Monthly Archives: ஜூன், 2009

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.

உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.

அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):

* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..

* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..

* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.

* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.

* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.

* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.

எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.

உணவு வகைகள்

உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):

* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.

* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.

* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.

* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.

* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..

* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.

* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.

* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.

* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.

* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

பழங்கள் (100 கிராம்)

* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..

* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.

* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..

* மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.

* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.

* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

இதயமே, உன் விலை ஒரு லட்சமா? பல லட்சங்களா?

இதயமே, உன் விலை ஒரு லட்சமா? பல லட்சங்களா?


மனிதன் உயிர்வாழ இதயம் தான் தேவை. தாயின் கருவில் மூன்றாவது மாதத்தில் இதயம் உருவாகி துடிக்க ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி துடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் பெரும்பாலோர், இதயநோய் என்றால் எல்லாரும் பயப்படுகின்றனர். இதயத்திற்கு நோய் வந்து விட்டால் மனிதன், அவன் குடும்பம் துவண்டு விடுகிறது. காரணம் மரண பயம்தான்.

ஒரு துடிப்பிற்கு 75 சிசீ ரத்தத்தை வெளியேற்றி நிமிடத்திற்கு 5 லிட்டர் ரத்தம் வெளியேறி, மனிதனை உயிர் வாழ வைக்கிறது. இந்த இதயம் நான்கு அறைகள், நான்கு வால்வுகளைக் கொண்டது. நமது உள்ளங் கையை மடக்கினால், எந்த அளவு உள்ளதோ அதே அளவுதான் நமது இதயத்தின் அளவு.

இந்த இதயத்திற்கு வரும் நோய்களில், பிறவியிலே வரும் இதய நோய்கள், முட்டி வீங்கி சுரவாங்கி வால்வு நோய்கள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களால் ஏற்படும் இதயநோயின் இதய தசைகளின் கோளாறினால் ஏற்படும் கார்டியோமையோபதி, என்ற விபரீத நோய் என்று பல நோய்கள். இந்த இதய நோய்களை குணப்படுத்தி, அதை காக்க என்ன விலை? நூறா, ஆயிரமா இல்லை சில, பல லட் சங்கள் செலவாகிறது. பிறவி இதய நோய் கண்ட குழந்தைகள் தினம் மருந்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

அவ்வப்போது பரிசோதனை செலவு, மருத்துவமனை செலவு என்று சில ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சத்தில் முடிகிறது. இதய அறுவைச் சிகிச்சை என்றால் சில லட்சங்கள் தேவை.  அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தொடர் வைத்தியம் என்று செலவு தொடர்ந்து ஏழைகளை கொடுமைப் படுத்துகிறது. இதற்கென்று இன்று பல கார்ப்பரேட் அரசியல் பினாமிகளின் டிரஸ்ட் என்ற பல மருத்துவமனைகள் பல கோடி செலவில் தோன்றி விட்டன. இவைகள் இலவசமாக வைத்தியம் செய்ய இயலாது.

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கூடங்கள் அதிநவீன டைகனாஸ்டிக் கருவிகள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., கேத்லேப், ஐ.சி.யூ., நவீன ஆபரேஷன் தியேட் டர்கள் என்று பல கோடிகளில் உருவாக்கப்படுகிறது.  நிச்சயமாக பேங்க் கடன்களினால் தான் முடியும். வட்டியும் முதலும் கட்ட, நோயாளிகள் தான் அதாவது அவர்களிடம் வைத்தியம் செய்து, மருத்துவமனை அனுமதி, ஐ.சி.யூ., வார்டு என்று தங்க வைத்து, சிகிச்சை அளித்து பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒன்று.

தனியார் மருத்துவமனையில், அனுபவமிக்க சிறந்த மருத்துவர்கள் சிலரும் <<<உண்டு. அனுபவமற்ற சில மருத்துவர்களும் உண்டு, வித்தியாசம், இருபது முப்பது ஆண்டு அனுபவ மருத்துவர் பல ஆயிரக்கணக் கான நோயாளிகளைப் பார்த்து குணப்படுத்திய அனுபவத்தால், நோயாளி வந்தால் அவருக்கு அவருடைய குறைகளிலிருந்து அடைப்பு <உண்டா? இல்லையா? என்று சொல்ல முடியும்.  காரணம், பல ஆயிரக்கணக்காக ஆஞ்சியோகிராம் செய்த அனுபவம், ஒவ் வொரு நோயாளியும் ஒரு பாடம். அனுபவமற்றவர்கள், மருத்துவமனை உரிமையாளர்களின் உறவினராக இருப்பர். படித்து சில வருடத்தில் எத்தனை நோயாளிகளைப் பார்த்திருப்பர்.

உதாரணம், சில மாதங்களுக்கு முன்பு இதய நோயாளிக்கு நினைவிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தேன். அப்போது, இதய கோளாறு சரி செய்யப் பட்டு, மூளையில் சில மாற்றம் ஏற்பட்டது.  சுயநினைவு இழப்புக்கு காரணம் என்ன, என்று நரம்பு நிபுணரை பார்க்க கூறினேன். இவர் புதியவர், பல பரிசோதனைகள் சில நாட்கள் செய்து முடிவுக்கு வர முடியவில்லை. பிறகு நான் இரண்டாவது ஆலோசனைக்கு ஓய்வுப் பெற்ற நரம்பு நிபுணர் மருத்துவகல்லூரி பேராசிரியரிடம் அனுப்பினேன். அவர் ரத்தப் பரிசோதனையில் இந்த தாதுப்பொருள் குறைவு, இதனால் தான் இந்த குறை என்று, அந்த தாதுப்பொருள் செலுத் தியப்பின் சுயநினைவு வந்து விட் டது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை தேவையில்லாமல் அனுமதி செய்யக்கூடாது. காரணம், ஒவ்வொரு நாளும் செலவுகள் ஆயிரம்.

மருத்துவமனையில் அனுமதி பெற்றால் அறை வாடகை, நர்சஸ், சர்வீஸ் சார்ஜ், டாக்டர் பீஸ் என்றும், அதிகநாள் ஐ.சி.யூ.,வில் தங்கினால் என்ன செலவு ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள். ஜூனியர் டாக்டர்களின் தவறான முடிவால் வீண் செலவு, மருத்துவமனை செலவுகள் அதிகமாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்: சீரியசாக மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி ரத்த அழுத்தம் பீபி., குறைந்து, மூச்சு நிற்கும் நிலையில் வந்தார். உடனடியாக ஐ.சி.யூ., வில் சேர்த்து மூச்சுவர வெண்டிலேட்டரில் இணைத்து மூச்சு விடுவதை சரிசெய்யப் பட்டது, பீபி ரத்த அழுத் தம் குறைவுக்கு இன் டிரா அயோடிக் பலூ னை மகா தமனியில் வைத்து, அழுத்தத்தை சரி செய்து, இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சரி செய்யப் பட்டது. மாரடைப்புக் கான காரணமாக ரத்தக் குழாய்களின் அடைப்பை பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் திறந்து, ரத்த ஓட்டம் சரிசெய்யப்பட்டு இதயம் சரியாக இயங்கி, சீராக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, பலூன் வென்டிலேட்டரையும் எடுக்கப் பட்டு உயிர் பிழைத்து சில நாட்களில் வீடு திரும்பினார். இதற்கு ஆன செலவு ஆறு லட்சங்கள்.

இன்னொரு நோயாளி வாலாஜாவை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோ செய்து, அடைப்புக் கண்டுபிடிக்கப்பட்டு, மேற்படி சிகிச்சை செய்யாமல் ஊருக்கு திரும்பிபோய்விட்டார்.  பல ஆண்டு கழித்து திரும்பவும் மார்பு வலியுடன் வந்து மருத்துவமனையில் சேர்ந்து ஆஞ்சியோ செய்து, எல்லா ரத்தக்குழாய்களும் அடைத்து விட்டப்படியால் உடனடியாக பைபாஸ் செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து சிறுநீரகம் பழுதடைந்து விட்டது. அதற்கு டயாலிசிஸ் பல தடவை செய்யப்பட்டு ஆறு வாரங்கள் தங்கி சென்றார். இதற்கு செலவு ஏழு லட்சங்கள்.

சென்ற ஆண்டு, எனது டாக்டர் நண்பருக்கு, இவர் மாஜி எம்.எல்.ஏ., வாக இருந்தவர். மாரடைப்பு வந்து இரண்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தது. அதற்கு மருந்து பூசிய ஸ்டென்ட்களை வைத்தேன். இரண்டு நாளில் வீட்டுக்கு போனார். ஆனால் செலவு செய்தது இரண்டு லட்சங்களுக்கு மேல். இதில், டாக்டர் பீஸ் இல்லை. டாக்டர் என்று பார்க்காமல் மருத்துவமனை அவரிடம் பணம் கட்டி செல்லும்படி கண்டிப்பு காட்டியது. அவரிடம் சில ஆயிரம் குறைவு. இரவுநேரம் பணம் பற்றாமல் தவித்து, தனது டாக்டர் மனைவியின் வளையலை மார்வாடி கடையில் அடகு வைத்து பணம் செலுத்தினார்.

இரண்டு, மூன்று, நான்கு ஸ்டென்ட் வைத்தால் நான்கு லட்சங்கள் ஆகும். ஆகையால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்பவர் நோயாளிக்கு பணம் செலவு அதிகம் ஆகாமல் பார்க்க வேண்டும். பைபாஸ் சர்ஜரி செலவு குறைவு, ஸ்டென்ட் சிகிச்சை செலவு அதிகம். இந்த செலவுகளை பல லட்சம் நோயாளி கட்டும் போதும் அவர் படும் வேதனைக்கு அளவில்லை. ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் நிபுணர் குறைந்தது நான்கு ஆண்டுகள் நல்ல சென்டரில் பயிற்சி பெற்று வரவேண்டும். அதேபோல தான் இதய அறுவைச் சிகிச்சை நிபுணரும் கூட, இந்த நான்கு ஆண்டு பயிற்சிகளில், பல வித கேஸ், பலவிதமான கம்ப்ளிகேஷன் கண்ட அனுபவம் இருக்கும்.

ஸ்டென்ட் சிகிச்சை செய்வதற்கு முன்பு, எந்த இடத்தில் எப்படிப்பட்ட அடைப்பு அதன் நீளம், ரத்தக் குழாய் முழுவிட்டமா? இல்லை பாதி விட்டத்தில் அடைப்பா? ரத்தநாள விட்டம், அடைப்பின் சதவீதம், நீளம் இவைகளை முன் கூட்டியே அறிந்து, ஸ்டென்ட் விட்டம், நீளம் இவைகளை பார்த்து, பிறகு ஸ்டென்ட் வைக்க வேண்டும். அப்போது என்னென்ன விளைவுகள், எப்போது வரும், அதை தவிர்ப்பது எப்படி என்று நினைவில் வைத்து செய்ய வேண்டும். உடனடியாக ஸ்டென்ட் மூலமாக வரும் விளைவுகளைப் பற்றி நல்ல அனுபவம் வேண்டும். இல்லையென்றால், சிகிச்சை செலவு அதிகமாகும்.

பல லட்சங்கள் செலவாகும்: கரோனரி ரத்தக்குழாயின் முதன்மை குழாயை லெப்ட் மெயின் குழாய் என்பர். இது இடது எல். ஏ.டி., இடது எல்.சி.எக்ஸ்., என்ற இரண்டு குழாய்களாக பிரிகிறது. இதில், முதன்மை குழாய் இரண்டு குழாய்கள் ஆரம்பமாகும் பகுதி.  இவைகளில், ஏற்படும் அடைப்பை நீக்க ஸ்டென்ட் வைப்பதற்கு பெயர் பைபர்கேஷன் ஸ்டென்ட் என்று பெயர். இதில் மூன்று வகைகள். டி ஸ்டென்டிஸ், கிரஷ் டெக்னிக், கிஸ்ஸிங் டெக்னிக் என்ற செய்முறைகள் உள்ளன. இந்த வகை ஸ்டென்ட் சிகிச்சைக்கு மருந்து ஆகிய ஸ்டென்ட்கள் வைத்து சொல்லலாம். இந்த செய்முறையினால் பல லட்சங்கள் தாண்டிவிடும். அதன் பிறகு தொடர் கண்காணிப்பும், பரிசோதனையும் தேவைப்படுகிறது.

இதில் எதாவது ஒரு ஸ்டென் மூடிவிட்டால் உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டும் இதற்கு சில லட்சங்கள் இப்படி பல லட்சங்கள் செலவாக வாய்ப்புள்ளது. இடது மெயின் (ஃM) இரத்தக்குழாய் ஸ்டென்ட் நல்ல உயிர்காக்கும் சிகிச்சை தான். அதே நேரம் ஃM ஸ்டென்ட் மூடிவிட்டால் உடனடி மரணம் தான் வரும். ஆகையால் இதற்கு பைபாஸ் சக்ஜரி தான் மேல் இது டெக்னிக்கலாக வெற்றி ஆனால் இதை ஸ்டென் வைத்துக் கொண்டவருக்கு என்ன செலவு, அவர்கள் வாழ்க்கை தரம் வாழ வேண்டிய வருடங்கள் இவைகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பைபாஸ் சிறந்தாக கருதப்படுகிறது.

சில பேருக்கு பல அடைப்புகள் இருக்கும் ஒரே இரத்தக்குழாய், அல்லது இரண்டு மூன்று இரத்தக்குழாய்கள் அடைப்பு இருக்கும் இவைகளுக்கு பல ஸ்டென்ட்கள் வைக்க வேண்டுமானால், அதற்கு ஆகும் செலவு பல லட்சங்கள். இதுவும் இரான்டி கிடையாது. இது இதய நோய் பிரிவுகளை மட்டும் ஆகும் செலவு. மற்ற துறைகளைப் பற்றி அவ்வளவு தெரியாது.

மனசாட்சி எங்கே?

பெரும்பான்மையான ஸ்பெசலிஸ்ட் டாக்டர்கள் கடவுள் பக்தியோடு, மனசாட்சியோடு, நடந்து கொள்கின்றனர். சிலர் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும், தன் மனைவி மக்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவமனைக்கு செல்லும், சில டாக்டர்கள், “இன்று இங்கு வந்தீர்களே? எவ்வளவு சம்பாதித்தீர்கள்’ என்று கேட்டு கொண்டதைக் கேட்டு வியப்படைந்தேன். அவர் பி.எம்.டபிள்யூ., காரில் செல்பவர், அடிக்கடி மேல் நாட்டுக்கு கம்பனிகளின் செலவில் சென்று வருபவர்கள் இவர்களுக்கு ஏழைகள், நடுத்தர வர்க்கம் பற்றி எந்த கவலையுமில்லை. இவர்களுக்கு செல்வந்தர்கள் கம்பனி டைரக்டர்கள், போதும் மனசாட்சி மிகவும் அவசியம் நாம செய்த வைத்தியத்தினால் அவர்களுக்கு பொருள், பணம் வீண் விரயமாக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு பயம் பட்டு வாழ்ந்த மாபெரும் தலைவர்களான பெருந்தலைவர் காமராஜ், மக்களை தனது உள்ளத்து வைத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர். இவர்கள் எப்போது சிறுதவறு கூட தனது ஆட்சியில் ஏற்பட்டு ஏழை எளியவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி வாழ்ந்து இன்னும் புகழோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மருத்துவ துறைகளில் கூட கடந்த காலத்தில் பெரும் புகழ்பெற்ற டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் ரங்காச்சாரி போல மருத்துவர்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் மக்களோடு வாழ்ந்து ஏழைகளுக்கு பணிபுரிந்தனர். மக்கள் கஷ்டப்பட்டு சேர்ந்த பணத்தை முறையாக சிகிச்சை அளித்து பணத்தைப் பெறலாம். சிவன் சொத்து குலநாசம் மக்கள் சிவன் போல, அவர்கள் சம்பாதித்த பணத்தை வரியாகப் பெற்று கையூடல் செய்து வாழ்ந்து வரும் அரசியல்வாதிகளைப் போல மனசாட்சி இல்லாமல் நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணம் பொய்ச் செல்வி என பிழைப்பு வேண்டாம். மனித நேயத்தோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நோயாளிகளுக்கு அறிவுரை: உங்கள் குடும்ப டாக்டர், ஸ்பெசிலிஸ்ட் ஆலோசனை பெற்று சிறப்பு மருத்துவமனைக்கு செல்லுங்கள் நவீனப் பயிற்சி, நல்ல விஞ்ஞான ரீதியாக அறிவுள்ள மருத்துவரை மனித நேயமுள்ளவர்களை கண்டுப்பிடியுங்கள்.  பெரும்பான்மையான அரசு மருத்துவர்கள் ஏழைகளை தினம் தினம் பார்த்து உண்மையாக நடந்து கொள்ளவர்கள் இருக்கின்றனர். நோயாளிகளில் கூட சிலர் டாக்டர் களை நம்பாமல் பல டாக்டர்களை சந்தித்து ஆலோசனைப் பெறுபவர்களை பார்த்துள் ளோம். இவர்கள் இறுதியில் சிகிச்சை பெறும் போது பல துன்பங்களையும் கஷ்டங்களையும் பண விரயத்தோடு என்னிடம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு இவர்கள் மனநிலை தான் காரணம்.

என்னிடம் கூட வைத்தியம் பெற்று கடைசியில், வேறு டாக்டரிடம் சென்று அஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்து அவதிக்குள்ளானர்களையும் பார்த்து இருக்கிறேன். எந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுகின்றனரே அவர்களிடம் முழுமையான நம்பிக்கை வையுங்கள்.

அந்த சத்தம் எப்படி இருக்கும்?

அந்த சத்தம் எப்படி இருக்கும்?

ஒரு அழகான பறவையின் படத்தை காலண்டர் ஒன்றில் பார்க்கிறோம். அந்த பறவையின் அழகில் ரசிக்கும் நாம் அதன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் அது எப்படிக் கூவும் என்று அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? இல்லை; ஏனென்றால் எங்கு போய் அதனை அறிந்து கொள்வது என்ற எண் ணத்தில் விட்டுவிடுகிறோம்.

நம் தேடுதல் எதுவாக இருந் தாலும் நிறைவேற்றும் கம்ப்யூட்டர் சர்ச் இஞ்சின்கள் இது போன்ற சத்தத்தைத் தேடும் சர்ச் இஞ்சின் எதனயாவது உரு வாக்கி உள்ளனவா என்று என் நண்பரைக் கேட்ட போது சான்ஸே இல்லை என்று கை விரித்தார். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து இணையத்தில் தேடுகையில் அதற்கென ஓர் இணைய தளம் இருப்பது கண்டறியப்பட்டது. http://www.findsounds.com/  என்பது அந்த தளத்தின் முகவரி.

இந்த தளம் சென்றால் ஒலிகளைத் தேடப் பல வழிகள் உள்ளன. ஒலிகளைச் சொற் களாகக் கொடுத்து அது எப்படி இருக்கும் என அறியலாம். மியாவ், கர்ர்ர்ர் என் றெல்லாம் கொடுத்து அந்த ஒலியினைக் கேட்கலாம். இந்த ஒலிக்கான பைல் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என் பதனையும் நீங்கள் உங்கள் ஆப்ஷனில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் எந்த பார்மட்டை உங்கள் கம்ப்யூட்டர் இயக்குமோ அந்த வழியில் பெற்றால் தானே கேட்க முடியும்.

அடுத்து விலங்கு, பறவைகளின் பெயர்களைக் கொடுத்து அவற்றின் வெவ்வேறு விதமான ஒலியைக் கேட் கலாம். உங்கள் தேடலுக்கான வேறு வேறு ஒலிகளின் பைல்கள் இருக்கும் தளங்களின் அல்லது பைல்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டு அருகேயே ஒரு ஸ்பீக்கரின் படமும் இருக்கும். அதில் கிளிக் செய்தால் ஒலி கிடைக்கும். ஒலி அலை எப்படி இருக்கும் என்று படமாகவும் காட்டப்படுகிறது. இதன் மூலம் ஒன்றின் ஒலியை இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து கேட்கலாம்.

இன்னும் என்னவெல்லாம் கேட்கலாம் என்று தெரிந்து கொள்ள ஆசையா? கீழாக Need Examples என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் இயற்கை, விலங்குகள், இசைக் கருவிகள், விடுமுறைநாட்கள், வீட்டில் உள்ள சாதனங்கள் (nature, animals, musical instruments, holidays, household) என இதன் பட்டியல் பெரிதாக உள்ளது. எந்த பிரிவையும் கிளிக் செய்து தேடும் ஒலியினைப் பெறலாம்.

எத்தனைதான் இருக்கிறது? ஒரு வழி காட்டக் கூடாதா? என்று எண்ணுகையில் இதன் ஹெல்ப் மெனு நமக்கு உதவுகிறது. இதில் என்ன வகை பார்மட்டில் சவுண்ட் பைல்கள் கிடைக்கின்றன, ரெசல்யூசன் எவ்வளவு, அவற்றை இயக்க என்ன புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனப் பல வழிகளில் நமக்கு உதவிக் குறிப்புகளைத் தருகிறது.  நான் இந்த தளம் சென்று பூனையின் குரல் எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்த்தேன். முதலில் ஒலி குறைவாக இருந்ததால் ஸ்பீக்கரின் அளவை உயர்த்தி கிளிக் செய்தேன்.

பூனையின் சத்தம் வந்தது; என் வீட்டுப் பூனை என் அருகே வந்து கம்ப்யூட்டரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்து. அதில் நீ என்னைப் போல் சத்தம் போட்டு பார்த்தாயா? என்ற கோபக் கேள்வி இருந்தது. அடுத்து சோஷியல் அனிமல் என அழைக்கப்படும் மனிதனின் குரல் எப்படி இருக்கிறது என்று இது காட்டுமா என்ற கேள்வியுடன் ட்ச்ண என டைப் செய்து பார்த்தேன். பல பைல்கள் பட்டியலிடப்பட்டன.

மனிதன் ஒவ்வொரு வேளையிலும் எப்படி எல்லாம் குரலிடுவான் என பலவகையான சத்தம் வந்தது. பயந்து போய் வெளியேறினேன். ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய சவுண்டான தளம் இது.

வாழ்த்துக்களை வீடியோவாக அனுப்ப…

வாழ்த்துக்களை வீடியோவாக அனுப்ப…

இமெயில், இணைய தள வாழ்த்து அட்டைகள், மொபைல் எஸ்.எம்.எஸ் என எந்தவித செலவும் இன்றி வாழ்த்துக்களை பண்டிகைக் காலங் களில் அனுப்புகிறோம். செலவு எதுவும் இல்லாததால், அல்லது குறைந்த செலவில் அனுப்ப முடிகிறது என்பதால் இவை குவிகின்றன.  இந்த வரிசையில் இப்போது வீடியோ கிளிப்புகளை வாழ்த்துக்களாக அனுப்பும் வசதி கிடைத்துள்ளது. யாரும் வீடியோ கிளிப்புகளை இணையத்தில் பதிந்து வைத்திட வசதி தந்த கூகுள் நிறுவனம் தன் இணைய தளத்தில் இந்த வசதியினைத் தந்துள்ளது. இதனை அனுப்புவதும் மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் யு–ட்யூப் தளம் செல்ல வும். உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய் திடுங்கள். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்குங்கள். பின் http://www.youtube.com/greetings  என்ற முக வரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.  இந்த தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வாழ்த்து வீடியோ கிளிப்புகள் தரப்பட்டிருக் கும். இதில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வீடியோ கிளிப் புகளைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக நீங்கள் எதிர்பார்த்தால் கீழாகச் சென்று எதிர்பார்க்கும் வீடியோக்களுக்கேற்ற சில சொற்களை அமைத்துத் தேடலாம். பின் கிடைக்கும் வீடியோ கிளிப்புகளில் ஒன் றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீடியோ கிளிப் ஒன்றைத் தேர்ந்தெடுத்த வுடன் ஒரு பாப் அப் ஸ்கிரீன் கிடைக்கும். அதில் இந்த வீடியோவினை வாழ்த்தாக அனுப்ப கூடுதல் அம்சங்களை இணைக் கலாம். பேக் கிரவுண்ட் தீம் அமைக்கலாம். பெர்சனல் மெசேஜ் ஒன்றை டைப் செய் திடலாம். இவை எல்லாம் முடித்துவிட்டால் அனுப்ப வாழ்த்து ரெடியாகிவிடும். இதனை உங்கள் நண்பர் அல்லது உற வினர் ஒருவருக்கு அனுப்பலாம். அல்லது மொத்தமாக 25 பேர் வரை அனுப்பலாம்.  பிறகென்ன வீடியோக்களை அனுப்பி உங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் வாழ்த்துங்களேன். அவர்கள் சந்தோஷப் படுவார்கள்.

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

கார் ஒன்று வாங்குகிறீர்கள். உடனே என்ன செய்கிறீர்கள்! அழகாக உங்கள் பெயரை அல்லது உங்கள் குழந்தை கள் பெயரை ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டுகிறீர்களா! ஏன் ஒரு டைப் ரைட் டர் வாங்கினால் கூட, குழந்தையை மகிழ்விக்க அதன் பெயரை டைப் செய்து ஒட்டு கிறீர்கள். கம்ப்யூட்டரை இதே போல் உங்களுடைய பிராண்ட் கம்ப்யூட்டராக்க என்ன செய்யலாம். இங்கே உங்களுக்காகத் தரப்போகும் டிப்ஸ் சற்று வேடிக்கையாக இருந் தாலும் கம்ப்யூட்டரை எப்படி எல்லாம் மாற்றி அமைக்கலாம் என்பதற்கு உங் களுக்கு வழி காட்டுவதாகவும் அமை யும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இதனை மேற்கொள்ளலாம் என் றாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சில மாற்றங்களுடன் இதனைப் பயன் படுத்தலாம்.

பைல்களுக்கெல்லாம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ இருப்பதைப் போல அனைத்து கம்ப்யூட்டர் சிஸ்டங்களுக்கும் ஒரு ப்ராப்பர்ட்டி விண்டோ ஒன்று உண்டு. இந்த ப்ராபர்ட்டீஸ் என்பது ஒரு பைல் அல்லது கம்ப்யூட்டரின் அடிப்படைத் தகவல்களைக் காட்டும் ஒரு விண்டோ ஆகும். இங்கு கம்ப்யூட்டரின் ப்ராபர்ட்டீஸ் விண் டோவினைப் பெறும் வழியைப் பார்க்கலாம்.

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் பிராண்ட் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்கள் இல்லையா! அதற்கேற்ற படம் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். இது ஒரு லோகாவாக இருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை கம்ப்யூட்டரை இயக்குவது போன்ற போட்டாவாக இருக்கலாம்.

2. இதற்கு பெயிண்ட் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். இது ஆப்பரேட்டிங் சிஸ்டத் துடனே வருவதால் பிரச்சினை இல்லை. Start >> All Programs>> Accessories >> Paint எனச் செல்லவும்.

3. ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் அமைக்கப்பட இருக் கும் படத்தின் பிக்ஸெல் அளவு 180 து 115 என்ற அளவிலேயே இருக்க வேண்டும். எனவே இந்த புரோகிராம் தரும் கேன்வாஸ் என்ற படத் தளத்தின் அளவை இந்த அளவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு மெனுவில் ஐட்ச்ஞ்ஞு என்ற பிரி வில் கிளிக் செய்திடவும். அதன் பின் Attributes என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் அளவெடுக்கும் அலகாக Pixels என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை என்டர் செய் திடவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி லோகோவினை இதில் தயார் செய்திடலாம். பெயிண்ட் புரோகிராமில் இதற்கென அனைத்து டூல்ஸ்களும் இருப்ப தனைப் பார்த்திருப்பீர்கள். அல்லது கிளிப் ஆர்ட் சென்று அதில் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் தேர்ந்தெடுத்து இதில் அமைக்கவும். அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோவினை எடுத்து இதில் அமைக்கவும்.

4. இனி இந்த படத்தை சேவ் செய்திட வேண்டும். File தேர்ந்தெடுத்து பின் Save As  தேர்ந்தெடுக்கவும். இந்த பைலுக்கு oemlogo.bmp  எனப் பெயர் கொடுத்து C:\Windows\System32 என்ற டைரக்டரியில் சேவ் செய்திடவும்.

அடுத்து கம்ப்யூட்டருக்கு இதுதான் லோகோ என்று செட் செய்திட சிறிய புரோகிராம் ஒன்றை எழுத வேண்டும். மிக எளிதான சில வரிகள்தான். இந்த வரிகளை எழுத Notepad  என்னும் புரோகிராமினைத் திறக்கவும். இந்த புரோகிராமினைப் பெற Start, All Programs, Accessories, Notepad எனச் செல்லவும். அடுத்து கீழே கொடுத்துள்ள வரிகளை அப்படியே டைப் செய்திடவும்.

[General]

Manufacturer=Neil’s PC

Model=Dell Inspiron 8100

[Support Information]

Line1=This PC was created

Line2=by< உங்கள் பெயர்>

Line3 =Enjoy using it!

Line4 =*************

இதில் உள்ள Line1,2,3,4 என்பதில் நீங்கள் விரும்பும் வரிகள டைப் செய்திடலாம். இன்னும் சில வரிகளை இணைக்க வேண்டும் என விரும்பினாலும் சேர்க்கலாம்.

இனி இந்த பைலை சேவ் செய்திட File  மற்றும் Save As தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். அதே C:\Windows\System32 டைரக்டரியில் சேவ் செய்திடலாம்; ஆனால் பைலின் பெயர் oeminfo.ini என இருக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டுப் பின் உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பின் கம்ப்யூட்டர் ப்ராபர்ட்டீஸ் பாருங்கள். நீங்கள் கொடுத்த லோகோ மற்றும் டெக்ஸ்ட் அங்கு கிடைக்கும்.

கணினி -சில ஆலோசனைகள்

பலமுறை நாம் கையாளும் இமெயில் அக்கவுண்ட்களில் நாமே செய்திடும் தவறுகள் குறித்து எழுதி வந்திருக்கிறோம். அவ்வப் போது ஒன்றிரண்டு தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளோம். இவை அனைத்தையும் ஒரு சேரக் கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் இந்த கட்டுரை தரப்படுகிறது.

1. ஒரே இமெயில் அக்கவுண்ட்: நமக்கென்று ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்து அதனை மட்டும் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய மூதாதையர் வீட்டு முகவரியினை நிரந்தர முகவரியாகக் கொள்வது போல இமெயில் முகவரியினையும் எண்ணக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண் டும். குறைந்த பட்சம் மூன்று இமெயில் அக்கவுண்ட்களையாவது ஒருவர் கொண் டிருக்க வேண்டும். இவற்றில் ஒன்றை வீட்டு பணிகளுக்கும் உறவினர்களுக் கும் வைத்துக் கொள்ளலாம். இன் னொன்றை உங்கள் அலுவலகப் பணிகளுக்கும் மற்றொன்றை உங்களின் இன்டர்நெட் சார்ந்த செயல்பாடுகளுக்குமாக வைத்துக் கொள்ளலாம். இமெயில் அக்கவுண்ட்கள் இலவசமாகக் கிடைத் தாலும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

2. அக்கவுண்ட்டை மூடலாம்: ஏதேனும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை வெகு நாட் களாக வைத்திருப்பீர்கள். அதன் மூலம் பல வழிகளில் தொடர்பினை ஏற்படுத் திக் கொண்டு இருந்தால் உங்களுடைய இமெயில் பல ஸ்பாம் மெயில் அனுப்புபவர்களிடம் சென்றிருக்கும். அதனால் தொடர்ந்து அந்த அக்கவுண்ட்டிற்கு மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் என்னும் குப்பை மெயில்களும் உங்களை கண்ணி வைத்துப் பிடிக் கும் மெயில்களும் வந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அக்கவுண்ட்டையே மூடிவிட்டு வேறு பெயரில் புதிய அக்கவுண்ட்டை ஏற்படுத்துங்கள். உங்களிடம் உள்ள மற்ற இமெயில் அக்கவுண்ட் மூலம் உற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட் டும் இந்த மாற்றத்தை தெரிவியுங்கள்.

3. பிரவுசரை மூட மறப்பது: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை எப்போதாவது மற்ற இடங்களில் பிற கம்ப்யூட்டர்களில் இருந்து செக் செய்தது உண்டா? நூலகங்கள், சைபர் கபே என் னும் இன்டர்நெட் மையங்கள் ஆகிய வற்றில் அவசரத்தில் இமெயில்களைப் படித்திருப்பீர்கள். அப்போது அந்த பிரவுசர் அல்லது இமெயில் அக்கவுண்ட்டை மூட மறக்க வேண்டாம். லாக் அவுட் செய்து பிரவுசரை மூடவில்லை என்றால் உங்களுடைய யூசர் நேம் மற்றும் அக்கவுண்ட்டைப் பிறர் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

4. கேஷ் மெமரி காலி செய்யுங்கள்: அடுத்தவரின் கம்ப்யூட்டரில் இமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி முடித்தவுடன் அதில் உள்ள கேஷ் மெமரியைக் காலி செய்திடுங்கள். அப்போதுதான் இன்டர் நெட் ஹிஸ்டரி, யூசர்நேம் மற்றும் பாஸ் வேர்ட் ஆகியவை அடுத்தவரின் கம்ப்யூட்டரில் தங்காமல் இருக்கும். உங்களை அடுத்து அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரிடம் இவை போய்ச் சேராது. இன் டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools மற்றும் Internet Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் “Clear History”, “Delete Cokkies” மற்றும் “Delete Files”  ஆகிய மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் என்றால் Ctrl + Shft+Del  பட்டன்களை அழுத்தினால் இவை அனைத்தும் காலியாகிவிடும்.

5. மகளிர் கவனம் : பெண்கள் தங்கள் பெயரில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்டை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அக்கவுண்ட்டைத் தெரிந்து கொண்ட வக்கிரபுத்தி கொண்ட பலர் வேண்டுமென்றே அநாமதேயப் பெயர்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்டில் இருந்து மோசமான இமெயில் கடிதங்களை அனுப்புவார்கள். நான் அறிந்த வகையில் இது போன்ற ஒரு குடும்பப் பெண்ணிற்கு இமெயில் கடிதங்கள் வந்து அவருடைய கணவர் சந்தேகக் கண்ணோடு இதனை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்டார். பின் மற்றவர்களின் துணையோடு பிரச்சினை தீர்த்து வைக்கப் பட்டது. எனவே பெண்கள் தங்கள் பெயர்களில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்களைத் திறப்பதனைத் தவிர்க்கலாம்.

6. பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல்: பலர் தங்களின் பெர்சனல் இமெயில் அக் கவுண்ட்களை தாங்கள் பணி புரியும் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அலுவலகக் கடிதங்கள் சில வேளைகளில் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தங்கிவிடும். இதனால் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை அடுத்தவர்கள் பெறும் வாய்ப்பு அதிகமாகிவிடும். இதே போல உங்கள் பெர்சனல் கடிதங்களை அலுவலக நண்பர்கள் அறிந்து கொள்ளும் வேளைகளும் ஏற்படும்.

7. தொலைபேசி பயன்பாடு: மிக மிக முக்கியமான ரகசியத் தகவல்களை இமெயில் மூலம் அனுப்புவதைக் காட்டிலும் தொலை பேசி வழியாக தெரியப்படுத்துவதே நல்லது.

8. BCC (Blind Carbon Copy)  பயன்படுத்தவும்: பெரும்பாலானவர்கள் இமெயில் சாதனத்தில் உள்ள BCC  வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. பலருக்கு ஒரே இமெயிலை அனுப்புகையில் இதனை நாம் அவசியம் பயன்படுத்தலாம். யாருக்கெல்லாம் அனுப்புவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதோ அவர்களின் இமெயில் முகவரிகளை இந்த பகுதியில் அமைத்து அனுப்ப வேண்டும்.

9. ரிப்ளை ஆல்: இமெயில் கடிதம் ஒன்றுக்குப் பதில் அனுப்ப முயற்சிக்கையில் பலருக்கும் ரிப்ளை மட்டும் கிளிக் செய்திட வேண்டுமா அல்லது ரிப்ளை ஆல் (Reply or Reply All)  கிளிக் செய்திட வேண்டுமா என்பது தெரிவதில்லை. Reply All அழுத்தினால் நீங்கள் யாருக்கு பதில் அனுப்ப வேண்டுமோ அவர் உட்பட அக்கடிதம் சார்ந்த அனைவருக்கும் உங்கள் பதில் சென்றுவிடும். இதனால் நீங்கள் அடுத்தவர் அறியாமல் அனுப்ப எண்ணும் பதில் மற்றவரையும் சேர்ந்துவிடும். எனவே எப்போதும் Reply  மட்டும் அழுத்தி குறிப்பிட்டவரின் இமெயிலுக்கு மட்டும் அனுப்பவும். பின் மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணினால் அதனையே தனித்தனியே அனுப்பிக் கொள்ளலாம். உங்கள் பதில் கடிதத்தில் மற்றவர்கள் அறிய வேண்டாத தகவல்களை அழித்து அனுப்பலாம்.

10. பார்வேர்டிங் இமெயில்: இமெயில் மெசேஜ் ஒன்று உங்களுக்கு பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு அதனை பார்வேர்ட் செய்தவருக்கு பதில் அனுப்ப எண்ணினால் அப்படியே பார்வேர்ட் செய்தால் அந்த மெயிலில் உள்ள அனைத்து முகவரிகளும் அவருக்கும் சென்றுவிடும். இதனால் இதற்கு முன் இந்த மெயிலைப் பெற்றவர்களின் முகவரிகள் தெரிந்துவிடும். மொத்தமாக ஸ்பேம் இமெயில் அனுப்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப் பாகப் போய்விடும். எனவே எந்த மெயிலை பார்வேர்ட் செய்வதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டவரின் இமெயில் முகவரி மட்டும் டைப் செய்து அனுப்பவும்.

11.பேக் அப் மறப்பது: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களில் 90% பேர் பேக் அப் எடுப்பதில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும் இந்த தவற்றைப் பலர் செய்து வருகின்றனர். பேக் அப் எடுத்தலில் இமெயில் தகவல்களும் மிக முக்கியம். கம்ப்யூட்டரிலேயே இருக்கட்டும் என சில முக்கியமான பொருள் குறித்த தகவல்கள் அடங் கிய இமெயில்களை வைத்திருப்போம். இவற்றையும் நாம் பேக் அப் எடுத்தாக வேண்டும். இந்த வகை இமெயில்களில் பல சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் இருக்கலாம். வர்த்தக ரீதியான நிதி சார்ந்த தகவல்கள் இருக்கலாம். பெர்சனல் தகவல்கள், புக் செய்த டிக்கட்களின் படிவங்கள் என எத்தனையோ முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். இவற்றை பேக் அப் எடுத்து வைத்தால் தான் நாம் அதன் இழப்பிலிருந்து தப்பிக்கலாம்.

12.மொபைல் வழி இமெயில்: நீங்கள் உங் கள் மொபைல் போன் வழியாக இமெயில் அக்கவுண்ட்டை இயக்குபவரா? பிளாக் பெரி போன்ற போன்களை இதற்குப் பயன் படுத்துபவரா? இமெயில் பார்க்க இது நல்லதா? பாதுகாப்பானதா? பாதுகாப் பானதுதான். ஆனால் ஓரிரு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல் லது. உங்கள் மொபைல் போனில் இமெயில் களைக் கொண்டு வரும் சாப்ட்வேர் தொகுப்பின் தன்மையினையும் அது எப்படி செட் செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். சில மொபைல் பிரவுசர்கள் வழியே இமெயில் பார்த்தவுடன் சர்வரில் இருந்து அந்த இமெயில்கள் நீக்கப்பட்டுவிடும். அவை உங்களுக்குப் பின் நாட்களில் கிடைக் காது. எனவே எப்படி உங்கள் மொபைல் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது என்று முதலில் செக் செய்து கொள்ளுங்கள்.

13. நல்லவேளை அழிச்சுட்டேன்!: சில வேளைகளில் நண்பர்களுக்கு அவர்கள் மனம் புண்படும் வகையில் மெயில்களை எழுதி அனுப்பி விடுவோம். அல்லது நம் நண் பர்களிடமிருந்து அத்தகைய மெயில்கள் வரலாம். இவற்றை அழித்துவிடுவோம். ஒருவழியா அழிச்சுட்டேன் என நீங்கள் நினைக்கலாம். அவை உங்கள் கம்ப் யூட்டரிலிருந்து அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தபின்னும் உங்கள் சர்வரில் அவை எங்காவது இருக்கலாம். இத்தகைய மெயில்கள் ஸ்பாம் அனுப்புபவர் கள் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனவே ஒருவருக்கு இமெயிலில் கடிதங்கள் அனுப் பும் முன், குறிப்பாக கோபத்தில் எழுதி அனுப்புமுன், ஒருமுறைக்கு பல முறை யோசித்து நிதானமாக சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்தே அனுப்பவும்.

14.ஸ்பாம் மெயிலை நம்புவது: அதிகப் பணத் திற்கு ஆசைப்படாத மனிதன் இல்லை. ஆனால் அந்தப் பணம் நம் உழைப்பிற்கு பரிசாக வர வேண்டும். பல ஸ்பேம் மெயில்கள் நமக்கு லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்றும், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று பரிசாகத் தரப்படும் என் றும் அனுப்பப்படும். பின் பொருளை அனுப்பும் செலவிற்காகப் பணம் அனுப் பச் சொல்வார்கள். அல்லது பரிசு விழுந்த கோடிக்கணக்கான ரூபாயைக் கேட்டுப் பெற வங்கிச் செலவாக சில லட்சம் கேட்பார்கள். அல்லது வங்கியில் பணம் செலுத்த உங்கள் வங்கிக் கணக்கு, இன்டர் நெட் கணக்கின் யூசர்நேம் பாஸ்வேர்ட் கேட்பார்கள். தந்துவிட்டால் அவ்வளவுதான். நாம் உழைத்து சேர்த்த பணம் எல்லாம் நம்மை ஏமாற்றுபவன் கைகளுக்குச் சென்றுவிடும். எனவே இந்த மெயில்களைப் படிக்காமலேயே அழித்துவிட்டு ட்ரேஷ் பெட்டியிலிருந்தும் நீக்கிவிடுங்கள்.

15.பிஷ்ஷிங் மெயில்கள்: நம்மை சிக்க வைக்கும் மெயில்களே பிஷ்ஷிங் மெயில்கள். ஏதேனும் பிரபலமான பேங்க், இன்டர்நெட் வழி பேங்க் பே பால், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான நிறுவனப் பெயர்களில் இமெயில்கள் வரும். அதில் உள்ள லிங்க் கிளிக் செய்து தொடர்ந்தால் நம் கம்ப்யூட்டரில் அவர்களின் புரோகிராம்கள் அமர்ந்து கொண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும். எனவே இது போன்ற மெயில் கள் வந்தால் திறக்கவே கூடாது.

16.பெர்சனல் தகவல்கள்: இமெயில் மூலம் பெர்சனல் தகவல்களை அனுப்புவது எப்போதும் ஆபத்தான விஷயம். முகவரிகள், தொலைபேசி எண்கள், பேங்க் அக்கவுண்ட் எண்கள், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை இமெயில் மூலம் அனுப்பவே கூடாது. இவற்றை போன் மூலம் தெரிவிக்கலாமே. ஏனென்றால் நீங்கள் அனுப்பும் இமெயில் இடையே மற்றொருவரால் குறுக்கிட்டுப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இமெயில்கள் மூலம் இந்த வகை தகவல்கள் செல்லவே கூடாது.

17. சப்ஸ்கிரைப் செய்யாத நியூஸ் லெட்டர்: நீங்கள் எந்த தளத்திலும் சென்று பதியாமல் ஒரு நியூஸ் லெட்டர் ஒன்று சரியான கால இடைவெளியில் வருகிறதா? அப்படியானல் நிச்சயம் அது ஸ்பேம் மெயில்தான். அதிலேயே உங்களுக்கு இந்த நியூஸ் லெட்டர் வேண்டாம் என்றால் இந்த லிங்க்கில் கிளிக் செய்து அன்சப்ஸ்கிரைப் செய்துவிடுங் கள் என்ற செய்தியும் ஒரு லிங்க்கும் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் வந்து அமர்ந்து கொள்ளும். எனவே அவற்றை அப்படியே அழித்துவிடுங்கள்.

18. நண்பர்களை மட்டும் நம்புங்கள்: சில வேளைகளில் நம் இனிய நண்பர்களிடமிருந்து மெயில்கள் வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து பின் பதில் மெயில் அனுப்புவோம். உங்கள் நண்பர்கள் நல்லவர்கள் தான், நம்பிக்கைக்குரியவர்கள்தான். ஆனால் அவர்களின் பெயரில் வந்த மெயில்கள் அவர்களிடமிருந்து வந்தவையாக இருக்காது. உங்கள் நண்பர் கம்ப் யூட்டரில் வந்தமர்ந்த ஸ்பேம் மெயில் அட்ரஸ் புக்கை திருடி அதில் இருந்த உங்கள் இமெயில் முகவரிக்கு அவர் பெயரில் மெயில்களை அனுப்பி இருக்கும். இந்த மாதிரி மெயில்களுக்கு அவசரத்தில் பதில் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

19. ஸ்பாம் மெயில் பிளாக்கிங்: உங்களுக்கு வந்த மெயில் ஸ்பாம் மெயில் தான் என்று தெரிந்தால் அந்த முகவரியினைத் தடுக்கப் பட வேண்டிய இமெயில் முகவரி லிஸ்ட் டில் சேர்த்து பிளாக் லிஸ்ட் செய்திட வேண்டும். அந்த முகவரியிலிருந்து மெயில் வந்தால் திருப்பி அனுப்பிவிடு என்று உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் செட் செய்திடுங்கள்.

20. அட்டாச்மெண்ட் ஸ்கேன்: உங்களுக்கு வரும் இமெயில்களுடன் அட்டாச் செய் யப்பட்டு பைல்கள் வருகின்றனவா? அப் படியானால் உங்கள் இமெயில் கிளையண்ட் அவற்றை ஸ்கேன் செய்த பிறகு டவுண்லோட் செய்திடும் வகையில் அதனை செட் செய்திட வேண்டும். அப்போதுதான் அட்டாச்டு பைல்கள் பாதுகாப்பானவையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

21. அடுத்தவர் மூலம் செக்கிங்: உங்களால் இமெயில் அக்கவுண்ட் பார்க்க முடியாத நிலையில் என்ன செய்கிறீர்கள். உங்கள் நண்பரை அழைத்து அவரிடம் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இமெயில் செக் செய்யச் சொல்கிறீர்களா? அதைப் போன்ற தவறான செயல் எதுவுமில்லை. எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரிடம் உங்கள் பெர்சனல் தகவல்களைக் கொடுத்து இமெயில்களைச் செக் செய்திடச் சொல்ல வேண்டாம். கூடுமானவரை நீங்கள் மட்டுமே உங்கள் இமெயில் அக்கவுண்ட்டை செக் செய்திட வேண்டும்.

22.பாஸ்வேர்ட் அமைப்பு: உங்கள் பாஸ் வேர்ட் என்ன? ஒரு சிலர் தங்கள் பெயரையே வைத்துக் கொள்வார்கள். சிலரோ யூசர் நேம் எதுவோ அதனையே பாஸ் வேர்டாகவும் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் குழந்தை, மனைவி பெயரை வைத்திருப்பார்கள். இவை எல்லாம் எளிதாகக் கண்டறியக் கூடிய பாஸ்வேர்டுகள். எனவே இது போல வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். மாற்றுவதாக இருந்தால்(1) பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டருடன் இருக்க வேண்டும் (2) சிறிய பெரிய எழுத்துக்கள் அமைந்ததாக இருக்க வேண்டும். (3) ஸ்பெஷல் குறியீடுகளுடன் அமையப் பெற்றிருக்க வேண்டும். (4) இலக்கங்களையும் இணைத்து அமைக்க வேண்டும்.

23.என்கிரிப்ஷன்: உங்கள் இமெயில்களை என்கிரிப்ட் செய்வதில்லையா? அப்படியானல் செய்திடத் தொடங்குங்கள். என் கிரிப்ட் என்பது மெயிலை அடுத்தவர் யாரும் படித்திட முடியாதபடி சுருக்கி மாற்றி அமைப்பது. அதற்கான கீயைப் பெறுபவர் மட்டுமே அதனைப் படிக்க முடியும். இலவச என்கிரிப்ஷன் ப்ரோகிராம்கள் நிறைய கிடைக்கின்றன. PGP  என்ற ஒரு புரோகிராம் நன்றாகச் செயல்படுகிறது. அதனைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இமெயில் பாதுகாப்பிற்கான சில முக்கிய வழிகள். இவற்றை அவசியம் கடைப்பிடித்து வருவது உங்களுக்கும் உங்கள் இமெயில்களுக்கும் பலமான பாதுகாப்பினைத் தரும்.

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

சில கேம்ஸ் மற்றும் டிவிடி கிளிப்களை டவுண்லோட் செய்கையில் இடைப்பட்ட நேரத் திலேயே அவை தொடர்பு விட்டுப் போகின்றன  இடையே டவுண்லோட் முறி வதற்கான காரணங்களை இங்கு காண்போம்.

1. இன்டர்நெட் இணைப்பு: டவுண்லோட் செய் வது இடையே அறுந்து போவதற்கான பொதுவான ஒரு காரணம் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படுவதுதான். டவுண் லோட் ஆகிக் கொண்டிருக்கையில் இன்டர் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டால் டவுண்லோட் முழுமையாக தோல் வியடையும். ஏன் இப்படி ஆனால் என்ன என்றெல்லாம் மாற்று வழி எல்லாம் இதற்குக் கிடையாது. டவுண்லோடிங் செயல் பாட்டிற்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை இன்டர்நெட் கனெக்ஷன் தான். அது இல்லாத பட்சத்தில் நிச்சயம் டவுண் லோட் செயல்பாடு நின்றுதான் போகும். எனவே டவுண்லோட் அறுந்து போகும் நிகழ்வில் முதலில் நீங்கள் சோதனை செய்ய வேண்டியது இன்டர்நெட் தொடர்பு உள்ளதா என்பதுதான். அது இல்லை என்றால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

2. சர்வர் இணைப்பு: இரண்டாவது முக்கிய காரணம் டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டருக்கும் பைலைக் கொண்டிருக்கும் சர்வருக்கும் இணைப்பு துண்டிக் கப்படுவதுதான். இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் டவுண்லோட் செய்வது நின்று போகும். இதற்குக் காரணம் உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது இன்டர்நெட் இணைப்போ அல்ல. இந்த நிகழ்வுக்குக் காரணம் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சினைதான். அல்லது இடையே உள்ள இணைப்பில் உள்ள பிரச்சினை. இதனை நம் பக்கத்தில் எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அந்த சர்வர் அல்லது இணைப்பு சரியாகும் போது மட்டுமே டவுண்லோட் செயலைத் தொடங்க முடியும்.

3. டைம் அவுட் கனெக்ஷன் (Timed out conection) நீங்கள் டவுண்லோட் செய் திடும் பைல் இறங்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பைலை வழங்கும் சர்வர் நேரம் ஆகிவிட்டது என்று இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும். அதாவது டவுண்லோட் பாதியில் நின்று விடும். இது சர்வருக்கு ஏற்படும் ஓவர்லோடினால் கூட இருக்கலாம்; அல்லது இன்டர்நெட் இணைப்பின் வேகம் மிகவும் மெதுவாக இருக்கலாம். இதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது தானாகச் சரி செய்யப்படும்போது மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம். மேலே சொன்ன நிகழ்வுகளுக்கான தீர்வு கள் என்ன? அதிலேயே குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் இணைப்பு ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடும் பணியை மேற்கொள்ள வேண்டிய து தான். பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த நேரம் பெரிய அளவிலான பைல்கள் டவுண்லோட் செய்திட உகந்ததாக இருக்காது. இன்டர்நெட் டிராபிக் பெரும் அளவில் இருக்கும்போது டவுண்லோட் சுமுகமாக இருக்காது. எனவே இன்டர்நெட் டிராபிக் குறைவாக இருக்கையில் டவுண்லோட் செய்திட முயற்சிக்கலாம். மேலும் பிரபலாமான பைல்களையும் அப் போதுதான் வெளியான முக்கிய பைலையும் பலர் ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பினால் அதிகம் டவுண்லோட் முயற்சிகள் மேற் கொள்ளப் படாத நேரத்தில் டவுண்லோட் செய்திடலாம். இன்னொரு தீர்வு டவுண்லோட் செய்திட வேறு ஒரு சர்வரை நாடுவதுதான். சில முக்கிய பைல்களை உலகின் பல இடங்களில் உள்ள சர்வர்களில் வைத்திருப்பார்கள். அந்த பைல்களை டவுண்லோட் செய்திட அந்த தளங் களுக்குச் செல்கையில் வெவ்வேறான சர்வர் களுக்கு லிங்க் கொடுத்திருப்பார்கள். அல்லது உங் கள் பிரியமான சர்ச் இஞ்சின் மூலம் இந்த சர் வர்களின் முகவரிகளைப் பெற்று இயங்கலாம். அடுத்த தீர்வு டவுண்லோட் மேனே ஜர்களைப் பயன்படுத்துவதுதான். இப்போது இணையத்தில் இத்தகைய டவுண்லோட் மேனேஜர்கள் நிறைய இலவசமாகக் கிடைக் கின்றன. இவற்றைப் பயன்படுத்தி டவுண் லோட் செய்தால், டவுண்லோட் செய்கையில் இணைப்பு நின்று போனால் மீண்டும் இணைப்பு கிடைக் கையில் அந்த பைல் எது வரை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து மீண்டும் விட்ட இடத்தில் தொடங் கலாம். நம்மிடமே சில நேரங்களில் குறை இருக் கலாம். நீங்கள் இன்டர்நெட் இணைப்பிற்குப் பயன்படுத்துவது டயல் அப் தொடர்பாக இருந்து இந்த டவுண்லோட் அறுந்து போகும் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் உடனே பிராட்பேண்ட் தொடர்பினைப் பெறவும். மெதுவாக இயங்கும் டயல்அப் இன்டர்நெட் எப்போதும் டவுண்லோட் விஷயத்தில் பிரச்சினையைக் கொடுக்கும். மேலே குறிப்பிட்டவை எல்லாம் சில பரிந்துரைகள் தான். நீங்கள் தான் உங்களுடைய இன்டர்நெட் அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் ஊரில், உங்கள் இல்லத்தில் உள்ள இணைப்பு எப்படி என்ன வேகத்தில் இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை பெரிய அளவில் டவுண்லோட் செய்பவராக இருந்து, அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் தீர்வு ஒன்றுக்கு நீங்கள் முயல வேண்டும்.

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள்.

Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும்.

இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் IgE -ம் அளவுடன் இருந்து மேல்சுவாச மண்டல அழற்சியைத் தொடர்ந்து இரைப்பு வருவது Idiosyncratic asthma எனும் இரண்டாவது வகை.

முதல் வகை ஆஸ்துமா பெரும்பாலும் இள வயதிலேயே வந்துவிடும். இரண்டாம் வகை ஆஸ்துமா வாலிப வயதையொட்டி துவங்குகிறது.

ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?

மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.

ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?

கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease)  என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

பொதுவாக எந்த அன்னியப் பொருளையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிடும் தன்மை நுரையீரலுக்கு உண்டு. இதனால்தான் தும்மல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறியாக தொடக்கத்தில் நுரையீரல் பாதை லேசாகச் சுருக்கமடைந்து, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். அதிகாலை, இரவில் மூக்கடைப்பு, தும்மல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு, தும்மலுடன் நெஞ்சை இறுக்கிப் பிடித்ததுபோன்ற உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு இவ்வாறு பிரச்சினை இருக்கும்.

நோய் தீவிரமடையும் நிலையில் இரைப்பு (Wheezing) ஏற்படத் தொடங்கும். நோயாளி தன் காதுகளை இரண்டு கைகளால் மூடிக்கொண்டால் இரைப்பின் ஒலியைக் கேட்க முடியும். அது யாழ் ஒலிபோல இருக்கும்.

ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?

கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease) என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவில் தலைவலி, கண் எச்சல், கண்ணீல் நீர் வடிதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே ஆஸ்துமாவையும் சைனுசைட்டீஸ் நோய்களுக்கான அறிகுறிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது எளிது.

ஆஸ்துமாவுக்கு மன அழுத்தத்துக்கும் (Stress) தொடர்பு உண்டா?

தொடர்பு உண்டு. இதை பதினெண் சித்தர்களில் ஒருவரான யூகி சித்தரே குறிப்பிட்டுள்ளார். அதாவது “மா துக்கம்’ (பெரிய துக்கம்) இரைப்பை நோய்க்கு வழி வகுக்கும் என அக் காலத்திலேயே அவர் கூறியுள்ளார். மன அழுத்தம் காரணமாக ஆஸ்துமா அதிகமாகக்கூடும் என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் ஆஸ்துமா நோய்க்கான சித்த மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளியின் மன நிலைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆலோசனை அளிக்கப்படுகிறது.

ஆஸ்துமா காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?

உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவிர ஆஸ்துமா நோய் காரணமாக நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். நோயாளியின் உதடு, நாக்கு, நகங்கள் நீல நிறமாக மாறும். மூளை பாதிப்படையக்கூடும். இத்தகைய நிலைக்கு ‘Status Asthmaticus’ என்று பெயர். சில நேரங்களில் மூச்சு அடைப்புடன், வியர்வை, படபடப்பு ஆகியவையும் சேர்ந்து இருந்தால் அது ஆஸ்துமாவாக இல்லாமல் மாரடைப்பாகக்கூட இருக்கலாம். இந் நிலையில் நோயாளியை உடனடியாக அலோபதி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிவில் சேர்ப்பது அவசியம்.

“ஆஸ்துமா அட்டாக்’ நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

நோயாளியை நல்ல காற்றோட்டத்தில் தலையை சற்று தூக்கினாற்போல் படுக்க வைக்க வேண்டும். சுய நினைவுடன் நோயாளி இருந்தால் சிறிதளவு வெந்நீரை குடிக்கச் செய்யலாம்; இது மூச்சுக் குழலை விவடையச் செய்யும். பின்னர் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆஸ்துமா நோயாளிகள் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா, சப்பாத்தி, பியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடுடன் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) உதவுமா?

நிச்சயம் உதவும். பெங்களூல் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக நாற்காலி சுவாசப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நாற்காலி சுவாசப் பயிற்சி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து சித்த மருத்துவத்தில் நாற்காலி பிராணாயமப் பயிற்சி பந்துரைக்கப்படுகிறது.

ஆஸ்துமா நோயாளிகள் மோர் சாப்பிடக்கூடாதா?

நமது நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் மோரை அறவை தவிர்ப்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோல் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்; வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.

மூச்சுக் குழலை நேரடியாக விவடையச் செய்யவும் (Broncho-dilation) சளியை இளக்கி எளிதாக வெளியேற்றவும் (Mucolytic) மிளகு அல்லது மஞ்சள் உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ஆஸ்துமா இருந்தால் ஐஸ்கிரீம் உள்பட குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

ஆம். ஏனெனில் குளிர்ச்சியான பொருள்கள் காரணமாக நுரையீரலின் சுவாசப் பாதை சுருங்கி மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வெள்ளக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இதேபோன்று எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.

ஆஸ்துமாவை “சித்தம்’விரட்டும்!

மனித உடலில் உள்ள பெய உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பித்தெடுத்து அதை ரத்தத்தோடு கலந்து சுத்தமாக இதயத்துக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்துவருவது நுரையீரல்தான்.

மேலும் ஆக்சிஜன் என்ற பிராண வாயுவுடன் தொடர்புள்ளதால் மனிதனின் உயிர் இயக்கத்துக்கும் நுரையீரலுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லத் தேவையில்லை. மூளை, இதயம், கல்லீரல் போன்ற மற்ற உறுப்புகளுக்கும் வெளி உலகுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் காற்றுடன் நேரடித் தொடர்பு நுரையீரலுக்கு உள்ளதை மறந்துவிடக்கூடாது. எனவே நுரையீரலை நோய் தாக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனம் அவசியம். குறிப்பாக புகை பிடித்தல் பழக்கம் நுரையீரலுக்கு நல்லது அல்ல.

நுரையீரல் தொடர்பான நோய்களில் ஆஸ்துமா குறிப்பிடத்தக்கது. மூக்கடைப்பு, தும்மலில் தொடங்கி மார்புச் சளியை வெளியேற்ற முடியாமலும் இரைப்புடனும் ஆஸ்துமா நோயின் தாக்கம் தொடரும். உணவுக் கட்டுப்பாடு உள்பட தொடர் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த முடியும்.

சித்த மருத்துவத்தில் ஆஸ்துமா நோய்க்குப் பெயர் என்ன? இந் நோய் எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தில் “இரைப்பு நோய்’ என்று பெயர். இந் நோய்க்கு “மந்தார காசம்’ என சித்தர்கள் பெயட்டனர். உலகம் முழுவதும் 5 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் (2:1 ஆண், பெண் விகிதம்.). நகரங்களின் வளர்ச்சி, தொழில் பெருக்கம் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது; இதனால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஆஸ்துமா நோயினால் பெரும்பாலும் 3 முதல் 7 வயது வரை உள்ள நகர்ப்புறக் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மண் தூசு அதிகம் உள்ள இடங்களில் விளையாடுதல், பள்ளிக்கூடங்களின் புதிய சூழல் ஆகியவை காரணமாக குழந்தைகள் ஆஸ்துமா பிரச்சினைக்கு உள்ளாகின்றனர்.

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன?

ஆஸ்துமா நோய் இருப்பது தெயவந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

1. முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

2. மிளகு கல்பம் (தூள்). இது மிளகுடன் கசலாங்கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

3. பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?

ஆஸ்துமா நோய்க்குத் தொடர்ந்து 48 நாள் (ஒரு மண்டலம்) மேற்சொன்ன சித்த மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno Modulation)  சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட வேண்டும்.

நுரையீரலின் முக்கியப் பணி என்ன?

ஆக்சிஜன், கார்பன்-டை ஆக்ûஸடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக் காற்று சுவாசக் குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக் காற்று வந்தவுடன் அதில் பெரும்பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் முக்கியப் பணியை நுரையீரல் செய்கிறது. இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகத்து ஆக்ஸிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.

உடலில் நுரையீரலின் (Lung) அமைப்பு என்ன?

உடலில் வலதுபுறம், இடதுபுறம் என இரண்டு பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. வலதுபுறம் மூன்று பகுதிகளாகவும் (Lobes) இடதுபுறம் இரண்டு பகுதிகளாகவும் (Lobes)  நுரையீரல் அமைந்துள்ளது. மூன்று பகுதிகள் உள்ளதால் வலதுபுறம் நுரையீரலின் அளவு சற்று பெதாகக் காணப்படும். நுரையீரலின் மொத்தம் உள்ள 5 பகுதிகளில் 4 பாதிக்கப்பட்டு, ஒன்று நல்ல நிலையில் இருந்தால்கூட ஒருவரை வாழ வைக்க முடியும்.

புகை பிடிப்பதால் ஆஸ்துமா அதிகக்குமா?

அதிகக்கும். புகை பிடிப்பதால் மூச்சுக் குழல், நுரையீரலில் நிரந்தர அழற்சி (Inflammation) ஏற்படுகிறது. இது ஆஸ்துமாவை அதிகக்கச் செய்யும். எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் புகை பிடிப்பதை நிறுத்தாவிடில் ஆஸ்துமா பிரச்சினை நீடிக்கும். புகை பிடிப்பவர் அருகிலிருந்து புகையை சுவாசிப்பதாலும் Passive smoking ஆஸ்துமா அதிகக்கும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வழி என்ன?

பீன்ஸ் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

இதேபோன்று வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்

ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.