வேர்டில் கோடுகள் உருவாக்கம்

வேர்டில் கோடுகள் உருவாக்கம்

வேர்ட் டாகுமெண்ட்கள் தயாரிக்கையில் கோடுகளை அமைப்பது நாம் அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமான செயலாகும். வெவ்வேறு பொருள் குறித்துச் சொல்லும் சொற்களை அல்லது பத்திகளை கோடுகளால் எல்லை கட்டிப் பிரித்துக் காட்டுகையில் அவற்றை தெளிவாக எடுத்துக் காட்ட முடிகிறது.

ஆனால் கோடுகள் அமைப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. மெனு சென்று பார்மட் தேர்ந்தெடுத்து கோடுகளை அமைத்து பின் மீண்டும் டெக்ஸ்ட் திரும்பி அவற்றை அமைக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை இந்த வழியைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மெனுக்களை நாடாமல் வேகமாக கோடுகளை அமைப்பதற்கு ஆறு வழிகள் காட்டப்படுகின்றன.

1. மூன்று முறை ஹைபன் – – – அடையாளக் கோட்டினை அமைத்து என்டர் தட்டுங்கள்; நீளமான சாதாரண கோடு தானே உருவாகும்.

2. கீழான கோடு சுசுசுசு மூன்று முறை அமைத்து என்டர் தட்டினால் நீளமான திக் கோடு அமையும்.

3. மூன்று ஆஸ்டெரிக்ஸ் (*) அடையாளத்தை அமைத்து என்டர் கொடுக்க புள்ளிகள் அமைந்த அழகான கோடு கிடைக்கும்.

4. ஈக்குவல் (=) அடையாளத்தை மூன்று முறை அமைத்து என்டர் அழுத்த மெல்லிதான இரண்டு கோடுகள் இணையாகச் செல்வதைப் பார்க்கலாம்.

5. மேலாகவும் கீழாகவும் மெல்லிய கோடுகளையும் இடையே திக்கான கோடும் அமைந்ததாக பார்டர் லைன் வேண்டும் என்றால் ஹேஷ் என்னும் அடையாளக் குறியீட்டை (#) மூன்று முறை டைப் செய்து என்டர் கொடுக்க வேண்டும்.

6. அலை அலையாய் நீளமான கோடு வேண்டுமா? டில்டே என்னும் அடையாளக் குறியீடு தெரியும் அல்லவா! கீ போர்டில் மேல் வரிசையில் முதல் கீ ஒன்று இருக்கும். இதனை ஷிப்ட் கொண்டு அழுத்த டில்டே (நு) கிடைக்கும். இதனை மூன்று முறை அமைத்து என்டர் தட்ட அலை அலையாய்கோடு கிடைக்கும்.

%d bloggers like this: