கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்
வேர்ட்

வேர்டில் சொல் கண்டுபிடித்து மாற்று

வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும்.

இதற்கெனவே வேர்ட் தொகுப்பில் Find and Replace  என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit  மெனு சென்று அதில் Find  கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள  Ctrl+F      என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும்.  அதில் தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய்திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ,சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்களாகவோ இருக்கலாம். அதன்பின் Replace  என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம்.

பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next   என்ற கட்டத்தில் கிளிக் செய்தால் அடுத்த சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால் அந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல்லை அமைக்க  Replace  என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால்  Replace All   என்பதில் கிளிக் செய்தால் போதும். உடனே அனைத்து இடங்களிலும் தேடி அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.

டெக்ஸ்ட்டை டேபிளாக மாற்ற

வேர்ட் டாகுமெண்ட் டில் டைப் செய்யப்பட்ட சொற் களை ஒரு டேபிளுக்குள் கொண்டு வரலாம். அதாவது சொற்கள் தாமாக சில வரிசைகளுக்குள் அமைக்கப்படும். இதில் சொற்களுக்கு இடையே கமாக்களை அமைத்தால் அவை டேபிள் அமைக்கும் போது சொற்களைப் பிரிக்கும் அடையாளங்களாகச் செயல்பட்டு டேபிளில் வரிசையாக அமைக்கும்.  முதலில் எந்த சொற்களைப் பிரித்து டேபிளில் அமைக்க வேண்டுமோ அவற்றிற்கு இடையே டேப் பட்டன் தட்டி இடைவெளி உருவாக்கவும். அல்லது கமா டைப் செய்திடவும்.  பின் டேபிள் மெனு சென்று அதில் “Convert”  கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலும் ஒரு துணை மெனு கிடைக்கும். இந்த மெனுவில் “Convert text to Table”  என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இப்போது  “Convert Text to Table”  என்ற டயலாக் பாக்ஸ் தரப்படும். இதில் எத்தனை நெட்டுவரிசை (columns)  என்பதையும் டெக்ஸ்ட்டை எது பிரிக்க வேண்டும் என்பன போன்ற கேட்டுள்ளவற்றை அமைக்கவும். பின் ஓகே பட்டன் கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் டேபிள் ஒன்றில் அமைக்கப்பட்டு காட்சியளிக்கும்.

டேபிளை டெக்ஸ்ட்டாக மாற்ற

வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை அழகாக உருவாக்கி அதில் டேட்டாக்களையும் டைப் செய்த பின்னர் அதில் உள்ள சொற்களையும் பிற டேட்ட õவினையும் டெக்ஸ்ட்டாக கட்டங்கள் ஏதுமின்றி மாற்றலாம். இதற்கு சம்பந்தப்பட்ட டேபிளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின்னர் Table   மெனுவில் இருந்து Convert  என்னும் கட்டளையை தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் “Convert Table to Text”  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடினால் டேபிள் டேட்டாக்கள் டெக்ஸ்ட்டாக மாறி இருப்பதனைப் பார்க்கலாம்.

%d bloggers like this: