Monthly Archives: ஏப்ரல், 2009

உங்கவீட்டு பொண்ணு சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?

உங்கவீட்டு பொண்ணு சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?

ஹாய் பிரண்ட்ஸ் நம்ம வீட்டு பொண்ணுங்க நல்லா படிக்கணும், நல்லா டிரஸ் பண்ணிக்கணும், நல்ல வேலைக்கு போகணும் அப்படின்னு பல விஷயங்களப் பத்தி யோசிக்கிறோம்; அட்வைஸ் பண்றோம். ஆனா, எப்படி நடந்துக்கிட்டா இந்த சமூகத்தில அவங்க பாதுகாப்பா வலம் வர முடியும் அப்படிங்கறத பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை.

அதனாலதான் பல பொண்ணுங்க தங்களோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறாங்க. இதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா நிச்சயமா அவங்க எல்லாத்துலயும் வெற்றி பெறுவாங்க. முன்பெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண் அவ்வளவு சுலபத்தில் யாருடனும் பேசிவிட முடியாது. ஆனா, இது செல் போன் காலம். அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்க அப்படின்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலம் ஈசியா பேச முடியுது. செல்போன் மூலமா, முகம் தெரியாத நபர் கூட உங்க வீட்டுக்குள்ள நுழைய முடியுது. அதனால, முன்பின் தெரியாத நபர்கள் லைனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள்.

அடுத்து, செல்போனை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபடுவது; ஆபாசப் படங்களைக் காட்டி பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண்கள் இன்று சீரழிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். ஏழாவது எட்டாவது படிக்கும் குழந்தைகள் முதல் சொல்லித்தர வேண்டும்.

சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதப்பத்தியெல் லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள். “டிவி’, சினிமா என உங்கள் பெண் அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள். எல்லையே இல்லாமல் இஷ்டத்துக்கு பிள்ளைகளை விடுவது எத்தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் சொல்வதும். அதனால, உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள். அப்போது தான் அவங்களோட கூச்ச சுபாவம் நீங்கும்.

மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள். உதாரணமாக, அடுத்திருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம். அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறுங்கள்.

தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படிச்சா பத்தாது; நாட்டு நடப்புகளையும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் அதற் கேற்றவாறு இந்த சமூகத்தில் உலா வர முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்; அவர்கள் எப் படி இருந் தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிக்காட்டுங்கள்.

இதுபோன்ற விஷயத்துலயும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள், நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதையில் கவனமாக இருப்பார்கள்; வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்…

கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்…

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…

*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.

*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

டென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்கணுமா?

டென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்கணுமா?

ஹாய் பிரண்ட்ஸ், டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது; அதுக்காக சில செயல்களை நிச்சயமா நாம செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா?

மற்றவரை மன்னியுங்க….! தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு.

ஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும்.   டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே,”மறப்போம் மன்னிப் போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள். உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை மற்றவர்களை ஒரு போதும் காயப்படுத்துவதில்லை; மாறாக, யார் இவற்றை வைத்திருக் கிறார்களோ அவருடைய ஆரோக்கியத்தை தான் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.

அப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத் தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்க்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.

நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக் கும். இல்லாவிட்டால், அவை மனதை அழுத்தித் உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும். சீற்றம், மனக்கசப்பு போன்றவற்றை நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும்.  என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா உங்க வாழ்க்கையில் இனிமே நோ டென்ஷன். வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…

பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…

நமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும் வேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால் படிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப் பார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு கவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது. இந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை டவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.

இன்டர்நெட்டில் இணைந்த பின்னர் http://www.poptray.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற லிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி தேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன் Run Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக் செய்திடவும்.

இப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும். இதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account அக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும் அடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன் இதனைச் சோதித்துப் பார்க்கலாம். இதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக் செய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே நீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து கொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.

ஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம் உங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக் செய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும். அல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக் செய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம் தெரிகிறதல்லவா! இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன் பிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.

உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும் டேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன் வந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த மெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால் அவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை புரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும் முகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம். தேவையற்ற இமெயில் முகவரிகளை பிளாக் லிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து நீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.

90 லட்சம் கம்ப்யூட்டர்கள் அவுட்

கம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி நம் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதந்தோறும் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும் என எழுதி வருகிறோம். சென்ற மாதம் திடீரென வழக்கமான கால அட்டவணை இன்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு விண்டோஸ் பயன்படுத்துபவர்களை அப்டேட் செய்திடக் கொடுத்தது. வழக்கமான பேட்ச் பைல் இல்லையே எனப் பல நாடுகளில் மக்கள் இது குறித்து சீரியஸாக எண்ணவில்லை. விளைவு என்ன தெரியுமா? “Downadup,” என்னும் வைரஸ் (வோர்ம்) 90 லட்சம் கம்ப்யூட்டர்களில் வந்தமர்ந்து அவற்றை முடக்கிப் போட்டது.

இந்த வோர்ம் வெப்சைட்டுகளில் சென்று அமர்ந்து கொள்கிறது. அதன் பின் அந்த வெப்சைட்டுகளுடன் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணையும் கம்ப்யூட்டர் களுக்குச் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் தன் நாச வேலையைத் தொடங்குகிறது. இன்னும் இந்த வோர்ம் வேகமாகப் பரவி வருகிறது. எனவே இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடப் பல வழிகள் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். (இந்த வேலைக்கு பயர்பாக்ஸ் வேண்டாம்) http://windowsupdate.microsoft.com என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும். இந்த வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த அப்டேட் வேண்டும் எனச் சொல்லும். அந்த தளம் கூறும் அத்தனை அப்டேட் பைல்களையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கி இன்ஸ்டால் செய்திடவும். இந்த வேலையை முடித்தவுடன் கையோடு கையாக மைக்ரோசாப்ட் தரும் Malicious Software Removal Tool என்ற பைலையும் இறக்கிப் பதிந்திடவும். இந்த டூல் http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=AD724AE0E72D4F549AB375B8EB148356&displaylang=en என்ற முகவரியில் கிடைக்கிறது.

பிரவுசர்கள் ஓர் அலசல்

பிரவுசர்கள் ஓர் அலசல்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 சோதனை தொகுப்பு பயன்படுத்திப் பார்க்க வந்துவிட்டதால் தற்போது இயங்கும் அனைத்து பிரவுசர்களையும் அலசிப் பார்த்து அவை தரும் குறிப்பிட்ட வசதிகளை ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. அவற்றை இங்கு தருகிறோம். விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் மார்க்கட்டில் தனியாக இலவசமாகக் கிடைப்பதுவும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதுமான பிரவுசர்களை எடுத்துக் கொண்டால் பயர்பாக்ஸ், ஆப்பரா மற்றும் குரோம் ஆகியவை முன் நிற்கின்றன.

இந்த முறை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8னை வடிவமைத்து வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் எடுத்திருப்பது தெரிகிறது. ஏனென்றால் பதிப்பு 7க்குப் பின் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பக்கம் அதிகம் பேர் திரும்பினார்கள். இப்படித் திரும்பியவர்களை மீண்டும் தன் பக்கம் கொண்டு வர மைக்ரோசாப்ட் அதிக சிரமம் எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கென புதிய வசதிகளாக வெப் ஸ்லைசஸ், அக்ஸிலரேட்டர்ஸ் மற்றும் விசுவல் சர்ச் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சராசரியாக இணையத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை நிச்சயம் இந்த புது வசதிகள் எக்ஸ்புளோரர் பக்கம் கொண்டு வரும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. பிரைவேட் பிரவுசிங் மோட் என்னும் ஹிஸ்டரியைப் பதியாத முறையினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டு வந்தது. இது பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கிறது. ஆனால் ஆப்பராவில் இன்னும் தரப்படவிலை. ஆனால் இதனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது சபாரி பிரவுசர்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 இன்னும் சில குறைகளைக் கொண்டுள்ளது. இதனை டவுண்லோட் செய்திட கிளிக் செய்தால் இதன் பைல் சைஸ் நம்மைப் பயமுறுத்துகிறது. 16 எம்பி அளவில் பைல் இருந்தால் எவ்வளவு நேரம் டவுண்லோட் செய்வது? அத்துடன் அதன் பின் இன்ஸ்டால் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இன்ஸ்டால் செய்திட இது ஆன்லைன் இன்ஸ்டாலரைப் பயன்படுத்துவதால் இந்த நேரத்தைக் குறைத்திட வாய்ப்பில்லை. மேலும் இன்ஸ்டலேஷன் சமயத்தில் இருமுறை கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டியுள்ளது. மற்ற பிரவுசர்கள் குறைவான நேரத்தில் வேக வேகமாக இன்ஸ்டால் செய்திடுகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதிக நேரம் எடுத்துக் கொள்வது பலரின் ஆசை பாதியிலேயே திரும்பி விடுவதனைப் பார்க்க முடிகிறது. குறைந்தது 10 நிமிடம் எடுத்துக் கொள்ளும் இன்ஸ்டலேஷன் அனைத்து அப்டேட் பைல்களையும் தருகிறது. அதன் பின்னும் நீங்கள் அப்டேட் செய்திடவில்லை என்றால் எரிச்சலூட்டும் செய்திகள் வந்து உங்களை சலிப்படைய வைக்கிறது. இந்த தொந்தரவெல்லாம் பிற பிரவுசர்களில் இல்லை.

மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் ரென்டரிங் இஞ்சினுடைய வேகத்தினை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மெதுவாகத்தான் இணையப் பக்கங்கள் இறக்கப்படுகின்றன.  இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் வசதிகள் பெருகிக் கொண்டு சென்றாலும் மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றுக்காக மீண்டும் இதற்கு மாறுவார்களா என்பது சந்தேகமே.

பயர்பாக்ஸ் –3: பன்னாட்டளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இரண்டாவது இடத்தில் பயர்பாக்ஸ் –3 இடம் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்துபவர்களை அழகாக மெதுவாகத் தன் பக்கம் இழுத்திடும் பிரவுசராக இது இயங்குகிறது. இதன் சிறப்பு இதற்கென எழுதித் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் ஆட்– ஆன் தொகுப்புகளாகும். இந்த தொகுப்புகளினால் பயர்பாக்ஸ் ஒரு பிரவுசராகப் பார்க்கப்படாமல் ஒரு சிறந்த அப்ளிகேஷன் சாப்வேர் தொகுப்பாகப் பார்க்கப்படுகிறது என்பது உண்மையே. அண்மைக் காலத்தில் இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக நம்மிடம் இருப்பது பயர்பாக்ஸ் 3.0.5. இதற்கு அப்டேட் செய்வது மிக மிக எளிது. இதன் இன்ஸ்டலேஷன் பைல் அளவு 7 எம்பி மட்டுமே. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பைலின் அளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பு சோதனைத் தொகுப்பாகவே இன்னும் உள்ளது. இதில் பிரைவேட் பிரவுசிங் வசதி தரப்பட்டுள்ளது.

ஆட் ஆன் தொகுப்புகள் வழியாகப் பல வசதிகள் கிடைக்கப்படுவது ஒரு சிறப்பு என்றாலும் பலரும் இதில் சிறப்பான வசதியாக அறிவித்துள்ளது இதன் எளிமையும் வேகமும் தான். எளிமை, பாதுகாப்பு, ஆட் ஆன் தொகுப்பு இதன் வலிமையான தூண்களாகும்.

ஆப்பரா 9.63: பிரவுசர்களில் நல்ல பிரவுசர் எது என்பதனைப் பார்க்கையில் வரிசையில் அடுத்து நிற்பது ஆப்பரா 9.63 ஆகும். இது பிரவுசர் மார்க்கட்டில் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும் இது தரும் வசதிகளும் சிறப்புகளும் ஒன்றும் குறைந்தது இல்லை. பல வல்லுநர்கள் தொழில் நுட்ப ரீதியில் இதனையே சிறந்த தொகுப் பாகக் கருதுகின்றனர்.

பல வகை ஆட்–ஆன் தொகுப்புகளுடன் பயர் பாக்ஸ் தந்திடும் வசதிகளை ஆப்பரா தனியாகவே தருவ தாக கருதப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகளின் இடத்தில் ஆப்பரா பல விட் ஜெட்களைக் கொண்டுள்ளது. இதன் மவுஸ் பயன்பாடும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆப்பரா இன்னும் அதன் வேகத்திற்காகப் பாராட்டப்படுவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஸ்பீட் டயல், ஸ்கின்ஸ் மற்றும் முற்றிலும் புதிய பிரவுசர் இஞ்சின் போன்றவை இதன் மற்ற சிறப்புகளாகும்.

கூகுள் குரோம்: பிரவுசர் பயன்பாட்டில் அதிக அளவில் சலசலப்பினை ஏற்படுத்தியது கூகுளின் குரோம் பிரவுசராகும். செப்டம்பரில் இது வெளியான போது அனைவராலும் இது பேசப்பட்டது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிட்டதால் அதிக எதிர்பார்ப்போடு மக்கள் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தினார்கள். மேலும் இதன் வேகம் பலரை இதன் பால் இழுத்தது. ஆனால் அனைவரும் தொடர்ந்து அதிலேயே இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. இருப்பினும் இதன் வேகமும் வசதியும் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதன் எளிமையுடன் திரையில் இது தரும் பெரிய ஏரியா அனைவரையும் கவர்கிறது. தேவையற்ற டூல்பார்களை மறைத்து வைத்து நாம் பிரவுஸ் செய்திட அதிக இடம் தருவது குரோம் பிரவுசர்தான். டிசம்பரில் மீண்டும் நல்ல நிலையான பிரவுசரைத் தந்தது. இந்த பிரவுசரைப் பொறுத்த வரை இதன் சோதனைத் தொகுப்பு காலத்திலிருந்தே இது பிரைவேட் பிரவுசிங் வகையைத் தந்தது. தொடர்ந்து வேகமாக இயங்கி அதி வேகத்தில் இணையப் பக்கங்களைத் தருவதில் இன்னும் குரோம் முதல் இடத்தில் உள்ளது. இதுவும் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உள்ளதால் இதற்கும் ஆட் – ஆன் தொகுப்புகள் பல வரும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி பல நூறு ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கையில் குரோம் பயன்படுத் துபவர்களின் எண்ணிக்கை நிலையாக உயரலாம்.

நீங்கள் எதனைப் பயன்படுத்துகிறீர்கள்? ஒரு சிலர் பாதுகாப்பிற்காக அனைத்தையும் மாறி மாறிப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலரோ தங்களுடன் பழக்க வழக்கத்தில் ஒன்றிவிட்ட பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள். எப்படி இருந்தாலும் நமக்கு என்ன வசதிகள் வேண்டுமோ, எதனை விரும்புகிறோமோ அதனையே தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இருப்பினும் அனைத்தையும் பழகி வைத்துக் கொள்வது நல்லதல்லவா!

எதிர்காலத்தில் பாஸ்வேர்ட்கள்

எதிர்காலத்தில் பாஸ்வேர்ட்கள்

பாஸ்வேர்ட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. கம்ப்யூட்டரில் லாக் இன் செய்கையில், வங்கி டெபிட் அட்டையை ஏ.டி.எம். சாதனத்தில் பயன்படுத்து கையில் எனப் பல இடங்களில் நாம் அன்றாடம் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகிறோம். இந்த பயன்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாஸ்வேர்டுக்கு மாற்றாக வந்துள்ள அவற்றைப் பார்க்கலாம்.

1.கைவிரல் ரேகை ஸ்கேனர்கள்: கை விரல் ரேகையினைப் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் சாதனங்கள் இப்போது பரவலாகப் பயன்பாட்டில் இருப்பதனைக் காணலாம். லேப் டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் கூட இந்த விரல் ரேகை ஸ்கேனர்கள் வந்துவிட்டன. இதனால் பாஸ்வேர்ட்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் விரல் ரேகைக்கான பாஸ்வேர்டினை கம்ப்யூட்டர் தன்னிடத்தில் வைத்து விரல் ரேகையினை அறிந்து அதற்கான பாஸ்வேர்டினைப் பயன்படுத்துகிறது.

2. சாவி அடிப்படையிலான பாஸ்வேர்ட்கள்: சாவி அடிப்படையில் இயங்குபவை பாஸ்வேர்ட் பயன்பாட்டினை முற்றிலும் அறவே நீக்கவில்லை. கீ பாஸ்வேர்ட் சாதனம் என்பது நம்முடைய வழக்கமான பிளாஷ் டிரைவ் போலத்தான் இருக்கும். இதில் குறியீடு (இணிஞீஞு) ஒன்று பதியப்பட்டிருக்கும். இதனை நுழைத்தவுடன் குறிப்பிட்ட சாதனம் குறியீட்டினை உணர்ந்த பின் உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். சரியான பாஸ்வேர்டைக் கொடுத்த பின்னர் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இங்கு இரண்டு வகையான பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது.

3. கிராபிக்ஸ் பாஸ்வேர்ட்: பாஸ்வேர்ட்களில் சொற்களின் பயன்பாட்டினை இது நீக்குகிறது. புதிய மாடல் மொபைல் போன்கள் சில இந்த பயன்பாட்டினைக் கொண்டுள்ளன. திரையில் குறிப்பிட்ட படத்தினை விரலால் வரைய வேண்டும். அந்த படம் ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டுள்ள படத்துடன் ஒத்துப் போனால் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இந்த வகைகள் எல்லாம் இப்போது புதியதாக வந்து புழக்கத்தில் உள்ள பாஸ்வேர்ட் வகைகளாகும். எதிர்காலத்தில் இன்னும் பல வகைகள் வர வாய்ப்புள்ளது என்பதனைக் காட்டவே இவை தரப்பட்டுள்ளன.

கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?

கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வயதில் போதையாக அமைந்து விடுகிறது. எப்படியாவது அந்த கார் ரேஸில் ஜெயிக்க வேண்டும். அவனைக் காட்டிலும் அதிக பாய்ண்ட் எடுத்துக் காட்டி பெருமை கொள்ள வேண்டும் என கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் பெரும் நேரத்தைச் செலவிடுபவர்கள் பலர் இருக்கின்றனர்.

பெரும்பாலானோர் புதிய கேம்ஸ் வர இருக்கிறது என அறிவிக்கையில் காத்திருந்து அவற்றை வாங்கி அல்லது காப்பி செய்து உடனே பயன்படுத்த வீட்டிற்கு ஓடி வருகின்றனர். கேம்ஸ் இருக்கும் சிடியை கம்ப்யூட்டரில் நுழைத்து பின் கேம்ஸை கம்ப்யூட்டருக்கு மாற்றி ஆசை ஆசையாக விளையாடத் தொடங்குகிறீர்கள். ஆஹா! அய்யோ!! கேம்ஸ் தொடர்ந்து செல்ல மறுக்கிறது. மீண்டும் முயற்சிக்கிறீர்கள். மீண்டும் கிராஷ் ஆகி நிற்கிறது.செய்வதறியாது பல நாட்களாக விளையாடிய கேம்ஸ்களையே விளையாடுகிறீர்கள். அல்லது ஏன் கிராஷ் ஆகிறது என்று மற்றவரிடம் கேட்கிறீர்கள். இதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

அடிப்படை பிரச்சினைகள்: கேம்ஸ் தொடக்கத்தில் இருந்து தொடங்கவே இல்லையா? அப்படியானல் கேம்ஸ் சிடியில் அல்லது அதன் அமைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட அந்த கேம்ஸ் விளையாடுவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உங்கள் கம்ப்யூட்டர் பெறவில்லை என்றே பொருள். அது பெரும்பாலும் ராம் மெமரி அல்லது திரைத் தோற்றம் அல்லது அது போன்ற வேறு ஒரு ஹார்ட்வேர் இணைந்து செயல்பட முடியாததாக இருக்கலாம். இன்னொரு வகையிலும் தடை ஏற்படலாம். நீங்கள் வாங்கி வந்த கேம்ஸ் சிடி உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க முடியாததாக இருக்கலாம். உங்களிடம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் இருக்கலாம். ஆனால் நீங்கள் வாங்கி வந்தது மேக் சிஸ்டத்தில் இயங்கும் கேம்ஸ் பதிப்பாக இருக்கலாம்.

உங்களிடம் சிடி டிரைவ் உள்ள கம்ப்யூட்டர் உபயோகத்தில் இருக்கும். ஆனால் நீங்கள் கொண்டு வந்த கேம்ஸ் ஒரு டிவிடியில் இருக்கும். நிச்சயமாய் அந்த டிவிடி, சிடி டிரைவில் இயங்காது. உங்களிடம் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கும். வாங்கி வந்த கேம்ஸ் சிடி 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாக இருக்கும். அல்லது கேம்ஸ் இயங்கத் தேவையான கிராபிக்ஸ் கார்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல், திறன் குறைந்த கிராபிக்ஸ் கார்ட் இருக்கலாம்.

மேலே சொன்ன பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்க கேம்ஸ் சிடி இயங்கத் தொடங்கும் முன் அல்லது வாங்குவதற்கு முன் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன்கள் அந்த கேம்ஸ் இயங்க போதுமானவையா என்று சோதித்துத் தெரிந்து கொள்ளவும்.

ஓகே. கேம்ஸ் சிடி அல்லது டிவிடியில் குறிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தேவைகள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது என்று அறிந்து கேம்ஸ் சிடியை வாங்கிப் பயன்படுத்தப் போகிறீர்கள்.  பிரச்சினைகள் வரலாம். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டவை எல்லாம் அடிப்படைத் தேவைகள் தான். உங்களின் கேம்ஸ் விளையாடும் அனுபவம் ஆர்வத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்றால் மேலும் சில தேவைகள் உள்ளன. அவை இல்லை என்றால் தடைகள் தொடரத்தான் செய்யும்.

முதல் தடையைப் பார்ப்போம். கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் ஆகி இருக்கலாம். ஆர்வத்தில் பல புரோகிராம்களை, அவற்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். நீங்கள் அறியாமலேயே உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கையில் இந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். பின்னணியில் கம்ப்யூட்டரின் திறனை இவை உறிஞ்சிக் கொண்டிருக்கும். குறிப்பாக மெமரியில் குறிப்பிட்ட அளவை இவை பயன்படுத்திக் கொண்டிருக்கும். இதனால் உங்கள் கேம்ஸ் விளையாடத் தேவையான திறன் குறைவாகவே கிடைக்கும். இதனை எப்படி அறிந்து கொள்வது? இதற்கு performance check என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த எந்த புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குவதிலிருந்து இயங்குகின்றன என்று கண்டறிந்து அவற்றை நீக்கலாம்.

பல கேம்ஸ் பிரச்சினைகளில் அவற்றிற்கான ஹார்ட் டிஸ்க் இடம் போதுமானதாக இல்லாதது ஒன்றாகவும் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் தேவைக்கு அதிகமாகவே இடம் இருக்கும். ஆனால் அதில் பதிந்துள்ள பைல்களால் அவை துண்டு துண்டாக இருக்கலாம். இதனால் கேம்ஸ் பிரச்சினை தருகையில் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்து பின்னர் முயற்சித்துப் பார்க்கலாம். (கூடுதல் இடம் உள்ள டிஸ்க்கினை வாங்குவதாக இருந்தாலும் இந்த வழியை மேற்கொள்வது நல்லது)

பல வேளைகளில் கேம்ஸ் இயங்காமல் இருக்கக் காரணம் ஹார்ட் டிஸ்க் இடம் அல்லது மெமரி இடம் இல்லாமல் போவதால் அல்ல. வீடியோ மெமரியும் ஒரு காரணமாகும். கேம்ஸை இயக்க இது ஒரு மிக முக்கியமான தேவையாகும். தற்போது வரும் கேம்ஸ் சிடிக்களின் கவர்களில் சிடியில் உள்ள கேம்ஸை இயக்க எவ்வளவு வீடியோ மெமரி தேவை எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். உங்கள் வீடியோ மெமரி குறைவாக இருக்கையிலும் அந்த கேம்ஸ் இயங்கினாலும் பல வேளைகளில் கிராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது.

இங்கு சிக்கல் என்னவென்றால் இதனை அதிகப்படுத்த முடியாது. உங்கள் கம்ப்யூட்டரில் AGP அல்லது graphics accelerator card C இல் இதற்கென ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு டெடிகேட்டட் வீடியோ மெமரியாகச் செயல்படும். அல்லது மெயின் மெமரியில் ஒரு குறிப்பிட்ட இடம் வீடியோ மெமரிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும். இதனை நீங்களாக அதிகப்படுத்த முடியாது என்பதால் கேம்ஸ் விளையாடுகையில் அதன் ரெசல்யூசனைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் வீடியோ மெமரிக்கு இடம் கிடைக்கும். சில வேளைகளில் கேம்ஸ் நன்றாக விளையாடுவதற்காக கேம்ஸில் என்ன ரெசல்யூசன் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதற்கேற்ற வகையில் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.

சில கம்ப்யூட்டர்களில் உள்ள கிராபிக்ஸ் கார்டுக்கு உங்கள் கேம்ஸ் ஒத்துப் போகாமல் இருக்கலாம். சில கம்ப்யூட்டர்களில் ஏ.ஜி.பி. கார்ட் இல்லாமலே இருக்கலாம். எனவே நன்றாக கேம்ஸ் விளையாட வேண்டும்; அதனை விளையாடுவதில் திரில்லிங் அனுபவம் தேவை என்றால் ஒரு AGP அல்லது 3D graphics accelerator card வாங்குவது நல்லது. வீடியோ அப்படியே செயலற்றுப் போய் ப்ரீஸ் ஆகி நிற்பது, ஸ்கிரீன் அடிக்கடி விட்டு விட்டு காட்சி தருவது மற்றும் மற்றவகையான கிராஷ் ஏற்படுவது ஆகியவை கேம்ஸ் விளையாடுகையில் ஏற்படும் சகஜமான நிகழ்வுகளாகும்.

இன்னொரு முக்கிய குறையும் நம் கம்ப்யூட்டரில் இருக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவர் புரோகிராம்கள் அப்டேட் ஆகாமல் இருப்பதாலும் கிராஷ் ஏற்படும். எனவே அவற்றை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். சில வேளைகளில் ஒத்துப் போகாத சவுண்ட் கார்டும் கிராஷ் ஏற்பட வழி வகுக்கும். இப்படிப்பட்ட கிராஷ்கள் ஏற்படுகையில் உங்கள் கேம்ஸ் சிடியினை மற்ற கம்ப்யூட்டர்களில் விளையாடிப் பார்த்து குறை எந்த வகை என அறியலாம்.  மிக உயர்ரக சி.பி.யு.வில் கேம்ஸ் விளையாடுகையில் அது அதிகமாக சூடு அடைந்து அதனாலும் கேம்ஸ் விளையாடுவது கிராஷ் ஆகலாம். மேலும் இந்த அதிக பட்ச உஷ்ணம் ப்ராசசரின் மேல் உள்ள பேன் இயங்காமல் இருப்பதால் ஏற்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும்; அல்லது மாற்ற வேண்டும். என்னதான் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விளையாடலாம் என உங்கள் கேம்ஸ் சிடியில் போட்டிருந்தாலும் பல வேளைகளில் இவை பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிராஷ் ஆகின்றன.

மேலே தரப்பட்டிருப்பது கம்ப்யூட்டர் நோக்கில் இருந்துதான். கேம்ஸ் சிடிக்களே தரமின்றி வடிவமைக்கப் பட்டிருந்தாலும் பல வேளைகளில் கிராஷ் ஏற்படுவதுண்டு. எனவே கிராஷ் ஏற்படும் வேளையில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

ஏன் கிடைக்கிறது ‘Session Expired’?

ஏன் கிடைக்கிறது ‘Session Expired’?

மிகப் பிரியமான இன்டர்நெட் பிரவுசிங்கில் அடிக்கடி “Session Expired”என்ற செய்தி கிடைத்து நம் ஆர்வத்தைக் கெடுக்கும். நமக்கோ ஒன்றும் புரியாது. ஆர்வம் அதிகம் இருந்தால் மீண்டும் முதலில் இருந்து அந்த தளத்தைத் திறந்து ஒவ்வொரு லிங்க்காகக் கிளிக் செய்து வருவோம். இந்த பிரச்சினைக்கு நம் பிரவுசர் தான் காரணம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எதனால் இந்த செய்தி கிடைக்கிறது என இங்கு பார்க்கலாம்.

1. பிரவுசிங்கை விட்டுச் செல்லல்: நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில் வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு நீங்கள் செல்ல வேண்டியதிருக்கலாம். மீண்டும் வந்து பார்க்கின்ற போது “Session Expired”  என்ற செய்தி திரையில் கிடைத்துக் கொண்டிருக்கும். எந்த விதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத் திருக்கலாம். அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.

2. குக்கீஸ்: சில தளங்கள் தங்க ளிடம் முறையாகப் பதிவு செய்யாதவர் கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்துவிட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு “Session Expired” செய்தி கிடைக்கும். மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும். எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றிவிடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் திரையில் Default  என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப் படும்.

3. பயர்வால்: கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்கவிடாது. இதனால் பிழைச் செய்தி கிடைக்கலாம். இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும் படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும்.

4. தவறான நாளும் நேரமும்: சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கம்ப்யூட்டர் காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் “Session Expired”செய்தி வரலாம். ஏனென்றல் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம். இதனால் தவறான நடவடிக்கைகளுக்குள்ளாகி செஷன் எக்ஸ்பயர் ஆக வாய்ப்புண்டு.

5. தளத்தில் வேறு பிரச்னைகள்: மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள். அந்த தளத்தை புதுப்பிப்பதற்காக இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்கலாம். அல்லது அந்த தளத்தைக் கொண்டிருக்கும் சர்வர் இணைய வலையிலிருந்து விடுபட்டிருக்கலாம். அல்லது அந்த சர்வரில் பிரச்னை ஏற்பட்டு பராமரிப்புக்காக சர்வரின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கலாம். “Session Expired”  என்ற பிரச்னை முற்றிலும் இணைய தளம் மற்றும் அந்த தளத்தைத் தாங்கிக் கொண்டு வழங்கும் சர்வர் சார்ந்த பிரச்னை ஆகும். னவே உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது. எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்த வழியாகும்.

சேட் ரூம்களில் பாதுகாப்பு

சேட் ரூம்களில் பாதுகாப்பு

இன்றைய இன்டர்நெட் உலகில் இளைஞர்கள் முதியவர்கள் என்றில்லாமல் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம் அரட்டை அறை(Chat Rooms) களாகும். ஏனென்றால் நாம் இதுவரை சந்திக்காத, முகம் தெரியாத ஒரு நபருடன் பழக்கம் ஏற்படுத்தி நட்பு பாராட்டி பேசுவது என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் ஓர் அனுபவம் தான். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? என்று அறியாமல் நாம் சிக்கிக் கொள்வதும் இங்கேதான். ஆம், இன்டர்நெட்டில் மிகவும் மோசமான இடமாக இருப்பதும் இந்த அரட்டை அறைகள்தான். இதில் நமக்கு வீசப்படும் வலைகளில் விழுந்துவிட்டால் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து பல இழப்புகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். அப்படியானால் அரட்டை அறைகளில் முகம் தெரியா நண்பர்களைச் சந்தித்து பயனுள்ள தகவல்களைப் பெற முடியாதா? நிச்சயம் முடியும். நாம் நமக்குள் ஒரு பாதுகாப்பு வளையத்தினை ஏற்படுத்தி பாதுகாப்பாக இயங்கினால்தான் இது சாத்தியமாகும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

1. நாம் விரும்பாவிட்டாலும் இன்டர்நெட்டில் ஆன்லைனில் பல பயங்கரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் கவனமாக உங்கள் கண்களைத் திறந்திருக்கவில்லை என்றால் ஒரு நொடியில் நீங்கள் ஆபத்தைச் சந்திக்கும் வேளைகள் அதிகமாகிவிடும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உங்களை நீங்கள் அடையாளம் காட்டக் கூடிய எதனையும் இந்த மாதிரி அரட்டை அறைகளில் வெளிப்படுத்தக் கூடாது. யாருடனாவது அரட்டை அடிக்கிறீர்களா! இவர்கள் நாம் அறியாதவர்கள், காண முடியாதவர்கள் என்ற எண்ணம் எப்போதும் உங்கள் மனத்தினுள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே உங்களுடைய உண்மைப் பெயர், இமெயில் முகவரி, இருப்பிட அல்லது அலுவலக முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரவே கூடாது. அப்படியானால் ஒருவர் நம்மிடம் நட்பு முறையில் பேசுகையில் என்ன செய்யலாம்? இதற்கென ஒரு போலியான இமெயில் முகவரியினைத் தயார் செய்து வைத்திருங்கள். பெயர் மற்றும் பிற தகவல்களையும் அவ்வாறே வைத்துக் கொள்ளலாம்.

2. யாருடன் பேசினாலும், பிற பொய்ப் பெயர்களில் இருந்து கொண்டு அறிமுகமானாலும் உங்களின் அன்றாட செயல்பாடுகளை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். பள்ளி, கல்லூரிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கும் நேரம், இடம், சந்திக்கும் உறவினர் அல்லது நண்பரின் இடம், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிடவே கூடாது.

3. மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆன் லைனில் இது போல பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட ஒருவருடன் எந்த நிலையிலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. மற்ற உங்கள் நண்பர்கள் அவ்வாறெல்லாம் சந்திக்கிறார்களே என்று நீங்களும் முயற்சிக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கை; அதனை முறையாக வைத்துக் கொள்வதும் ஆபத்தின்றி காப்பாற்றிச் செல்வதும் உங்கள் பொறுப்பு. அப்படியும் இன்றி நீங்கள் அரட்டை அறையில் சந்தித்த நபர் நேர்மையானவர்; எந்தப் பிரச்சினையும் தரக்கூடியவர் இல்லை என எண்ணினால் அவரைத் தனியாகச் சந்திக்கும் முயற்சியைக் கைவிடவும். உங்கள் நண்பர் அல்லது உற்றவர்களுடன் சேர்ந்து அது போன்ற நபர்களைச் சந்திக்கவும். மேலும் சந்திக்கும் இடமும் பொது மக்கள் வந்து செல்லும் பூங்கா, உணவு விடுதி போன்றவையாக இருக்கட்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள், யாரைப் பார்க்க இருக்கிறீர்கள் என்பதை எல்லாம் சொல்லிவிட்டுச் செல்லவும்.

4. நீங்கள் அரட்டையில் ஈடுபடும்போது எதிர் முனையில் இருப்பவர்களில் யாரேனும் ஒரு இணையத் தொடர்பினைக் கொடுத்து இங்கு கிளிக் செய்து பார்க்கவும் என்று உங்களுக்கு செய்தி தருகிறார்களா! உடனே அதனைக் கிளிக் செய்து பார்க்கக் கூடாது. அந்த இணைப்பில் தான் உங்களை வேவு பார்க்க அனுப்பும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வந்து அமர்ந்து கொள்ளும்.

5. சில அரட்டை அறைகளில் மாடரேட்டர்கள் என ஒருவர் இருப்பார். இவர் கலந்து கொள்ளும் அனைவரையும் அனுமதித்து பேசிக்கொள்வதனைக் கண்காணிப்பார்; அனுமதிதருவார். அது போன்ற மாடரேட்டர் கள் இருக்கும் அறைகளில் மட்டுமே செல்லவும். இது முற்றிலும் பாதுகாப்பு என்றில்லாவிட்டாலும் நமக்கு ஓரளவிற்கு பிறரும் கண்காணிக்கும் வாய்ப்பு இங்கு உள்ளது.

6. ஒரு சிலர் உங்களின் போட்டோ அனுப்புங்கள் என்று கேட்கலாம். உடனே ஆஹா! என்று வியந்து தயாராக டெஸ்க் டாப்பில் உள்ள படத்தை அனுப்ப வேண்டாம். ஏதேனும் கார்ட்டூன் படத்தை அனுப்புங்கள். இதுதான் நான் என்று வேடிக்கையாகச் சொல்லுங்கள். ஏனென்றால் உங்கள் படத்தை மோசமான வழிகளில் பயன்படுத்த பலரும் தயாராக இருக்கலாம்.

7. ஏதேனும் ஒரு நாளில் இது போன்ற அரட்டை அறைகளுக்குச் சென்று முகம் தெரியாத, நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் அதே விஷயங்களில் ஆர்வம் காட்டும் நபர்களுடன் நம் தகவல்களையும் இலக்குகளையும் பகிர்ந்து கொள்வது நல்லதுதான். இது எப்போதாவதுதான் நடை பெற வேண்டுமே ஒழிய எப்போதும் நடை பெறக் கூடாது. ஒரு சிலர் இந்த சேட் அறைகளில் செயல்படுவதை தினந்தோறும் மேற்கொள்ளும் பழக்கமாக ஏற்படுத்திக் கொண்டு அந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

மேலே சொன்ன வழிகள் அரட்டை அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு வழிகளையும் உங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளன என்று எண்ணுகிறேன். இது உங்கள் வாழ்க்கை; எனவே நீங்கள் அனைத்து நிகழ்வுகளிலும் நிலைகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்ற மேலோங்கிய எண்ணத்துடன் செயல்பட வேண்டியது உங்கள் பொறுப்பு. இதே தகவல்களை உங்கள் வீட்டில் உள்ள இணைய இணைப்பினையும் கம்ப்யூட்டரையும் பயன் படுத்துபவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துங்கள். அது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லது.

சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்

சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்

ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுகையில் இந்த சொற்களைச் சந்தித்திருப்பீர்கள். இந்த சொற்களுடன் கிடைத்த செய்தியைப் பார்த்தவுடன் ஒரு சிலர் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திடும் வேலையை விட்டுவிடுவார்கள். பயம் தான் காரணம். ஒரு சிலர் பரவாயில்லை வருவது வரட்டும் என இன்ஸ்டால் செய்வார்கள். இந்த அளவிற்கு விஷயம் தரக்கூடிய இவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்ற கம்ப்யூட்டர்களில் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு எதனையாவது இன்ஸ்டால் செய்கையில் இது போன்ற லோகோ டெஸ்டிங் சமாச்சாரம் தற்போது அடிக்கடி காணப்படுகிறது. அது சாப்ட்வேர் புரோகிராமாக இருக்கலாம்; அல்லது ஹார்ட்வேர் இணைப்பாக இருக்கலாம். ஏன், யு.எஸ்.பி. ஹப் அல்லது ஒரு கேம் என இதைப் போன்ற எதுவாகவும் இருக்கலாம். இது குறித்து நாம் கவலைப்படும் முன் இது எதனைக் குறிக்கிறது என்று பார்க்கலாம். சாப்ட்வேர் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் கீழே குறிப்பிட்டது போல ஒரு எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும்.
“Software has not passed Windows logo testing to verify its compatibility with Windows XP. Continuing your installation of this software may impair or destabilize the correct operating of your system either immediately or in the future. Microsoft strongly recommends that you stop this installation now and contact the software vendor for software that has passed Windows logo testing.”

இதன் சாராம்சம் இதுதான். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் ஒத்துப் போகாத சாப்ட்வேர் இது.தொடர்ந்து இன்ஸ்டால் செய்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உடனே அல்லது எதிர்காலத்தில் முடக்கிவிடும். இந்த சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதனை மைக்ரோசாப்ட் நிறுத்தச் சொல்லி பரிந்துரைக்கிறது. எனவே இதனை இன்ஸ்டால் செய்வதனை நிறுத்திவிட்டு சாப்ட்வேர் கொடுத்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.
இப்படியெல்லாம் எச்சரிக்கை வந்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். உடனே நிறுத்திவிட்டு அந்த சாப்ட்வேர் வேண்டாம் என ஒதுக்கி வைப்பார்கள். அல்லது அது கட்டாயம் வேண்டும் என்றால் பரவாயில்லை என இன்ஸ்டால் செய்வார்கள். இருப்பினும் அடி மடியில் ஒரு பயம் இருக்கும். இந்த எச்சரிக்கையினைத் தரும் சோதனையைத்தான் விண்டோஸ் லோகோ டெஸ்டிங் என அழைக்கிறது.
அடிப்படையில் பார்த்தால் இந்த எச்சரிக்கை சொல்லும் அளவிற்கு பாதுகாப்பற்ற தன்மை இருக்காது. இந்த செய்தி வரக் காரணம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்பு இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முழுமையாக சோதனை செய்திட முடியவில்லை. குறிப்பாக அந்த தொகுப்பின் டிரைவர்களை சோதனை செய்திட முடியவில்லை என்பதுதான்.
இது எப்படி என்றால் மத்தியான உணவைச் சோதனை செய்கையில் சோறு, கறி காய் குழம்பெல்லாம் சரியாக உள்ளது; ஆனால் ஊறுகாயில் தான் பிரச்சினை என்பது போலாகும். இதற்காக நாம் உணவை வேண்டாம் என்றா சொல்வோம். அதே போல இந்த எச்சரிக்கை வந்தால் பரவாயில்லை என்று இன்ஸ்டால் செய்வது நல்லது. அப்புறம் கூட உங்களுக்குப் பயம் ஏற்பட்டால் இன்ஸ்டலேஷனை நிறுத்தி பின் வாங்கலாம். இதைத்தான் லோகோ டெஸ்டிங் என்று விண்டோஸ் அழைக்கிறது. இதனுடன் சம்பந்தப்பட்டதுதான் டிரைவர் சைனிங்.
டிரைவர் சைனிங் என்பது நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் சாப்வேர் அப்ளிகேஷனின் டிரைவர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒத்துப் போவதாக இருப்பதை உறுதி செய்வதுதான். இதனை மேற்கொள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்யவும். பின் கிடைக்கும் விண்டோவில் Hardware என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் Driver Signing என்ற பட்டனை அழுத்தவும். இங்கு மேலே சொல்லப்பட்ட லோகோ டெஸ்டிங் குறித்து சில தகவல்கள் கிடைக்கும். அடுத்து நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் எப்படி இந்த டிரைவர் டெஸ்டிங்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை தீர்மானிக்கலாம். இதனை வேண்டாம் எனவும் நீங்கள் ஒதுக்கிவிடலாம். அல்லது அதற்குப் பதிலாக ஒவ்வொரு சோதனையிலும் ஏதேனும் பிரச்சினை வந்தால் எச்சரிக்கும்படியும் அமைக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வந்தால் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் இந்த சோதனைகள் எல்லாம் முடிந்து சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும்.