பிட் என்பது….

பிட் என்பது….

கம்ப்யூட்டர் ஏற்று எடுத்துக் கொள்ளக் கூடிய மிகச் சிறிய அளவிலான மெமரி தான் ஒரு பிட். ஒரு பிட்டில் இரண்டில் ஒரு வேல்யு தான் கொள்ளப்படும். அவை 0,1 என்பதே. அதாவது ஒரு விளக்கு இரண்டு நிலையைக் காட்டுகிறது. அது எரிந்தால் 1; எரியாமல் இருந்தால் 0. போன் அடித்தால் ஒருவர் அழைக்கிறார் (1); அடிக்கவில்லை என்றால் யாருமே அழைக்கவில்லை(0). இந்த இரண்டு பிட்கள் ஒரு சிறிய அளவில் டேட்டாவைக் கொள்ள முடிகிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவில் இணைத்தால் கூடுதலாக டேட்டாவினைக் கொள்ள முடியும் அல்லவா! அப்படி ஒரு தொடக்கமே ஒரு பைட். எட்டு பிட்கள் அடங்கிய யூனிட் ஒரு பைட் என அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு பிட் 0 அல்லது 1 என்ற வேல்யூவினைக் கொள்ள முடியும் எனப் பார்த்தோம். எட்டு பிட்கள் சேர்ந்து ஒரு பைட் ஆகும் போது 0 முதல் 255 வரையிலான வேல்யூவினை எடுத்துக் கொள்ள முடியும். எட்டு பிட்டு தொகுதியை, அதாவது ஒரு பைட்டை இங்கு பார்ப்போம். 00000000 இங்கு எல்லாமே 0 என்பதால் இதன் மதிப்பு 0. நம் பழைய எடுத்துக் காட்டின்படி விளக்கு எரியவில்லை.

இதில் மதிப்பு 1 அளிக்க வேண்டுமானால் இதனை 00000001 என எழுதலாம். இதில் இன்னொரு மதிப்பான 2 ஐ அமைக்க என்ன செய்யலாம். சற்றே இடது புறம் நகர்ந்து 00000010 என அமைக்கலாம். இப்போது எட்டு பிட்டுகளின் மதிப்பு 2. இதனை மூன்றாக அமைக்க 00000011 என அமைக்கலாம். மதிப்பு 4 எனில் இது 00000100. இதிலிருந்து நாம் ஒரு வாய்ப்பாட்டினை அமைக்கலாம்.

பிட் 7 – மதிப்பு 128

பிட் 6 – மதிப்பு 64

பிட் 5 – மதிப்பு 32

பிட் 4 – மதிப்பு 16

பிட் 3 – மதிப்பு 8

பிட் 2 – மதிப்பு 4

பிட் 1 – மதிப்பு 2

பிட் 0 – மதிப்பு 1

எனவே 255 என்ற மதிப்பைப் பெற ஒரு பைட்டின் அனைத்து பிட்களும் ஆன் ஆகி இருக்க வேண்டும். அதாவது 11111111 என இருக்க வேண்டும். இதே போல பல பைட்களை இணைத்துத்தான் கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் என்றவாறு உருவாக்கப்படுகின்றன.

பைட்ஸ் ஏணி: கம்ப்யூட்டர்களும் டேட்டாவை ஸ்டோர் செய்திடும் சிடிக்கள், பிளாப்பிகள், ஹார்ட் டிஸ்க்குகள், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்கள், டிவிடி ராம் போன்றவைகளும் பெரிய அளவில் டேட்டாவை ஸ்டோர் செய்திடுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட், டெராபைட், பெடாபைட், எக்ஸாபைட் (kilobyte, megabyte, gigabyte, terabyte, peta byte மற்றும் exabyte) எனக் குறிப்பிடுகிறார் கள்.

ஒரு கிலோ பைட் என்பது 1,024 பைட்ஸ்; பெரும்பாலானவர்கள் இதனை 1000 பைட்ஸ் என்றே எண்ணுகின்றனர். ஒரு மெகா பைட் என்பது 1,024 கிலோ பைட்ஸ், ஒரு கிகாபைட் என்பது 1,024 மெகாபைட்ஸ், ஒரு டெராபைட் என்பது 1,024 கிகாபைட்ஸ், ஒரு பெடாபைட் என்பது 1,024 பெடாபைட்ஸ்,ஒரு எக்ஸா பைட் என்பது 1,024 பெடாபைட்ஸ்

One response

  1. […] பிட் என்பது…. […]

%d bloggers like this: