யாங்க்கி கிளிப்பர் விரிந்து அகன்ற கிளிப்போர்டு

யாங்க்கி கிளிப்பர் விரிந்து அகன்ற கிளிப்போர்டு

நாம் ஒவ்வொரு முறை டெக்ஸ்ட் அல்லது படம் எதனையாவது காப்பி செய்திடுகையில் அதனைத் தாங்கிக் கொள்வது விண்டோஸ் கிளிப் போர்டுதான். இவற்றை புரோகிராம்களுக் கிடையே மாற்ற மிக அருமையான ஒரு சாதனம் இது. ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது. விண்டோஸ் கிளிப் போர்டில் ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். (எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் கிளிப் போர்டில் 24 விஷயங்களை காப்பி செய்து வைக்கலாம்) ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்தாதவர்களுக்கு விண்டோஸ் கிளிப் போர்டு ஒன்றுதான் உள்ளது. இந்த பிரச்னையில் உதவும் வகையில் தான் யாங்க்கி கிளிப் போர்டு நமக்குக் கிடைத்துள்ளது. யாங்க்கி கிளிப்பர் ஓர் இலவச புரோகிராம் ஆகும். இதில் நூற்றுக் கணக்கில் டெக்ஸ்ட் பகுதிகளையும் படங்களையும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். அலுவலகங்களில் தலைப்புகள், கடிதத்தை முடிக்கும் போது வழக்கமாக அமைக்கும் வாக்கியங்கள் மற்றும் வர்த்தக ரீதியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வாசகங்கள், படங்களைப் போட்டு வைத்து டாகுமென்ட்களைத் தயாரிக்கையில் இவற்றில் தேவையானதைப் பயன்படுத்த இந்த யாங்க்கி கிளிப்பர் உதவுகிறது. இதனை எப்படிப் பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இதனை இலவசமாகப் பெற http://www.tinyurl.com/9yn3y என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த பக்கம் கிடைத்தவுடன் மேலாக உள்ள Product லிங்க்கைக் கிளிக் செய்திடவும். அதன் பின் YCK3 என்ற இடத்தில் கிளிக் செய்து கிளிப்பருக்கான இலவச புரோகிராமினைப் பெறவும். மீண்டும் இடது புறம் Download என்ற பிரிவில் கிளிக் செய்தால் டவுண்ட்லோட் வேலைக்கான செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு புரோகிராமினை சேவ் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உங்களின் சரியான இமெயில் முகவரி கேட்கப்படும். பெயர் மற்றும் சிறிய அளவில் தகவல்கள் பெறப்பட்டு சேவிங் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த டிரைவில் சேவ் செய்யப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் புரோகிராம் சேவ் செய்யப்படும். சேவ் செய்வதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் வைரஸாக இருக்குமோ என்ற எச்சரிகையைப் பொருட்படுத்த வேண்டாம். இந்த புரோகிராமினைக் கிளிக் செய்து யாங்க்கி கிளிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம். தற்போதைய பதிப்பு 1.0.4.3 ஆகும். இது பயன்படுத்த ஒரு எளிய புரோகிராம் ஆகும். நீங்கள் எதனைக் காப்பி செய்தாலும் இதிலும் வரிசையாக காப்பி ஆகும். தேவையற்றவற்றை யாங்க்கி புரோகிராம் சென்று அழித்துவிடலாம். சேமித்து வைத்ததில் இருந்து எடுத்து எந்த டெக்ஸ்ட்டிலும் பதிந்து கொள்ளலாம். இது சிஸ்டம் தொடங்கியவுடனேயே இயங்கத் தொடங்கி விடுகிறது. 20 படங்களையும் 200 டெக்ஸ்ட்களையும் இதில் பதியலாம். நீங்கள் எதனைக் காப்பி செய்தாலும் அது தானாக இந்த கிளிப்பருக்கு ஏறிக் கொள்கிறது. இந்த எண்ணிக்கைக்கு மேல் வந்தால் பட்டியலில் உள்ள மிகப் பழைய டெக்ஸ்ட் நீக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் கட்டாயம் இதில் இருக்கத்தான் வேண்டும்; பயன்பாட்டிற்குத் தொடர்ந்து தேவைப்படும் என எண்ணினால் அதன் மீது ரைட் கிளிக் செய்து காப்பி செய்ததை பாய்லர் பிளேட்டுக்கு அனுப்பலாம். இதில் சேவ் செய்யப்படும் விஷயங்கள் நீங்களாக அழித்தாலொழிய அழிபடாது. மேலும் பல பாய்லர் பிளேட்களை நீங்கள் உருவாக்கி நிரந்தரமாக டெக்ஸ்ட்களை சேவ் செய்து வைக்கலாம். இந்த பாய்லர் பிளேட்டுக்களுக்கு இடையே நீங்கள் சென்று தேவைப்படும் டெக்ஸ்ட் அல்லது படத்தை எடுக்கலாம். படத்தை அல்லது டெக்ஸ்ட்டை மறுபடியும் கொண்டு வர கிளிப்பர் சென்று குறிப்பிட்டதைத் தேர்ந்தெடுத்து ஷாட் கொடுத்தல் போதும். எடுத்துக்காட்டாக ஏற்கனவே காப்பி செய்த படத்தை வேர்ட் டாகுமெண்ட்டில் கொண்டுவர டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் படத்தை ஒட்ட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின் யாங்க்கி கிளிப்பர் செல்ல வேண்டும். அங்கு படம் சேவ் செய்யப்பட்டிருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாப் அப் மெனுவில் ஷூட் என்பதில் கிளிக் செய்துவிட்டு வேர்ட் தொகுப்பு திரும்பி பார்த்தால் கர்சர் இருந்த இடத்தில் சரியாக படம் ஒட்டப்பட்டிருக்கும். புதியதாக காப்பி செய்திட டெக்ஸ்ட்களை யாங்க்கி கிளிப்பர் மறுத்தால் Edit கிளிக் செய்து பின் Configuration செல்லவும். அதில் Advanced என்ற பட்டன் கிளிக் செய்து Periodically reattach to Clipboard என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கிளிப்பரில் யு.ஆர்.எல். முகவரிகளைக் காப்பி செய்து வைத்திருந்தால் கிளிப்பரைப் பெற்று அந்த முகவரிகளில் கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு தளம் கிடைக்கும். மிக வேகமாக காப்பி செய்ததைப் பேஸ்ட் செய்திட வேண்டும் என்றால் எந்த புரோகிராமிலும் இதனை மேலாக ஒரு ப்ளோட்டிங் பார் மாதிரி வைத்துக் கொள்ளலாம். இதில் கிளிப் செய்யப்படும் டெக்ஸ்ட் அல்லது படங்களுக்கு எந்தவிதமான அளவும் இல்லை. இதில் இன்னொரு ஆச்சரியத்தக்க வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிளிப்பரில் காலண்டர் தரப்படுகிறது. இதில் சென்ற மாதம்/ஆண்டு, இந்த மாதம் / ஆண்டு மற்றும் அடுத்த மாதம்/ ஆண்டு என மூன்று காலண்டர்களை செட் செய்து கொள்ளலாம். இதில் சேவ் செய்யப்படும் விஷயங்கள் நீங்களாக அழித்தாலொழிய அழிபடாது. மேலும் பல பாய்லர் பிளேட்களை நீங்கள் உருவாக்கி நிரந்தரமாக டெக்ஸ்ட்களை சேவ் செய்து வைக்கலாம். இந்த பாய்லர் பிளேட்டுக்களுக்கு இடையே நீங்கள் சென்று தேவைப்படும் டெக்ஸ்ட் அல்லது படத்தை எடுக்கலாம். ” alt=”null” />
நாம் ஒவ்வொரு முறை டெக்ஸ்ட் அல்லது படம் எதனையாவது காப்பி செய்திடுகையில் அதனைத் தாங்கிக் கொள்வது விண்டோஸ் கிளிப் போர்டுதான். இவற்றை புரோகிராம்களுக் கிடையே மாற்ற மிக அருமையான ஒரு சாதனம் இது. ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது. விண்டோஸ் கிளிப் போர்டில் ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். (எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் கிளிப் போர்டில் 24 விஷயங்களை காப்பி செய்து வைக்கலாம்) ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்தாதவர்களுக்கு விண்டோஸ் கிளிப் போர்டு ஒன்றுதான் உள்ளது.

இந்த பிரச்னையில் உதவும் வகையில் தான் யாங்க்கி கிளிப் போர்டு நமக்குக் கிடைத்துள்ளது. யாங்க்கி கிளிப்பர் ஓர் இலவச புரோகிராம் ஆகும். இதில் நூற்றுக் கணக்கில் டெக்ஸ்ட் பகுதிகளையும் படங்களையும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

அலுவலகங்களில் தலைப்புகள், கடிதத்தை முடிக்கும் போது வழக்கமாக அமைக்கும் வாக்கியங்கள் மற்றும் வர்த்தக ரீதியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வாசகங்கள், படங்களைப் போட்டு வைத்து டாகுமென்ட்களைத் தயாரிக்கையில் இவற்றில் தேவையானதைப் பயன்படுத்த இந்த யாங்க்கி கிளிப்பர் உதவுகிறது. இதனை எப்படிப் பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இதனை இலவசமாகப் பெற http://www.tinyurl.com/9yn3y  என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த பக்கம் கிடைத்தவுடன் மேலாக உள்ள Product  லிங்க்கைக் கிளிக் செய்திடவும். அதன் பின் YCK3 என்ற இடத்தில் கிளிக் செய்து கிளிப்பருக்கான இலவச புரோகிராமினைப் பெறவும். மீண்டும் இடது புறம் Download  என்ற பிரிவில் கிளிக் செய்தால் டவுண்ட்லோட் வேலைக்கான செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு புரோகிராமினை சேவ் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் உங்களின் சரியான இமெயில் முகவரி கேட்கப்படும். பெயர் மற்றும் சிறிய அளவில் தகவல்கள் பெறப்பட்டு சேவிங் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த டிரைவில் சேவ் செய்யப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் புரோகிராம் சேவ் செய்யப்படும். சேவ் செய்வதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் வைரஸாக இருக்குமோ என்ற எச்சரிகையைப் பொருட்படுத்த வேண்டாம். இந்த புரோகிராமினைக் கிளிக் செய்து யாங்க்கி கிளிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம். தற்போதைய பதிப்பு 1.0.4.3 ஆகும்.

இது பயன்படுத்த ஒரு எளிய புரோகிராம் ஆகும். நீங்கள் எதனைக் காப்பி செய்தாலும் இதிலும் வரிசையாக காப்பி ஆகும். தேவையற்றவற்றை யாங்க்கி புரோகிராம் சென்று அழித்துவிடலாம். சேமித்து வைத்ததில் இருந்து எடுத்து எந்த டெக்ஸ்ட்டிலும் பதிந்து கொள்ளலாம். இது சிஸ்டம் தொடங்கியவுடனேயே இயங்கத் தொடங்கி விடுகிறது. 20 படங்களையும் 200 டெக்ஸ்ட்களையும் இதில் பதியலாம். நீங்கள் எதனைக் காப்பி செய்தாலும் அது தானாக இந்த கிளிப்பருக்கு ஏறிக் கொள்கிறது.

இந்த எண்ணிக்கைக்கு மேல் வந்தால் பட்டியலில் உள்ள மிகப் பழைய டெக்ஸ்ட் நீக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் கட்டாயம் இதில் இருக்கத்தான் வேண்டும்; பயன்பாட்டிற்குத் தொடர்ந்து தேவைப்படும் என எண்ணினால் அதன் மீது ரைட் கிளிக் செய்து காப்பி செய்ததை பாய்லர் பிளேட்டுக்கு அனுப்பலாம்.

இதில் சேவ் செய்யப்படும் விஷயங்கள் நீங்களாக அழித்தாலொழிய அழிபடாது. மேலும் பல பாய்லர் பிளேட்களை நீங்கள் உருவாக்கி நிரந்தரமாக டெக்ஸ்ட்களை சேவ் செய்து வைக்கலாம். இந்த பாய்லர் பிளேட்டுக்களுக்கு இடையே நீங்கள் சென்று தேவைப்படும் டெக்ஸ்ட் அல்லது படத்தை எடுக்கலாம். படத்தை அல்லது டெக்ஸ்ட்டை மறுபடியும் கொண்டு வர கிளிப்பர் சென்று குறிப்பிட்டதைத் தேர்ந்தெடுத்து ஷாட் கொடுத்தல் போதும்.

எடுத்துக்காட்டாக ஏற்கனவே காப்பி செய்த படத்தை வேர்ட் டாகுமெண்ட்டில் கொண்டுவர டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் படத்தை ஒட்ட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின் யாங்க்கி கிளிப்பர் செல்ல வேண்டும். அங்கு படம் சேவ் செய்யப்பட்டிருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாப் அப் மெனுவில் ஷூட் என்பதில் கிளிக் செய்துவிட்டு வேர்ட் தொகுப்பு திரும்பி பார்த்தால் கர்சர் இருந்த இடத்தில் சரியாக படம் ஒட்டப்பட்டிருக்கும். புதியதாக காப்பி செய்திட டெக்ஸ்ட்களை யாங்க்கி கிளிப்பர் மறுத்தால் Edit  கிளிக் செய்து பின் Configuration செல்லவும். அதில் Advanced என்ற பட்டன் கிளிக் செய்து Periodically reattach to Clipboard என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கிளிப்பரில் யு.ஆர்.எல். முகவரிகளைக் காப்பி செய்து வைத்திருந்தால் கிளிப்பரைப் பெற்று அந்த முகவரிகளில் கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு தளம் கிடைக்கும்.

மிக வேகமாக காப்பி செய்ததைப் பேஸ்ட் செய்திட வேண்டும் என்றால் எந்த புரோகிராமிலும் இதனை மேலாக ஒரு ப்ளோட்டிங் பார் மாதிரி வைத்துக் கொள்ளலாம். இதில் கிளிப் செய்யப்படும் டெக்ஸ்ட் அல்லது படங்களுக்கு எந்தவிதமான அளவும் இல்லை. இதில் இன்னொரு ஆச்சரியத்தக்க வசதி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கிளிப்பரில் காலண்டர் தரப்படுகிறது. இதில் சென்ற மாதம்/ஆண்டு, இந்த மாதம் / ஆண்டு மற்றும் அடுத்த மாதம்/ ஆண்டு என மூன்று காலண்டர்களை செட் செய்து கொள்ளலாம்.

இதில் சேவ் செய்யப்படும் விஷயங்கள் நீங்களாக அழித்தாலொழிய அழிபடாது. மேலும் பல பாய்லர் பிளேட்களை நீங்கள் உருவாக்கி நிரந்தரமாக டெக்ஸ்ட்களை சேவ் செய்து வைக்கலாம். இந்த பாய்லர் பிளேட்டுக்களுக்கு இடையே நீங்கள் சென்று தேவைப்படும் டெக்ஸ்ட் அல்லது படத்தை எடுக்கலாம்.

One response

%d bloggers like this: