் உங்கள் இமெயில் முகவரியை அணுக முடியும் எனக் காணலாம். இவற்றில் பெரும்பாலும் நீங்கள் கடிதங்கள் எழுதும் இணைய தள முகவரிகளாக இருக்கலாம். அல்லது நீங்கள் பயன்படுத்தும் சமூக தளங்களாக இருக்கலாம். இவற்றிற்கும் மீறி பல தளங்கள் காட்டப்பட்டால் உடனே ஒவ்வொரு தளம் குறித்தும் அவற்றுடன் உங்களுக்கான தொடர்பு குறித்தும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவும். நீங்கள் அடிக்கடி இணைய தளங்கள் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்களா? அல்லது சமுதாய சேவை செய்திடும் அமைப்புகளின் இணையதளங்களைப் பார்வையிட்டு ஏதேனும் கடிதங்கள் எழுதுகிறீர்களா? அவற்றின் உறுப்பினரா? ஏதேனும் நியூஸ் லெட்டர்களைப் படித்து அவை இலவசமாக அனுப்பப்படுகிறது என்பதற்காக அவற்றைப் பெற உங்கள் முகவரிகளைத் தருகிறீர்களா? மேற்கண்ட செயல்களை நீங்கள் மேற்கொள்கையில் நிச்சயம் உங்கள் இமெயில் முகவரிகளை அவை கேட்டிருக்கும்.
இத்தகைய தளங்களில் சில, சில மட்டுமே, உங்கள் முகவரிகளை தளங்களில் வெளியிடும். அல்லது பிற தள நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றிற்கு முகவரிகளைத் தரும். அல்லது பாதுகாப்பற்ற முறையில் இவை உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களின் முகவரிகளைத் தங்கள் தளத்தில் வைத்திருக்கும். அவற்றை மற்றவர்கள் எளிதாகத் தேடி எடுத்து ஸ்பேம் மெயில்கள் அனுப்ப பயன்படுத்தலாம். எப்படியோ, உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் அனுப்பும் தளங்களின் முகவரிகள் கிடைக்கையில் அவற்றுடன் உங்கள் உறவினை முறித்துக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற நியூஸ் லெட்டர்கள் அனுப்பும் தளங்களின் வாசகர்கள் பட்டியலிலிருந்து முகவரியை எடுக்கும் வசதியைப் பயன்படுத்தி நீக்கிவிடுங்கள். தளங்கள் பாதுகாப்பானது என்று தெரிந்தால் மட்டுமே உங்கள் முகவரிகளைத் தரவும். இல்லையேல் முகவரிகளைத் தரும் பழக்கத்தினை விட்டுவிட

2 responses

 1. […] இமெயில் முகவரி திருட்டு […]

 2. உங்கள் தளத்ம் இன்றுதான் என் பார்வைக்கு கிட்டியது.
  மிக அருமையான, பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
  தொடர்ந்து எழுதி வாருங்கள்.

  http://www.comfocus.info வந்து பார்த்து உங்கள் மேலான கருத்தை கூறுங்கள்.

  http://www.focuslanka.com திரட்டியில் இணைந்தீர்களானால் உங்கள் பயனுள்ள தளம் பலரை சென்றடையும் என்பது எனது அபிப்பிராயம்.

  நன்றி.
  நட்புடன்
  நிலா பிரியன்

%d bloggers like this: