Daily Archives: ஏப்ரல் 12th, 2009

ஆங்கில மொழிப் பயிற்சி

ஆங்கில மொழிப் பயிற்சி

ஆங்கில மொழியில் உங்களுக்கு எத்தனை சொற்கள் தெரியும்? அவற்றின் சரியான பொருள் உடனடியாகச் சொல்ல முடியுமா?

நீங்கள் மாணவரா? பெற்றோரா? ஆசிரியரா? மாணவராய் இல்லை என்றால் கற்கும் மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது http://www.verbalearn.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம். ஆங்கில சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.

முதலில் இந்த தளம் சென்றவுடன் ஒரு விளக்க வீடியோ கிடைக்கிறது. அதனை முதலில் பார்த்தால் இந்த தளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டப்படுகிறது. ஸ்டடி லிஸ்ட் தயார் செய்திடலாம். அதனை எப்படி உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. SAT ACT, GRE, General Vocabulary என்ற நான்கு பிரிவுகளில் சொற்களை வகைப்படுத்தி சிறு சிறு தேர்வுகளை நடத்தி நம் சொல் திறன் என்று காட்டுகிறது. SAT ACT, GRE தேர்வு களுக்கு தயார் செய்திடும் மாணவர்கள் இந்த தளம் சென்று தங்களின் நிலையை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மற்றவர்கள் General Vocabulary என்ற பிரிவில் தங்களுக்குத் தெரிந்த சொற்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். Start Nowபட்டனில் கிளிக் செய்து நீங்கள் எந்த பிரிவில் தேர்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று காட்டி அந்த தேர்வினை மேற்கொள்ளலாம்.

தளத்தில் உங்களைப் பதிவு செய்து விட்டால் உங்களின் சொல் திறன் எப்படி உள்ளது என்றும் நீங்கள் அமைத்துள்ள ஸ்டடி லிஸ்ட் என்ன வகையில் இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றும் காட்டப்படுகிறது. சிறுவர்களாய் இருந்து இந் த தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவலாம். இதில் உள்ள இன்னொரு சிறப்பு சொற்களுக்கான ஆடியோ பைல்.இதனை இயக்கி நன்றாகப் பயிற்சியினை மேற்கொள்ளலாம். உங்கள் ஸ்டடி லிஸ்ட்டை கம்ப்யூட்டருக்கு மாற்றி பின் அதனை ஐ–பாட் சாதனத்திற்கு மாற்றி நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சொற்களை பயிற்சி செய்து கொண்டு செல்லலாம். பல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும். இந்த சேவை அனைத்தும் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.

இன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா?

இன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா?

வலைமனை, வலைப்பூ, இணைய வீடு என்றெல்லாம் அழைக்கப்படும் BLOG இப்போது இன்டர்நெட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. ஒருவருக்கு ஒரு பிளாக்கை அறிமுகப்படுத்தினால் அதை அவர் ஒரு நாளில் படித்து முடித்துவிடுவார். எப்படி ஒரு பிளாக்கை அமைப்பது என்று கற்றுக் கொடுங்கள்; அவர் ஆன்லைன் மூலமாகச் சரித்திரத்தில் இடம் பெறுவார் என்று ஒரு பழமொழி அமைக்கும் அளவிற்கு பிளாக் அமைக்கும் பழக்கம் பரவி வருகிறது. இமெயில் முகவரி இருப்பது போல ஒவ்வொரு வரும் ஒரு பிளாக் அமைத்து அந்த முகவரியையும் தரத் தொடங்கி உள்ளனர்.

இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி ஒரு தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். இஞ்சினியர் உதவியுடன் உருவாக்கி பின் அதனை தாங்கிக் கொள்ள ஒரு சர்வருக்குக் கட்டணம் செலுத்தி அல்லல் படுவதைக் காட்டிலும் இலவசமாக ஒரு பிளாக் அமைப்பது மிகவும் எளிதான செயலாகப் போய்விட்டது. இதற்கென பல தளங்கள் நமக்கு இலவசமாக இடமும் வசதிகளும் தந்தாலும் மூன்று தளங்கள் மக்களிடையே பிரபலமாகியுள்ளன.

பிளாக் அமைப்பதற்கான சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கின்றன. ஆம், இதனை வழக்கமாகப் பயன்படுத்தும் வகையில் சாப்ட்வேர் என அழைக்க முடியாது. சாப்ட்வேர் சேவை என்று வேண்டுமானால் கூறலாம். கீழ்க்காணும் மூன்று தளங்கள் இவ்வகையில் பிரபலமானவை. அவை

1. Google Blogger/Blogspot (www.blogger.com)

2. Windows Live Spaces (http://spaces.live.com)

3. WordPress (www.wordpress.com)

முதலில் பிளாக் என்பது என்ன? என்று பார்க்கலாம். “web log” என்பதன் சுருக்கமேBlog. அடிப்படையில் இது ஒரு ஆன்லைன் பத்திரிக்கை எனலாம். இதனை தனிநபர் தகவல் அறிவிக்கையாகவும் வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது தங்கள் தொழில்களுக்கான அறிவிப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிநபர் வலைமனையில் அவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள், தாங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம், ரசித்த கவிதை, படித்த புத்தகம், ருசித்த குழம்பு என எதனை வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். இது வளர வளர ஒரு சுய சரிதையாக மாறிவிடும். உங்களுக்குப் பின்னரும் உங்கள் சந்ததியினர் மற்றும் பிறர் பார்த்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். வர்த்தக ரீதியான வலைமனைகள் உங்கள் வர்த்தகம் குறித்த மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகளாகச் செயல்படும். விளம்பரங்களையும் இதில் சிலர் வெளியிடுகின்றனர்.

இனி பிளாக் தயார் செய்து வெளியிட உதவும் இந்த மூன்று தளங்கள் தரும் சேவைகளைக் காணலாம்.

1. Google Blogger/Blogspot:ஆகஸ்ட் 1999ல் சதா பீர் குடித்துக் கொண்டிருந்த மூன்று நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளமே பிளாக்குகளுக்கான சேவையைத் தொடங்கியது. அப்போது இதனை பைரா லேப்ஸ் (Pyra Labs)என்ற பெயரில் நிறுவனமாக இயங்கியது. கூகுள் இதனை 2003 ஆம் ஆண்டில் வாங்கியது. இந்த தளத்தில் பிளாக் உருவாக்கும் உதவியினைப் பெற முயற்சிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். இதனை Blogger.com அல்லது Blogspot.com என்பதா? இரண்டுமே ஒன்றுதான். எந்த பெயரை யூ.ஆர்.எல். ஆக அமைத்தாலும் ஒரே தளத்திற்குத் தான் செல்லும். ஆனால் இதில் பிளாக் ஒன்றை உருவாக்கி அதற்கு உங்கள் பெயருடன் “.blogspot.com” என்றுதான் கிடைக்கும்.

இந்த தளத்தின் மூலம் ஒரு பிளாக் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஜிமெயில் முகவரி ஒன்று வேண்டும். இதுவரை இல்லை என்றால் உடனே ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள். இது எளிது மட்டுமல்ல; இலவசமும் கூட என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் பிளாக் அமைப்பதில் புதியவர் என்றால் இந்த தளத்தில் தொடங்குவதே நல்லது.

இது இலவசம் என்பதால் மட்டுமல்ல மிக எளிதாக இங்கு பிளாக் ஒன்றை அமைக்கலாம் என்பதே. இது இலவசம் என்பதாலேயே சில விஷயங்கள் நாம் விருப்பப்படாமலேயே நம் பிளாக்கில் இடம் பெறும். நம் பிளாக்கின் மேலாக நீள நீள் செவ்வகக் கட்டம் ஒன்று இருக்கும்.

அதில் பிளாக் லோகோ ஒன்று இடம் பெறும். அதனை அடுத்து என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் பிளாக் போல அமைக்கப்பட்டிருக்கும் மற்ற பிளாக்குகளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது கொஞ்சம் உங்கள் பிளாக்குகளைப் பார்வையிடுபவர்களின் கவனத்தை உங்கள் பிளாக்கிலிருந்து இழுத்து மற்றவர்களின் பிளாக்குகளுக்கு அல்லவா கொண்டு செல்லும். இதனை நீக்க முடியாது. எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் மற்றும் சிஸ்டத்தில் வல்லுநராக இருந்தால் இதனை நீக்குவதில் முயற்சிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அப்படி செய்வது கூகுள் நிறுவனம் விதிக்கும் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கூகுளின் பிளாக்கர் டாட் காம் தளத்தின் மூலம் பிளாக் அமைப்பதில் பல அனுகூலங்கள் கிடைக்கின்றன. இதன் வளைந்து கொடுக்கும் தன்மை நமக்கு அதிகம் உதவுகிறது. நீங்கள் எந்த அளவிலும் எவ்வளவு ஸ்பேஸ் எடுத்தும் உங்கள் பிளாக்கினை அமைக்கலாம். பிளாக் அமைப்பதற்குத் தரப்படும் இன்டர்பேஸ் அருமையாக எளிமையாக உதவிகளைத் தருகிறது.

இங்கு உங்கள் பிளாக்குகளுக்கான டெம்ப்ளேட்டுகள் நிறைய கிடைக்கின்றன. இங்கிருந்து மேலும் பல டெம்ப்ளேட்டுகளைத் தேடி எடுத்தும் பயன்படுத்தலாம்.

பிளாக்கர் டாட் காம் தளத்தின் இன்னொரு சிறப்பு உங்கள் பிளாக் தனி இலவச டொமைன் ஆக இருப்பதுதான். உங்களுடைய பெயர் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் என உங்கள் பிளாக் டொமைன் பெயரில் இருக்கும். இது போல இலவசமாக டொமைன் ஒன்றை பிளாக்கிற்குத் தருவது இந்த தளம் மட்டுமே.

நீங்கள் விரும்பினால் உங்கள் பெயரைப் பதிவு செய்து உங்கள் பெயர் மட்டும் கொண்டு பெயர் டாட் காம் என்ற முகவரி பெற்று உங்கள் பிளாக்கினை இதில் லிங்க் செய்திடலாம். இதற்கு ஆண்டு தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கூகுள் எந்த கட்டணமும் இன்றி இந்த சேவையை வழங்குகிறது.

2. Windows Live Spaces: உங்களிடம் எம்.எஸ்.என். ஹாட்மெயில், எம்.எஸ்.என். மெசஞ்சர் அல்லது மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் அக்கவுண்ட் இருந்தால் உங்களுக்கு விண்டோஸ் லைவ் ஸ்பேஸஸ் தளத்தில் இடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு வாக்கில் வெப் 2.0 பிரபலமான வேளையில் மைக்ரோசாப்ட் இதனை கூகுள் நிறுவனத்தின் பிளாக்கர் டாட் காம் தளத்திற்கு போட்டியாகத் தொடங்கியது. இது இதன் பெயருக்கேற்ப இயங்குகிறது. இங்குள்ள பிளாக்குகள் ஜஸ்ட் பிளாக்குகள் மட்டுமல்ல. உங்களுக்கான உயிர்த்துடிப்புள்ள இடம் என்கிறது மைக்ரோசாப்ட். நீங்கள் உங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு இடத்தை மைக்ரோசாப்ட் தருகிறது.

இங்கு பிளாக்குகளுக்குக் கிடைக்கும் டிசைன் யாரையும் கவர்வதாக உள்ளது. எளிமையாகவும் கவரும் வகையிலும் உள்ளது. இதில் கூகுள் பிளாக்குகளில் உள்ளது போல மேலே பார் எதுவும் இல்லை. இங்கு பிளாக்குகளுக்கான தீம் என்னும் மையக் கருத்தினைப் பார்த்தால் இது குழந்தைகளுக்கானது போல் இருக்கும். பெரிய எண்ணிக்கையில் தீம்கள் இல்லை என்றாலும் இங்கு தரப்படுபவை நமக்குப் போதுமானதாகவே உள்ளன.

லைவ் ஸ்பேஸஸ் என்னும் இந்த பிளாட்பாரம் தான் பிளாக்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்களுடன் இணைக்கின்றன. லைவ் சூட், விண்டோஸ் லைவ் போட்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் லைவ் ஹோம், விண்டோஸ் லைவ் குரூப், விண்டோஸ் லைவ் ஈவன்ட்ஸ், ரைட்டர் மற்றும் லைவ் டூல் பார் ஆகியவற்றுடன் நேரடி இணைப்பு உங்கள் பிளாக்குகளுக்குக் கிடைக்கிறது. இவற்றின் தொடர்புகள் மூலம் உங்கள் பிளாக்குகளை மிகச் சிறப்பாக அமைக்க முடியும். இந்த ஆண்டில் விண்டோஸ் லைவ் ஸ்பேஸ் முற்றிலும் மாற்றப்பட இருக்கிறது என்று பல மாதங்களாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

3.Wordpress : இங்கும் இரண்டு யு.ஆர்.எல்.முகவரிகள் கிடைக்கின்றன. WordPress.com மற்றும் WordPress.orgஇதில் எது சரி? இரண்டுமே சரிதான். வேர்ட்பிரஸ்.காம் பிளாக்குகளை அனைவருக்கும் இலவசமாக தன் தளத்தில் வைத்திட அனுமதி அளிக்கிறது. ஒரு சில வரையறைகள் மட்டுமே இங்கு உண்டு. இதற்கு மாறாக வேர்ட் பிரஸ் டாட் ஓ.ஆர்.ஜி. பின்புலத்தில் ஓப்பன் சோர்ஸ் கட்டமைப்பை நமக்கு இலவசமாக வழங்கி பிளாக்குகளை அமைத்திட உதவுகிறது. ஆனால் வடிவமைக்கப்பட்ட பிளாக்குகளை தங்கள் தளத்தில் இலவசமாக பதிய வைப்பதில்லை. இதற்கென தனியே ஒரு டொமைன் பெயர் கட்டணம் செலுத்திப் பெற்று பின் சர்வர் ஒன்றில் இடத்தையும் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். ஆனால் பிளாக் ஒன்றை அமைப்பதில் மிக மிக எளிதாக அமைக்கும் வகையில் வழி காட்டுவது இந்த தளம் தான்.

இதனாலேயே பலரும் பிளாக்குகள் உருவாக்க இந்த தளத்தை நாடுகின்றனர். வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத வகையில் 4,245 ப்ளக் இன் வசதிகளும் 628 தீம்களும் இந்த பிளாட்பாரத்தில் கிடைக்கின்றன.

இந்த தளத்தில் நுழைந்து பிளாக் அமைக்கும் வசதியினைப் பெற இந்த தளத்தில் பதிவு செய்திட வேண்டும். மற்ற இரண்டினைப் போல உங்கள் பதிவு உங்கள் இமெயிலுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை. இங்கு பதிவு செய்து நுழைந்தவுடன் ஒரு டேஷ் போர்டினைப் பார்க்கலாம். இங்கிருந்துதான் உங்கள் பிளாக் அமைக்கும் வேலையை எப்போதும் மேற்கொள்ள வேண்டும்.

குடும்ப ரீதியாக ஒரு பிளாக் அமைக்க விரும்பி நீங்கள் விண்டோஸ் சர்வீஸ் விரும்பினால் விண்டோஸ் லைவ் ஸ்பேஸ் உங்களுக்கு உகந்தது. இப்போதுதான் பிளாக் அமைக்கும் தொடக்க வாதியா நீங்கள்? அப்படியானால் பிளாக்கர் டாட் காம் உங்களுக்கு நல்ல வழி காட்டும். மிகவும் சீரியஸான முறையில் பிளாக் ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி சிறப்பான பிளாக்காக எதிர்காலத்தில் அமைக்க விரும்பினால் உங்களுக்குத் தேவையான தளம் வேர்ட்ப்ரெஸ்.

என்ன! உங்களுக்கான வலைமனையை அமைக்கக் கிளம்பிட்டீங்களா! காசு பணம் இல்லாமல் சரித்திரத்தில் உங்கள் தகவல்களை அமைக்க இதைக் காட்டிலும் சிறந்த சாதனம் உங்களுக்குக் கிடைக்காது. எனவே ஆளுக்கு ஒரு பிளாக் அமைத்து நம் கருத்துக்களை எழுதி வைப்போம்.

வெப் பிளாக் தொழில் நுட்ப சொற்கள்

Blog client:வெப் லாக் கிளையண்ட். பிளாக்குகளை உருவாக்கி, எடிட் செய்திட உதவும் சாப்ட்வேர் தொகுப்பு. ஒரு பிளாக் கிளையண்ட்டில் ஒரு எடிட்டர், சொற் பிழை திருத்தி மற்றும் சில ஆப்ஷன்ஸ் இருக்கும்.

Blogger: பிளாக்கர் என்பவர் பிளாக் ஒன்றை இயக்கி அமைத்து நிர்வகிப்பவர்.

Blogroll:பிளாக்குகளின் பட்டியல். பொதுவாக பிளாக் ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும்.

Blogware: பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை Content Management System என்றும் அழைப்பார்கள்.

Collaborative blog: ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது அரசியல் நிகழ்வு குறித்த பிளாக்; இதில் மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இதனை Group Blogஎனவும் அழைப்பார்கள்.

Flog: “fake” மற்றும் “blog” என்ற இரு சொற்களின் இணைந்த சொல். இதன் ஆசிரியர் என்று சொல்பவர் இதனை எழுதி இருக்க மாட்டார். அவருக்காக வேறு யாரேனும் எழுதிப் பதிந்து வைப்பார்கள்.

Moblog: “mobile” மற்றும் “blog” என்ற இரு சொற்கள் இணைந்த சொல். பெரும்பாலும் மொபைல் போன் பயன்படுத்துபவர் களால் அமைக்கப்பட்ட பிளாக். இதில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். தகவல்களால் அமைக்கப்பட்டிருக்கும்.

Photoblog:பெரும்பாலும் போட்டோக்களால் அமைக்கப்பட்ட பிளாக். தொடர்ந்தும் கால அடிப்படையில் வரிசையாகவும் அமைக்கப்பட்ட பிளாக்.

பைலில் உங்கள் சொந்த தகவல்கள்

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் பைல்களில் உங்களைப் பற்றிய தகவல்களும் இணைந்தே செல்கின்றன. இல்லையே? நான் என்னைப் பற்றிய தகவல்களை என் வேர்ட் பைலில் போட்டு வைப்பதே இல்லை என்கிறீர்களா! சற்று பொறுங்கள். உங்கள் பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் “Properties” தேர்ந்தெடுங்கள். அல்லது பைலின் பெயர் மீது மவுஸின் கர்சரை வைத்து ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது பைல் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் சம்மரி (Summary)என்ற டேபின் மீது கிளிக் செய்திடுங்கள். இங்கே பைலின் பெயர்; அதனை உருவாக்கிய உங்களின் பெயர் ஆகியன இருக்கும். இந்த பெயர் எப்படி வந்தது என்று கேட்கிறீர்களா? வேர்ட் தொகுப்பு தானாக உங்கள் கம்ப்யூட்டருக்கான அடிப்படைத் தகவல்களிலிருந்து எடுத்துக் கொள்கிறது. உங்கள் கம்ப்யூட்டரின் உரிமையாளர் என வேறு ஒருவரின் பெயர் இருந்தால் அந்த பெயர் அங்கு காணக் கிடைக்கும். எனவே இந்த சம்மரி டேபில் கிளிக் செய்து அங்கு என்ற இடத்தில் உள்ள உங்கள் பெயரை நீக்கவும். (உங்கள் பெயர் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்றால்!) அதே போல அட்வான்ஸ்டு என்ற டேபையும் கிளிக் செய்து அங்கு காணும் பெர்சனல் தகவல்க�ளையும் நீக்கிவிட்டு பின் உங்கள் நண்பருக்கு அல்லது வேறு யாருக்காவது பைலை அனுப்பவும்.

டைனமிக் லிங்க் லைப்ரேரி(dllfiles)

டைனமிக் லிங்க் லைப்ரேரி

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை.

கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை. இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.

இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

ஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும். புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுக்கானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை.

ஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும். இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இ�ணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது. கம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன.

ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானதாய் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல்,அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.

இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும்.

இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும். இங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம். COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது. GDI32.DLL:இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்துவகைகளை நிர்வகிக்கிறது.

KERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள்கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல்படுகிறது.

இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது. அதனைப் பயனபடுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே.

சேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்

சேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்

நகரங்கள் மட்டுமின்றி சிறிய கிராமங்களில் கூட டிஷ் டிவி எனப்படும் (DirecttoHome (DTH)) வீடுகளுக்கு நேராக டிவி நிகழ்ச்சிகளைத் தரும் சாட்டலைட் சேவைகள் கிடைக்கின்றன. நிறைய நிறுவனங்கள் இந்த பிரிவில் இயங்குவதுடன் அவர்களிடையே சரியான போட்டியும் நிலவுகிறது. இருப்பினும் இதன் சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு எவற்றை உரிமையாகக் கேட்டுப் பெறலாம் என அறியாமல் இருக்கின்றனர். அண்மையில் DTH சேவைகளைத் தரும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ட்ராய் என்னும் அரசு அமைப்பு சில விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

1. வாரன்டி காலத்தில் டிஷ் மற்றும் சார்ந்த சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை இன்ஸ்டால் செய்திட வீடுகளில் வந்து சரி செய்வதற்கு எந்தவிதமான கட்டணமும் (போக்குவரத்து, ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற) விதிக்கப்படக் கூடாது. வசூலிக்கக்கூடாது. ஏனென்றால் விலையில் வாரண்டி காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வகை சேவைகளுக்கான கட்டணமும் சேர்ந்தே உள்ளது.

2. டிஷ் சேவை தரப்பட்டு முதல் ஆறு மாதங்களில் அல்லது அந்த பேக்கேஜிற்கான காலத்தில் கொடுக்கப்பட்ட திட்டத்தை நிறுவனமாக மாற்றக்கூடாது. அதாவது என்ன சேனல்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டதோ அவை வழங்கப்பட வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட கூடுதல் வசதிகளைத் தர வேண்டும்.

3. பேக்கேஜில் ஏற்கனவே தருவதாக அறிவிக்கப்பட்ட சேனல் ஒன்றினை சந்தாதாரர்களுக்குத் தருவதை டி.டி.எச். நிறுவனம் முதல் ஆறு மாத காலத்தில் தானே முன்வந்து நிறுத்திவிட்டால் அதற்கான கட்டணத்தை அதற்கேற்ற வகையில் குறைக்க வேண்டும். அல்லது நிறுத்தப்பட்ட சேனல் வகையைப் போன்ற அதே மொழியில் ஒளிபரப்பாகும் இன்னொரு சேனலை அதற்கு ஈடாக வழங்க வேண்டும்.

4. நிறுத்தப்பட்ட சேனலுக்குப் பதிலாக புதிய சேனலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சந்தாதாருக்கு உண்டு. கட்டணக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் உரிமையும் சந்தாதாரருக்கு உண்டு. ஆனால் எந்த சேனலை பதில் சேனலாகத் தருவது என்பதனை டி.டி.எச். ஆப்பரேட்டரே முடிவு செய்யலாம்.

5. சந்தாதாரர் கட்டணம் செலுத்தி ஒரு பேக்கேஜ் பெற்றுவிட்டால் அந்த பேக்கேஜில் மாற்றம் செய்வதாக இருந்தால் அது 15 நாட்களுக்கு முன்பாகவே சந்தாதாரருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

6. சந்தாதாரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சேவையினைத் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வரை நிறுத்தி வைக்குமாறு டி.டி.எச்.நிறுவனத்தைக் கேட்டுக் கொள் ளலாம். இது ஒரு மாதத்தின் பாதியாக இருக்கக் கூடாது.

மேற்காணும் விதிமுறைகளை டி.டி.எச். நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.

இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்

இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்


என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.

சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.

அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.

சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.

அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.

இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.

கூகுள் சோதனைச் சாலை

கூகுள் சோதனைச் சாலை

கூகுள் மெயில் இன்றைக்கு எங்கும் பிரகாசமாய் அனைவரின் ஏகோபித்த இமெயில் சாதனமாய் உலகெங்கும் பரவியுள்ளது. கட்டணம் செலுத்தி நிறுவனங்களிடம் இமெயில் வசதி பெற்றவர்கள் கூட (நான் உட்பட) தங்களின் முதன்மை மெயிலாக ஜிமெயிலைத்தான் கொண்டு இயக்கி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம் –– அளவில்லாத மெயில் பாக்ஸ் இடம், அழகான பேக் கிரவுண்ட், எழுத, பெற படிக்க பல வசதிகள் அனைத்து மொழிகளிலும் பயன்படுத்த உதவி என அடுக்கிக் கொண்டு போனாலும் முக்கியமான ஒன்று தான் இன்றும் அதனைத் தூக்கி நிறுத்தியுள்ளது.

அது ஜிமெயில் தொடர்ந்து வழங்கி வரும் அதன் புதுமையான வசதிகளே. உலகின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கூகுள் லேப்ஸ் களில் தொடர்ந்து ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகள் சோதனைக்காக வந்து கொண்டே இருக்கின்றன. இவை வாடிக்கயாளர்களின் கருத்துக்களின்படி பின்னர் மாற்றங்களுக்குள்ளாகி நிலையானவையாக மாறுகின்றன. இன்றைக்குக் கூட ஜிமெயில் தளத்தில் Settings கிளிக் செய்து பின் Labs டேப் கிளிக் செய்து சென்றால் 30 வகையான புதிய சோதனை முயற்சிகளைப் பார்க்கலாம்.

இவற்றில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதனைக் கிளிக் செய்திடலாம். பயன்படுத்தி சோதனை முடிவுகளைச் சொல்லலாம். பிடித்த சோதனை முயற்சி அருகே Enable என்ற பட்டனைக் கிளிக் செய்து Save changesஅழுத்தினால் போதும். இங்குள்ள சோதனை முயற்சிகளில் கீ போர்டு ஷார்ட் கட் மிக நன்றாக இயங்குகின்றன. எனவே குறைந்த பட்சம் இதனை நீங்கள் உங்களுக்காக இயக்கிக் கொள்ளலாம். ஜிமெயில் தரும் வேறு சில வசதிகளையும் இங்கு காணலாம்.

ஜிமெயில் பேக் அப் (ஆப்லைன்)

இந்த வசதியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் அவுட்லுக் போல தருவதற்கு கூகுள் முயற்சிகளை எடுத்துள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயெ உங்கள் இமெயில்களை இதில் கையாளலாம். பிரவுசரில் இயங்கும் ஜிமெயில் போன்ற சூழ்நிலையில் இயங்கும் வகையில் இந்த வசதி தரப்படுகிறது. எப்படி இருந்தாலும் இமெயில்களை அனுப்ப இணைய இணைப்பு வேண்டுமே என்று நீங்கள் எண்ணலாம்.

ஆனால் இமெயில் கடிதங்களை மெதுவாகவும் பொறுமையாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாமே. மேலும் ஜிமெயில் இந்த வசதியின் மூலம் உங்கள் இமெயில்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. எனவே எப்போதாவது ஜிமெயில் இன் பாக்ஸ் அளவிற்கு வரையறை அறிவிப்பு செய்தாலோ அல்லது ஜிமெயில் சர்வரே பிரச்சினை செய்தாலோ உங்கள் பழைய மெயில்கள் அனைத்தும் பத்திரமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய அக்கவுண்ட்டினை பேக் அப் செய்திட முதலில் லேப்ஸ் சென்று அதற்கான செயல்பாட்டினை உணச்ஞடூஞு செய்திட வேண்டும். இதனை மேற்கொண்டவுடன் ‘Offline 0.1’ என ஒரு லிங்க் வலது மூலையில் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால் உங்கள் பிரவுசர் கூகுள் கியர்ஸ் (Google Gears) ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு அறிவுறுத்தும். (இந்த தொகுப்பு தற்போதைக்கு ஆப்பரா பிரவுசரில் இயங்காது.) நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால் இந்த கூகுள் கியர்ஸ் இயல்பாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மற்ற பிரவுசர் பயன்படுத்துபவர்கள் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்து எஞுச்ணூண் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இதனை முழுமையாக இயங்க வைக்க கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இப்போது கியர்ஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை ஒன்று உங்களிடம் கேட்கப்படும். உங்கள் ஜிமெயில்களை கம்ப்யூட்டரில் பேக் அப் எடுத்து வைக்கவா? என்று கேட்கப்படும். இந்த செய்திக்குப் பக்கத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். உடன் டெஸ்க் டாப்பில் இதற்கான ஷார்ட் கட் ஏற்படுத்தப்படும். உங்கள் மெயில்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப்படும்.

பொதுவாக நாம் ஜிமெயிலில் வரும் இமெயில் செய்திகளை அழிப்பதே இல்லை என்பதால் பேக் அப் செய்திட சிறிது நேரமாகும். இருப்பினும் கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மெயில் செய்திகளை பேக் அப் எடுக்காது. அதே போல ஸ்பேம் மற்றும் ட்ரேஷ் பெட்டிகளில் உள்ள மெயில்களும் கம்ப்யூட்டருக்கு வராது.

இனி இந்த பேக் அப் மெயில்களைப் பயன்படுத்தி உங்கள் மெயில்களுக்கான பதில்களையும் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதே நீங்கள் தயார் செய்திடலாம்.

பதிலில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை காட்ட

இமெயில் கடிதங்களுக்குப் பதில் அளிக்கையில் நமக்கு வந்த மெயில் டெக்ஸ்ட் அனைத்தும் அதில் இணைக்கப்படுகிறது. இது பல வேளைகளில் தேவையற்ற இணைப்பாக அமைகிறது. ஏனென்றால் நம்முடைய பதில் நமக்கு வந்த மெயிலில் உள்ள ஓரிரு வரிகளுக்கு மட்டுமானதாக இருக்கும். அப்போது அந்த வரிகள் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புவோம். ஆனால் முழு டெக்ஸ்ட்டும் தானாக இணைக்கப்படும். ஜிமெயிலில் நாம் விரும்பும் டெக்ஸ்ட்டை மட்டும் இணைக்கும் வசதி தரப்படுகிறது. Quote selected Text’ என இது அழைக்கப்படுகிறது.

மேலே விளக்கியது போல கூகுள் Labs லிருந்து இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். பின் உங்களுக்கு வந்த இமெயில் டெக்ஸ்ட்டில் நீங்கள் இணைத்த டெக்ஸ்ட்டை மட்டும் தேர்ந்தெடுத்து பின் Reply பட்டனை கிளிக் செய்து பதில் கடிதம் தயாரிக்கத் தொடங்கினால் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் மட்டுமே இருப்பதனைக் காணலாம்.

உங்களின் ஷார்ட் கட்ஸ்: ஜிமெயில் தரும் ஷார்ட் கட்கள் உங்களுக்கு குறைவாகத் தெரிகிறதா? நீங்கள் விரும்பும் வகையில் சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை உருவாக்க விரும்புகிறீர்களா? கூகுள் ஜி லேப்ஸ் இதற்கொரு லிங்க் தருகிறது. அதனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

பின் ஜிமெயில் பக்கத்தில் Settings பிரிவில் புதிய டேப் ஒன்று உருவாக்கப்படும். இதனைக் கிளிக் செய்தால் ஏற்கனவே தானாக அமைக்கப்பட்டு வழங்கப்படும் கீ போர்டு ஷார்ட் கட்களை நீங்கள் அதன் மேப்பில் சென்று மாற்றி அமைத்திடும் வசதி தரப்படுகிறது. ஒரே மாதிரியான கீ தொகுப்புகளை வெவ்வேறு செயல்களுக்கு அமைக்கக் கூடாது.

இது போல அமைக்கப்படுகையில் ஜிமெயில் உங்களுக்கு எச்சரிக்கை வழங்கும். அதைச் சரியாகக் கண்டு கொள்ளாமல் அமைத்தால் முதலில் அமைத்த அதே ஷார்ட் கட் கீ அந்த செயல்பாட்டினை விட்டுவிடும். நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீகள் அல்லது மாற்றி அமைத்த ஷார்ட் கட் கீகள் உங்களுக்குப் பின் நாளில் வேண்டாம் என நீங்கள் எண்ணினால் மீண்டும் ஜிமெயில் முதலில் வழங்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகளை Default பட்டன் அழுத்திப் பெற்று அமைத்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை: மேலே சொன்ன செயல்பாடுகளுக்கான லிங்க்குகளை கிளிக் செய்து புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வசதிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இவை அனைத்தும் ஜிமெயில் தன் சோதனைக் கூடத்திலிருந்து உருவான புரோகிராம்களை பயனாளர்கள் மூலம் சோதனையிடத்தான் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு வசதி சரியாகச் செயல்படாமல் போகலாம். அது மட்டும் கிராஷ் ஆகலாம். அல்லது உங்கள் அக்கவுண்ட்டினை அணுகிப் பெறமுடியாமல் போகவும் வாய்ப்புகள் ஏற்படலாம். அது போல ஏற்படும் சமயத்தில் அக்கவுண்ட்டினைச் சரி செய்திட கூகுள் ஒரு வழி ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினை செய்திடும் குறிப்பிட்ட சோதனைச் சாலை வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்கு http://mail.google.com/mail/?labs=0 என்னும் முகவரியில் உள்ள தளத்தை அணுக வேண்டும்.

மவுஸ் பயன்பாடு

ஜிமெயில் மவுஸினை முற்றிலும் புதுமையான வழிக ளில் பயன்படுத்த வழி தருகிறது. Mouse Gestures என அழைக்கப்படும் இந்த சோதனை வசதி மூலம் இணைய தளத்தில் இருக்கையில் மவுஸை அசைப்பதன் மூலம் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த செயல்பாட்டினை இன்ஸ்டால் செய்த பின் மவுஸின் ரைட் பட்டனை அழுத்தியவாறே இமெயில் தளத்தில் இடது பக்கம் இழுத்துச் சென்றால் முன் உள்ள இமெயிலுக்குச் செல்லலாம். வலது பக்கம் இழுத்தால் அடுத்த இமெயிலுக்குச் செல்லலாம். மேலே இழுத்தால் இன் பாக்ஸ் செல்லலாம். இவ்வாறு இன்னும் பல செயல்பாடுகளை மவுஸை இழுத்தவாறே மேற்கொள்ளலாம். இவற்றை முழுமை யாகத் தெரிந்து கொண்டால் நீங்கள் அடுத்து கீ போர்டில் எந்த கீயையும் பயன்படுத்தாமல் மவுஸை மட்டுமே பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்


இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள். இன்டர்நெட்டில் இருந்தவாறே ஒரு வேர்ட் ப்ராசசர் வேண்டும். அல்லது ஒரு கிராபிக்ஸ் எடிட்டர் வேண்டும் என்றால் அப்போது ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பை பதிந்து கொண்டு பயன்படுத்த முடியாது. இந்த சிரமத்திலிருந்து பயனாளர்களை விடுவிக்க இந்த வசதியை நேரடியாக நெட்டிலேயே தருவதுதான் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing).அவ்வகையில் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்திட ஒரு டெக்ஸ்ட் ப்ராசசரை குறள் சாப்ட் (Kural Soft KSoft) நிறுவனம் தந்துள்ளது. கம்ப்யூட்டர், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மற்றும் இமெயில் புரோகிராம்களில் தமிழில் உள்ளீடு செய்திட பல ஆண்டுகளாக உலகளாவிய அளவில் பிரபலமானது குறள் தமிழ்ச் செயலி. இதனை வடிவமைத்து வழங்கிய குறள் சாப்ட் நிறுவனம், தற்போது ஐ–குறள் சாதனத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

இது இணையத்தில் இயங்கும் வேர்ட் ப்ராசசர். தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் இதன் மூலம் இணையத்திலேயே டைப் செய்திட முடியும். ஆங்கில ஒலி வழி (Phonetic)தமிழ் நெட் 99 மற்றும் தமிழ் டைப்ரைட்டர் கீ போர்டுகளை அவரவர் வசதிக்கென பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி அல்லது கூகுள் குரோம் என எந்த பிரவுசரிலும் இது சிறப்பாக இயங்குகிறது.

இணையத்தில் கொடுக்கப்படும் இந்த டெக்ஸ்ட் ப்ராசசர் ஒரு ஏ4 அளவிலான தாள் அளவிற்கு டெக்ஸ்ட் பக்கத்தினை அமைத்துத் தருகிறது. மிக எளிதாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இடையே மாறிக் கொள்ளலாம். அதே போல கீ போர்டு லே அவுட்களையும் மாற்றிக் கொள்ளலாம். ட்ராப்ட் மோடில் (Draft Mode) சென்றால் வேகமாக டைப் செய்திட முடியும். மவுஸால் கிளிக் செய்து டைப் செய்திட விரும்புவோருக்கு ஆன் ஸ்கிரீன் கீ போர்டு வசதி தரப்பட்டுள்ளது. இந்த ப்ராசசர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை இயக்க http://www.kuralsoft.com/ikural.htm என்ற தளத்திற்குச் செல்லவும்.

அங்கு ஒரு வேர்ட் ப்ராசசரில் உள்ள அனைத்து வசதிகளுடன் பாக்ஸ் கிடைக்கும். இதில் மவுஸ் கர்சரை டெக்ஸ்ட் டைப் அடிக்கும் இடத்தில் வைத்து நேரடியாக இயக்கலாம். ஆங்கிலம் அல்லது தமிழில் டைப் செய்திடலாம். இது சோதனை முயற்சி என்பதால் யூனிகோட் தமிழ் எழுத்துரு பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டைப் செய்து எடிட் செய்து பின் அதனை கட் அண்ட் பேஸ்ட் மூலம் இமெயில் புரோகிராம்களில் பயன்படுத்தலாம்.

கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing)

இதில் கிளவுட் – மேகம் – என்பது இன்டர்நெட்டிற்கு மறுபெயராகப் பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட்டில் இருந்தவாறே கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேற்கொள்வதற்கு இந்த பெயர் வழங்கப்படுகிறது. பல நிறுவனங்கள் வெவ்வேறு வசதிகளை இந்த அடிப்படையில் தந்து வருகின்றன. பெரும்பாலும் இந்த சேவைகள் இலவசமாக இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு இதனைத் தருகின்றன. ஒரு கம்ப்யூட்டர் கட்டமைப்பினையும் சார்ந்த சேவையையும் இந்த வகையில் நாம் பெறலாம். ஒரு மேகம் பலவற்றை மறைக்கிறது. அதே போல கம்ப்யூட்டர் கட்டமைப்பை எல்லாம் மறைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் வசதி மட்டும் தருவதற்கு இந்த பெயர் தொடர்ந்து பயன்படுகிறது.

பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்

பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்

வேர்ட் தொகுப்பில் பல ஆண்டுகள் பழகியவர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலை இங்கு தரப்போகிறேன். நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டிற்கென மார்ஜின், பேப்பர் அளவு மற்றும் பக்க லே அவுட் செட் செய்திட பேஜ் செட் அப் விண்டோவிற்கு வழக்கமாகச் செல்வீர்கள். இந்த பேஜ் செட் அப் விண்டோவினை எப்படி பெறுகிறீர்கள். பைல் மெனு சென்று கிளிக் செய்து கீழாக விரியும் மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுத்து திறக்கிறீர்கள். உங்கள் டாகுமெண்ட் திறந்திருக்கையில் இதெல்லாம் தேவையே இல்லை.

டாகுமெண்ட்டில் பல வேலைகளுக்காக ரூலரை மேலாகவும் இடது பக்கத்திலேயும் வைத்திருக்கிறீர்கள். இதில் டேப் ஸ்டாப்களை அமைத்து இயங்குவதனால் வேர்ட் டாகுமெண்ட் மிக அழகாக அமைய வழி வகுக்கிறது. இதே ரூலர் லைனில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு உடனே பேஜ் செட் அப் விண்டோ கிடைக்கும். ரூலர் பார் பேஜ் செட் அப்பிற்கு உடனடி டிக்கட் தரும் இடமாகவும் அமைந்துள்ளது. வேர்ட் 2003 மட்டுமின்றி ஆபீஸ் 2007லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேலாக படுக்கை வசத்தில் உள்ள ரூலரில் ஒரு முறை கிளிக் செய்தால் அங்கு ஒரு டேப் ஸ்டாப் அமையும். எனவே மவுஸை இருமுறை வேகமாக கிளிக் செய்தால் தான் இங்கு பேஜ் செட் அப் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் ரூலர் முடிந்து ரூலராகப் பயன்படுத்த முடியாத இடம் வலது கோடியில் இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் கிளிக் செய்திடலாம். இடது புறம் உள்ள ரூலரில் இந்த பிரச்னை இல்லை. அங்கு கிளிக் செய்தால் உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேஜ் செட் அப் கிடைக்கிறது. இதனால்தான் ரூலரை என் நண்பர்கள் பேஜ் செட் அப் எக்ஸ்பிரஸ் என அழைக்கின்றனர்.

பக்கமனைத்திலும் செல்களுக்கு மேலாக லேபிள்

பெரிய ஒர்க் ஷீட்களைத் தங்கள் நிறுவனங்களுக்காகத் தயாரிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக 10 காலம் 1000 படுக்கை வரிசை கொண்ட ஒர்க்ஷீட் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதனை அச்சிடுகையில் படுக்கை வரிசைகளுக்கான லேபிள் தலைப்பு முதல் பக்கத்தில் மட்டுமே தென்படும். மற்ற பக்கங்களை அச்செடுத்த பின் பார்க்கையில் ஒரு காலம் எதனைக் குறிக்கிறது என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் முதல் பக்கம் சென்று பார்க்க வேண்டும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு பக்கத்திலும் இந்த லேபிள்கள் அச்சாகும் படி செய்திடலாம்.

1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setupஎனத் தேர்ந்தெடுக்கவும்.

2.பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பின் Print Titlesஎன்ற விண்டோவில் Rows To Repeat At Top text box என்று இருப்பதில் இறுதியாகக் காணப்படும் பாக்ஸினைக் கிளிக் செய்திடவும்.

4. உடன் சிறிய நீளமான செவ்வக வடிவ பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த வரிசையில் உள்ளதை டைட்டில் ஆக அனைத்து பக்கங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்ட வேண்டும். பின் பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் உள்ள லேபிள் பெயர்கள் அனைத்து பக்கங்களிலும் அச்சாகும்.

உங்கள் விருப்பம் இடது பக்கம் உள்ள நெட்டு வரிசைகளிலும் லேபிள் வேண்டும் என்றால் மேலே தந்துள்ள செயல்பாட்டில் 3 ஆவது செயல்பாட்டில் வேறு பாக்ஸைத் தேர்ந்தெடுத்து வரிசையை அமைக்க வேண்டும்.

இணையத்தில் உதவிடும் புக்மார்க்லெட்ஸ்

இணையத்தில் உதவிடும் புக்மார்க்லெட்ஸ்

வெப் பிரவுசரில் நமக்கு எளிமையான சில வசதிகளை ஏற்படுத்த புக்மார்க்லெட்ஸ் (Bookmarklets) என்னும் பட்டன்கள் உதவுகின்றன. புக்மார்க்லெட் என்பது ஒரு சிறிய ஆப்லெட் (Applet) என்னும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம். இவை பிரவுசருக்கென உருவாக்கப்படும் சிறிய ஆட் ஆன் வசதிகளாகும். பொதுவாக இது ஒரு ஜாவா ஸ்கிரிப்ட் புரோகிராம் ஆகும்.

அடிப்படையில் இவை ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி பல பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ள உதவி செய்திடும் பட்டன்களாகும். இந்த ஆட் ஆன் பட்டன்களைப் பதிந்து கொண்டால் நம் பிரவுசரிலிருந்தே நேரடியாக இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராம் வெப் பிரவுசரில் ஒரு புக்மார்க்காகப் பதியப்படும். அல்லது சிறிய ஹைப்பர் லிங்க்காக வைக்கப்படும். எப்படிப் பதிந்தாலும் பதிந்த இடத்தில் கிளிக் செய்தால் (ஒரு கிளிக் போதும்) அதன் இயக்கம் தொடங்கும். இந்த பெயர் bookmark மற்றும் applet என்ற இரு சொற்களின் சிதைந்த கூட்டாகும். எப்படி இந்த புக்மார்க்லெட்களைக் கண்டறிவது, எவ்வாறு இவற்றை இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் பிரவுசரில் லிங்க்ஸ் (links)டூல் பார் இருக்க வேண்டும். அது இருக்கிறதா என்பதனை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இங்கிருந்து தான் நாம் புக்மார்க்லெட் பட்டன்களை இயக்க முடியும். புக்மார்க்லெட்கள் பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுடன் செயல்படக் கூடியவை ஆகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் வியூ (View) மெனு கிளிக் செய்து பின் Links என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Toolbar என்பது செக் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் செக் செய்திடவும். இப்போது ஒரு டூல்பார் கிடைக்கும். இதில் டூல் பார் மட்டுமே இருக்கட்டும். எனவே ஏதேனும் பிற பட்டன்கள் இருந்தால் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் அழுத்தி கிளிக் செய்திடவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இதே வேலையைச் செய்திட வேண்டும். ஆனால் அங்கு புக்மார்க்ஸ் டூல்பாரில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளவும். இப்போது புக்மார்க்லெட் பயன்படுத்த தயாராகிவிட்டீர்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் புக்மார்க்லெட் ஒன்றை இணைக்க லிங்க் மீது ரைட் கிளிக் செய்து அதில் Add to Favorites என்பதில் கிளிக் செய்திடவும். போல்டர்களின் பட்டியலுடன் கீழாக ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸ் கிடைக்கவில்லை என்றால் Create in என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின் Links போல்டரில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். புக்மார்க் பட்டியலில் புக்மார்க்லெட் வித்தியாசமாக காணப்படும். ஏனென்றால் மற்ற புக்மார்க்குகள் உங்களை ஓர் இணைய தளத்திற்கு இழுத்துச் செல்லும். இந்த புக்மார்க்லெட் ஒரு சிறிய செயல்பாட்டை மேற்கொள்ளும். பயர்பாக்ஸ் தொகுப்பில் லிங்க்கை அப்படியே Links bar வரை இழுக்கவும். இழுத்திவிட்டுவிட்டால் அது அப்படியே ஒரு டேப்பாக இருக்கும். இதனை எப்போது கிளிக் செய்தாலும் அது இயங்கத் தொடங்கும்.

புக்மார்க்லெட் எங்கிருக்கிறது என்று கண்டறிய சர்ச் இஞ்சின் உதவியை நாடவும். சில புக்மார்க்லெட்கள் ஏதாவது ஒரு பிரவுசரில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். எந்த பிரவுசரில் அது இயங்கும் என்பதற்கு அந்த பிரவுசரின் லோகோ தரப்பட்டிருக்கும். இந்த புக்மார்க்லெட்களை உங்கள் பிரவுசரில் பதித்தவுடன் அதன் பெயர்கள் வித்தியாசமாகக் காட்டப்படும். எனவே அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரீ நேம் தேர்ந்தெடுத்து அதன் பயன்பாட்டிற்கேற்ற பெயர் ஒன்றைச் சூட்டவும்.

எடுத்துக் காட்டாக ஒரு மிகப் பயனுள்ள புக்மார்க்லெட் ஒன்றைக் கூறுகிறேன். ஆயிரக்கணக்கான வாசகர்கள் போனிலும் கடிதங்கள் மூலமாகவும் யு–ட்யூப் தளத்தில் இயங்கும் வீடியோ படங்களை எப்படி நம் கம்ப்யூட்டரில் வீடியோ பைலாகப் பதியலாம். அதற்கான புரோகிராம் எங்குள்ளது? என்று கேட்டுள்ளனர். இந்த நோக்கத்துடன் புக்மார்க்லெட்டினைத் தேடிப்பார்க்கையில் பல புக்மார்க்லெட்டுகள் இதற்கென இருப்பது தெரிய வந்தது. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அதன் முகவரி http://googlesystem.blogspot.com/2008/04/downloadyoutubevideosasmp4files.html
இந்த தளத்தில் இதற்கான புக்மார்க்லெட் Get You Tube videoஎனக் கட்டம் கட்டி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து புக்மார்க்காக இணைக்கச் சொல்லவும். சிறிய விண்டோவில் என்ன பெயரில் சேவ் செய்திட என்றெல்லம் கேட்டுவிட்டு இது புக்மார்க்காக இணைக்கப்படும். புக்மார்க் பட்டியலில் இது இறுதியாக இடம் பெற்றிருக்கும். பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த இடத்தில் மவுஸை அழுத்திப் பிடித்து இழுத்து லிங்க்ஸ் பாரில் கொண்டு சென்று விட்டுவிடலாம். ஒரு டேப்பாக இது இருக்கும்.

நீங்கள் யு–ட்யூப் தளத்தில் ஒரு வீடியோ காட்சியினை ரசிக்கிறீர்கள். அதனை உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலாக சேவ் செய்திட விரும்புகிறீர்கள் என்றால் உடனே இந்த புக்மார்க் அல்லது புக்மார்க்லெட்டில் கிளிக் செய்தால் உடனே வீடியோ இயங்குவது நிறுத்தப்பட்டு வீடியோ பைல் பதியப்படும். இதே போல் பல்வேறு செயல்பாடுகளுக்கான புக்மார்க்லெட்டுகளைத் தேடிப் பார்த்து பதிந்து வைத்துக் கொள்ளவும்.

டிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்

டிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்

நாளை மாதத்தின் இறுதிநாள். பலர் இன்றோ நாளையோ கம்ப்யூட்டரை டிபிராக் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டிருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்பட்டிருக்கும் டிபிராக் பைலை இயக்கிப் பொறுமையாகக் காத்திருந்து செயலை முடிப்பார்கள். டிபிராக் செய்வதற்கு வேறு சில புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அதுவும் இலவசமாகவே. அவற்றை இங்கு காண்போம்.

இங்கு சிறிய அளவிலான நான்கு புரோகிராம்களைப் பார்க்கலாம்.

1.SpeeDefrag: Vicky’s Cool Software என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு http://www.vcsoftwares.com/SpeeDefrag.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இது தரப்படுகிறது. இதனுடைய பெயர் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது மட்டுமின்றி மற்ற டிபிராக் புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டது. இது விண்டோஸ் டிபிராகிங் புரோகிராமினை முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவருகிறது. கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து ராம் மெமரியைக் காலி செய்து defrag.exe புரோகிராம் மட்டும் லோட் செய்கிறது. இதனால் சிஸ்டத்தில் குறைந்த அளவே லோட் ஏறுகிறது. டிபிராக் பணி வேகமாக நடந்தேற இது வழி வகுக்கிறது. டிபிராக் முடிந்தவுடன் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்கிறது; அல்லது ரீ ஸ்டார்ட் செய்கிறது. அத்துடன் டிபிராக் செய்திடுவதற்கான கால வரையறையை அமைக்க உதவுகிறது. டிபிராக் செய்திடும் முன் டிஸ்க் செக்கிங் செயல்பாட்டையும் மேற்கொள்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களை இதன் மூலம் டிபிராக் செய்திடலாம். இதன் பைல் அளவு 3.44 எம்.பி. எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும் இந்த புரோகிராமை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

2. Defraggler: இந்த புரோகிராம் சிகிளீனர் என்னும் பிரபலமான புரோகிராமினைத் தயாரித்த நிறுவனமான Piriform தயாரித்து வழங்குகிறது. (சி கிளீனர் கம்ப்யூட்டர் சிஸ்டம் ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்ற குறியீடுகளை நீக்கும் புரோகிராம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.) பொதுவாக டிபிராக் புரோகிராம்கள் முழு டிரைவினையும் மொத்தமாக எடுத்துக் கொண்டு டிபிராக் பணியில் ஈடுபடும். இந்த புரோகிராம் மூலம் ஒரு குறிப்பிட்ட பைலை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை டிபிராக் செய்திடச் செய்யலாம். அத்துடன் டிபிராக் செய்கையில் நமக்கு எளிதான இன்டர்பேஸ் மூலம் தகவல்கள் காட்டப்படுகின்றன. அனைத்து பைல்களையும் டிபிராக் செய்த பின்னர் பைல்களை இது பட்டியலிடுகிறது. ஒரு பைலைத் தேர்ந்தெடுத்தால் அது டிஸ்க்கில் எங்கே உள்ளது என்றும் எப்படி சிதறிக் கிடக்கிறது என்றும் பார்க்கலாம். வழக்கமான விண்டோஸ் டிபிராக் புரோகிராமினைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். http://www.defraggler.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இதற்கான பைல் அளவு 1 எம்.பிக்கும் குறைவானதாகும். விண்டோஸ் 2000 முதல் அதற்குப் பின் வந்த விஸ்டா வரை அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இது முற்றிலும் இலவசம்.

3. PageDefrag:தொழில் நுட்ப ரீதியாகச் செயல்படும் புரோகிராம்களில் இந்த புரோகிராம் சிறப்பானதாகும். Sysinternals என்னும் மைக்ரோசாப்ட் நிறுவனப் பிரிவு தயாரித்து வழங்கும் புரோகிராம்.இந்த டிபிராக் புரோகிராம், சிஸ்டம் பைல்களையும் டிபிராக் செய்கிறது. பொதுவாக டிபிராக் செய்யப்படுகையில் சிஸ்டம் பைல்கள் தொடப்படுவதில்லை. இந்த வழக்கத்திற்கு மாறாக இந்த புரோகிராம் அவற்றையும் டிபிராக் செய்யத் தயாராய் உள்ளது. மேலும் இந்த பைல்களெல்லாம் எவ்வாறு ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ளன என்றும் காட்டப்படுகிறது. http://www.vcsoftwares.com/SpeeDefrag.html. இந்த பைலின் அளவு 70 கேபி மட்டுமே.

4.Ultra Defrag: விண்டோஸ் பிளாட்பார்ம் சிஸ்டத்திற்கென எழுதப்பட்ட ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் இது. படுவேகமாக இந்த டிபிராக் புரோகிராம் செயல்படுகிறது. ஏனென்றால் டிபிராக் செய்வதற்கு ஒரு கெர்னல் மோட் புரோகிராம் பயன்படுத்தப்படுகிறது. கிராபிக்ஸ் டிஸ்பிளே மூலம் நம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எந்த அளவில் சிதறிக் கிடக்கின்றன என்று காட்டுகிறது.கிளஸ்டர்களெல்லாம் வண்ணத்தின் மூலம் பிரித்தும் காட்டப்படுகின்றன.

http://ultradefrag.sourceforge.net/ ஒவ்வொரு வகை சிஸ்டத்திற்கும் தனித்தனியே டவுண்லோட் செய்திட பைல்கள் தரப்பட்டுள்ளன. 32 பிட் (விண்டோஸ் என்.டி., 2000, 2003, 2003 சர்வர், விஸ்டா) ஏ.எம்.டி. 64 பிட் (ஏத்லான் 64, டுரியன் 64, பினாம் ), இன்டெல் 62 பிட்(பென்டியல் டூயல் கோர், கோர் 2 டுயோ, கோர் 2 குவாட், கோர் ஐ7). தற்போது இந்த புரோகிராமின் 3 ஆவது பதிப்பு பைல் கிடைக்கிறது.