Advertisements

ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாமே!

ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாமே!
உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTA  தான் கவனித்துக் கொள்கிறது.

கம்ப்யூட்டரைச் சிறந்த முறையில் பயன்படுத்த முழுமையாகக் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் இமெயில் அனுப்புவதில் மட்டும் பலருக்கு ஒரு தணியாத ஆசை. இமெயிலை எழுதி பட்டனை அழுத்துகிறோம். எப்படி நாம் குறிப்பிட்ட முகவரிக்கு இது எடுத்துச் செல்லப்பட்டு அனுப்பப்படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல். அப்படி அதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கையில் பல சொல் தொடர்கள் நம் கவனத்திற்கு வந்தன. அப்படி ஒரு சொல் தொகுதி தான் Mail Transfer Agent   என்பது. இதைச் சுருக்கமாக MTA   என்றும் அழைப்பார்கள்.

நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send   பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA  என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTA  தான் கவனித்துக் கொள்கிறது. இது  Mail Submission Agent   மற்றும் Mail User Agent  என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார்செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். இமெயில்கள் வகைப்படுத்தப் பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)  க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agent   தான் பார்த்துக் கொள்கிறது.

பேஜ்மேக்கர் டிப்ஸ்
டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ள வர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ் மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிரா மிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்தல்:

* டெக்ஸ்ட் பைலில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அந்த பாரா முழுவதும் செலக்ட் செய்திட மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும்.

* ஒரு முறை அல்லது இருமுறை கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்துவிட்டால் பின் எத்தனை முறை ஷிப்ட் + கிளிக் செய்திடும் போதும் அந்த எல்லை வரை அனைத்து டெக்ஸ்ட்டும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் படும்.

* ஆரோ கீகளை அழுத்தினால் கர்சர் நகரும். இதற்கு நம்பர் பேடில் இணைந்திருக்கும் ஆரோ கீகளைப் பயன்படுத்த விரும்பினால் நம் லாக் அணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆரோ கீகள் உள்ள சிறிய பேடில் உள்ள கீகளைப் பயன்படுத்தலாம். ஆரோ கீகளை கண்ட்ரோல் கீயையும் இணைத்து அழுத்தினால் கர்சர் ஒவ்வொரு சொல்லாகத் தாவும். இடது, வலது, மேல், கீழ் என ஷிப்ட் கீயை ஆரோ கீகளுடன் அழுத்துகையில் டெக்ஸ்ட் தொடர்ந்து அந்த திசையில் செலக்ட் ஆகும்.

எழுத்தின் அளவை குறைக்க:

பேஜ் மேக்கரில் ஏற்படுத்திய ஸ்டோரி டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட பாண்ட் சைஸின் அளவைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. ஷார்ட் கட் கீகளாக உள்ளவற்றைப் பார்க்கலாம். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு > அழுத்தினால் எழுத்தின் அளவு 10, 12, 14, 18 என பெரிய சைஸுக்கு மாறும். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு < அழுத்தினால் எழுத்தின் அளவு மேலே சொன்னபடி குறையும். இப்படி இல்லாமல் ஒவ்வொரு அளவாகக் குறைக்க / அதிகரிக்க வேண்டும் என்றால் கண்ட்ரோல் +ஷிப்ட் கீயை அழுத்தி > அல்லது < பயன்படுத்த வேண்டும்.

டெக்ஸ்ட் மாற்றம்: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் கீழ்க்கண்ட ஸ்டைல் மாற்றங்கள் ஏற்படுத்த கீ சேர்க்கைகள் தரப்பட்டுள்ளன.

நார்மல் – எப்5 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + ஸ்பேஸ் பார்
போல்ட் – எப்6 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் +  B
இடாலிக்ஸ் – எப் 7 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + K
சப்ஸ்கிரிப்ட் – கண்ட்ரோல் + ச
சூப்பர்ஸ்கிரிப்ட் – கண்ட்ரோல் +ஷிப்ட்+ ச
அடிக்கோடிட – கண்ட்ரோல் +ஷிப்ட்+  U

Advertisements
%d bloggers like this: