தண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க

தண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்பாடு அதிகரிப்பதனால் அதனைப் பயன்படுத்தும் பலர் தண்டர் பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மொத்தம் மொத்தமாக மெயில்களை அனுப்பி நமக்கு எரிச்சல் ஊட்டுபவர்களின் நடவடிக்கைக்கு இந்த புரோகிராமில் எப்படி தடை விதிப்பது எனப் பார்க் கலாம்.

முதலில் ஜங்க் மெயில் கட்டுப்பாட்டு பிரிவிற்குள் செல்ல வேண்டும். இதற்கு முதலில் Tools>Account Settings எனச் செல்லவும். “Junk Settings” என்பதற்குக் கீழ் “Do not mark mail as junk mail if the sender is in: Personal Address Book என்பதன் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

அடுத்து இந்த வகை மெயில்களை அழிக்க வேண்டும். அல்லது ஜங்க் போல்டருக்கு அனுப்ப வேண்டும். இந்த போல்டருக்கு அனுப்புவதே நல்லது. முதலில் “Move incoming messages to:” என்பதனை செக் செய்திடவும். அடுத்து “Junk folder on:” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Local Folders” என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்ததாக ஜங்க் போல்டர் தானாகவே தன்னைக் காலி செய்து கொள்ளும்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாளை அமைக்கலாம். 7 அல்லது 5 நாள் என அமைக்கலாம்.

உங்களுக்கு மெயில் வந்திருக்கையில் ஜங்க் போல்டரையும் அவ்வப்போது திறந்து பார்த்து அதில் நீங்கள் காண வேண்டிய நல்ல மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளனவா என்று பார்க்கலாம்.

அப்படி ஏதேனும் சில மெயில் இருந்தால் அந்த குறிப்பிட்ட மெயிலை செலக்ட் செய்து அதன் மேலே உள்ள “Not Junk என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும்.

அதே போல இன்பாக்ஸில் ஏதேனும் ஜங்க் மெயில் இருந்தால் அதன் மேலாக உள்ள ” J ” என்ற பட்டனை அழுத்தினால் போதும். தண்டர்பேர்ட் அதனை ஜங்க் என உணர்ந்து கொண்டு அடுத்த முறை அதனை ஜங்க் மெயில் போல்டருக்குக் கொண்டு செல்லும்.

%d bloggers like this: