எக்ஸெல் சில பிரபலமாகாத டிப்ஸ்கள்

எக்ஸெல் சில பிரபலமாகாத டிப்ஸ்கள்

எக்ஸெல் தொகுப்பில் சில டிப்ஸ்கள் பயனுள்ளவையாய் இருந்தாலும் அவை பற்றி அதிகம் யாரும் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவை சார்ந்த பயன்பாட்டினை அவ்வளவாக யாரும் மேற்கொள்வதில்லை. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Rows and Columns)

களை மறைத்திட: நீங்கள் விரும்பினால் உங்கள் ஒர்க்ஷீட்டில் சில வரிசைகளை மறைத்து வைத்து இயக்கலாம். இது மற்றவர்களிடமிருந்து டேட்டாக்களை மறைப்பதற்காக மட்டும் அல்ல. நாம் செயல்படுகையில் தள்ளி இருக்கும் சில வரிசைகளுக்கேற்ப புதிய செல்களில் டேட்டாக்களை அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது இடையே இருக்கும் வரிசைகளைத் தற்காலிகமாக மறைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் எந்த வரிசைகளை மறைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் பார்மட் (Format) மெனு சென்றால் அங்கு அவற்றை மறைத்திடவும், மறைத்ததை மீண்டும் கொண்டு வரவும் ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை விருப்பம்போலத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

2. ஸ்ப்ரெட்ஷீட் சுற்றிவர: கண்ட்ரோல் + ஆரோ கீயினை அழுத்தினால் அது எந்த ஆரோ கீ என்பதற்கேற்ப டேட்டா அமைந்துள்ள செல்களில் முதல் செல்லுக்கும் கடைசி செல்லுக்கும் கர்சர் செல்லும்.

கண்ட்ரோல்+ ஷிப்ட்+ ஆரோ கீகளை அழுத்தினால் தற்போதைய செல் முதல் அழுத்தப்படும் ஆரோ கீயின் படி டேட்டா உள்ள முதல் அல்லது இறுதிச் செல் வரை தேர்ந்தெடுக்கப்படும். அதிகமான எண்ணிக்கையில் செல்களைக் கொண்டு ஒர்க் ஷீட் தயாரித்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் உதவி செய்திடும் கீ சேர்க்கை ஆகும்.

3. SUMIF பங்சன்: ஒரு குறிப்பிட்ட கண்டிஷனில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டல்களுக்கு இந்த பங்சன் பார்முலா பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய பார்மட்: SUMIF (Range,” Comparison”,SumRange)

4. SUMPRODUCT: மேலே சொன்னபடியே செயல்படுத்தப்படும் இந்த பங்சன் இரண்டு டேட்டாவினப் பெருக்கிக் காட்டப் பயன் படுத்தப் படுகிறது.

இதன் பார்மட் SUM PRODUCT (array1, array2, array3, …) எடுத்துக்காட்டாக =SUMPRODUCT (A2:B4, C2:D4) என்று கொடுக்கலாம். இதிலிருந்து கிடைக்கும் விடையும் SUM (A2:B4*C2:D4) என்ற பார்முலாவிலிருந்து கிடைக்கும் விடையும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதனை நினைவில் வைத்துப் பார்த்தால் இதன் செயல்பாடு புரியும்.

5. ROUND, ROUNDUP, ROUNDDOWN செயல்பாடுகள்: ROUND (Number,Digits) என்ற பார்மட்டில் கிடைக்கும் எண் அல்லது தரப்பட்ட எண் எத்தனை இலக்கங்களுக்குள் ளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறோமோ அந்த இலக்கங்களுக்காக ரவுண்ட் செய்து கிடைக்கும்.

இதில் Number என்பது எந்த எண்ணை ரவுண்ட் செய்ய எதிர்பார்க்கிறோமோ அந்த எண். Digits என்பது எத்தனை இலக்கங்களில் அது இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்கிறோமோ அந்த எண் ஆகும்.

ROUNDDOWN (Number, Digits) மற்றும் ROUNDUP (Number, Digits) ஆகியவை ROUND கட்டளை போலவே செயல்படுபவை. ஆனால் எந்த வகையில் ரவுண்ட் செய்யப்பட வேண்டும் என்பதனை இதில் முடிவு செய்து அளிக்கலாம்.

கீழே குறிக்கப்பட்டுள்ள ஷார்ட் கட் கீகளும் நாம் அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டியவை ஆகும்.

Alt + ‘: ஸ்டைல் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்

Ctrl + 9: படுக்கை வரிசைகளை மறைத்திட

Ctrl + Shift + 9: மறைத்த படுக்கை வரிசைகளை மீண்டும் பெற

Ctrl +0: நெட்டு வரிசைகளை மறைத்திட

Ctrl + Shift + 0: மறைத்த நெட்டு வரிசைகளை மீண்டும் பெற

F6 : அடுத்த பேன் பெற

Alt + F8: மேக்ரோஸ் டயலாக் பாக்ஸ் பெற

Alt + F11: :விசுவல் பேசிக் எடிட்டர் பெற

Ctrl + Shift + }: தற்போது கர்சர் இருக்கும் செல்லோடு நேரடியாகவோ மறைமுக மாகவோ தொடர்புடைய பார்முலா காட்டும் செல்கள் தேர்ந்தெடுக்க எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில சிறப்பு அடையாளங்களை கீ தொகுப்புகளை அழுத்துவதன் மூலம் பெறலாம். அந்த வகையில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சிறப்பு அடையாளங்கள் இங்கு பட்டியலிடப் படுகின்றன.

%d bloggers like this: