யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட

யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட
யு–ட்யூப் தளத்தினைப் பார்த்துக் கொண் டிருக்கையில் நல்லதொரு படம் ஒன்று உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. அதனை நீங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரசன்டேஷன் பேக்கேஜுக்கு சரியான ஒரு இணைப்பாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். இதனை எப்படி உங்கள் பேக்கேஜில் இணைக்கலாம் என்று பார்ப்போமா?

முதலில் உங்கள் கவனத்தைக் கவர்ந்த யு–ட்யூப் மூவியை டவுண்லோட் செய்திடவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் பதிந்து சேவ் செய்திடவும். பெரும்பாலான மூவி பைல்கள் பிளாஷ் வீடியோ பார்மட்டில் இருக்கும். டவுண்லோட் செய்த மூவியை வேறு எந்த பொதுவான பார்மட்டுக்கு மாற்றவும். எடுத்துக் காட்டாக ..wmv (windows media video file), avi (windows video file)  அல்லது .mpeg (movie file)  என எந்த பார்மட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதன் பின் எந்த பிரசன்டேஷன் பேக்கேஜில் இதனை இணைக்க வேண்டுமோ அதனைத் திறந்து கொள்ளவும்.

பின் Insert  மெனு திறக்கவும். இதில் “Movies and Sounds”  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் “Movie from File”  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் எந்த ஸ்லைடில் இணைக்க வேண்டுமோ அந்த ஸ்லைடைத் திறக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது “Do you want your movie to play automatically in the slide show? If not, it will play when you click it”  என்ற நீளமான வாசகம் இருக்கும். ஸ்லைட் ஷோ காட்டப்படுகையில் குறிப்பிட்ட ஸ்லைட் வருகையில் தானாக இயக்கப்பட வேண்டுமா? அல்லது கிளிக் செய்து இயக்க வேண்டுமா? என்று ஒரு ஆப்ஷன் கேட்கும்.  நீங்கள் விரும்பும் வகையில் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும். பின் நீங்கள் பிரசன்டேஷனைத் திறக்கையில் இந்த மூவி நீங்கள் செட் செய்தபடி ஓடும். பின் மற்ற ஸ்லைடுகள் காட்டப்படும்.

7.A . மோகம் முப்பது நாள்
கூகுல் குரோம்

குரோம் பிரவுசர் வெளியானவுடன் பன்னாட்டளவில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியானதால் பலவகையான புதிய வசதிகளை மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் விருப்பங்களில் பலவற்றைப் பூர்த்தி செய்திடும் வகையில் பிரவுசரும் அமைந்தது.  குறிப்பாக இதன் செம ஸ்பீட் இதுவரை எந்த பிரவுசரிலும் தாங்கள் அனுபவிக்காதது என மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தாங்கள் பழைய பிரவுசர்களில் பழக்கப்பட்ட சில விஷயங்கள் இல்லாதது இந்த பிரவுசர் பயன் படுத்துவதற்குத் தடைக் கல்லாக இருப்பதையும் மக்கள் உணர்ந்தனர். குறிப்பாக அட்ரஸ் பார் ட்ராப் டவுண் மெனு இல்லாதது ஒரு பெரும் குறையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அட்ரஸ் பாரில் டைப் செய்வதற்குப் பதிலாக அட்ரஸ் பாரினைக் கிளிக் செய்து அண்மையில் பிரவுஸ் செய்த தளங்களின் முகவரிகளின் மீது கிளிக் செய்து பெறுவது பொதுவாக அனைத்து பிரவுசர்களிலும் தரப்படும் ஒரு வசதியாகும். இந்த வசதி இல்லாதது மக்களை மீண்டும் பழைய பிரவுசர்கள் பக்கமே திருப்பி விட்டது. பலரும் மீண்டும் பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

குரோம் வெளியான ஓரிரு நாட்களில் பன்னாட்டளவில் இன்டர்நெட் பயன் படுத்துபவர்களில் 1% இடத்தை குரோம் பிரவுசர் பிடித்திருந்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இது 0.85% ஆகவும் அடுத்த வாரத்தில் 0.77% ஆகவும் குறைந்தது. இதுவும் தங்களுடைய வழக்கமான பிரவுசிங் பணிகளை முடித்த பின்னர் பொழுது போக்கும் வகையில் பிரவுசிங்கை மேற்கொள்பவர்களே குரோம் பிரவுசரை நாடுகின்றனர் என்று தெரிகிறது. இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் சில அம்சங்களைத் தரப்படுத்திவிட்டன என்பதே. அவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து நாம் மீள முடியவில்லை.  அடுத்ததாக குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்திட வேண்டுமென்றால் இன்ஸ்டால் செய்கையில் நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து பெரும்பாலான பைல்களை டவுண்லோட் செய்திட வேண்டும். இது மற்றவற்றிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால் பல நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தின் சில தளங்களுக்கு தங்கள் ஊழியர்கள் செல்லக் கூடாது எனத் தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சென்ற வாரங்களில் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆப்பரா மற்றும் நெட்ஸ்கேப் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றன. சபாரி பிரவுசர் குரோம் பிரவுசரால் தன் இடத்தை இழக்கவில்லை. ஏனென்றால் மேக் கம்ப்யூட்டருக்கான குரோம் பிரவுசரை இன்னும் கூகுள் தரவில்லை. மேலும் கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசர் குறித்து அவ்வளவாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால் தங்களுடைய பிரவுசர் நிச்சயம் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெறும் என கூகுள் நம்புகிறது. இதற்குக் காரணம் குரோம் ஒரு ஓப்பன் சோர்ஸ் பேக்கேஜ் ஆகும். இதனால் பல வசதிகளைத் தரும் ஆட்–ஆன் தொகுப்புகள் விரைவில் வெளிவந்து வாடிக்கையாளர்களைக் கவரும் என கூகுள் எதிர்பார்க்கிறது.

One response

  1. […] யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடி… […]

%d bloggers like this: