பிரவுசர் பாதுகாப்பு விவரங்களும் தகவல்களும்

பிரவுசர் பாதுகாப்பு விவரங்களும் தகவல்களும்

பிரவுசர் என்பது உங்களை இணையத்தில் கொண்டு செல்லும் ஒரு புரோகிராம். தற்போது அதிகமாக பயன்பாட்டில் உள்ளவை –– மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் ஆகும்.
1.ஒரு பிரவுசர் உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கப்படுகிறது. நீங்கள் ஒரு இன்டர்நெட் முகவரியை டைப் செய்து என்டர் செய்கையில் அல்லது ஒரு லிங்க்கில் கிளிக் செய்கையில் உங்கள் பிரவுசர் அந்த முகவரியில் உள்ள சர்வர் கம்ப்யூட்டருக்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது. அந்த சர்வர் வேண்டுகோளை ஏற்று உங்கள் கம்ப்யூட்டருக்கு பதில் ஒன்றை அனுப்புகிறது. இந்த பதில் தேவைப்படும் இணைய தளமாக இருப்பதுதான் வழக்கம்.
உங்கள் பிரவுசர் அதனை ஏற்று உங்களுக்கு அதனைக் காட்டும். சில வேளைகளில் அங்கிருந்து வரும் டேட்டாவினை பிரவுசரால் காட்ட முடியாவிட்டால் பிற புரோகிராம்களை உங்கள் பிரவுசர் துணைக்கு அழைத்து டேட்டாவைக் கையாளச் சொல்லும். எடுத்துக் காட்டாக நீங்கள் கிளிக் செய்திடும் லிங்க் ஒரு பி.டி.எப். பைலாக இருந்தால் அதற்கான அடோப் ரீடர் அல்லது மற்ற புரோகிராம்கள் அழைக்கப்பட்டு அந்த பைல் காட்டப்படும்.
2. பிரவுசர் பிழை (Browser bug)  புரோகிராமர்கள் மொழியில் bug என்பது ஒரு பிழை. இது டைப் செய்வதில் ஏற்படும் பிழையாக இருக்கலாம். அல்லது புரோகிராமில் உள்ள லாஜிக் பிழையாக இருக்கலாம். மற்ற புரோகிராம்களில் இருப்பது போலவே பிரவுசர்களிலும் பிழைகள் இருக்கலாம். பெரும்பாலான பிழைகள் நமக்கு எரிச்சல் தருபவையாக இருக்கும்.
சில நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பினையே கேள்விக்குறியாக்கும். ஏனென்றால் பிரவுசர் புரோகிராமில் உள்ள இந்த பிழைகளைப் பயன்படுத்தி சில தளங்கள் நம் கம்ப்யூட்டரில் அவர்களின் ஸ்பைவேர்களைப் புகுத்துவார்கள்.
3. பிரவுசர் பிழைகளை யார் பயன்படுத்துவார்கள்?: இன்டர்நெட் சைட் ஒன்றின் ஆப்பரேட்டர் தன் தளத்தை அணுகுபவர்களின் அனைத்து பிரவுசர்களையும் தன் வசப்படுத்தும் வகையில் தன் தளத்தை மாற்றலாம். அல்லது யாரேனும் ஹேக்கர் ஒருவர் இணைய தளத்தில் நுழைந்து அந்த தளத்தினுள் வரும் அனைத்து பிரவுசர்களையும் கைப்பற்றும்படி சில வரிகளை நுழைக்கலாம்.
அவுட்லுக் மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற இமெயில் புரோகிராம்கள் பிரவுசர் மூலமாகவும் இமெயில் செய்திகளைக் காட்டும்படி வடிவமைத்துள்ளன. இந்நிலையில் ஹேக்கர் ஒருவர் உங்கள் பிரவுசரில் நுழைந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் இமெயில் மெசேஜ் ஒன்றை அனுப்பலாம்.
4.எந்த வகையில் ஒருவருக்கு தீங்கு வரும்?: பிரவுசரின் பிழைகள் பல தரப்பட்டவை. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வகையில் பிரவுசரைத் தாக்கக்கூடும். சில பிழைகளின் மூலம் அந்த பிரவுசர் வெப்சைட் தரும் புரோகிராம் ஒன்றினை டவுண்லோட் செய்து இயங்கச் செய்திடும்.
இது உங்கள் அனுமதியின்றியும் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்காமலும் நடைபெறும். இந்த வழியில் உங்கள் பிரவுசர் வழியாக உங்கள் கம்ப்யூட்டரைத் தாக்குபவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன தீங்கு வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். பைல்களை அழிக்கலாம், வைரஸ் ஒன்றினை நுழைக்கலாம்; ரிமோட் கண்ட்ரோல் சாப்ட்வேர்களைப் பதித்து உங்கள் கம்ப்யூட்டரை தொலைவில் இருந்து இன்டர்நெட் வழியே இயக்கலாம். ஒரு சில புரோகிராம்கள் ஒன்றும் செய்யாமல் கம்ப்யூட்டரில் சிறிய அளவில் சில்மிஷம் செய்து கொண்டிருக்கும்.
5.நான் கம்ப்யூட்டரில் என்ன செய்தால் தப்பிக்கலாம்?: என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது. நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இமெயில் அனுப்பினாலும் சரி, ஏகப்பட்ட தளங்களுக்குச் சென்று தகவல் திரட்டினாலும் சரி, உங்கள் பிரவுசரில் வைரஸ்கள் நுழையும் வகையில் பிழை இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு ஹேக்கர் உள்ளே நுழைய வாய்ப்பு உண்டு.
6. ஜாவா என்பது என்ன? அது என்ன செய்யும்? அது பாதுகாப்பானதா?: பிரவுசர்களின் தொடக்க காலத்தில் அவை டெக்ஸ்ட் மற்றும் படங்களை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன. இணையப் பக்கங்கள் மாற்றங்களின்றி அப்படியே சிலையாக இருந்தன. பிற்காலத்தில் இணையத்தோடு உறவாட மெனு, பாப் அப் விஷயங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று தான் ஜாவா.
ஜாவா என்பது ஒரு புரோகிராமிங் மொழி. இதனைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தையும் உருவாக்கலாம். இதன் ஒரு சிறப்பம்சம் தான் வெப் சைட்டுகளின் உள்ளே ஜாவா பயன்பாடு. ஆப்லெட் என அழைக்கப்படும் சிறிய ஜாவா புரோகிராம்களை அப்படியே இணைய தளங்களில் பதித்துவிடலாம். நீங்கள் அந்த இணைய தளத்தைப் பார்க்கையில் அந்த ஆப்லெட் உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கப்பட்டு இயக்கப்படும். முகவரியற்ற உங்களுக்குத் தெரியாத புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்குவது ஆபத்தானது அல்லவா! எனவே ஜாவா ஆப்லெட் டுகளை அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க அதனை வடிவமைத்தவர்கள் ஜாவா ஆப்லெட்டுகள் என்ன செய்ய வேண்டும் என வரையறை வைத்துக் கொண்டனர். ஜாவா புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரால் நேரடியாக இயக்கப்படுவதில்லை. “Sandbox” என அழைக்கப்படும் ஜாவா மெஷின்களால் இயக்கப்படுகின்றன. இந்த Sandbox  ஜாவா ஆப்லெட்டுகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இயங்குவதைத் தடுக்கின்றன. ஒரு ஜாவா ஆப்லெட் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவிலிருந்து பைல்களை எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை; அவை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை; அவை எந்த சர்வரில் இருந்து இறக்கப்பட்டனவோ அந்த சர்வருடன் நெட்வொர்க் வழியாக தொடர்பு கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த தடைகள் ஜாவா வினை பாதுகாப்பானதாக அமைத்துள்ளன.
7. ஜாவா ஸ்கிரிப்ட் என்பது என்ன? அது என்ன செய்யும்? அது பாதுகாப்பானதா?: ஜாவா ஸ்கிரிப்ட் (Jscript  அல்லது Active Scripting)  என்பது இணையப் பக்கங்களுடன் நாம் தொடர்பு கொள்ள வந்துள்ள இன்னொரு தொழில் நுட்பம் ஆகும். ஜாவா ஸ்கிரிப்டில் கோட் ஒன்று எழுதி அதனை அப்படியே இணையப் பக்கத்தில் பதித்துவிடலாம்.
பிரவுசர் இணையப் பக்கத்தினைக் காட்டுகையில் இதனையும் படித்து அதற்கேற்ப செயல்படுகிறது. ஜாவா ஸ்கிரிப்ட் பெரும்பாலும் பிரவுசருக்குள் செயல்படும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. புதிய பிரவுசர் விண்டோக்களைத் திறப்பதற்கும், விண்டோஸுக்குள்ளாக தகவல்களை மாற்றுவதற்கும், படங்களைக் கையாள்வது என்பன போன்ற செயல்பாடுகளுக்கு இது பயன்படுகிறது. பொதுவாக இவற்றால் ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாது.
இன்னொரு பாதுகாப்பான விஷயம் என்னவென்றால் இது “Same Origin Policy” என்ற கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது ஓர் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்ட ஜாவா ஸ்கிரிப்ட் கோட் மற்ற இணைய தளங்கள் திறக்கப்பட்ட விண்டோக்களில் செயல்பட முடியாது. பொதுவாக ஜாவா ஸ்கிரிப்ட் என்பது பாதுகாப்பானதே. இருப்பினும் பிரவுசரில் உள்ள பிழைகள் ஜாவாஸ்கிரிப்ட்டுக்குள்ள வரையறைகளைத் தகர்த்து பாதுகாப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

பக்க எண்கள்

பொதுவாக அனைவரும் வேர்ட் டாகுமெண்ட்டில் மட்டுமே பக்க எண்களை அமைக் கலாம் என்று எண்ணி செயல் படுகின்றனர். எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட்டிலும் பக்க எண்களை மேலேயோ கீழேயோ பதிய வைக்கலாம். குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டைத் திறந்து கொண்டு மெனுவில் “View” சென்று அதில் “Header and Footer” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். பல டேப்கள் “Page Setup” கொண்ட என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் “Header / Footer”  என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கும்.
உங்களுடைய எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தலைப்பு பகுதியில் பக்க எண் வேண்டும் என்றால் “Footer” என்ற பகுதிக்குக் கீழே இழுக்கவும். கீழ் பகுதியில் பக்க எண் வேண்டும் என்றால் “ஊணிணிtஞுணூ” என்ற பகுதிக்குக் கீழே இழுக்கவும். அச்சில் வரப் போகும் பக்கத்தில் எந்த பார்மட்டில் (அதாவது “Page 1” அல்லது “Page 1 of 4 “) பக்க எண் வேண்டும் என்பதனை முடிவு செய்து கீழாக விரியும் மெனுவில் செலக்ட் செய்து பின் “OK” அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும்.

%d bloggers like this: