டவுண்லோட் ஆகும் பைல் எது?

டவுண்லோட் ஆகும் பைல் எது?

இணையத்தில் உலா வரும் வேளைகளில் சில சமயம் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் ஒரு பைலில் இருப்பதாகத் தெரியவரும். அந்த பைலை இறக்கிப் படிக்க லிங்க் ஒன்றும் அங்கு தரப்பட்டிருக்கும். உடனே அதனைக் கிளிக் செய்து அந்த பைலை டவுண்லோட் செய்திட முயற்சிகளை எடுப்போம். எடுத்த பின்னர் தான் அந்த பைல் நாம் எதிர்பாராத பார்மட்டில் இருப்பதை உணர்வோம். பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் அந்த பைல் இருக்கலாம். அது இறங்கிய பின்னரே தெரியவரும். சில வேளைகளில் அந்த பைல் வகை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் படிக்க இயலாத பைலாகக் கூட இருக்கலாம். லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!

மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் இதற்கென ஒரு ஆட்–ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது.இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்துவிட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.

1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.

2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Get Addons” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.

3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.

4.உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் “Add to Firefox” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. உடன் “Software Installation” என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் “Install Now ” என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.

6. இந்த ஆட்–ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் “Restart Firefox” என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்தபடி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும். இதனைச் சோதனை செய்து பார்க்க விரும்புபவர்களுக்காக http://linkalert.googlepages.com/testpage.htm என்ற முகவரியில் இந்த ஆட் ஆன் புரோகிராமைத் தயாரித்தவர் ஒரு சோதனைப் பக்கத்தினை வைத்துள்ளார். இந்த லிங்க் அலர்ட் புரோகிராமினை இன்னும் உங்கள் எண்ணங்களுக்கேற்ப வடிவமைக்கலாம். பல்வேறு ஆப்ஷன்கள் இதற் கெனத் தரப்பட்டுள்ளன.

லிங்க் அலர்ட் புரோகிராமின் ஆப்ஷன்களை மாற்ற:

1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.

2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Extensions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.

3. பின் “Link Alert” என்பதன் கீழ் “Options” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.

4. உடன் “Link Alert Options” டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் “Basic” என்னும் பட்டனை அழுத்தி மவுஸ் பாய்ண்ட்டரை முன்னரே வரையறை செய்த பைல் வகைகளுக்கு மாற்றவும் மாற்றாமல் இருக்கவும் செய்திடலாம். இதில் உள்ள “Advanced” பட்டன் நாம் உருவாக்கும் பைல் வகைகளை இந்த பட்டியலில் இணைக்க வழி செய்திடுகிறது. அதே போல நாம் விரும்பும் கர்சர் வகைகளையும் இதில் சேர்க்கலாம். இங்கு கிடைக்கும் “Display” பட்டன் டிஸ்பிளே வகைகளில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி தருகிறது. எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சர் சிறியதாக உள்ளதாக எண்ணினால் அதனைப் பெரிதாக்கலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அவை நடைமுறைக்கு வருவதற்கு பயர்பாக்ஸ் தொகுப்பினை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.

இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். லிங்க் அலர்ட் ஒரு பைலுக்கு நேரடியாக இணைப்பு கிடைத்தால் தான் நாம் செட் செய்தபடி கர்சரின் தோற்றத்தை மாற்றும். சில இணைய தளங்கள் சில ஸ்கிரிப்ட் மூலம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லலாம். வெப் பேஜ் என எண்ணப்படும் ஒரு தளம் ஒருவகை பைல் டைப்பாக இருக்கலாம்.

One response

  1. […] டவுண்லோட் ஆகும் பைல் எது? […]

%d bloggers like this: