ஒரே பிரசவத்தில் நான்கு குவா… குவா!

ஒரே பிரசவத்தில் நான்கு குவா… குவா!

செயற்கை கருத்தரிப்பில் இரட்டை குழந்தை பிறப்பதே அபூர்வம். அதிலும் , ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறப்பது மிக, மிக அரிது; ஆனால், குழந்தையில்லா அமெரிக்க தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் ஒரே மாதிரி நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் வசிப்பவர் ஜோஷ்வா; அவர் மனைவி அமண்டா; இருவரும் ரேடியேஷன்

டெக்னாலஜி நிபுணர்களாக ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர். திருமணமாகி இரண்டரை ஆண்டு ஆகியும் குழந்தை பிறக்காததால், செயற்கை கருத்தரிப்பு முறையில் , குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

கணவரின் விந்து மூலம் தயாரான இரு கருமுட்டைகளை அமண்டா கருப்பையில் பொருத்தினர் டாக்டர்கள். அது வளர்ந்தபோது பரிசோதித்ததில், இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர். பிரசவம் நெருங்கும் போது, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால், பிரசவத்தின் போது, முதலில் மூன்று குழந்தைகள் ஒரே மாதிரி பிறந்தன. அடுத்த ஒன்றரை நிமிடத்தில் நான்காவது குழந்தை பிறந்தது. நான்கும் ஆண் குழந்தைகள் தான். நான்கு குட்டீஸ்களும் ஆரோக்கியமான எடையுடன் பிறந்துள்ளன.

இப்படி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது டாக்டர்களுக்கே பெரும் வியப்பு. “பல நூறு பேரில் ஒருவருக்கு தான் இப்படி நடக்கும்…’ என்று தெரிவித்தனர்.

“எங்களுக்கு குழந்தையே இல்லை என்று பெரும் வருத்தம் இருந்தது. ஆனால், இறைவன் இப்படி ஒரு உச்சகட்ட இன்ப அதிர்ச்சியை தருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. போதும்…போதுமென்ற அளவுக்கு எங்களுக்கு குழந்தை செல்வத்தை தந்துவிட்டார்…’ என்று கூறினார் அமண்டா.

“என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அமண்டாவுக்கு பிரசவம் மிக வேகமாக நடந்தது. ஒரு நிமிடத்தில் நான்கு குழந்தைகளும் பிறந்து விட்டன. இப்போதும் இதை என்னால் நம்ப முடியவில்லை…’ என்று சந்தோஷத்தில் கூறினார் ஜோஷ்வா.

%d bloggers like this: