உடல் எடை குறைய ஓர் இணைய தளம்

உடல் எடை குறைய ஓர் இணைய தளம்

முப்பது அல்லது 35 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வரும் கவலை உடல் எடையைகுறைப்பதுதான். இந்தக் கவலையைக் காட்டிலும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் அறிவுரையே நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். ஒரு சிலர் தண்ணீர் நிறைய குடி என்பார்கள். ஒரு சிலரோ நமக்குப் பிடித்த உணவு வகை அனைத்தையும் சாப்பிடாதே என்பார்கள். ஒரு சிலரோ சமைக்காமல் பச்சையாக காய்கறிகளையும் அரிசியையும் சாப்பிடு என்பார்கள். இப்படி எல்லாம் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதில் உருப்படியான தகவல்களையும் அறிவுரைகளையும் கூறும் ஒரு தளத்தை இங்கு காணலாம்.

இந்த தளம் கிடைக்கும் முகவரி  http://www.caloriesperhour.com/   இதில் பல பிரிவுகள் உள்ளன.

Diet and Weight Loss Tips:  உணவு முறைக்கும் எடைக் குறைப்பிற்குமாக உருப்படியான டிப்ஸ்களை இந்தப் பிரிவில் காணலாம். ஒவ்வொரு டிப்ஸும் வெவ்வேறு பழக்கம் குறித்து தகவல்களை அளிக்கின்றன. அத்துடன் அந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றுக்கு உங்களை வழி நடத்துகின்றன.

Tutorial:  இந்த தளத்தில் உங்கள் உணவுப் பழக்கம் குறித்த முழுமையான தகவல்கள் தரப்படுகின்றன. உணவுக் கட்டுப்பாடு பழக்கம் குறித்து உண்மைத் தகவல்களைக் கூறி உங்களை இயல்பாக இருக்கச் சொல்லி அழைக்கிறது.

Calories Burned Calculator : இங்கு ஐந்து வகையான கால்குலேட்டர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்கள் உடம்பின் சக்தி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதனை அறியலாம். ஒவ்வொரு கால்குலேட்டர்களின் கீழாகவும் அதன் தொடர்பான ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது. அதில் அந்த கால்குலேட்டர் கையாளும் பொருள் குறித்துத் தெளிவான கருத்துக்களும் செயல்முறைகளும் தரப்பட்டுள்ளன.

Food Calories & Nutrition Calculator : இந்த கால்குலேட்டர் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினால் உடம்பில் சேரும் சக்தி கலோரிகளில் தரப்படுகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் வகைகள் மற்றும் உறைய வைத்து பின் சூடாக்கிச் சாப்பிடும் வகைகள் குறித்த தகவல்கள் நமக்கு மிகவும் உபயோகமானவை.

Weight Loss Calculator : இந்த பிரிவில் உள்ள கால்குலேட்டர் எடையைக் குறைப்பதில் உங்கள் இலக்கு மற்றும் எடையைக் குறைப்பதற்கான கால அட்டவணையைத் தயாரித்து அளிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் இழக்கும் எடை மற்றும் அதனை ஈடுகட்ட நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது.

Weights & Measures Converter :   உடம்பின் எடை, உயரம் மற்றும் உணவின் அளவுகளை பழைய முறையிலிருந்து புதிய மெட்ரிக் முறைக்கு மாறுவதற்குத் தேவையான வசதியைத் தருகிறது.

நமக்கு இது தேவையில்லை. ஏனென்றால் நாம் மெட்ரிக் முறையான கிலோ மற்றும் மீட்டர் அளவினைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

Weight Loss Forums : இங்கு உங்களைப் போல உடல் குறைவதற்கு முயற்சிகளை எடுக்கும் நபர்கள் சார்ந்த குழுக்களைச் சந்திக்கலாம். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை இவர்களுடன் பகிர்ந்து கொண்டு அனுபவத்தின் அடிப்படையில் கிடைக்கும் பதில்களைப் பெறலாம். நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ விருப்பமா! தினந்தோறும் இந்த இணைய தளம் சென்று தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

9.A. வாழ்ந்தவர் வார்த்தைகளில் சரித்திரம்

சரித்திர நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் நாம் கண்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்களின் சொற்கள் மூலமாக எப்படி அறிய முடியும். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் வீழ்ந்தது எப்படி? என்று வேண்டுமானால் அங்கு இருந்து மீண்டவர்களிடமிருந்து அறியலாம். முதல் உலகப் போர் குறித்து தெரிய வேண்டும் என்றால்? அதற்கும் முந்தைய நிகழ்வுகள் ஏற்பட்ட போது வாழ்ந்தவர்களுக்கு எங்கே போவது/ நியாயமான கேள்விதான்.

ஆனால் http://www.eyewitnesstohistory.com/   என்ற முகவரியில் உள்ள தளம் இது குறித்து எந்த தயக்கமும் இன்றி வாழ்ந்தவர்களின் சொற்களின் மூலம் சரித்திரம் என்பதனை தன் நோக்கமாக அறிவித்து தளத்தை நிர்வகிக்கிறது. ரோம் எரிந்த போது, பெர்லின் சுவர் இடித்த போது எனப் பல சரித்திர நிகழ்ச்சிகள் அப்படியே காட்டப்படுகின்றன. எப்படி என்பதை நீங்கள் அந்த தளத்திற்குச் சென்று காணலாம்.

இந்த சரித்திர நிகழ்வுகளுடன் ஒவ்வொரு வாரமும் சரித்திர முக்கியத்துவம் கொண்ட படம் ஒன்று காட்டப்படுகிறது. கேமரா கண்டுபிடித்த காலத்திலிருந்து சரித்திர நிகழ்வுகளின் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. இதில் இடம் பெறும் ஸ்நாப் ஷாட்களும் கருத்தாழம் கொண்டதாக இருக்கின்றன. 1899 லிருந்து சரித்திர நிகழ்வுகளின் ஒலிக் கோவைகளும் கிடைக்கின்றன. மனித இனம் ஏற்படுத்திய காலடித் தடங்கள் தெரிய இந்த தளத்திற்குச் செல்வது மிக மிக அவசியம்.

5 responses

  1. how i reduce my wait

  2. […] உடல் எடை குறைய ஓர் இணைய தளம் […]

  3. basic weight loose exc pls send me

  4. how can resuse my body weight

    1. silvines :how can resuse my body weight

%d bloggers like this: