பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்

பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்

வேர்ட் தொகுப்பில் பல ஆண்டுகள் பழகியவர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலை இங்கு தரப்போகிறேன். நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டிற்கென மார்ஜின், பேப்பர் அளவு மற்றும் பக்க லே அவுட் செட் செய்திட பேஜ் செட் அப் விண்டோவிற்கு வழக்கமாகச் செல்வீர்கள். இந்த பேஜ் செட் அப் விண்டோவினை எப்படி பெறுகிறீர்கள். பைல் மெனு சென்று கிளிக் செய்து கீழாக விரியும் மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுத்து திறக்கிறீர்கள். உங்கள் டாகுமெண்ட் திறந்திருக்கையில் இதெல்லாம் தேவையே இல்லை.

டாகுமெண்ட்டில் பல வேலைகளுக்காக ரூலரை மேலாகவும் இடது பக்கத்திலேயும் வைத்திருக்கிறீர்கள். இதில் டேப் ஸ்டாப்களை அமைத்து இயங்குவதனால் வேர்ட் டாகுமெண்ட் மிக அழகாக அமைய வழி வகுக்கிறது. இதே ரூலர் லைனில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு உடனே பேஜ் செட் அப் விண்டோ கிடைக்கும். ரூலர் பார் பேஜ் செட் அப்பிற்கு உடனடி டிக்கட் தரும் இடமாகவும் அமைந்துள்ளது. வேர்ட் 2003 மட்டுமின்றி ஆபீஸ் 2007லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேலாக படுக்கை வசத்தில் உள்ள ரூலரில் ஒரு முறை கிளிக் செய்தால் அங்கு ஒரு டேப் ஸ்டாப் அமையும். எனவே மவுஸை இருமுறை வேகமாக கிளிக் செய்தால் தான் இங்கு பேஜ் செட் அப் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் ரூலர் முடிந்து ரூலராகப் பயன்படுத்த முடியாத இடம் வலது கோடியில் இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் கிளிக் செய்திடலாம். இடது புறம் உள்ள ரூலரில் இந்த பிரச்னை இல்லை. அங்கு கிளிக் செய்தால் உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேஜ் செட் அப் கிடைக்கிறது. இதனால்தான் ரூலரை என் நண்பர்கள் பேஜ் செட் அப் எக்ஸ்பிரஸ் என அழைக்கின்றனர்.

பக்கமனைத்திலும் செல்களுக்கு மேலாக லேபிள்

பெரிய ஒர்க் ஷீட்களைத் தங்கள் நிறுவனங்களுக்காகத் தயாரிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக 10 காலம் 1000 படுக்கை வரிசை கொண்ட ஒர்க்ஷீட் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதனை அச்சிடுகையில் படுக்கை வரிசைகளுக்கான லேபிள் தலைப்பு முதல் பக்கத்தில் மட்டுமே தென்படும். மற்ற பக்கங்களை அச்செடுத்த பின் பார்க்கையில் ஒரு காலம் எதனைக் குறிக்கிறது என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் முதல் பக்கம் சென்று பார்க்க வேண்டும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு பக்கத்திலும் இந்த லேபிள்கள் அச்சாகும் படி செய்திடலாம்.

1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setupஎனத் தேர்ந்தெடுக்கவும்.

2.பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பின் Print Titlesஎன்ற விண்டோவில் Rows To Repeat At Top text box என்று இருப்பதில் இறுதியாகக் காணப்படும் பாக்ஸினைக் கிளிக் செய்திடவும்.

4. உடன் சிறிய நீளமான செவ்வக வடிவ பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த வரிசையில் உள்ளதை டைட்டில் ஆக அனைத்து பக்கங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்ட வேண்டும். பின் பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் உள்ள லேபிள் பெயர்கள் அனைத்து பக்கங்களிலும் அச்சாகும்.

உங்கள் விருப்பம் இடது பக்கம் உள்ள நெட்டு வரிசைகளிலும் லேபிள் வேண்டும் என்றால் மேலே தந்துள்ள செயல்பாட்டில் 3 ஆவது செயல்பாட்டில் வேறு பாக்ஸைத் தேர்ந்தெடுத்து வரிசையை அமைக்க வேண்டும்.

One response

  1. […] பேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ் […]

<span>%d</span> bloggers like this: