பிரச்னைகளை கண்டு துவண்டு போய் உள்ளவரா நீங்கள்?

பிரச்னைகளை கண்டு துவண்டு போய் உள்ளவரா நீங்கள்?

ஹாய் பிரண்ட்ஸ், பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச் னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும். எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச் னைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக் கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.

* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.

உங்களுக்கு நேர்ந்த பிரச்னையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்னை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள்; அப்போது தான் பிரச்னைக்கு <உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.

* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் <உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.

* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச் னைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற் றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.

* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.

* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங் கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.

இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த ரெடியாயிட்டீங்களா? தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிட்டீங்களா…

இப்படி பிரச்னைகளைக் கண்டு நீங்க பயப்படலேன்னா, இனிமே எந்த பிரச்னையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

%d bloggers like this: