ஜிமெயில் ஸ்லோவாக இயங்குகிறதா?

இன்டர்நெட் இமெயில் விஷயத்தில் கூகுள் நிறுவனம் பல அதிரடி ஆச்சரியங்களை தொடர்ந்து தந்து வருகிறது. யாஹூ, ஹாட் மெயில் தளங்கள் எல்லாம் தயங்கிக் கொண்டிருக்கையில் பல ஜிபி அளவில் இன்பாக்ஸைக் கொடுத்து முதலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. உலக அளவில் பல மொழிகளில் இதன் தளங்கள் இயங்கி அடிமட்ட மக்கள் வரையில் கூகுள் தளத்தைப் பயன்படுத்தச் செய்தது.

ஆனாலும் ஒரு சிலர் தங்கள் கம்ப்யூட்டரில் ஜிமெயில் மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து குற்றம் கூறி வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களுடைய ஸ்லோ ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் தான். கூகுள் தளம் பல வகைகளில் மிகவும் சிறந்ததுதான். ஆனால் மிகவும் மெதுவாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு கொண்டவர்களுக்கு கூகுள் மனங்கவர்ந்த மெயில் கிளையண்ட்டாக இருப்பதில்லை. இதற்கான காரணத்தையும் தீர்வையும் இங்கு காணலாம்.

முதலாவதாக கூகுள் அதிகமான நிகழ்வுகளில் தன் இமெயில் சேவையில் ஜாவா ஸ்கிரிப்ட் பதிவு செய்துள்ளது. மெதுவாக இயங்குவதற்கு இது முக்கிய காரணம். இதனால் இமெயில் இன்பாக்ஸ் திறக்க வெகுநேரம் ஆகிறது. இதனை எப்படித் தீர்க்கலாம்?

முதலில் ஜிமெயில் செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம். ஜிமெயில் டிபால்ட் செட்டிங்கில் ஒரு பக்கத்தில் 50 மெயில்களைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் வேகமாக மெயில்களைக் காட்ட வேண்டும் என்றால் இந்த எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும். மிகவும் குறைந்த பட்ச எண்ணிக்கையைக் காட்டினால் போதும் என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 25 ஆகும். இந்த அளவில் குறைவாக மெயில்கள் ஒரு பக்கத்தில் இருக்கட்டும் என ஒதுக்கினால் நிச்சயம் மெயில்கள் வந்து இறங்கும் வேகம் அதிகரிக்கும். இதற்கு Settings லிங்க் கிளிக் செய்து General டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Maximum page size என்று இருப்பதன் எதிரே Show conversations per page என்று இருக்கும். காலியாக கோடு உள்ள இடத்தில் எத்தனை மெயில்கள் காட்டப்படலாம் என்று இருக்கும். இதில் டிபால்ட்டாக 50 என்று இருப்பதை 25 எனக் குறைக்கலாம்.

ஜிமெயில் வெப் கிளிப்ஸ் (Web Clips) என்று ஒரு சிறப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இதுவும் செட்டிங்ஸ் லிங்க்கிலேயே கிடைக்கிறது. இந்த வசதி நம் இன்பாக்ஸ் மேலாக அமர்ந்து கொண்டு மற்ற இணைய தளங்களிலிருந்து அன்றைய செய்திகளைத் தருகிறது. ஜிமெயில் வேகமாக இயங்க இதனை இயங்கா நிலையில் வைத்திடலாம். இதன் மூலம் ஜிமெயில் மற்ற இணைய தளங்களிலிருந்து செய்திகளைப் பெற்று இங்கு தரும் செயல்பாடு குறைகிறது. அந்த நேரம் மெயில்களைத் தருவதில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு செட்டிங்ஸ் கிளிக் செய்து “Show my Web Clips above the Inbox,” என்று இருக்கும் இடத்தில் உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது வெப் கிளிப்ஸ் என்பதன் கீழ் இருக்கும்.

ஜிமெயில் வேகமாக இயங்க அதனை அழைக்கும் வழியை மாற்றலாம். வழக்கமான http://www.gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பான நேரடியான https://mail.google.com என்ற முகவரியைப் பயன்படுத்தலாம். இந்த முகவரியை புக்மார்க்காக அமைத்து ஜிமெயில் திறக்க முயற்சிக்கையில் இதனைக் கிளிக் செய்திடலாம். இது ஜிமெயிலுக்கான நேரடி முகவரி என்பதால் விரைவில் மெயில்கள் கிடைக்கும்.

ஜிமெயில் தளம் எப்படி தோற்றமளித்தாலும் பரவாயில்லை; வேகமாக மெயில்கள் வந்தால் போதும் என்று எண்ணுபவர்கள் இன்பாக்ஸைத் திறக்க அதன் எச்.டி.எம். எல்.லிங்க்கைப் பயன்படுத்தலாம் https://mail.google.com/mail/h என்ற முகவரியை அமைத்துப் பயன்படுத்துங்கள். மின்னல் வேகத்தில் மெயில்கள் காட்டப்படுவதனைக் காணலாம். இது எச்.டி.எம்.எல். தோற்றத்தில் கிடைக்கும். பின் இதிலிருந்து வழக்கமான முறைக்கும் மாறிக் கொள்ளலாம்.

அலங்காரம் எதுவும் இல்லாமல், கூகுள் விளம்பரம் எதுவும் இல்லாமல் வேகமாக ஜிமெயில் வேண்டும் என்றால் கூகுள் மொபைல் பதிப்பைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பைப் பெற http://www./google.com/mobile/gmail/#utm_source=encppg4mcgmhp&utm_medium =cpp&utm_campaign=en

என்ற முகவரி யில் உள்ள தளத்தை அணுகவும். இது மிகவும் எளிமையாகவும் கூடுதல் வசதிகளைக் காட்டும் ஐகான்கள் எதுவுமில்லாமல் இருக்கும். ஆனால் ஜிமெயில் ஸ்பீட் வேகமாகக் கிடைக்கும்.

ஒவ்வொருமுறை ஜிமெயில் தளத்தில் நீங்கள் லாக் இன் செய்திடுகையிலும் அது நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று செக் செய்திடும். அதற்கேற்ற வகையில் தன் முகப்பு தோற்றத்தை அமைத்துக் கொடுக்கும். இந்த பிரவுசரைச் சோதனை செய்திடும் வேலையை ஜிமெயில் மேற்கொள்ள விடாமல் செட் செய்திடலாம். இதனாலும் ஜிமெயில்கள் நமக்கு வேகமாக டவுண்லோட் ஆகும். இதற்கு http://mail.google.com/gmail?nocheckbrowser என்ற லிங்க்கைப் பயன்படுத்தவும். இதனால் ஜிமெயில் வேகமாகக் கிடைப்பது மட்டுமின்றி ஜிமெயிலால் பயன்படுத்த முடியாத பிரவுசர் இருப்பின் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் எழாதவகையில் இது தீர்வைத் தரும்.

இறுதியாக நாம் அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு வேலை. பிரவுசர் கேஷ் மெமரி, குக்கீஸ் மற்றும் தற்காலிக இன்டர்நெட் பைல்கள் அனைத்தையும் காலி செய்திடும் வேலை. நிறைய பிரவுஸ் செய்திடுபவர்களின் கம்ப்யூட்டரில் இவை அதிகப்படியாகத் தங்கி உங்கள் இன்டர்நெட் வேலையைக் கடினமாக்கும். ஜிமெயில் கிடைப்பது மட்டுமின்றி உங்கள் இணைய உலாவினையும் சிரமப்படுத்தும். எனவே குறிப்பிட்ட கால அவகாசத்தில் இவற்றை கிளியர் செய்வது நல்லது.

மேலே கூறிய செயல்பாடுகளை மேற்கொண்டு பின் ஜிமெயில் எப்படி இயங்குகிறது என்று பாருங்கள். நிச்சயம் வேறுபாட்டினை உணர்வீர்கள்.

%d bloggers like this: