அமெரிக்காவில் அர்ஜென்டினாவில் டைம் என்ன?

தமிழ்நாட்டில் பத்து குடும்பங் களை எடுத்துக் கொண் டால் அதில் ஏழு குடும்பங்களில் இஞ்சினியரிங் படித்தவர்கள் இருக்கிறார்கள். அதில் இரு குடும்பங்களில் இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களின் பெற்றோர்களுக்கு, தாத்தா பாட்டிகளுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கையில் அங்கு அவர்கள் வாழும் நாட்டில் இப்போது என்ன மணி இருக்கும்? அவர்கள் ஆபீசில் இருப்பார்களா? தூங்கிக் கொண்டிருப்பார்களா? என்ற கேள்வி எழும்.

இங்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் பலரும் தங்கள் அலுவலகங்களில் வெளிநாடுகளில் நிறுவனங்களுக்கு இயங்க வேண்டிய பி.பி.ஓ. நிறுவனங்களை இங்கு இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு அந்த அந்த நாடுகளில் அப்போது நேரம் என்னவாய் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தரும் வகையில் தீர்வு ஒன்றினை Foxclocks அளிக்கிறது. இதன் தன்மை மற்றும் இயக்கும் விதம் குறித்து இங்கே காணலாம்.

பெயரைப் படித்தவுடனேயே இது பயர்பாக்ஸ் பிரவுசருடன் தொடர்பு கொண்டது என்று உணர்ந்திருப்பீர்கள். ஆம். இது பயர்பாக்ஸ் பிரவுசருக்காக அண்மையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒரு ஆட்–ஆன் தொகுப்பு. இந்த குறிப்புகளைப் படித்தவுடன் நிச்சயம் இதனை நீங்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது உறுதி.

பாக்ஸ் கிளாக்ஸ் என்பது பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் சன்பேர்ட் ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்டது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி உங்கள் டாஸ்க்பார், டூல்பார் என எதிலும் ஓர் உலகக் கடிகாரத்தை இயக்கலாம். பல நாடுகளின் நேரத்தை அறிய விரும்புபவர்களுக்கு இது அருமையான வசதியான புரோகிராம் ஆகும்.

எப்படி ஒரே நேரத்தில் பல நாடுகளின் நேரத்தை அறிய முடியும் என்று சிலர் ஆச்சரியப்படலாம். பாக்ஸ் கிளாக்ஸ் மூலம் பல கடிகாரங்களை உங்கள் டாஸ்க் பாரில் அமைத்திட முடியும். மேலும் உங்கள் தேவைகளுக்கேற்ப இந்த கடிகாரங்களை பார்மட் செய்திட முடியும். ஒவ்வொரு நாட்டிற்கான கடிகாரத்தினை ஒவ்வொரு வண்ணத்திலும் அமைக்க முடியும். குறிப்பிட்ட ஒரு கடிகாரம் குறிப்பிட்ட நேரத்தினை அடையும்போது அதன் வண்ணத்தை மாற்றும் படி செட் செய்திட முடியும். உங்களுக்கு ஒரு நண்பர் ஜப்பானில் இருக்கிறார். அந்த நாட்டு நேரப்படி அவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழைக்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால் அதனையும் செட் செய்து குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு அறிவிக்கும்படியும் செய்திடலாம்.

இது ஒரு ஜாலியான வேடிக்கையாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் உலகத்தில் ஒருவர் தூங்கும்போது இன்னொருவர் தீவிரமாக வேலை பார்ப்பதையும், இன்னொரு நாட்டில் உள்ளவர் அவசரமாக பணிக்குச் செல்ல தயாராவதையும், இன்னொரு கோடியில் உள்ளவர் சாப்பிடுவதனையும் அந்த நேரத்தை வைத்து எண்ணிப் பார்க்க ஜாலிதான்.

சரி, இதனை எப்படி டவுண்லோட் செய்து பதிந்து இயக்குவது என்று பார்ப்போம்.

முதலில் https://addons.mozilla.org/firefox/1117/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு கிடைக்கும் Install Now என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இந்த புரோகிராமின் தற்போதைய பதிப்பு எண் பயர்கிளாக்ஸ் 2.5.33. சென்ற மே 12ல் வெளியிடப்பட்டது. இந்த லேட்டஸ்ட் புரோகிராமினை டவுண்லோட் செய்வதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இது பல்வேறு ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் கிடைக்கிறது. தமிழில் இல்லாததால் ஆங்கிலத்தில் கிடைப்பதனை எடுத்துக் கொள்ளவும்.

பாக்ஸ்கிளாக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆனவுடன் அதனுடைய இன்டர்பேஸ் மூலம் எந்த எந்த நாட்டு கடிகாரங்கள் உங்களுக்கு வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு குறிப்பிட்ட கடிகாரத்தைப் பெற டூல்ஸ் என்ற மெனு சென்று அங்கு கிடைக்கும் பல்வேறு கடிகாரங்களில் உங்களுக்குத் தேவைப்படும் அல்லது நீங்கள் விரும்பும் அனைத்து கடிகாரங்களையும் தேர்ந்தெடுக்கவும்.

கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்த பின் அவை எப்படி தோற்றமளிக்க வேண்டும், எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பவற்றையும் செட் செய்திடவும். அனைத்தும் அமைந்துவிட்டதா! இனி ஜாலியாக இவற்றை ரசிக்கவும். பாக்ஸ்கிளாக்கினை இயக்க Ctrl+Shift+Q பயன்படுத்துங்கள். மூடிட Ctrl+W பயன்படுத்துங் கள்.

பாக்ஸ் கிளாக்ஸ் புரோகிராமுடன் இணைந்து செயலாற்றும் இன்னொரு புரோகிராமினை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். இது ஙூணிணஞு கடிஞிடுஞுணூ என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் பல்வேறு பூகோள மண்டலங்களுக்கு நீங்கள் செல்லலாம். உலகின் பல்வேறு நேர மண்டலங்களை இதன் மூலம் அறியலாம். இதனைப் பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பல்வேறு நாட்டின் கடிகாரங்களை வரிசைப்படுத்தி அமைக்கலாம். இதனைப் பெற http://webscripts.softpedia.com/script/Miscellaneous/TimeZonePickerComponents13699.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்தைக் காணவும்.

உலகின் ஒரு மூலையில் உள்ள நாட்டின் கால மண்டலத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பாக்ஸ் கிளாக்ஸ் மீது டபுள் கிளிக் செய்தால் ஸோன் பிக்கர் உங்களுக்கு அதனைத் தரும்.

பாக்ஸ் கிளாக்ஸ் குறித்து இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் http://www.stemhaus.com/firefox/foxclocks/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று அது குறித்த முழுமையான தகவல்களைப் பெறுங்கள்.

பாக்ஸ்கிளாக்ஸ் இன்னும் பல வசதிகளைத் தருவதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இடம் கருதி அவற்றை இங்கு பட்டியலிடவில்லை. இந்த தளம் சென்று பாக்ஸ்கிளாக்ஸ் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்ட பின்னர் நீங்கள் இதனை டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்திலும் பாக்ஸ்கிளாக்ஸ் டவுண்லோட் செய்திட லிங்க் ஒன்று தரப்பட்டுள்ளது. இனி என்ன! பாக்ஸ்கிளாக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில்; உலகம் உங்கள் விரல் அசைவில்.

%d bloggers like this: