சேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்

சேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்

நகரங்கள் மட்டுமின்றி சிறிய கிராமங்களில் கூட டிஷ் டிவி எனப்படும் (DirecttoHome (DTH)) வீடுகளுக்கு நேராக டிவி நிகழ்ச்சிகளைத் தரும் சாட்டலைட் சேவைகள் கிடைக்கின்றன. நிறைய நிறுவனங்கள் இந்த பிரிவில் இயங்குவதுடன் அவர்களிடையே சரியான போட்டியும் நிலவுகிறது. இருப்பினும் இதன் சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு எவற்றை உரிமையாகக் கேட்டுப் பெறலாம் என அறியாமல் இருக்கின்றனர். அண்மையில் DTH சேவைகளைத் தரும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ட்ராய் என்னும் அரசு அமைப்பு சில விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

1. வாரன்டி காலத்தில் டிஷ் மற்றும் சார்ந்த சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை இன்ஸ்டால் செய்திட வீடுகளில் வந்து சரி செய்வதற்கு எந்தவிதமான கட்டணமும் (போக்குவரத்து, ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற) விதிக்கப்படக் கூடாது. வசூலிக்கக்கூடாது. ஏனென்றால் விலையில் வாரண்டி காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வகை சேவைகளுக்கான கட்டணமும் சேர்ந்தே உள்ளது.

2. டிஷ் சேவை தரப்பட்டு முதல் ஆறு மாதங்களில் அல்லது அந்த பேக்கேஜிற்கான காலத்தில் கொடுக்கப்பட்ட திட்டத்தை நிறுவனமாக மாற்றக்கூடாது. அதாவது என்ன சேனல்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டதோ அவை வழங்கப்பட வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட கூடுதல் வசதிகளைத் தர வேண்டும்.

3. பேக்கேஜில் ஏற்கனவே தருவதாக அறிவிக்கப்பட்ட சேனல் ஒன்றினை சந்தாதாரர்களுக்குத் தருவதை டி.டி.எச். நிறுவனம் முதல் ஆறு மாத காலத்தில் தானே முன்வந்து நிறுத்திவிட்டால் அதற்கான கட்டணத்தை அதற்கேற்ற வகையில் குறைக்க வேண்டும். அல்லது நிறுத்தப்பட்ட சேனல் வகையைப் போன்ற அதே மொழியில் ஒளிபரப்பாகும் இன்னொரு சேனலை அதற்கு ஈடாக வழங்க வேண்டும்.

4. நிறுத்தப்பட்ட சேனலுக்குப் பதிலாக புதிய சேனலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சந்தாதாருக்கு உண்டு. கட்டணக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் உரிமையும் சந்தாதாரருக்கு உண்டு. ஆனால் எந்த சேனலை பதில் சேனலாகத் தருவது என்பதனை டி.டி.எச். ஆப்பரேட்டரே முடிவு செய்யலாம்.

5. சந்தாதாரர் கட்டணம் செலுத்தி ஒரு பேக்கேஜ் பெற்றுவிட்டால் அந்த பேக்கேஜில் மாற்றம் செய்வதாக இருந்தால் அது 15 நாட்களுக்கு முன்பாகவே சந்தாதாரருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

6. சந்தாதாரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சேவையினைத் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வரை நிறுத்தி வைக்குமாறு டி.டி.எச்.நிறுவனத்தைக் கேட்டுக் கொள் ளலாம். இது ஒரு மாதத்தின் பாதியாக இருக்கக் கூடாது.

மேற்காணும் விதிமுறைகளை டி.டி.எச். நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.

%d bloggers like this: