Daily Archives: மே 9th, 2009

கலையும் ஒப்பனைகள்

கலையும் ஒப்பனைகள்

வில்லினை முறித்தால் இளவரசியை மணக்கலாம் என்பதைப் போலவும், முரட்டுக் காளையை அடக்குபவரையே பெண் மணந்துகொள்வாள் என்பதைப் போலவும், மாநில ஆட்சியைக் கலைப்பவருக்கே மத்தியில் ஆதரவு என்று இப்போது சொல்லப்படுகிறது. “”தேர்தலுக்குப் பின்பு எந்த அணிச்சேர்க்கை மாயாவதி ஆட்சியைக் கலைக்குமோ அந்த அணிக்கு எங்கள் ஆதரவு” என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே தனது நிபந்தனையைத் தெரிவித்துவிட்டார்.

வில் முறித்தல், மாடு அடக்குதல் போன்ற நிபந்தனைகள் தனிநபர் விருப்பங்கள். ஆனால் மத்திய, மாநிலத் தேர்தல் முடிவு என்பது மக்களின் விருப்பம். ஆனால் இதையும் தனியொரு கட்சி தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளும் நிலைமை மக்களாட்சித் தத்துவத்துக்கு ஆபத்தானது.

கூட்டணிக்கு ஆதரவு தரும்போது பணம் எதிர்பார்த்தது ஒரு காலம். தங்கள் மீதுள்ள வழக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மறைமுகமாக நிபந்தனை விதித்தது ஒரு காலம்.

இன்னின்ன அமைச்சர் பதவிகளை எங்களுக்கே தர வேண்டும் என்று பத்திரம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டது கொஞ்சம் புதுமை. ஆட்சியைக் கலைத்தால் ஆதரவு என்பது இத்தேர்தலுக்குப் புது வரவு.

எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், பதவிக்காக எதையும் செய்யத் துணிவார்கள் என்பதால், ஆட்சிக் கலைப்புக்கும் துணிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மாநில அரசைக் கலைப்பது அத்தனைச் சுலபமில்லை என்பது முலாயம் சிங் யாதவ் உள்பட அனைவரும் அறிந்ததுதான். என்றாலும், ஆதரவு தரும் கட்சித் தலைமையின் மனம் கோணாமல் இருக்க, வானத்து நிலவைக் கேட்டாலும் முடியாது என்று சொல்லாமல், கொஞ்சம் கைகளை உயர்த்தி எகிறிக் குதிக்கவும் செய்வார்கள்.

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஓர் உள்நோக்கமும், பழிவாங்கல் உணர்ச்சியும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை தேர்தல் மூலமாகவே எதிர்கொள்ளவதையும், அதிகாரம் பெற்றபிறகு நினைத்ததைச் செய்து முடிப்பதையும் யாரும் தடுக்கப் போவதில்லை. அதற்காக இப்படியெல்லாம் அரசியல் செய்வது நியாயமாகத் தெரியவில்லை.

இதேபோக்கு தமிழக அரசியலில் சற்று வேறுவிதமாக இருக்கிறது. அனைத்து பேட்டிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “தமிழகத்தில் திமுக ஆட்சி மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும்’ என்று சொல்கிறார். எப்படி கவிழும் என்பதை அவர் தன் வாயால் சொல்வதில்லை. அதை அவரவர் கணிப்புக்கே விட்டுவிடுகிறார்.

ஒரு சாதாரண அரசியல் பார்வையாளர் இதன் மூலம் பின்வரும் அனுமானத்துக்குத்தான் வரமுடியும்:

அதாவது, தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும். அப்போது, மூன்றாவது அணியில் உள்ள இடதுசாரிகள் பாஜகவுக்கு ஆதரவு தருவதை விரும்ப மாட்டார்கள். “ஊழல் பொதுவானது, மதவாதம்தான் முதல் எதிரி’ என்று சொல்லும் இடதுசாரிகள், காங்கிரûஸ எவ்வளவு விமர்சித்தாலும், ஆதரிக்கவே மாட்டோம் என்று பிகு செய்துகொண்டாலும்கூட, கடைசியில் காங்கிரசை ஆதரிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்போது அதிமுக பாமக எல்லாமும் மத்தியில் காங்கிரûஸ ஆதரிக்கும். மாநிலத்தில் திமுக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும். அப்போது மைனாரிட்டி அரசான திமுக அரசு தானே கவிழும்.

இப்படியல்லாமல் வேறு எந்த வகையில், மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்வது சாத்தியமாக முடியும்? நிலைமை இதுவாக இருக்கும்போது, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி, அதிமுக அணியுடன் வாய்ப்பு உள்ளது என்பதை ஏன் வெளிப்படையாகப் பேசமாட்டார்!

தேர்தலின்போது தங்கள் சாதனை என்ன அல்லது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம், தற்போதுள்ள ஆளும்கட்சியின் குறைகள் என்ன என்று மக்களிடம் விளக்கி, வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும், யாருடன் யார் கூட்டு சேருவார்கள், அதற்கு என்ன நிபந்தனைகள் என்பதையெல்லாம்கூட தேர்தல் பிரசாரத்திலேயே சொல்லிவிடுகிற “நேர்மையை’ என்னவென்று சொல்வது!

நாடகம் முடிந்த பிறகுதான் வேடங்களைக் கலைப்பது வழக்கம். ஆனால் தேர்தல் நாடகத்தில், இறுதிக் காட்சிக்கு முன்பாகவே ஒப்பனைகள் கலையத் தொடங்கிவிட்டன.

நல்லா சாப்பிடுங்க; நல்லா எழுதுங்க!

நல்லா சாப்பிடுங்க; நல்லா எழுதுங்க!

மாணவர்களே உங்களுக்கு தான்

பொதுத்தேர்வு நெருங்கி விட்டது; பந்தய குதிரையில் பணம் கட்டிக் காத்திருப்பது போல, பல பெற் றோரும், தன் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்க வேண் டுமே என்று தவியாய் தவித்துக் கொண்டு தான் இருப்பர்.
அதிக மதிப்பெண் எடுத்தால் தானே, எம்.பி.பி.எஸ்.,சிலோ, பி.இ., யிலோ எந்த கஷ்டமும் இல்லாமல் , தங்கள் கையையும் கடிக்காமல் “சீட்’ கிடைக்கும் என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு. ஆனால், பொதுத்தேர்வு என்று வந்து விட்டாலே, பல மாணவ, மாணவிகளுக்கும் “டென்ஷன்’ ஆரம்பமாகி விடுகிறது. மாணவர் கள் பதட்டத்தை போக்க முதன் முறையாக மத்திய மேனிலைத் தேர்வு வாரியம் (சி.பி.எஸ்.இ.,) “சந்தோஷமாக தேர்வை சந்தியுங்கள்’ என்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதட்டம் போயே போச்சு:
அதைப் படித்தாலே, பல மாணவர்களுக் கும் பதட்டம் போய்விடும்; தைரியமாக தேர்வை சந்தித்து, நம்பிக் கையுடன் மதிப்பெண்ணை குவிப்பர். தேர்வு என்றாலே, பதட்டமில் லாத மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுப்பர்; நன்றாக படிக் கும் சில மாணவர்கள் தவறுவதும் கூட நேரிட இது தான் காரணம். சிலருக்கு உணவுப்பழக்கம் தான் அவர்களின் படிப்பை பாழடிக்கிறது. இதற்காகவே, சி.பி.எஸ்.இ., இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதைச்சார்ந்த பள்ளிகளுக்கு அனுப்பியும் உள்ளது. மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப் பில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* சத்தான உணவை சாப்பிடுங்கள்; கார்போஹைட்ரேட், வைட்டமின், கனிமசத்துக்கள், ப்ரோட்டீன்கள் கொண்டதாக இருக்கட்டும் அந்த உணவுகள்.
நோ காபி, டீ
* கண்டிப்பாக காபி,டீயை தேர்வு முடியும் வரை விட்டு விடுங் கள்; எப்போதுமே விட்டு விட்டால், நினைவாற்றல் அதிகரிக் கும். சத்தான பானங்களை குடிக்கலாமே!
*இதுவரை பிரெஞ்ச் ப்ரை சாப் பிட்டிருந்தாலும் பரவாயில்லை; இனி தினமும் ஆப்பிள் உட்பட பழங்களை சாப்பிடுங்கள்.
* மெமரி பில் என்ற பெயரில் நினைவாற்றலை அதிகரிக்க செய் யும் என்று கூறி விற்கப்படும் மருந்துகளை வாங்கி விழுங்காதீர்கள். கண்டிப்பாக இது மாறான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
* கடைசி நேரத்தில் “மக் அப்’ செய்யத்தான் வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு படிக்காததால் இந்த பதட்டம் நேரும். ஆனால், இப்போதும் புரிந்து, ஓரளவு “மக் அப்’ செய்தால் மறக்கமாமல் மனதில் நிற்கும்.
கண்விழித்தால் போதுமா
* ராத்திரியெல்லாம் விழித்திருந்து படித்து பலன் இல்லை. பட்டியலிட்டு அதன்படி படித்தாலே போதும். ஒரு முறைக்கு பல முறை தேர்வு எழுதும் பாணியில் எழுதிப் பார்த் தாலே போதுமானது. கண்டிப்பாக மதிப்பெண் கூடும்.
* மனதில் உள்ள டென்ஷனை போக்க வேண்டும்; அதற்கு பெற்றோர் தான் ஒத்துழைக்க வேண்டும்.
இப்படி பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. பள்ளிகளில், பதட்டமான மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட “கவுன்சலர்’களை நியமிக்கும்படியும் நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் நண்பருடனான நட்பு வலுப்பட வேண்டுமா?

உங்கள் நண்பருடனான நட்பு வலுப்பட வேண்டுமா?

நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் என நமது அன்றாட வாழ்வில் பலரை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுடனான <நட்பை தக்க வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…
* ஆபிசோ, வீடோ எந்த இடமானாலும் சரி உங்கள் ஈகோவை விட்டொழியுங்கள். நானே பெரியவள், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியிலேயோ நடந்து கொள்ளாதீர்கள்.
* உங்கள் பேச்சாலும், செய்கைகளாலும் மற்றவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.
* நீங்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அவற்றை ஒத்துக் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் செய்த தவறுக்காக உரிய நபரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.
* நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும், அவரவருக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறாதீர்கள்.
* இனிமையான, இதமான சொற்களையே பயன்படுத்துங்கள்.
* உங்களுக்குள் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், அடுத்தவர் முதலில் இறங்கிவர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இருக்காதீர்கள். உறவுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக உங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்வதில் தவறொன்றும் இல்லை.
* எல்லாரிடத்திலும், எல்லாவிஷயத்தையும் கூறாதீர்கள்; அதாவது லூஸ் டாக் விடாதீர்கள். இது உங்களை பல்வேறு சிக்கல்களில் மாட்டிவிடும்.
* தற்பெருமை பேசாதீர்கள்.
* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.
* நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது <உறவினரையோ விமர்சனம் செய்தால், அது ஆக்கப்பூர்வமானதாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அப்படி ஆக்கப்பூர்வமானதாக இல்லாவிட்டால், அதைப் பற்றி விமர்சிக்காதீர்கள்.
* மற்றவர்களிடம் பேசும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றை வெளிப்படுத்தும் உங்கள் மனநிலையை கட்டுப்பாட்டுக் குள் வைத்திருங்கள்.
* உங்கள் நண்பர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருங்கள். அவர்கள், பிரச்னையில் இருக்கும் போது, தேவையான உதவிகளை செய்யுங்கள். முடியாவிட்டால், நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அன்பான வார்த்தைகளையாவது பேசுங்கள்.
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. எனவே, உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ யாராக இருந்தாலும், அவர்களது குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.
* “என்னைப் பாராட்டும் ஒருவனை உலகின் இரண்டாவது மிகப் பெரிய மனிதனாக நான் பார்க்கிறேன்’ என்றொரு வாசகம் உண்டு. எனவே, அடுத்தவர்கள் செய்யும் அரிய செயல்களையும், நல்ல செயல்களையும் பாராட்டுவதற்கு தயங்காதீர்கள்; அதையும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்யுங்கள்.
* மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டும், மதிப்பிட வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது போல் நீங்களும் மற்றவரை மதித்து அன்பு பாராட்டுங்கள்.

அழகான முகத்திலுள்ள சுருக்கம் நீங்க சுலப வழிகள்…

அழகான முகத்திலுள்ள சுருக்கம் நீங்க சுலப வழிகள்…

வயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில செயல்களை மேற்கொள்ளும் போது முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம். அதே போல், சில செயல்கள் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம். உங்கள் முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான டிப்ஸ் இதோ…

* சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
* சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும். வறண்ட சருமம் உடையவர்கள், வெறும் கேரட்டை மட்டும் முகத்தில் தேய்த்து வர, முகச்சுருக்கம் உண்டாவது தாமதமாகும். அதே போல் கேரட் சாறுடன் தேன் கலந்து தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான ஈரத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மெல்லிய சுருக்கங்கள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.
*வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் முகச்சுருக்கம் மறையும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

*முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை கலந்து, பூச முகச்சுருக்கம் குறையும். அப்படி செய்யும் போது, கண்களை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது. இதே போல், வெள்ளரிச்சாறுடன், தேன் கலந்தும் முகத்தில் பூசலாம்.
*பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு சோயாமாவு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.
*அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.
* பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
* “ஓட்’மாவுடன் சந்தனப் பொடி மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ளரி விதையை நன் றாக அரைத்து அத் துடன் பன்னீர் கலந்தோ முகத் தில் பூச சுருக்கம் மறையும்.
* அடிக்கடி நெற்றியை சுருக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இதனால், நெற்றியில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத் துக் கொள்ளுங்கள்.

முகம் பொலிவு பெற என்ன வழி?

* கடலை மாவுடன், பன்னீர் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாக பொலிவுடன் காணப்படும்.

* ஆரஞ்சு பழச்சாறு, முல்தானி மட்டி, தக்காளிசாறு, பன்னீர் ஆகியவற்றுடன்,சந்தனப் பொடி மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பொலிவு பெறும்.

கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா?

கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா?

சென்னையில் கோடை வெயில் அதுவும் அக்னி நட்சத்திரம் என்றால் சும்மாவா? வறுத்து எடுத்துவிடும். “தகதக’ என கிளம்பியுள்ள கோடை வெயிலை சென்னை வாசிகள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது சிக்கிலான விஷயம் தான்.

கொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…

* வெயில் நேரத்தில் “பிரிட்ஜில்’ வைத்த “காஸ்’ நிரப்பியுள்ள குளிர்பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம் சாப்பிடலாம். கோடையை முன்னிட்டு மூலை முடுக்கெல்லாம் பழக் கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

* தற்போதுள்ள விலைவாசியில் 20 ரூபாய்க்கு குறைந்து எந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம் ஆகிய வற்றை மொத்தமாக வாங்கி, பழரசம் தயாரித்து பருகலாம்.

* உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சிடவும், வியர்குரு வருவதை தவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான். 60 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள் விற்கப்படுகின்றன.

* ஓட்டையாகிப்போன ஓசோன் படலத்தின் வழியாக அதிகமான “அல்ட்ரா வைலட்’ கதிர்கள் பாய்ந்து கண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங்களில்தான். எனவே, “ஆட்டோ நிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

* இளநீர் குடிப்பதால் உடல் சூடு, காமாலை நோய், தோல்நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.

* உடல் சூட்டை தவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில் உடலுக்கு மிகவும் உகந்தது.

* குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பை தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.

* வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’ நோய் அண்டாது.

* இரவில் படுக்க செல்லும் முன், வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம். சுத்தமான விளக்கெண்ணெயை இரண்டு சொட்டு கண்ணில் விட்டுக் கொண்டால் கண்கள் குளிர்ச்சியடையும். அழுக்குகளும் அகற்றப்படும்.
* வாழைப்பழம் உண்டால் சீதபேதி, மலச்சிக்கல் இருக்காது.

* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

* குடிநீரில் “வெட்டிவேர்’ போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.