இதயமே, உன் விலை ஒரு லட்சமா? பல லட்சங்களா?

இதயமே, உன் விலை ஒரு லட்சமா? பல லட்சங்களா?


மனிதன் உயிர்வாழ இதயம் தான் தேவை. தாயின் கருவில் மூன்றாவது மாதத்தில் இதயம் உருவாகி துடிக்க ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி துடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் பெரும்பாலோர், இதயநோய் என்றால் எல்லாரும் பயப்படுகின்றனர். இதயத்திற்கு நோய் வந்து விட்டால் மனிதன், அவன் குடும்பம் துவண்டு விடுகிறது. காரணம் மரண பயம்தான்.

ஒரு துடிப்பிற்கு 75 சிசீ ரத்தத்தை வெளியேற்றி நிமிடத்திற்கு 5 லிட்டர் ரத்தம் வெளியேறி, மனிதனை உயிர் வாழ வைக்கிறது. இந்த இதயம் நான்கு அறைகள், நான்கு வால்வுகளைக் கொண்டது. நமது உள்ளங் கையை மடக்கினால், எந்த அளவு உள்ளதோ அதே அளவுதான் நமது இதயத்தின் அளவு.

இந்த இதயத்திற்கு வரும் நோய்களில், பிறவியிலே வரும் இதய நோய்கள், முட்டி வீங்கி சுரவாங்கி வால்வு நோய்கள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களால் ஏற்படும் இதயநோயின் இதய தசைகளின் கோளாறினால் ஏற்படும் கார்டியோமையோபதி, என்ற விபரீத நோய் என்று பல நோய்கள். இந்த இதய நோய்களை குணப்படுத்தி, அதை காக்க என்ன விலை? நூறா, ஆயிரமா இல்லை சில, பல லட் சங்கள் செலவாகிறது. பிறவி இதய நோய் கண்ட குழந்தைகள் தினம் மருந்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

அவ்வப்போது பரிசோதனை செலவு, மருத்துவமனை செலவு என்று சில ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சத்தில் முடிகிறது. இதய அறுவைச் சிகிச்சை என்றால் சில லட்சங்கள் தேவை.  அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தொடர் வைத்தியம் என்று செலவு தொடர்ந்து ஏழைகளை கொடுமைப் படுத்துகிறது. இதற்கென்று இன்று பல கார்ப்பரேட் அரசியல் பினாமிகளின் டிரஸ்ட் என்ற பல மருத்துவமனைகள் பல கோடி செலவில் தோன்றி விட்டன. இவைகள் இலவசமாக வைத்தியம் செய்ய இயலாது.

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கூடங்கள் அதிநவீன டைகனாஸ்டிக் கருவிகள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., கேத்லேப், ஐ.சி.யூ., நவீன ஆபரேஷன் தியேட் டர்கள் என்று பல கோடிகளில் உருவாக்கப்படுகிறது.  நிச்சயமாக பேங்க் கடன்களினால் தான் முடியும். வட்டியும் முதலும் கட்ட, நோயாளிகள் தான் அதாவது அவர்களிடம் வைத்தியம் செய்து, மருத்துவமனை அனுமதி, ஐ.சி.யூ., வார்டு என்று தங்க வைத்து, சிகிச்சை அளித்து பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒன்று.

தனியார் மருத்துவமனையில், அனுபவமிக்க சிறந்த மருத்துவர்கள் சிலரும் <<<உண்டு. அனுபவமற்ற சில மருத்துவர்களும் உண்டு, வித்தியாசம், இருபது முப்பது ஆண்டு அனுபவ மருத்துவர் பல ஆயிரக்கணக் கான நோயாளிகளைப் பார்த்து குணப்படுத்திய அனுபவத்தால், நோயாளி வந்தால் அவருக்கு அவருடைய குறைகளிலிருந்து அடைப்பு <உண்டா? இல்லையா? என்று சொல்ல முடியும்.  காரணம், பல ஆயிரக்கணக்காக ஆஞ்சியோகிராம் செய்த அனுபவம், ஒவ் வொரு நோயாளியும் ஒரு பாடம். அனுபவமற்றவர்கள், மருத்துவமனை உரிமையாளர்களின் உறவினராக இருப்பர். படித்து சில வருடத்தில் எத்தனை நோயாளிகளைப் பார்த்திருப்பர்.

உதாரணம், சில மாதங்களுக்கு முன்பு இதய நோயாளிக்கு நினைவிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தேன். அப்போது, இதய கோளாறு சரி செய்யப் பட்டு, மூளையில் சில மாற்றம் ஏற்பட்டது.  சுயநினைவு இழப்புக்கு காரணம் என்ன, என்று நரம்பு நிபுணரை பார்க்க கூறினேன். இவர் புதியவர், பல பரிசோதனைகள் சில நாட்கள் செய்து முடிவுக்கு வர முடியவில்லை. பிறகு நான் இரண்டாவது ஆலோசனைக்கு ஓய்வுப் பெற்ற நரம்பு நிபுணர் மருத்துவகல்லூரி பேராசிரியரிடம் அனுப்பினேன். அவர் ரத்தப் பரிசோதனையில் இந்த தாதுப்பொருள் குறைவு, இதனால் தான் இந்த குறை என்று, அந்த தாதுப்பொருள் செலுத் தியப்பின் சுயநினைவு வந்து விட் டது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை தேவையில்லாமல் அனுமதி செய்யக்கூடாது. காரணம், ஒவ்வொரு நாளும் செலவுகள் ஆயிரம்.

மருத்துவமனையில் அனுமதி பெற்றால் அறை வாடகை, நர்சஸ், சர்வீஸ் சார்ஜ், டாக்டர் பீஸ் என்றும், அதிகநாள் ஐ.சி.யூ.,வில் தங்கினால் என்ன செலவு ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள். ஜூனியர் டாக்டர்களின் தவறான முடிவால் வீண் செலவு, மருத்துவமனை செலவுகள் அதிகமாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்: சீரியசாக மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி ரத்த அழுத்தம் பீபி., குறைந்து, மூச்சு நிற்கும் நிலையில் வந்தார். உடனடியாக ஐ.சி.யூ., வில் சேர்த்து மூச்சுவர வெண்டிலேட்டரில் இணைத்து மூச்சு விடுவதை சரிசெய்யப் பட்டது, பீபி ரத்த அழுத் தம் குறைவுக்கு இன் டிரா அயோடிக் பலூ னை மகா தமனியில் வைத்து, அழுத்தத்தை சரி செய்து, இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சரி செய்யப் பட்டது. மாரடைப்புக் கான காரணமாக ரத்தக் குழாய்களின் அடைப்பை பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் திறந்து, ரத்த ஓட்டம் சரிசெய்யப்பட்டு இதயம் சரியாக இயங்கி, சீராக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, பலூன் வென்டிலேட்டரையும் எடுக்கப் பட்டு உயிர் பிழைத்து சில நாட்களில் வீடு திரும்பினார். இதற்கு ஆன செலவு ஆறு லட்சங்கள்.

இன்னொரு நோயாளி வாலாஜாவை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோ செய்து, அடைப்புக் கண்டுபிடிக்கப்பட்டு, மேற்படி சிகிச்சை செய்யாமல் ஊருக்கு திரும்பிபோய்விட்டார்.  பல ஆண்டு கழித்து திரும்பவும் மார்பு வலியுடன் வந்து மருத்துவமனையில் சேர்ந்து ஆஞ்சியோ செய்து, எல்லா ரத்தக்குழாய்களும் அடைத்து விட்டப்படியால் உடனடியாக பைபாஸ் செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து சிறுநீரகம் பழுதடைந்து விட்டது. அதற்கு டயாலிசிஸ் பல தடவை செய்யப்பட்டு ஆறு வாரங்கள் தங்கி சென்றார். இதற்கு செலவு ஏழு லட்சங்கள்.

சென்ற ஆண்டு, எனது டாக்டர் நண்பருக்கு, இவர் மாஜி எம்.எல்.ஏ., வாக இருந்தவர். மாரடைப்பு வந்து இரண்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தது. அதற்கு மருந்து பூசிய ஸ்டென்ட்களை வைத்தேன். இரண்டு நாளில் வீட்டுக்கு போனார். ஆனால் செலவு செய்தது இரண்டு லட்சங்களுக்கு மேல். இதில், டாக்டர் பீஸ் இல்லை. டாக்டர் என்று பார்க்காமல் மருத்துவமனை அவரிடம் பணம் கட்டி செல்லும்படி கண்டிப்பு காட்டியது. அவரிடம் சில ஆயிரம் குறைவு. இரவுநேரம் பணம் பற்றாமல் தவித்து, தனது டாக்டர் மனைவியின் வளையலை மார்வாடி கடையில் அடகு வைத்து பணம் செலுத்தினார்.

இரண்டு, மூன்று, நான்கு ஸ்டென்ட் வைத்தால் நான்கு லட்சங்கள் ஆகும். ஆகையால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்பவர் நோயாளிக்கு பணம் செலவு அதிகம் ஆகாமல் பார்க்க வேண்டும். பைபாஸ் சர்ஜரி செலவு குறைவு, ஸ்டென்ட் சிகிச்சை செலவு அதிகம். இந்த செலவுகளை பல லட்சம் நோயாளி கட்டும் போதும் அவர் படும் வேதனைக்கு அளவில்லை. ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் நிபுணர் குறைந்தது நான்கு ஆண்டுகள் நல்ல சென்டரில் பயிற்சி பெற்று வரவேண்டும். அதேபோல தான் இதய அறுவைச் சிகிச்சை நிபுணரும் கூட, இந்த நான்கு ஆண்டு பயிற்சிகளில், பல வித கேஸ், பலவிதமான கம்ப்ளிகேஷன் கண்ட அனுபவம் இருக்கும்.

ஸ்டென்ட் சிகிச்சை செய்வதற்கு முன்பு, எந்த இடத்தில் எப்படிப்பட்ட அடைப்பு அதன் நீளம், ரத்தக் குழாய் முழுவிட்டமா? இல்லை பாதி விட்டத்தில் அடைப்பா? ரத்தநாள விட்டம், அடைப்பின் சதவீதம், நீளம் இவைகளை முன் கூட்டியே அறிந்து, ஸ்டென்ட் விட்டம், நீளம் இவைகளை பார்த்து, பிறகு ஸ்டென்ட் வைக்க வேண்டும். அப்போது என்னென்ன விளைவுகள், எப்போது வரும், அதை தவிர்ப்பது எப்படி என்று நினைவில் வைத்து செய்ய வேண்டும். உடனடியாக ஸ்டென்ட் மூலமாக வரும் விளைவுகளைப் பற்றி நல்ல அனுபவம் வேண்டும். இல்லையென்றால், சிகிச்சை செலவு அதிகமாகும்.

பல லட்சங்கள் செலவாகும்: கரோனரி ரத்தக்குழாயின் முதன்மை குழாயை லெப்ட் மெயின் குழாய் என்பர். இது இடது எல். ஏ.டி., இடது எல்.சி.எக்ஸ்., என்ற இரண்டு குழாய்களாக பிரிகிறது. இதில், முதன்மை குழாய் இரண்டு குழாய்கள் ஆரம்பமாகும் பகுதி.  இவைகளில், ஏற்படும் அடைப்பை நீக்க ஸ்டென்ட் வைப்பதற்கு பெயர் பைபர்கேஷன் ஸ்டென்ட் என்று பெயர். இதில் மூன்று வகைகள். டி ஸ்டென்டிஸ், கிரஷ் டெக்னிக், கிஸ்ஸிங் டெக்னிக் என்ற செய்முறைகள் உள்ளன. இந்த வகை ஸ்டென்ட் சிகிச்சைக்கு மருந்து ஆகிய ஸ்டென்ட்கள் வைத்து சொல்லலாம். இந்த செய்முறையினால் பல லட்சங்கள் தாண்டிவிடும். அதன் பிறகு தொடர் கண்காணிப்பும், பரிசோதனையும் தேவைப்படுகிறது.

இதில் எதாவது ஒரு ஸ்டென் மூடிவிட்டால் உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டும் இதற்கு சில லட்சங்கள் இப்படி பல லட்சங்கள் செலவாக வாய்ப்புள்ளது. இடது மெயின் (ஃM) இரத்தக்குழாய் ஸ்டென்ட் நல்ல உயிர்காக்கும் சிகிச்சை தான். அதே நேரம் ஃM ஸ்டென்ட் மூடிவிட்டால் உடனடி மரணம் தான் வரும். ஆகையால் இதற்கு பைபாஸ் சக்ஜரி தான் மேல் இது டெக்னிக்கலாக வெற்றி ஆனால் இதை ஸ்டென் வைத்துக் கொண்டவருக்கு என்ன செலவு, அவர்கள் வாழ்க்கை தரம் வாழ வேண்டிய வருடங்கள் இவைகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பைபாஸ் சிறந்தாக கருதப்படுகிறது.

சில பேருக்கு பல அடைப்புகள் இருக்கும் ஒரே இரத்தக்குழாய், அல்லது இரண்டு மூன்று இரத்தக்குழாய்கள் அடைப்பு இருக்கும் இவைகளுக்கு பல ஸ்டென்ட்கள் வைக்க வேண்டுமானால், அதற்கு ஆகும் செலவு பல லட்சங்கள். இதுவும் இரான்டி கிடையாது. இது இதய நோய் பிரிவுகளை மட்டும் ஆகும் செலவு. மற்ற துறைகளைப் பற்றி அவ்வளவு தெரியாது.

மனசாட்சி எங்கே?

பெரும்பான்மையான ஸ்பெசலிஸ்ட் டாக்டர்கள் கடவுள் பக்தியோடு, மனசாட்சியோடு, நடந்து கொள்கின்றனர். சிலர் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும், தன் மனைவி மக்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவமனைக்கு செல்லும், சில டாக்டர்கள், “இன்று இங்கு வந்தீர்களே? எவ்வளவு சம்பாதித்தீர்கள்’ என்று கேட்டு கொண்டதைக் கேட்டு வியப்படைந்தேன். அவர் பி.எம்.டபிள்யூ., காரில் செல்பவர், அடிக்கடி மேல் நாட்டுக்கு கம்பனிகளின் செலவில் சென்று வருபவர்கள் இவர்களுக்கு ஏழைகள், நடுத்தர வர்க்கம் பற்றி எந்த கவலையுமில்லை. இவர்களுக்கு செல்வந்தர்கள் கம்பனி டைரக்டர்கள், போதும் மனசாட்சி மிகவும் அவசியம் நாம செய்த வைத்தியத்தினால் அவர்களுக்கு பொருள், பணம் வீண் விரயமாக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு பயம் பட்டு வாழ்ந்த மாபெரும் தலைவர்களான பெருந்தலைவர் காமராஜ், மக்களை தனது உள்ளத்து வைத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர். இவர்கள் எப்போது சிறுதவறு கூட தனது ஆட்சியில் ஏற்பட்டு ஏழை எளியவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி வாழ்ந்து இன்னும் புகழோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மருத்துவ துறைகளில் கூட கடந்த காலத்தில் பெரும் புகழ்பெற்ற டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் ரங்காச்சாரி போல மருத்துவர்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் மக்களோடு வாழ்ந்து ஏழைகளுக்கு பணிபுரிந்தனர். மக்கள் கஷ்டப்பட்டு சேர்ந்த பணத்தை முறையாக சிகிச்சை அளித்து பணத்தைப் பெறலாம். சிவன் சொத்து குலநாசம் மக்கள் சிவன் போல, அவர்கள் சம்பாதித்த பணத்தை வரியாகப் பெற்று கையூடல் செய்து வாழ்ந்து வரும் அரசியல்வாதிகளைப் போல மனசாட்சி இல்லாமல் நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணம் பொய்ச் செல்வி என பிழைப்பு வேண்டாம். மனித நேயத்தோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நோயாளிகளுக்கு அறிவுரை: உங்கள் குடும்ப டாக்டர், ஸ்பெசிலிஸ்ட் ஆலோசனை பெற்று சிறப்பு மருத்துவமனைக்கு செல்லுங்கள் நவீனப் பயிற்சி, நல்ல விஞ்ஞான ரீதியாக அறிவுள்ள மருத்துவரை மனித நேயமுள்ளவர்களை கண்டுப்பிடியுங்கள்.  பெரும்பான்மையான அரசு மருத்துவர்கள் ஏழைகளை தினம் தினம் பார்த்து உண்மையாக நடந்து கொள்ளவர்கள் இருக்கின்றனர். நோயாளிகளில் கூட சிலர் டாக்டர் களை நம்பாமல் பல டாக்டர்களை சந்தித்து ஆலோசனைப் பெறுபவர்களை பார்த்துள் ளோம். இவர்கள் இறுதியில் சிகிச்சை பெறும் போது பல துன்பங்களையும் கஷ்டங்களையும் பண விரயத்தோடு என்னிடம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு இவர்கள் மனநிலை தான் காரணம்.

என்னிடம் கூட வைத்தியம் பெற்று கடைசியில், வேறு டாக்டரிடம் சென்று அஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்து அவதிக்குள்ளானர்களையும் பார்த்து இருக்கிறேன். எந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுகின்றனரே அவர்களிடம் முழுமையான நம்பிக்கை வையுங்கள்.

%d bloggers like this: