மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்

மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்

இன்டர்நெட் பிரவுசர் தொகுப்புகளில் நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று வருவதில் முன்னணியில் இருப்பது மொஸில்லா பயர்பாக்ஸ் தொகுப்பாகும். இதன் வசதிகள், டிப்ஸ் குறித்து பல கட்டுரைகள் இந்த மலரில் வெளியாகியுள்ளன. சென்ற வாரம் இதில் அவ்வளவாக ஆனால் அதிகப் பயனுள்ள சில வசதிகளை அறிய முடிந்தது. அடடா! இத்தனை நாளாய் அறியாமல் இருந்து விட்டோமே என்ற ஆதங்கம் தான் ஏற்பட்டது. அவை என்ன எனப் பார்ப்போமா!

1. சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட்: இன்டர்நெட்டில் குறிப்பிட்ட இணைய தளப் பக்கத்திற்கான பாஸ்வேர்டினை சேவ் செய்திடும் பழக்கம் உங்களிடம் உண்டா? அப்படி சேவ் செய்த பின் உங்களுடைய ஞாபக மறதியினால் அந்த பாஸ்வேர்டினை மீண்டும் சரியாக நினைவிற்குக் கொண்டு வர முடியவில்லையா? அப்படியானால் அந்த பக்கத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் View Page Info என்பதைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் உள்ள செக்யூரிட்டி டேப்பில் “View Saved passwords”என ஓர் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அப்படியானால் இது சரியான வழி இல்லையே? பாஸ்வேர்டினை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடாதே என்று நினைக்கிறீர்களா? இங்கு தான் உங்களுக்கு உதவிட ஒரு Master Password  வருகிறது. இதனைப் பயன்படுத்த Tools> Options> Security எனச் செல்லவும். அங்கு “Use Master password” என்று ஒரு செக் பாக்ஸ் கிடைக்கும். இதனை செலக்ட் செய்து நீங்கள் நினைவில் கொள்ளும் ஏதாவது ஒன்றினை டைப் செய்து என்டர் செய்திடவும். இனி யாராவது ஒருவர் நீங்கள் அளித்த பாஸ்வேர்டினைப் பார்க்க முயன்றால் வேறு ஒரு பாஸ்வேர்ட் தான் கிடைக்கும்.

2. டூப்ளிகேட் டேப்: டேப்களுடன் உள்ள பாரினைப் பார்க்கும் போது ஒரே செயல்பாட்டிற்கு இரண்டு டேப் வெவ்வேறு இடங்களில் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால் எந்த டேப்பிற்கு டூப்ளிகேட் டேப் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனை கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே கர்சரைக் கொண்டு இழுத்து காலியான இடத்தில் விடவும். இன்னொரு டூப்ளிகேட் டேப் அங்கு அமைக்கப்படும்.

3. டூல்பாரில் சிறிய ஐகான்: இது ஒரு சின்ன விஷயம்தான். பயர்பாக்ஸ் டூல்பாரில் உள்ள ஐகான்கள் சைஸ் மற்றும் அவை அமையும் இடம் குறித்து மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமா? ஹோம் ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் இதண்ணிட்டித்ஞு என்பதைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் விண்டோவில் டூல் பாரில் உள்ள ஐகான்களை பலவிதமாக மாற்றுவதற்கு வசதிகள் தரப்பட்டுள்ளன.

One response

  1. […] மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள் […]

%d bloggers like this: