அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர

அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர

இந்த வாரம் உங்களின் இன்ஸ்டலேஷன் தலைவலிக்கான இலவச டவுண்லோட் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஏதேனும் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடுங்கள் என்று ஒரு எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். சில வேளைகளில் நாம் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை வாங்கி வந்திருப்போம். அதற்கான குறிப்புகளிலும் சிறிய எழுத்துக்களில் எச்சரிக்கையாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடச் சொல்லி செய்தி இருக்கும்.

சரி, எப்படி அனைத்து புரோகிராம்களையும் ஒரு சேர மூடுவது? சில வேளைகளில் நிறைய புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் மூடுவதற்குச் சோம்பேறித்தனப்பட்டு அப்புறம் இன்ஸ்டலேஷனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒத்தி போடுவோம். இந்த சந்தர்ப்பங்களில் உதவிடுவதற்காகவே சிறிய புரோகிராம் ஒன்று இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரே End it all என்பதுதான். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால் ஒரு மெனு பார் ஒன்று கிடைக்கிறது. இதில் ஒரு சிறிய எக்ஸ் அடையாளம் கொண்ட படம் கிடைக்கும். இதனை அழுத்தினால் ஒரு புரோகிராம் மட்டும் மூடப்படும். மண்டை ஓட்டுடன் இரண்டு எலும்புகள் கொண்ட படம் உள்ள ஐகான் உள்ளது. இதனை அழுத்தினால் ஒரு புரோகிராம் நீக்கப்படும். இரண்டு எக்ஸ் கொண்ட படம் உள்ள ஐகான அழுத்தினால் பல புரோகிராம்கள் ஒரே நேரத்தில் மூடப்படும். அதன் அருகே மண்டை ஓடு எலும்புகள் உள்ள ஐகானை அழுத்தினால் பல புரோகிராம்கள் மொத்தமாக நீக்கப்படும். எதற்கும் முதலில் மூடப்படுவதற்கான ஐகானை அழுத்தி செயல்படுத்திப் பார்க்கவும்.

இந்த என்ட் ஆல் புரோகிராமிற்கான பைலைப் பெற http://www.docsdownloads.com/enditall1.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

%d bloggers like this: