Daily Archives: ஜூலை 22nd, 2009

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

முகம் பொலிவு பெற…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உ<ள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

படிப்பில் மந்தம்!

* எல்.டி., பிரச்னை உள்ள குட்டீசா

* ஆரம்பத்திலேயே கவனிக்கணும்

குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்தால் படு வியப் பாக இருக்கும்; ஆனால், படிப்பில் படுமந்தமாக இருக்கும். தேர்வுகளில் மிகவும் குறைவாகவே மதிப்பெண் வாங்கும்.

இப்படிப்பட்ட குழந்தைகள் தான், “லேர்னிங் டிசேபிலிட்டி’ (எல்.டி.,) கோளாறு உள்ளதாக கருதப்படுகிறது. எல்லாவற்றையும் தெளிவாக பேசுவதாக தெரிந்தாலும், ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு வெளிப்படுத்த முடியாமல் போவது தான் இந்த குறைபாடு.

எல்.டி., என்றால் என்ன?

எல்.டி., என்பது, குழந்தைகள் சிலருக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ளத்தெரியாது; அதுபோல, தெரிந்த விஷயத்தை ஒன்றுடன் ஒன்று சேர்த்து புரிந்து கொள்ளவும் முடியாது.

சில சமயம், ஒரு அரிய விஷயத்தை புரிந்து கொள்வதை பார்த்து வியப்பாக இருக்கும்; அதையே எழுதும் போதும், திரும்ப சொல்லும் போதும் மந்தத் தன்மை இருக்கும்.

மூளை கட்டமைப்பில் உள்ள கோளாறு தான் காரணம். சுரப்பி இயங்குவது சீராக இல்லாதபோதும் இந்த பிரச்னை ஏற்படும். இந்த பிரச்னைக்கு உள்ளான குழந்தைகள், படு திறமைசாலியாக இருப்பர்; சில குழந்தைகள் திறமை குறைவாக இருப்பர்.

படிக்கும் போதும், எழுதும் போதும், அப்படி கற்ற விஷயத்தை, கணிதத்தை மீண்டும் சோதித்துப் பார்க்கும் போது, அறவே முடியாத நிலை தான் எல்.டி., இதனால் தான் தேர்வுகளில் இப்படிப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனர்.

எத்தனை வகை?

படித்தறிவதில், பல விஷயங்கள் இருக்கின் றன; படித்ததை எழுத தெரிவது, பகுத்தறிவது, நினைவில் பதிந்து கொள்வது போன்றவை எல்லாம் படிப்பறிதல் சார்ந்தவை. டாக்டர்கள் நுண்ணியமாக பல வகை எல்.டி.,க்கள் உள்ளன.

* டிஸ்லெக்சியா: எல்.டி.,க்களில் பொதுவானது இது. இந்த வகை பிரச்னை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மொழிப்பிரச்னை தான் ஏற்படும். இந்த கோளாறு உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக வார்த்தைகளை தலைகீழாக தான் பேச வரும். சில வார்த்தைகளை அழுத்தி உச்சரிப் பர்; சில வார்த்தைகளை லேசாக உச்சரிப்பர்.

* டிஸ்கால்குலியா: கணிதத்தில் மந்தமாக இருப்பது தான் இந்த பிரச்னை. கூட்டல், கழித்தல் போன்றவை கூட இந்த வகை குழந்தைகளுக்கு தகறாராக இருக்கும். எண்களில் அடிக்கடி குழப்பம் வரும்.

* டிஸ்கிராபியா: நான்கு வார்த்தைகளை கூட சரியாக எழுதத்தெரியாது; உருவத்தையும் மாற்றி, மாற்றி எழுதுவர். தெளிவாகவே இருக் காது. இதுபோல, இந்த வார்த்தைகளை உச்சரிக் கும் போதும் சரியாக இருக்காது. விஷயத்தை உள்வாங்குவதிலும் இந்த பாதிப்புள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவர்.

* டிஸ்ப்ராக்சியா: எந்த ஒரு விஷயத்தையும் சொல்லும் போது, உடலில் அசைவுகள் யாருக்கும் காணப்படும். தலையசைப்பது, கையை அசைப்பது போன்றவை, சொல்லும் வார்த்தைகளோடு இணைந்து இருக்கும். அப்படிப்பட்ட அசைவுகளை இந்த வகை குழந்தைகளிடம் காண முடியாது.

* ஆட்டிசம்: எல்லாரும் ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பர்; ஆனால், இந்த வகை குழந்தைக்கு மட்டும் அதை அனுபவிக்க தெரியாது. அவர்களுடன் சேரவும் மாட்டார்கள்.

ஒரே மாதிரியாகத் தான் பேசுவர்; படிப்பிலும் சொன்னதை திரும் பத் திரும்ப சொல்வர்.

* ஏ.டி.எச்.டி.,: “அடென்ஷன் டெபிசிட் அண்ட் ஹைபர் ஆக்டிவிட்டி டிசார்டர் என்பதன் சுருக்கம் தான். துறுதுறுக்கு குறைவே இருக்காது; ஆனால், புரிந்ததை சொல்ல தெரியாது.

காரணம் என்ன?

மூளையில் உள்ள நரம்பு மண்டல கோளாறு இது; அசாதாரணமாக இயங்குவதால் ஏற்படுகிறது. பேசுவது, எழுதுவது, புரிந்ததை சொல்வது, கிரகித் துக்கொள்வது என்று எதிலும் மந்தமாக இருப்பதற்கு இது தான் காரணம் என்று சொல்ல முடியாது.

மூளையில் உள்ள அசாதாரண இயக்கம் காரணமாக இருந்தாலும், பரம்பரை கோளாறு என்றும் சொல்கின்றனர் நிபுணர்கள். தாய், தந்தை இருவரோ, இருவரில் ஒருவரோ மது பழக்கத் துக்கு ஆட்பட்டதால், பிரசவத்திலேயே கருவை பாதித்திருக்கலாம்; கருத்தரிப்பின் போது சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் கூட காரணமாக இருக்கலாம்.

பிறந்து, தவழ்ந்து, பேச ஆரம்பிக்கும் போதே இந்த கோளாறை கண்டுபிடித்து விடலாம். இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறப்பது, பத்து மாதத்துக்கு முன்பே பிறப்பது, போதுமான சத்துக்கள் கிடைக்காத நிலை ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன.

மனக்கோளாறா இது?

இப்படித்தான் சில பெற்றோர், தங்கள் குழந்தையின் நிலையை பார்த்து முடிவு கட்டுகின்றனர். இது தவறு. “டிஸ்ப்ராக்சியா’ பாதித்த குழந்தை, மற்ற ஒத்த வயதுள்ள குழந்தையை விட, மிக தாமதமாக தான் நடக்க ஆரம்பிக்கும்.

எனினும், படிக்க பள்ளிக்கு அனுப்பும் வரை இந்த கோளாறு பற்றி கண்டுபிடிக்க முடியாது.

பள்ளியில் ஆசிரியர்களும் இத்தகைய குழந்தைகளை கண்டுபிடித்து கூற முடியும். அப்போது விசேஷ பள்ளியில் போட்டாலே போதும்.

இது ஒரு வியாதி அல்ல: அதனால், மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாது. அதே சமயம், குழந்தைப் பருவத்தில் இருந்தே “ஸ்பெஷல் ஸ்கூலில்’ சேர்த்து சரி செய்து விடலாம். அப்புறம், படிப்பில் “பட்டய’ கிளப்புவர்.