கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

கார் ஒன்று வாங்குகிறீர்கள். உடனே என்ன செய்கிறீர்கள்! அழகாக உங்கள் பெயரை அல்லது உங்கள் குழந்தை கள் பெயரை ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டுகிறீர்களா! ஏன் ஒரு டைப் ரைட் டர் வாங்கினால் கூட, குழந்தையை மகிழ்விக்க அதன் பெயரை டைப் செய்து ஒட்டு கிறீர்கள். கம்ப்யூட்டரை இதே போல் உங்களுடைய பிராண்ட் கம்ப்யூட்டராக்க என்ன செய்யலாம். இங்கே உங்களுக்காகத் தரப்போகும் டிப்ஸ் சற்று வேடிக்கையாக இருந் தாலும் கம்ப்யூட்டரை எப்படி எல்லாம் மாற்றி அமைக்கலாம் என்பதற்கு உங் களுக்கு வழி காட்டுவதாகவும் அமை யும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இதனை மேற்கொள்ளலாம் என் றாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சில மாற்றங்களுடன் இதனைப் பயன் படுத்தலாம்.

பைல்களுக்கெல்லாம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ இருப்பதைப் போல அனைத்து கம்ப்யூட்டர் சிஸ்டங்களுக்கும் ஒரு ப்ராப்பர்ட்டி விண்டோ ஒன்று உண்டு. இந்த ப்ராபர்ட்டீஸ் என்பது ஒரு பைல் அல்லது கம்ப்யூட்டரின் அடிப்படைத் தகவல்களைக் காட்டும் ஒரு விண்டோ ஆகும். இங்கு கம்ப்யூட்டரின் ப்ராபர்ட்டீஸ் விண் டோவினைப் பெறும் வழியைப் பார்க்கலாம்.

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் பிராண்ட் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்கள் இல்லையா! அதற்கேற்ற படம் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். இது ஒரு லோகாவாக இருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை கம்ப்யூட்டரை இயக்குவது போன்ற போட்டாவாக இருக்கலாம்.

2. இதற்கு பெயிண்ட் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். இது ஆப்பரேட்டிங் சிஸ்டத் துடனே வருவதால் பிரச்சினை இல்லை. Start >> All Programs>> Accessories >> Paint எனச் செல்லவும்.

3. ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் அமைக்கப்பட இருக் கும் படத்தின் பிக்ஸெல் அளவு 180 து 115 என்ற அளவிலேயே இருக்க வேண்டும். எனவே இந்த புரோகிராம் தரும் கேன்வாஸ் என்ற படத் தளத்தின் அளவை இந்த அளவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு மெனுவில் ஐட்ச்ஞ்ஞு என்ற பிரி வில் கிளிக் செய்திடவும். அதன் பின் Attributes என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் அளவெடுக்கும் அலகாக Pixels என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை என்டர் செய் திடவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி லோகோவினை இதில் தயார் செய்திடலாம். பெயிண்ட் புரோகிராமில் இதற்கென அனைத்து டூல்ஸ்களும் இருப்ப தனைப் பார்த்திருப்பீர்கள். அல்லது கிளிப் ஆர்ட் சென்று அதில் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் தேர்ந்தெடுத்து இதில் அமைக்கவும். அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோவினை எடுத்து இதில் அமைக்கவும்.

4. இனி இந்த படத்தை சேவ் செய்திட வேண்டும். File தேர்ந்தெடுத்து பின் Save As  தேர்ந்தெடுக்கவும். இந்த பைலுக்கு oemlogo.bmp  எனப் பெயர் கொடுத்து C:\Windows\System32 என்ற டைரக்டரியில் சேவ் செய்திடவும்.

அடுத்து கம்ப்யூட்டருக்கு இதுதான் லோகோ என்று செட் செய்திட சிறிய புரோகிராம் ஒன்றை எழுத வேண்டும். மிக எளிதான சில வரிகள்தான். இந்த வரிகளை எழுத Notepad  என்னும் புரோகிராமினைத் திறக்கவும். இந்த புரோகிராமினைப் பெற Start, All Programs, Accessories, Notepad எனச் செல்லவும். அடுத்து கீழே கொடுத்துள்ள வரிகளை அப்படியே டைப் செய்திடவும்.

[General]

Manufacturer=Neil’s PC

Model=Dell Inspiron 8100

[Support Information]

Line1=This PC was created

Line2=by< உங்கள் பெயர்>

Line3 =Enjoy using it!

Line4 =*************

இதில் உள்ள Line1,2,3,4 என்பதில் நீங்கள் விரும்பும் வரிகள டைப் செய்திடலாம். இன்னும் சில வரிகளை இணைக்க வேண்டும் என விரும்பினாலும் சேர்க்கலாம்.

இனி இந்த பைலை சேவ் செய்திட File  மற்றும் Save As தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். அதே C:\Windows\System32 டைரக்டரியில் சேவ் செய்திடலாம்; ஆனால் பைலின் பெயர் oeminfo.ini என இருக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டுப் பின் உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பின் கம்ப்யூட்டர் ப்ராபர்ட்டீஸ் பாருங்கள். நீங்கள் கொடுத்த லோகோ மற்றும் டெக்ஸ்ட் அங்கு கிடைக்கும்.

One response

  1. […] கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற […]

%d bloggers like this: