சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்

சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்

ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுகையில் இந்த சொற்களைச் சந்தித்திருப்பீர்கள். இந்த சொற்களுடன் கிடைத்த செய்தியைப் பார்த்தவுடன் ஒரு சிலர் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திடும் வேலையை விட்டுவிடுவார்கள். பயம் தான் காரணம். ஒரு சிலர் பரவாயில்லை வருவது வரட்டும் என இன்ஸ்டால் செய்வார்கள். இந்த அளவிற்கு விஷயம் தரக்கூடிய இவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்ற கம்ப்யூட்டர்களில் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு எதனையாவது இன்ஸ்டால் செய்கையில் இது போன்ற லோகோ டெஸ்டிங் சமாச்சாரம் தற்போது அடிக்கடி காணப்படுகிறது. அது சாப்ட்வேர் புரோகிராமாக இருக்கலாம்; அல்லது ஹார்ட்வேர் இணைப்பாக இருக்கலாம். ஏன், யு.எஸ்.பி. ஹப் அல்லது ஒரு கேம் என இதைப் போன்ற எதுவாகவும் இருக்கலாம். இது குறித்து நாம் கவலைப்படும் முன் இது எதனைக் குறிக்கிறது என்று பார்க்கலாம். சாப்ட்வேர் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் கீழே குறிப்பிட்டது போல ஒரு எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும்.
“Software has not passed Windows logo testing to verify its compatibility with Windows XP. Continuing your installation of this software may impair or destabilize the correct operating of your system either immediately or in the future. Microsoft strongly recommends that you stop this installation now and contact the software vendor for software that has passed Windows logo testing.”

இதன் சாராம்சம் இதுதான். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் ஒத்துப் போகாத சாப்ட்வேர் இது.தொடர்ந்து இன்ஸ்டால் செய்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உடனே அல்லது எதிர்காலத்தில் முடக்கிவிடும். இந்த சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதனை மைக்ரோசாப்ட் நிறுத்தச் சொல்லி பரிந்துரைக்கிறது. எனவே இதனை இன்ஸ்டால் செய்வதனை நிறுத்திவிட்டு சாப்ட்வேர் கொடுத்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.
இப்படியெல்லாம் எச்சரிக்கை வந்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். உடனே நிறுத்திவிட்டு அந்த சாப்ட்வேர் வேண்டாம் என ஒதுக்கி வைப்பார்கள். அல்லது அது கட்டாயம் வேண்டும் என்றால் பரவாயில்லை என இன்ஸ்டால் செய்வார்கள். இருப்பினும் அடி மடியில் ஒரு பயம் இருக்கும். இந்த எச்சரிக்கையினைத் தரும் சோதனையைத்தான் விண்டோஸ் லோகோ டெஸ்டிங் என அழைக்கிறது.
அடிப்படையில் பார்த்தால் இந்த எச்சரிக்கை சொல்லும் அளவிற்கு பாதுகாப்பற்ற தன்மை இருக்காது. இந்த செய்தி வரக் காரணம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்பு இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முழுமையாக சோதனை செய்திட முடியவில்லை. குறிப்பாக அந்த தொகுப்பின் டிரைவர்களை சோதனை செய்திட முடியவில்லை என்பதுதான்.
இது எப்படி என்றால் மத்தியான உணவைச் சோதனை செய்கையில் சோறு, கறி காய் குழம்பெல்லாம் சரியாக உள்ளது; ஆனால் ஊறுகாயில் தான் பிரச்சினை என்பது போலாகும். இதற்காக நாம் உணவை வேண்டாம் என்றா சொல்வோம். அதே போல இந்த எச்சரிக்கை வந்தால் பரவாயில்லை என்று இன்ஸ்டால் செய்வது நல்லது. அப்புறம் கூட உங்களுக்குப் பயம் ஏற்பட்டால் இன்ஸ்டலேஷனை நிறுத்தி பின் வாங்கலாம். இதைத்தான் லோகோ டெஸ்டிங் என்று விண்டோஸ் அழைக்கிறது. இதனுடன் சம்பந்தப்பட்டதுதான் டிரைவர் சைனிங்.
டிரைவர் சைனிங் என்பது நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் சாப்வேர் அப்ளிகேஷனின் டிரைவர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒத்துப் போவதாக இருப்பதை உறுதி செய்வதுதான். இதனை மேற்கொள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்யவும். பின் கிடைக்கும் விண்டோவில் Hardware என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் Driver Signing என்ற பட்டனை அழுத்தவும். இங்கு மேலே சொல்லப்பட்ட லோகோ டெஸ்டிங் குறித்து சில தகவல்கள் கிடைக்கும். அடுத்து நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் எப்படி இந்த டிரைவர் டெஸ்டிங்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை தீர்மானிக்கலாம். இதனை வேண்டாம் எனவும் நீங்கள் ஒதுக்கிவிடலாம். அல்லது அதற்குப் பதிலாக ஒவ்வொரு சோதனையிலும் ஏதேனும் பிரச்சினை வந்தால் எச்சரிக்கும்படியும் அமைக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வந்தால் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் இந்த சோதனைகள் எல்லாம் முடிந்து சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும்.

%d bloggers like this: