டிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்

டிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்

நாளை மாதத்தின் இறுதிநாள். பலர் இன்றோ நாளையோ கம்ப்யூட்டரை டிபிராக் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டிருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்பட்டிருக்கும் டிபிராக் பைலை இயக்கிப் பொறுமையாகக் காத்திருந்து செயலை முடிப்பார்கள். டிபிராக் செய்வதற்கு வேறு சில புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அதுவும் இலவசமாகவே. அவற்றை இங்கு காண்போம்.

இங்கு சிறிய அளவிலான நான்கு புரோகிராம்களைப் பார்க்கலாம்.

1.SpeeDefrag: Vicky’s Cool Software என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு http://www.vcsoftwares.com/SpeeDefrag.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இது தரப்படுகிறது. இதனுடைய பெயர் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது மட்டுமின்றி மற்ற டிபிராக் புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டது. இது விண்டோஸ் டிபிராகிங் புரோகிராமினை முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவருகிறது. கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து ராம் மெமரியைக் காலி செய்து defrag.exe புரோகிராம் மட்டும் லோட் செய்கிறது. இதனால் சிஸ்டத்தில் குறைந்த அளவே லோட் ஏறுகிறது. டிபிராக் பணி வேகமாக நடந்தேற இது வழி வகுக்கிறது. டிபிராக் முடிந்தவுடன் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்கிறது; அல்லது ரீ ஸ்டார்ட் செய்கிறது. அத்துடன் டிபிராக் செய்திடுவதற்கான கால வரையறையை அமைக்க உதவுகிறது. டிபிராக் செய்திடும் முன் டிஸ்க் செக்கிங் செயல்பாட்டையும் மேற்கொள்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களை இதன் மூலம் டிபிராக் செய்திடலாம். இதன் பைல் அளவு 3.44 எம்.பி. எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும் இந்த புரோகிராமை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

2. Defraggler: இந்த புரோகிராம் சிகிளீனர் என்னும் பிரபலமான புரோகிராமினைத் தயாரித்த நிறுவனமான Piriform தயாரித்து வழங்குகிறது. (சி கிளீனர் கம்ப்யூட்டர் சிஸ்டம் ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்ற குறியீடுகளை நீக்கும் புரோகிராம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.) பொதுவாக டிபிராக் புரோகிராம்கள் முழு டிரைவினையும் மொத்தமாக எடுத்துக் கொண்டு டிபிராக் பணியில் ஈடுபடும். இந்த புரோகிராம் மூலம் ஒரு குறிப்பிட்ட பைலை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை டிபிராக் செய்திடச் செய்யலாம். அத்துடன் டிபிராக் செய்கையில் நமக்கு எளிதான இன்டர்பேஸ் மூலம் தகவல்கள் காட்டப்படுகின்றன. அனைத்து பைல்களையும் டிபிராக் செய்த பின்னர் பைல்களை இது பட்டியலிடுகிறது. ஒரு பைலைத் தேர்ந்தெடுத்தால் அது டிஸ்க்கில் எங்கே உள்ளது என்றும் எப்படி சிதறிக் கிடக்கிறது என்றும் பார்க்கலாம். வழக்கமான விண்டோஸ் டிபிராக் புரோகிராமினைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். http://www.defraggler.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இதற்கான பைல் அளவு 1 எம்.பிக்கும் குறைவானதாகும். விண்டோஸ் 2000 முதல் அதற்குப் பின் வந்த விஸ்டா வரை அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இது முற்றிலும் இலவசம்.

3. PageDefrag:தொழில் நுட்ப ரீதியாகச் செயல்படும் புரோகிராம்களில் இந்த புரோகிராம் சிறப்பானதாகும். Sysinternals என்னும் மைக்ரோசாப்ட் நிறுவனப் பிரிவு தயாரித்து வழங்கும் புரோகிராம்.இந்த டிபிராக் புரோகிராம், சிஸ்டம் பைல்களையும் டிபிராக் செய்கிறது. பொதுவாக டிபிராக் செய்யப்படுகையில் சிஸ்டம் பைல்கள் தொடப்படுவதில்லை. இந்த வழக்கத்திற்கு மாறாக இந்த புரோகிராம் அவற்றையும் டிபிராக் செய்யத் தயாராய் உள்ளது. மேலும் இந்த பைல்களெல்லாம் எவ்வாறு ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ளன என்றும் காட்டப்படுகிறது. http://www.vcsoftwares.com/SpeeDefrag.html. இந்த பைலின் அளவு 70 கேபி மட்டுமே.

4.Ultra Defrag: விண்டோஸ் பிளாட்பார்ம் சிஸ்டத்திற்கென எழுதப்பட்ட ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் இது. படுவேகமாக இந்த டிபிராக் புரோகிராம் செயல்படுகிறது. ஏனென்றால் டிபிராக் செய்வதற்கு ஒரு கெர்னல் மோட் புரோகிராம் பயன்படுத்தப்படுகிறது. கிராபிக்ஸ் டிஸ்பிளே மூலம் நம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எந்த அளவில் சிதறிக் கிடக்கின்றன என்று காட்டுகிறது.கிளஸ்டர்களெல்லாம் வண்ணத்தின் மூலம் பிரித்தும் காட்டப்படுகின்றன.

http://ultradefrag.sourceforge.net/ ஒவ்வொரு வகை சிஸ்டத்திற்கும் தனித்தனியே டவுண்லோட் செய்திட பைல்கள் தரப்பட்டுள்ளன. 32 பிட் (விண்டோஸ் என்.டி., 2000, 2003, 2003 சர்வர், விஸ்டா) ஏ.எம்.டி. 64 பிட் (ஏத்லான் 64, டுரியன் 64, பினாம் ), இன்டெல் 62 பிட்(பென்டியல் டூயல் கோர், கோர் 2 டுயோ, கோர் 2 குவாட், கோர் ஐ7). தற்போது இந்த புரோகிராமின் 3 ஆவது பதிப்பு பைல் கிடைக்கிறது.

%d bloggers like this: