ஹார்ட் டிஸ்க் கட்டுப்பாடு

ஹார்ட் டிஸ்க் கட்டுப்பாடு

விண்டோஸ் இயக்கத்தில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்துதலை ஒரு வரையறைக்குள் கொண்டு வரலாம். ஒரு கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். இவர்களில் ஒருவர் நிறைய பைல்களைப் பதிவு செய்தால் ஹார்ட் டிஸ்க் இடம் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடலாம். எனவே ஒவ்வொரு பயனாளருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தை வரையறை செய்வது முக்கியம். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று ஹார்ட் டிஸ்க்கில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் Quota Tab தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் விண்டோவில் ‘ Enable Quota Mangament’ என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அப்ளை கிளிக் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இப்போது டிஸ்க் ஸ்கேன் செய்யப்படும். பொறுமையாகக் காத்திருக்கவும். முடிந்த பின் Quota entries பட்டனில் கிளிக் செய்திடவும்.

கோட்டா மெனுவில் கிளிக் செய்து New Quota Entry என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் அட்வான்ஸ்டு பட்டனில் கிளிக் செய்க. இப்போது Find Now என்பதில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களின் பட்டியல் கிடைக்கும்.

எந்த அக்கவுண்ட்டிற்கு ஹார்ட் டிஸ்க் பயன்பாட்டினை வரையறை செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Limit Disk space to என்பதைக் காணவும். இதில் எவ்வளவு ஸ்பேஸ் என்பதனை டைப் செய்திடவும். எம்.பி. (MB) அல்லது ஜி.பி (GB) அளவில் இதனை அமைக்கலாம். எச்சரிக்கை கொடுக்க வேண்டிய லெவலையும் இதில் அமைக்கலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். இப்படியே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் அமைக்கலாம்.

2 responses

  1. […] ஹார்ட் டிஸ்க் கட்டுப்பாடு […]

%d bloggers like this: