ஆங்கில மொழிப் பயிற்சி

ஆங்கில மொழிப் பயிற்சி

ஆங்கில மொழியில் உங்களுக்கு எத்தனை சொற்கள் தெரியும்? அவற்றின் சரியான பொருள் உடனடியாகச் சொல்ல முடியுமா?

நீங்கள் மாணவரா? பெற்றோரா? ஆசிரியரா? மாணவராய் இல்லை என்றால் கற்கும் மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது http://www.verbalearn.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம். ஆங்கில சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.

முதலில் இந்த தளம் சென்றவுடன் ஒரு விளக்க வீடியோ கிடைக்கிறது. அதனை முதலில் பார்த்தால் இந்த தளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டப்படுகிறது. ஸ்டடி லிஸ்ட் தயார் செய்திடலாம். அதனை எப்படி உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. SAT ACT, GRE, General Vocabulary என்ற நான்கு பிரிவுகளில் சொற்களை வகைப்படுத்தி சிறு சிறு தேர்வுகளை நடத்தி நம் சொல் திறன் என்று காட்டுகிறது. SAT ACT, GRE தேர்வு களுக்கு தயார் செய்திடும் மாணவர்கள் இந்த தளம் சென்று தங்களின் நிலையை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மற்றவர்கள் General Vocabulary என்ற பிரிவில் தங்களுக்குத் தெரிந்த சொற்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். Start Nowபட்டனில் கிளிக் செய்து நீங்கள் எந்த பிரிவில் தேர்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று காட்டி அந்த தேர்வினை மேற்கொள்ளலாம்.

தளத்தில் உங்களைப் பதிவு செய்து விட்டால் உங்களின் சொல் திறன் எப்படி உள்ளது என்றும் நீங்கள் அமைத்துள்ள ஸ்டடி லிஸ்ட் என்ன வகையில் இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றும் காட்டப்படுகிறது. சிறுவர்களாய் இருந்து இந் த தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவலாம். இதில் உள்ள இன்னொரு சிறப்பு சொற்களுக்கான ஆடியோ பைல்.இதனை இயக்கி நன்றாகப் பயிற்சியினை மேற்கொள்ளலாம். உங்கள் ஸ்டடி லிஸ்ட்டை கம்ப்யூட்டருக்கு மாற்றி பின் அதனை ஐ–பாட் சாதனத்திற்கு மாற்றி நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சொற்களை பயிற்சி செய்து கொண்டு செல்லலாம். பல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும். இந்த சேவை அனைத்தும் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.

2 responses

  1. […] ஆங்கில மொழிப் பயிற்சி: […]

  2. HAI SIR..
    I need know how to disable and enable my cd drive via regedit setting. pls can you give me details

%d bloggers like this: