பிரசன்டேஷனைச் சுருக்கிக் காட்டலாமா!

பிரசன்டேஷனைச் சுருக்கிக் காட்டலாமா!

பல ஸ்லைட்கள் கொண்ட பிரசன்டேஷன் ஒன்றை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சொல்ல விரும்பும் ஒவ்வொரு கருத்தும் மிகச் சிறப்பாக பல எடுத்துக் காட்டுக்களுடன் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்லைடுடன் அமைந்துள்ளது. ரொம்ப சூப்பரா அமைந்துள்ளது என்று உங்களுக்கு நீங்களே பாராட்டு தெரிவித்துக் கொள்கிறீர்கள்.

சரி, திடீரென ஒரு குறிப்பிட்டவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் இந்த பிரசன்டேஷனைக் காட்ட இருக்கிறீர்கள். ஆனால் அதனை முழுமையாகக் காட்ட விரும்பவில்லை. குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டுமே போதும் என்று திட்டமிடுகிறீர்கள். இதற்குக் காரணம் அதனைப் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் அறிந்தவர்களாய் இருக்கலாம். இவ்வளவு எடுத்துக் காட்டுக்களைக் கூறும் ஸ்லைடுகளை அவர்களுக்குக் காட்ட வேண்டுமா என எண்ணலாம். அல்லது இவர்களுக்கெல்லாம் காட்டிவிட்டால் நம்மை மிஞ்சும் வகையில் பிரசன்டேஷன் தயாரித்துவிடுவார்களே என்று எண்ணலாம். உடனே என்ன செய்கிறீர்கள்? இன்னொரு பிரசன்டேஷன் பைல் உருவாக்கி காப்பி / பேஸ்ட் கொடுத்து உருவாக்குகிறீர்கள். இதனால் உங்கள் நேரம் வீணான முயற்சியில் செலவழிகிறது.

ஒரே விஷயத்திற்கு இன்னொரு பைல் உருவாகிறது. என்னதான் செய்வது? ஒரே மூல பைலை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட தேவையற்ற ஸ்லைடுகளை எப்படி மறைப்பது? மறைக்கலாம். நம் ஸ்லைடுகளுடன் சின்ன கண்ணா மூச்சி ஆட வேண்டியதுதான். அது எப்படி என்று பார்ப்போம். பிரசன்டேஷன் பைலைத் திறந்து கொள்ளுங்கள். Slide Sorter View செல்லவும். இதற்கு View மெனு சென்று பின் Slide Sorter பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது விண்டோவின் இடது கீழாக உள்ள Slide Sorter button பட்டனை அழுத்தவும். அல்லது Alt V D என்ற மூன்று கீகளை அழுத்தவும்.

இப்போது ஸ்லைட் சார்டரில் இருக்கையில் எந்த எந்த ஸ்லைடுகளை நீக்க விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு ஸ்லைடைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த ஸ்லைடைச் சுற்றி ஒரு அவுட்லை தோன்றுவதைக் காணலாம். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு பின் Slide Sorter toolbar டூல் பாரில் உள்ள Hide Slide button என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த பட்டனைக் காணலியே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் சரியான முறையில் டூல்பாரை அமைக்கவில்லை என்று தெரிகிறது. நீங்கள் உடனே View மெனு சென்று Toolbars துணை மெனு பெற்று அதில் Slide Sorter என்ற டூல் பாரினை இயக்கி வைத்துக் கொள்ளவும். சரி, இப்போது பழைய நிலைக்கு வருவோம். ஸ்லைடை மறைப்பதற்கான கட்டளை நிறைவேறுவதனைக் காண்கையில் இன்னொரு மாற்றத்தினையும் பார்க்கலாம். ஸ்லைடுக்கான எண்கள் மாற்றி அமைக் கப்படும். இதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்லைட் அடுத்த காட்சிக்கு எண்ணிக் கையில் சேர்க்கப்படாது என்பது புலானாகிறது.

அதெல்லாம் சரிங்க! மீண்டும் அனைத்தும் வேண்டும் என்றால் என்ன செய்வது என்று மனதிற்குள் ஓடும் உங்களின் கேள்வி முகத்தில் தெரிகிறது. மறுபடியும் Slide Sorter view சென்று மறைவாக இருக்கும் ஸ்லைடைத் தேர்ந்தெடுத்து அதன் பின் Hide Slide பட்டனில் ஒரு அழுத்து அழுத்த வேண்டியதுதான். மீண்டும் மறைந்திருந்த ஸ்லைட் காட்டப்படுவதற்கென கிடைக்கும்.

அதே நேரத்தில் ஸ்லைட்களின் எண்களிலும் மாற்றத்தைக் காணலாம். பழைய எண்கள் மீண்டும் பெறப்பட்டிருக்கும். அதாவது மறைந்திருந்த ஸ்லைட் மீண்டும் பழைய வரிசையில் கிடைக்கத் தயாராகிவிட்டது என்று தெரிகிறது.காப்பி, பேஸ்ட் புதிய ஒரு பைல் என் றெல்லாம் இல்லாமல் இஷ்டத்திற்குத் தேவையான ஸ்லைடை மறைப்பதுவும் மீண்டும் கொண்டு வருவதுவும் எவ்வளவு எளிது பார்த்தீர்களா!

One response

  1. […] பிரசன்டேஷனைச் சுருக்கிக் காட்டலாமா! […]

%d bloggers like this: