எக்ஸெல் பங்சன்கள்

எக்ஸெல் பங்சன்கள்

எக்ஸெல் தொகுப்பில் பெரும்பாலான டேட்டாக்கள் எண்களாகவே உள்ளன. இவற்றைக் கொண்டு பல பொதுவான கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் இதற்கான பார்முலாக்களை அமைத்து செயல் படுத்தினால் நேரம் வீணாகும் என்பதற்காக எக்ஸெல் தொகுப்பில் டிபால்ட்டாக பல கணக்கீடு பங்சன்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய சில பங்சன்கள் குறித்த விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.

1. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: AVERAGE (A:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப் பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

2. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் COUNT (A1:A4)

3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: Min (A1:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

5 Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: SUM (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப் படுகின்றன.

இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப் படும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப் படும் செல்களின் எண்களைத் தரலாம்.

%d bloggers like this: