பயர்பாக்ஸ் தினம் ஒரு ஆடை

பயர்பாக்ஸ் தினம் ஒரு ஆடை

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பிற்கு எளிய வகையில் வகை வகையான ஸ்கின்கள் அமைத்திடும் வகையில் ஆட் ஆன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. Personas  என அழைக்கப்படும் இதன் மூலம் ஒருவர் தன் ஆர்வத்திகேற்ப, ஆசைகளுக்கேற்ப,எண்ணங்களுக்கேற்ப பயர்பாக்ஸ் பிரவுசருக்கு முகங்களை அவ்வப்போது அமைத்துக் கொள்ளலாம். 2007 ஆம் ஆண்டு மொஸில்லா லேப்ஸ் பெர்சனாஸ் தொடங்கப்பட்டது.

இது நூற்றுக்கணக்கான வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்து அவரவர்கள் உருவாக்கிய ஸ்கின்கள் இப்போது நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் என்ற முகவரி உள்ள தளத்தில் கிடைக்கின்றன. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் தளத்தின் இடது பக்கம் கீழாக ஒரு நரி ஐகான் தெரியும். அதனைக் கிளிக் செய்தால் விதம் விதமான ஸ்கின்கள் கிடைக்கும். இவற்றின் தன்மை பலவிதங்களில் அமைந்துள்ளன என்பதை இதனைப் பயன்படுத்தும்போதுதான் தெரிய வரும். இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் பிரவுசருக்குப் புதிய சேலை சட்டை அணிவித்து வேடிக்கை பார்க்கலாம்.

One response

  1. […] பயர்பாக்ஸ் தினம் ஒரு ஆடை […]

%d bloggers like this: