நம் கம்ப்யூட்டருக்குள் மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு. ஆனால் சர்ச் இஞ்சின்களில் நாம் தகவல்களைத் தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடும் வாய்ப்பு உள்ளதே” இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்கக் கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது. அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது. இருப்பினும் நாம் தகவல்களைத் தேடுகையில் பின்னணியில் என்ன நடை பெறுகிறது என்று யாருக்குத் தெரியும். எனவே ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நாம் ஓரளவிற்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இயங்கலாமே. அத்தகைய நடவடிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.
முதலிலிருந்து இங்கு பார்ப்போம். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துகையில் (யாஹூ, கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்குப் பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அத்துடன் நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாகப் பதிவு செய்து கொள்கின்றன. நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றைத் தேடுகிறோம் என்ற தகவல்களையும் எடுத்துக் கொள்கின்றன. ஏன், நம் ஐ.பி. முகவரியைக் கூட இவை பதிந்து வைத்துக் கொள்கின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்தே இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள், இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம், நம் விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதைப் போல்தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. சர்ச் இஞ்சினில் லாக் இன்,கூடுதல் வசதிகள் வேண்டாம்: எந்த சர்ச் இஞ்சினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம். அவ்வாறு உங்கள் அடையாளத்தைக் கொண்டு உள்ளே நுழைந்தால் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கே செல்கின்றன. இதனை எப்படித் தவிர்க்கலாம்? சர்ச் இஞ்சின் தரும் கூடுதல் வசதிகள் எதனையும் பெறாதீர்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இஞ்சினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல் எதுவும் செல்லாது. ஆனால் அதன் கூகுள் டாக், ஜிமெயில், கூகுள் குரூப் போன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவே சர்ச் இஞ்சினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிராம்களிலிருந்தும் லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும். இதனை அனைத்து சர்ச் இஞ்சின்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
2. கூகுளைவிட்டு விலகிச் செல்லுங்கள்: நம்மில் பலர் கூகுள் சர்ச் இஞ்சினைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்குத் தெரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அழித்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம். அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும். எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கிவிடலாம் அல்லது தடுத்துவிடலாம்.
இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options செல்லவும். இதில் Privacy என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Sites என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Address of the Website என்ற கட்டத்தில் கூகுள் தளத்தின் முகவரியினை (www.google.com) டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன் Block என்ற பட்டனில் கிளிக் செய்து முடிக்கவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools தேர்ந்தெடுத்து Options செல்லவும். இங்கும் Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Exceptions என்பதில் கிளிக் செய்து அதில் கூகுள் தளத்தின் முகவரியினை டைப் செய்திடவும். முடித்தவுடன் Block என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.
மேலே கூறிய செட்டிங்ஸ் முடித்துவிட் டால் கூகுள் தளத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கிகளைப் பதிய முடியாது. இதனால் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க முடியாது.
3. உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றவும்: சர்ச் இஞ்சின்கள் உங்களைப் பற்றிய தகவல் களைப் பெரும்பாலும் உங்கள் ஐ.பி. முகவரியினைக் கொண்டே பெறுகின்றன. எனவே உங்கள் ஐ.பி. முகவரியை அடிக்கடி மாற்றுங்கள். நீங்கள் கேபிள் அல்லது டி. எஸ்.எல். மோடம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றுவது மிகவும் எளிது. உங்கள் மோடத்தினை சற்று நேரம் ஆப் செய்திடவும். சில நிமிடங் கள் கழித்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும். இதனால் உங்கள் பழைய ஐ.பி. முகவரி முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய ஐ.பி. முகவரி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் டயல் அப் வகை கனெக்ஷன் வைத்திருந் தால் உங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங் கும் நிறுவனத்திடம் உங்கள் ஐ.பி. முகவரி அடிக்கடி மாற்றப்பட்டு வழங்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றிப் பெறும் வழியை அவர்களிடமே கேட்டுப் பெறவும்.
4. தேடுதலில் பெர்சனல் தகவல்கள் வேண்டாமே: தேடுதலில் உங்கள் பெயர், முகவரி,ஊர் போன்ற தகவல்கள் இருக்க வேண்டாம். சிலர் வேடிக்கைக்காக தங்களின் பெயர்கள், இமெயில் முகவரிகள், முகவரி, ஊர் பெயர், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றை இணைத்து தேடுவார்கள்.
இது வேடிக்கைக்காக என்றாலும் இதன் மூலம் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை ஊர் அறிய அனுப்புகிறீர்கள் என்பது உறுதி. உங்கள் அடையாளங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்களே வழங்குகிறீர்கள் என்பதுதான் இங்கு உறுதியாகிறது. உங்களைப் பற்றிய தகவல்கள் தவறானவர்களின் கைகளில் சிக்க வாய்ப்புகள் ஏற்படுகிறது.
5. பிற கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தேடுதல்கள்: உங்களைப் பற்றிய தகவல்களுடன் நீங்கள் கட்டாயமாகத் தேடுதலை மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடுகளில் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வகைத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டாம். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு என்ன கிடைக்கப் போகிறது என்று எண்ணலாம். உங்கள் வீடு அல்லது அலுவலகக் கம்ப்யூட்டரில் நீங்கள் தேடுதலை நடத்தியகையோடு வேறு புரோகிராம்களிலும் லாக் இன் செய்திடலாம். இதனால் தகவல்கள் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத பிற இடத்தில் உள்ள கம்ப்யூட்டர் என்றால் வேறு புரோகிராம்களில் லான் இன் செய்வதனை நீங்கள் மேற்கொள்ளமாட்டீர்கள்.
6. உங்கள் ஐ.எஸ்.பி. தரும் சர்ச் இஞ்சின் வேண்டாம்: இறுதியாக ஒரு ஆலோசனை. உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஏதேனும் சர்ச் இஞ்சின் வசதியைத் தந்தால் அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏற்கனவே உங்கள் ஐ.பி. முகவரி இருப்பதால் உங்களைப் பற்றிய அடிப்படை பெர்சனல் தகவல்களை அவர்கள் எளிதாகப் பெறலாம். அவர்கள் தரும் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சில கூடுதல் தகவல்களை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள். இதனைத் தவிர்க்கலாமே. உங்களுக்கு சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை நம்பாமால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும் உங்கள் பாதுகாப்பு முக்கியம் அல்லவா.
மேலே சொன்ன அனைத்தையும் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. படித்து இவற்றை மேற்கொண்டால் பயன் இருக்கும், பாதுகாப்பு கிடைக்கும் என உணர்ந்தால் மேற்கொள்ளுங்கள்.
எக்ஸெல் டேட்டா காப்பி
வேர்ட், பவர்பாய்ண்ட்அல் லது வெப் சைட் ஆகியவற்றில் இருந்து டேட்டாவினை எக்ஸெல் தொகுப்புக்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை நம்மில் அனைவருக்கும் வரும். டேட்டாவினை பேஸ்ட் செய்திடுகையில் பார்மட்டிங் சாய்ஸ் குறித்து கவனம் கொண்டு செய்கிறோம். Paste Options button பட்டன் மூலம் எங்கிருந்து கொண்டு வருகிறோமோ அந்த பார்மட்டிங் ஸ்டைலை அப்படியே வைப்பதா அல்லது எக்ஸெல் தன் பார்மட்டிங் ஸ்டைலுக்கு டேட்டாவினை மாற்றிக் கொள்ள அனுமதிப்பதா என்று முடிவு செய்கிறோம்.
இந்த Paste Options button இல்லாமல் இந்த ஆப்ஷன் நமக்குக் கிடைக்குமா? என்று ஆய்வு செய்த போது அதற்கு ஒரு வழி கிடைத்தது. ஒட்டப்பட வேண்டிய டேட்டாவின் பார்மட்டிங் ஒரிஜினலாக எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என விரும்பினால் வழக்கம் போல செல்லைத் தேர்ந்தெடுத்துப் பின் பேஸ்ட் செய்திடவும். அப்படி இல்லாமல் ஒட்டப்பட இருக்கும் டேட்டா எக்ஸெல் தரும் பார்மட்டில் இருக்க வேண்டும் என விரும்பினால் செல்லைத் தேர்ந்தெடுத்து அதில் டபுள் கிளிக் செய்து பின் பேஸ்ட் செய்திடவும். அதாவது பேஸ்ட் செய்திடும் முன் உங்கள் கர்சர் செல்லில் இருக்க வேண்டும். எக்ஸ்ட்ரா பட்டனை எல்லாம் தேடாமல் நம் பார்மட்டிங் விருப்பம் நிறைவேறிவிட்டதா? ஒரு முறை இதனை முயற்சி செய்து பாருங்களேன்.