Monthly Archives: ஓகஸ்ட், 2009

இந்த வார இணைய தளம் : சமையல் பழகுவோமா

மகளின் திருமணத்தை நடத்துவதில் தந்தைக்குச் சுமை இருக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கு நிச்சயம் ஒரு கவலை இருக்கும். அது மகள் தனிக் குடித்தனம் போய் என்ன செய்யப் போகிறாளோ என்பதுதான். ஏனென்றால் இன்றைய பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்து வேலைக்குப் போன பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர். கல்லூரி, அதன்பின் அலுவலகம் என்று அலைந்து திரிந்ததால் அம்மாவிடம் நிச்சயம் சமையலைப் படித்த பெண்கள் நூற்றுக்கு ஓரிருவர் தான் இருப்பார்கள். இவர்களுக்கு இந்தக் காலத்தில் இன்டர்நெட் நல்ல துணையாய் இருக்கிறது. பல இணைய தளங்கள் அனைத்து உணவுகளையும் தயாரிக்கும் முறைகளை மிக விவரமாகப் பட்டியலிடுகின்றன. என்ன என்ன பொருட்கள் தேவை, அவற்றை என்ன செய்திட வேண்டும் என்று விபரங்களுடன் போட்டுள்ளனர். சில இணைய தளங்களில் வீடியோ மூலம் சமைத்தே காட்டுகின்றனர். இவற்றில் சில தளங்களை இங்கு பார்க்கலாம்.

1.http://www.indobase.com/recipes/: இந்த தளம் மிகவும் விரிவாகத் தொடங்கி ஏறத்தாழ நாம் நினைக்கும் அனைத்து உணவு தயாரிக்கும் முறைகளையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமின்றி என்ன என்ன உணவு மற்றும் உணவுப் பண்டங்கள் எந்த பண்டிகையின்போது செய்திட வேண்டும் எனவும் காட்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு பிரதேசமாக அங்கு உண்ணப்படும் வகையினைத் தருகிறது.இந்த தளம் இருந்தால் எந்தக் கவலையுமின்றி உணவினைத் தயாரிக்கலாம். மனைவியைப் புதிதாக மணம் முடித்த மகளுக்குத் துணையாக அனுப்பிய பின், தந்தைகளும் இதனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

2. http://www.manjulaskitchen.com/: இது ஓர் அருமையான சமையல் தளம் . உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களைக் கொண்டு பிரிவுகள் இருக்கின்றன. உணவுப் பதார்த்தங்கள் வகையிலும் பிரிவுகள் உள்ளன. இதன் சிறப்பு இங்கே தரப்படும் வீடியோ விளக்கப்படங்கள். நமக்குத் தேவையானதை டவுண்லோட் செய்து கூட பின் பயன்படுத்தி சமைத்துக் கொள்ளலாம். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகள் தரப்படுகின்றன.

3.http://www.ifood.tv/ : இந்த தளமும் நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ கிளிப்களைத் தருகிறது. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் தரும் வீடியோ காட்சிகளும் உள்ளன. தயிர் சாதம் தயாரிப்பது எப்படி என்ற வீடியோ கூட இதில் உள்ளது.
தேவையான உணவினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து பழகிக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட அனைத்து தளங்களும் உள்ளன. இனி என்ன கவலை! இந்த முகவரிகளிலிருந்து முக்கிய உணவு தயாரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்து சிடியில் காப்பி செய்து மகளுக்கான சீர் செய்திடுகையில் சேர்த்துக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

மதுரை தியாகராசர் பொறியியற்கல்லூரி – யாஹூ ஒப்பந்தம்

தற்போது வேகமாகப் பெருகிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் இணைந்து பணியாற்ற மதுரையில் இயங்கும் தியாகராசர் பொறியியற் கல்லூரியும் யாஹு நிறுவனமும் மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. யாஹூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சிதம்பரம், தியாகராசர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் கருமுத்து கண்ணன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளனர். சிதம்பரம் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் இன்டர்நெட் சேவைக்கான ஆராய்ச்சியில் இந்தக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டிருக்கும், ஆர்வம் மற்றும் உழைப்பினால் தான் மிகவும் கவரப்பட்டதாகக் குறிப்பிட்டார். அனைவருக்கும் சவால் விடுக்கும் இந்த தொழில் நுட்பத்தினை, இந்தக் கல்லூரி தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருவது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
பொதுவாக யாஹூ நிறுவனம் இத்தகைய அமைப்புகளுடன் மிகக் குறுகிய கால அளவிலான ஒப்பந்தங்களையே மேற்கொள்ளும் என்றும், முதல் முதலாக ஒரு கல்லூரியுடன் மூன்று ஆண்டுகால ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார். கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒருவர் தன் ஆராய்ச்சியில் அல்லது பயன்பாட்டில் தனக்குத் தேவையான கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளை ஆன் லைனிலேயே பெற்று இயக்குவதாகும். இரு அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், ஒவ்வொரு காலாண்டிலும் அதற்கான ஆய்வுத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கண்ணன் தெரிவித்தார். ஏனென்றால் இதில் பெருமளவு முதலீடு செய்யப்படுகிறது என்றும் கூறினார். பன்னாட்டளவில், இன்டர்நெட்டில் பல ஆண்டுகளாக இயங்கும் ஒரு நிறுவனத்துடன், ஆராய்ச்சிப் பிரிவில் ஒப்பந்தம் மேற்கொள்வது, கல்லூரிக்குப் பெருமை அளிப்பது மட்டுமின்றி உலக அளவில் கல்லூரியைக் கொண்டு செல்லும் என்றும் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் அபய்குமார் இது பற்றிக் கூறுகையில் கல்லூரி பேராசிரியர்களுடன் மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்கு கொள்வார்கள் என்று அறிவித்தார்

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.

2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.

3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.

4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.
5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.
6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது. வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும் பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும் எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண் எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும் ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில் செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத் தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள். கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.
7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம் கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள், விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார் செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.
8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள் உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும் ஈசனே’ என்று இருப்பது பாதுகாப்பல்லவா!

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புதிய வசதிகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பல புதிய வசதிகளைக் கொண்டு வந்தது. அனைவரும் அவற்றை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தொகுப்பினை நம் வசதிக்கேற்ப வளைக்க சில வழிகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

1. தளங்கள் குரூப் ஆவதைத் தடுக்க: இன்டர்நெட் பதிப்பு 8 பிரவுசரில் ஒரே வெப்சைட்டில் பல தளங்களைத் திறக்கையில் அவை அனைத்தையும் வண்ண டேப் ஒன்றில் தொகுப்பாக வைக்கிறது. இது நமக்கு ஒரு வசதியைத் தருகிறது. இவை அனைத்தையும் மூட வேண்டும் என்றால் இந்த டேப்பில் கிளிக் செய்து ஒரே கிளிக்கில் குளோஸ் செய்துவிடலாம். இந்த புது வசதியினைப் பலரும் ஆர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இது போல குரூப் செய்வதனை விரும்புவதில்லை. அவர்கள் சில செட்டிங்ஸ் மேற்கொள்வதன் மூலம் இதனை செயலிழக்கச் செய்திடலாம்.
1. இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். மெனு பாரில் “Tools” “Internet Options” எனச் சென்றால் இதனைப் பெறலாம். கமாண்ட் பார் திறந்திருந்தால் டூல்ஸ் பட்டனை அழுத்தி அதில் Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இரண்டு பாரும் இல்லை என்றால் ஆல்ட் + டி (Alt + T) அழுத்திப் பின் K (O)- அழுத்தவும்.
2. “ “Internet Options” பாக்ஸ் கிடைத்தவுடன் “Tabs” ” கீழாக “Settings” ” பட்டன் இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். இங்கு “Tabbed Browsing Settings” ” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Enable Tab Groups (requ-ires restarting Internet Explorer)” ” என்று இருக்கும் இடத்தில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
3. பின் டயலாக் பாக்ஸ்கள் இரண்டிலும் ஓகே கிளிக் செய்து உங்கள் செட்டிங்ஸை சேவ் செய்திடுங்கள்.
5. டயலாக் பாக்ஸில் உள்ளது போல இந்த மாற்றத்தினை அமல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திடவும்.
2. யாஹூ சர்ச் இஞ்சினுக்குத் தொடர்பு ஏற்படுத்த: நீங்கள் அடிக்கடி யாஹூ சர்ச் இஞ்சினை உங்கள் தேடலுக்குப் பயன்படுத்துகிறீர்களா! இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இதற்கான தொடர்பை உருவாக்கலாம். இதற்கு முதலில்
http://www.ieaddons. com/en/details/816/Yahoo_Search_Suggestions/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு “Add to Internet Explorer”

என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Add Search Provider” ” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் உள்ள தகவல்கள் சரியானதுதானா என்பதை உறுதி செய்திடவும். அதன் பின் நீங்கள் விரும்பினால் “Make this my default search provider”

” என்பதனையும் தேர்வு செய்திடவும். பின் “Use search suggestions from this provider” ” என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத் தை எடுத்துவிடவும். அதன் பின்
“Add” ” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Search Options” என்ற பட்டனை அழுத்தி அதில் யாஹூ என்பதனைத் தேர்வு செய்திடவும். இனி உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தளத்தில் யாஹூ சர்ச் பாக்ஸ் கிடைக்கும். அதில் தேவையான டெக்ஸ்ட் டைப் செய்து தேடலாம். முடிவுகளும் அறிவிக்கப்படும்.

3.ஹோம் பட்டனில் பல தளங்கள்: பொதுவாக பிரவுசர் ஒன்றில் நாம் காணவிரும்பும் அல்லது தொடக்கத்தில் பயன்படுத்த விரும்பும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்து, பிரவுசர் திறக்கையில் அதனையே முதல் பேஜாக அமையும்படி அமைத்திருப்போம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த ஹோம் பட்டனை அழுத்தினால் பல இணைய தளங்கள் ஒரே நேரத்தில் தோன்றும்படி அமைக்கலாம்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தேவை இல்லை என்றால் அடுத்தடுத்து ஹோம் பட்டன் அழுத்தி இவற்றைப் பெறலாம்.
1. இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். மெனு பாரில் “Tools” “Internet Options” எனச் சென்றால் இதனைப் பெறலாம். கமாண்ட் பார் திறந்திருந்தால் டூல்ஸ் பட்டனழுத்தி அதில் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இரண்டு பாரும் இல்லை என்றால் ஆல்ட்+டி (Alt + T) – அழுத்திப் பின் ஓ (O) அழுத்தவும்.
2. இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்னும் பல டேப்கள் அடங்கிய டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் அதில் “General”” என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுங்கள்.
3. ஹோம் பேஜ் என்று இருக்கும் இடத்தில் கீழாக ஒவ்வொரு ஹோம் பேஜின் முகவரியையும் டைப் செய்திடவும். ஒவ்வொரு யு.ஆர்.எல். டைப் செய்தவுடன் என்டர் தட்டி அடுத்த வரியில் அடுத்ததனை அமைக்கவும்.
4. ஒரு குறிப்பிட்ட ஹோம் பேஜினை டிபால்ட் ஹோம் பேஜாக கிடைக்குமாறு அமைக்க “Tabs” என்பதன் கீழாக உள்ள “Settings” பட்டனை அழுத்தவும்.
5. இதில் “Open only the first home page when Internet Explorer starts” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.
4. யு–ட்யூப் தளத்தை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செக் செய்திட: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது வேறு பிரவுசர்களில் இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு பாடல் அல்லது வீடியோ கிளிப் தென்பட்டால் இதே போன்று வேறு ஏதேனும் தளம் யு–ட்யூப்பில் இருக்குமோ என்று பார்க்க நாம் விரும்புவோம். இதற்கு சம்பந்தப்பட்ட டெக்ஸ்ட் டினை காப்பி செய்து யு–ட்யூப் தளம் திறந்து பின் அதனை சர்ச் பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டிக் காணலாம்.
இதற்குப் பதிலாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலேயே இந்த வசதியை ஏற்படுத்தலாம். இதை ஒரு ஆக்ஸிலரேட்டர் மூலம் மேற்கொள்ளலாம்.
1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8லிருந்து கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்தைத் திறக்கவும். http://www.ieaddons.com/en/details/photo svideos/Youtube_Search/

2. இதில் “Add to Internet Explorer என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

3. இதில் கிடைக்கும் ஆக்ஸிலரேட்டர் தகவல் சரி என்பதை உறுதி செய்திடவும். அடுத்து Add பட்டனை கிளிக் செய்திடவும். இனி அடுத்து ஒரு இணைய தளத்தைப் பார்க்கையில் எந்த டெக்ஸ்ட் சம்பந்தமாக யு–ட்யூப் வீடியோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் புளு கலரில் இருக்கும் ஆக்ஸிலரேட்டர் பட்டனில் கிளிக் செய்திடவும். அதில் “AllAccelerators” ” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் “Search Youtube” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த பட்டன் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு போய் சுழன்று வந்தாலே அதில் முடிவுகளின் முன் தோற்றக் காட்சி ஒன்று பாப் அப் மெனு ஒன்றில் காட்டப்படும். புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு சார்ந்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். உங்களுடைய டிபால்ட் வீடியோஸ் ஆக்ஸிலரேட்டராக யு–ட்யூப் பினை செட் செய்திடலாம். இதற்கு வெப் பேஜின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “AllAccelerators ” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் “Manage Accelerators” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Manage Addons” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு ஸ்குரோல் செய்து Videos என்ற பிரிவிற்குச் செல்லவும். அதில் Search YouTube என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Set as Default பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Close பட்டன் அழுத்தி உங்களுடைய செட்டிங்ஸை சேவ் செய்து மூடவும். இனி உங்களுடைய தேடலுக்கான டெக்ஸ்ட் செலக்ட் செய்து, பின் புளு ஆக்ஸிலரேட்டர் பட்டனில் கிளிக் செய்து, உடனே சர்ச் யு ட்யூப் தேர்ந்தெடுத்து தேடலாம்.

உங்களுக்கு தெரியுமா?

ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் பைல்களை இந்த வகையில் திறக்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அனைத்து வகை பைல்களையும் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெகு விரைவில் கம்ப்யூட்டரில் லோட் ஆகும். ஆனால் படங்களைத் திறக்கும் பிக்சர் மேனேஜர், அடோப் போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த பைலை அப்படியே மவுஸால் இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போட்டுவிட வேண்டியதுதான். பட பைல்கள் மட்டுமின்றி டெக்ஸ்ட் பைல்களையும் இது திறக்கும். அவுட்லுக் இமெயில்கள், ஏன் எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு போல்டர் முழுவதையும் அப்படியே இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ வில் போட்டால் என்னவாகும்? அனைத்து பைல்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும். வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடு கையில் அதன் பின் புலத்தில் பல வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனை நடை பெறும். டைப் செய்வதில் உள்ள தவறுகளை மையப்படுத்தி ஏற்கனவே அவற்றிற்கான திருத்தங்கள் ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருந்தால் அவை தானாக மாற்றப்படும். அந்த பட்டியலில் குறிப்பிட்ட சொல் இல்லை; ஆனால் அதில் தவறு இருந்தது என்றால் அந்த சொல்லின் கீழாக சிகப்பு நிறத்தில் கோடிழுக்கப் படும். அதில் ரைட் கிளிக் செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அதே எழுத்துக்களில் அமைக்கப் படக் கூடிய சொற்களின் பட்டியல் தரப்படும். அதிலிருந்து நமக்குத் தேவையான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும்.
wednesday என டைப் செய்தால் “Wednesday” என மாற்றப்படும். மைக்ரோசாப்ட், மொபைல் போனில் உள்ள டேட்டாவிற்கு பேக் அப் செய்திடும் வசதியினை இலவசமாக அளிக்கிறது.
My Phone’ என்னும் இலவச பேக் அப் புரோ கிராமினை அளிக்கிறது. இதனை விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பதிந்து இயக்கினால், அதன் வெப்சைட்டில் பாஸ்வேர்ட் கொடுத்து டேட்டாவினைப் பாதுகாக்க முடியும். அந்த மொபைல் இயங்க முடியாமல் போய், புதிய மொபைலுக்கு மாறுகையில், நேரடியாக இந்த தளத்திலிருந்து டேட்டாவினை இறக்கிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் இலவசம் என்றாலும் டேட்டாவினை அனுப்ப உங்கள் சர்வீஸ் புரவைடருக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அப்ளிகேஷன் போட்டோக் கள், வீடியோ கிளிப்புகள், டாகுமெண்ட்ஸ், காண்டாக்ட்ஸ் தகவல்கள், மியூசிக், காலண்டர் அப்பாய்ண்ட்மென்ட்ஸ், ரிமைண்டர்கள் என அனைத்தையும் ஒருமுகமாக (சிங்க்ரனைஸ்) ஒருங்கிணைக்கிறது.
வை–பி தொழில் நுட்பம் ரேடியோ அலை வரிசையில் செயல்படுகிறது. அனுப்புபவர் மற்றும் பெறுபவரிடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக ஒரு வை–பி இணைப்பு சராசரியாக 50 மீட்டர் தூரத்தில் செயல்படும். வை–பி செயல்பாட்டை மிக எளிதாகவும் பயனுள்ளதாகவும் கொண்டி ருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் கொண்டுள்ளது. இதனை அடுத்து பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை உள்ளன.
ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ளது போலவே, ஒரு வேர்ட் ப்ராசசர், ஒரு ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷன், பிரசன்டேஷன் மேனேஜர் மற்றும் ஒரு டேட்டா பேஸ் அப்ளிகேஷன் ஆகியவை உள்ளன. கூடுதலாக ஒரு வெக்டார் – கிராபிக்ஸ் புரோகிராம் மற்றும் மேத்தமடிகல் பார்முலா எடிட்டரும் கிடைக்கின்றன.

பே பால் (Pay Pal) என்பது உலகின் பெரிய ஆன் –லைன் பேங்க். ஆன்லைனில் அடிக்கடி வர்த்தகம் மேற்கொள்பவர்கள் இந்த பேங்க்கில் நிச்சயம் அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். ஒரு அக்கவுண்ட்டில் 19 கரன்சிகளைப் புழங்கலாம். அமெரிக்க டாலர், கனடியன் டாலர், ஆஸ்தி ரேலியன் டாலர், ஈரோ, பவுண்ட், ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், சீன ஆர்.எம்.பி., செக் நாட்டின் கொரோனா, டேனிஷ் குரோன், போலந்து ஸ்லாட்டி, சிங்கப்பூர் டாலர், ஸ்வீடனின் க்ரோனா, ஸ்விட்சர்லாந்தின் பிராங்க், மெக்ஸிகோவின் பீஸோ, இஸ்ரேலின் ஷெகல் ஆகிய கரன்சிகளில் நீங்கள் அக்கவுண்ட்டினைக் கையாளலாம்.

வேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…

எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது. இது இருக்கட்டும்; எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, வெர்டனா எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று ஒருவர் கொடுக்க அது This is not a valid number என்று ஒரு எர்ரர் மெசேஜ் கொடுத்து அவரைக் கவிழ்த் தது. எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl +D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் குஞிச்டூஞு என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.

புதிய போல்டரில் டாகுமெண்ட்: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போதுதான் அதனைத் தனியாக ஒரு போல்டரில் வைத்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். இதற்கென மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து அங்கு புதிய ஒரு போல்டரை உருவாக்கிப் பின் மீண்டும் டாகுமெண்ட் வந்து போல்டரைத் தேடித் திறந்து சேவ் செய்திட வேண்டியதில்லை. டாகுமெண்ட் வேலை முடிந்தவுடன் Ctrl + S அழுத்தவும். பின் Alt +5 அல்லது Create New Folder பட்டனை அழுத்தவும். போல்டரின் பெயர் கேட்டு ஒரு கட்டம் கிடைக்கும். இதில் போல்டருக்கு ஒரு பெயர் கொடுத்து எண்டர் அழுத்தவும். பின் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து என்டர் அழுத்த புதிய போல்டரில் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும்.
எங்கே உள்ளது என் கிராபிக்ஸ்?: வேர்டில் பல பக்கங்கள் கொண்ட டாகுமெண்ட் ஒன்றை டெக்ஸ்ட், படங்கள், சார்ட்கள் மற்றும் கிராபிக்ஸ் படங்கள் ஆகியவற்றுடன் அமைக்கிறீர்கள். திடீரென ஒரு குறிப்பிட்ட கிராபிக்ஸ் படம் ஒன்றில் சிறிய மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணுகிறீர்கள். அல்லது சார்ட் ஒன்றுக்குக் கொடுத்த தலைப்பினை மாற்றி அமைக்க முடிவெடுக்கிறீர்கள். போட்டோ ஒன்றை மாற்றி இன்னொன்றை பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்கள். ஆனால் அது எங்கே உள்ளது என்று தெரியவில்லை. பிரிண்ட் பிரிவியூ போனால் அனைத்து பக்கங்களின் சிறிய உருவம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சரியாகக் கண்டறிய முடிவதில்லை. இங்குதான் இன்னொரு வசதியினை வேர்ட் தருகிறது. இந்த வசதி மூலம் எத்தனை பக்கங்களை வேர்ட் சுருக்கிக் காட்ட முடியுமோ அத்தனை பக்கங்களை ஒரு பக்கத்தில் காட்டும். அப்படி பக்கத் தோற்றங்களைக் காட்டுகையில் நம் படம், சார்ட், போட்டோ போன்றவற்றை அவை எங்கிருக்கின்றன என்று பார்த்து எடிட் செய்திடலாம். இதற்கு முதலில் சம்பந்தப் பட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறக்கவும். பின் மெனு பாரில்
“Zoom” பிரிவைக் கிளிக் செய்து அதில் “Zoom” என்ற பிரிவில் என்டர் அழுத்தவும். பின்
“Zoom” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்றாலும் தெரியும்படி காட்டுமாறு செய்திடலாம். அதற்காக Many Pages என்ற பிரிவில் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறு செய்தால் எத்தனை பக்கங்கள் ஒரு திரையில் கொள்ளுமோ அத்தனை பக்கங்களின் தோற்றம் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நல்லது என்று எண்ணினால் இந்த விண்டோவில் Many Pages என்பதற்குக் கீழ் தெரிகிற சிறிய மானிட்டர் ஐகானில் அம்புக்குறியில் கிளிக் செய்தால் பக்கங்களுக்கான ஐகான்கள் ஆறு தெரியும். இதில் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அத்தனை பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
பைல்களைக் கண்டு திறக்க: பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து வேலை பார்க்கையில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் டாஸ்க் பாரில் ஏற்படுத்தப்படும். அதில் சம்பந்தப் பட்ட அப்ளிகேஷனுக்குரிய ஐகானும் பைலின் பெயரும் இருக்கும். அதனைப் பார்த்து நாம் எந்த பைல் வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து திறக்கலாம். ஆனால் ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறக்கையில் அவை குரூப்பாகக் காட்டப்படும். பைலின் பெயர் தெரியாது. ஒவ்வொரு முறையும் இந்த குரூப் ஐகானில் கிளிக் செய்து மேலே எழும் பட்டியலில் பைலின் பெயரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஒரு வழியாக ஆல்ட் + டேப் கீகளை அழுத்தலாம். வேர்ட் ஐகான்களோடு பைலின் பெயர் திரை நடுவில் தெரியும். அதனைக் கொண்டும் டாகுமெண்ட்டுகளுக்கிடையே ஊர்வலம் போகலாம். இவை எல்லாம் திறந்திருக்கும் பைல்களை உடனே காட்டாது. ஐகான்கள் அல்லது டாஸ்க்பாரின் கட்டங்கள் சென்று கிளிக் செய்திட வேண்டும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் + எப்6 அழுத்தினால் ஒவ்வொரு டாகுமெண்ட்டாக நாம் திறந்து பணியாற்றிய நிலையில் உடனுடக்குடன் தோன்றும்.
ரூலரில் அளவு அலகை மாற்ற: வேர்ட் தொகுப்பில் ரூலரை ஒரு சிலர் மிகவும் கர்ம சிரத்தையாகப் பயன்படுத்துவார்கள். அவை தரும் அளவுபடி படங்களை, கட்டங்களை, அட்டவணைகளை அமைப்பார்கள். பொதுவாக வேர்ட் தொகுப்பில் ரூலர்கள் அங்குல அளவில் தான் தரப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்து ஆட்களுக்குச் சரிப்பட்டு வராது. சென்டி மீட்டரிலேயே அனைத்தையும் அளந்து வரைந்து பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக ரூலர் சென்டி மீட்டரில் வேண்டும் என்றால் என்ன செய்வது? எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? தேவையே இல்லை.
அங்குலத்தில் உள்ள ரூலரை எப்படி சென்டிமீட்டருக்குக் கொண்டுவருவது? முதலில் ரூலரை எப்படி பெறுவது?
முதலில் View menu மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ரூலர் கோடு கிடைக்கும். இனி Tools மெனு சென்று Options என்னும் பிரிவில் கிளிக் செய்தால் டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் General என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக “measurement units” ” என்னும் பீல்ட் தரப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி ரூலர் நீங்கள் விரும்பிய அளவு அலகுகளில் கிடைப்பதால் அதனை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.
வேர்டில் தேதியும் நேரமும் : வேர்ட் டாகுமெண்ட்டில் தேதி மற்றும் நேரத்தினை அமைக்க ஒவ்வொருவரும் ஒரு மாதிரி டைப்பில் எதிர்பார்ப்பார்கள். டிபால்ட்டாக வேர்ட் பதியப்படுகையில் செட் செய்யப்பட்ட வகையில் தான் நாம் தேதி அல்லது நேரத்தினை இன்ஸெர்ட் செய்கையில் அமையும். இதனை நம் விருப்பப்படி மாற்றலாம்.

1. டாகுமெண்ட்டில் இருக்கையில் மெனுவில்

Insert

தேர்ந்தெடுத்து

‘Date and Time’

என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2.

Date and Time’

டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் இடது பக்கம் பல்வேறு வகை

களில் தேதி மற்றும் நேரம் அமைக்கும் வழிகள் காட்டப்படும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3.எப்போதும் இதே வகையில் தேதியும் நேரமும் அமைய வேண்டும் என்றால்

Default

என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். டாகுமெண்ட்டில் தேதி அச்சடிக்க: வேர்ட் தொகுப்பில் பெரிய அளவில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் அதில் அந்த டாகுமெண்ட் தயாரான தேதியினையும் சேர்த்து அச்சடிக்க எண்ணுவோம். ஏனென்றால் டாகுமெண்ட்டில் பிழைகளைப் பார்க்க எண்ணுபவர்கள் அச்சில் எடுக்கப் பட்ட டாகுமெண்ட்களையே பார்க்க எண்ணுவார்கள். அப்போது திருத்தங்களை அடுத்து எந்த காப்பி அச்செடுக்கப்பட்டது என்பதன நாம் தேதி வைத்துத்தான் கண்டறிய முடியும். தேதியைக் கொண்டு நாம் அந்த குறிப்பிட்ட அச்சுப் பிரதி எந்த திருத்தத்தின் பின் எடுக்கப்பட்டது என அறிய முடியும். தேதியை பக்கங்களில் டைப் செய்திட 1. டாகுமெண்ட்டைத் திறந்து மெனு பாரில்

Insert

என்பதில் கிளிக் செய்திடவும். பின் இதில்

Field

என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2.

Field

டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில்

Field Names

என்பதற்குக் கீழாக ஸ்குரோல் செய்து போனால்

Print Date

என்று ஒரு பீல்டு இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

3. பின்

Date Formats

என்பதற்குக் கீழாக தேதி/நேரம் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து இந்த டயலாக் பாக்ஸை மூடவும். இதன் மூலம் உங்களுடைய டாகுமெண்ட்டில் பீல்டு ஒன்று திறக்கப்படும். இதில் எப்போதெல்லாம் பிரிண்ட் எடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் டேட் அப்டேட் செய்யப்பட்டு அச்சாகும்.

தேவைகளை நிறைவேற்றும் – தகுதிகளைப்பணமாக்கும்

வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் உங்கள் திறமை எதுவானாலும் அதனைப் பணமாக்கும் வழியைத் தரும் இணைய தளம் ஒன்று www.8KMiles.com என்ற பெயரில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம் தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.
அதே போல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப வேலைகளை, சாப்ட்வேர் அப்ளிகேஷன் தயார் செய்து கொடுக்கும் பணியினை யார் நிறைவேற்றித் தருவார்கள் என்று பொதுவாக இதன் மூலம் தேடலாம்; அல்லது அறிவிப்பு கொடுக்கலாம். இதனை அறிந்து வேலைகளை மேற்கொள்ள முடியும் என நினைப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்களின் தகுதி மற்றும் திறமையினை ஆய்வு செய்து, வேலைக்கான கட்டணம் எவ்வளவு என முடிவு செய்து, காலக்கெடு நிர்ணயம் செய்து பெறலாம்.
அதே நேரத்தில் தங்கள் அலுவலகத் தேவைக்கான கம்ப்யூட்டர் சர்வர் மற்றும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவை உள்ளவர்கள் இந்தத் தளத்திற்குத் தங்கள் தேவைகளைக் கேட்டால் உங்களுக்குத் தேவையான வசதி, அது எதுவாக இருந்தாலும் அமைக்கப்பட்டு ஆன்லைனிலேயே தரப்படும். அதனைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். உங்கள் விருப்பப்படி மேற்கொள்ளப்படும் வேலை, பாதுகாப்பாக நீங்கள் மட்டுமே பார்க்கும்படி வைக்கப்படும். ஆன்லைனில் இது போல தேவை உள்ளவர்களையும் அந்த தேவைகளை நிறைவேற்றும் தகுதி உள்ளவர்களையும் இணைக்கும் ஓர் இனிய, எளிய டிஜிட்டல் பாலமாக http://www.8KMiles.com அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய அனைவருமே பொறியியல் படித்த தமிழர்கள். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் உலக வர்த்தகத்தில், முன்னணி இடத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அலுவலகப் பணிகளுக்கான பலவகைப்பட்ட தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நாளில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், திறமை பெற்ற இளைஞர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து திறமையைப் பயன்படுத்தும் விதமாக இந்த தளம் இயங்குகிறது. இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். தங்கள் திறமையின் அடிப்படையில் சேவை வழங்கத் திட்டமிடுபவர்களை “Service Provider” என இத்தளம் அழைக்கிறது. இவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களுக்குள் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது நிறுவனத்தின் சார்பாகவோ இந்த தளத்தில் பதிந்து கொள்ளலாம். தளத்தில் நுழைந்தவுடன் “Service Provider” என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். நிறுவனத்தின் சார்பில் என்றால் “I represent a company” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன்பின் உங்களுடைய கல்வித் தகுதிகள், வேலை அனுபவம், வேலைக்குக் கிடைத்த சான்றிதழ்கள், உங்களைப் பரிந்துரை செய்யக் கூடிய நபர்கள் அல்லது நிறுவனங்களின் முகவரிகள் ஆகிய பல தகவல்களைத் தரலாம். பின் இறுதியாக அரசாங்கம் உங்களுக்கு வழங்கிய புகைப்படம் கொண்ட அடையாள அட்டை ஒன்றை (டிரைவிங் லைசன்ஸ், வருமானவரி பான் கார்ட், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஸ்கேன் செய்து அதனை அப்லோட் செய்திட வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும், போட்டோ அடையாள அட்டை உட்பட, இந்த தளத்தை இயக்குபவர்கள் சரி பார்த்து “Verified” எனச் சான்றழித்து தளத்தில் ஏற்றுவார்கள். இதன் மூலம் உங்களின் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இவ்வாறு பதிவு செய்திடும்போதே உங்களுக்கென உங்களின் இமெயில் முகவரியை யூசர் பெயராகவும் அதற்கான பாஸ்வேர்டையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களைப் பற்றிய தகவல்கள் அப்லோட் செய்யப்பட்டவுடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து அதில் பதியப்பட்டுள்ள வேலைகளை பைல் மெனுவில் “Find Work” என்பதில் கிளிக் செய்து பார்வையிடலாம். பின் உங்களால் நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்ற சாப்ட்வேர் திட்டங்கள் மற்றும் பிற வேலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பதிந்தவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள், திட்டம் நிறைவேறத் தேவையான காலம், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து தகவல்களை நேரடியாக அனுப்பலாம். நீங்கள் தகவல்கள், கால அவகாசம், அதற்கான பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை அவர்களுக்கு நிறைவைத் தரும் வகையில் எந்த சந்தேகமும் இன்றி அனுப்ப வேண்டும். இதன்பின் அந்த வேலைத் திட்டத்தினைப் பதிவு செய்தவர் உங்களுடன் இமெயில் அல்லது வீடியோ கான்பரசிங் வழி தொடர்பு கொண்டு தங்கள் தேவைகள் குறித்து விளக்கி நீங்கள் தந்துள்ள காண்ட்ராக்ட் குறித்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வார். இந்த நேரத்தில் அவர்கள் அளிக்கும் கூடுதல் தகவல்களின் அடிப்படையில், நீங்கள் உங்கள் காண்ட்ராக்ட் கண்டிஷன்களை மாற்றிக்கொள்ளலாம்.
இருவருக்கும் ஒத்துப் போன நிலையில் வேலைக்கான கம்ப்யூட்டர் சூழ்நிலையை நீங்கள் வரையறை செய்திடலாம். வேலை திட்டத்தினை உங்களுக்கு அளிப்பவர் தாங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தான் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதனை 8KMiles வழங்கும். இதனை பணி மேற்கொள்பவர் ஆன்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருவருக்குமே பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. முதலாவதாக வேலை நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. இதனால் மேற்கொண்ட அளவிற்கு ஏற்கனவே ஒத்துக் கொண்ட பணம் கிடைக்கும். பணி முன்னேற்றத்தில் வேலை தந்தவருக்கு திருப்தி இல்லை என்றால், நிறைவேறியவரைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, இந்த நிலையில் அடுத்தவருக்கு அந்த வேலைத் திட்டத்தினைக் கொடுக்கலாம். அனைத்திற்கும் 8KMiles பாதுகாப்பளிக்கிறது. வேலை செய்பவர் ஒத்துக் கொண்டபடி, ஒவ்வொரு நிலையிலும் பணி நிறைவேற்றப்படும்போது, அதற்கான இன்வாய்ஸை அனுப்பலாம். வேலை தந்தவர் அதற்கான பணத்தினை 8KMiles அக்கவுண்ட்டில் செலுத்துவார். பின் அந்தப் பணம் வேலை முடித்தவருக்கு வழங்கப்படும். இவ்வளவு வசதிகளுக்கும் வேலை முடிந்த பின்னரே தனக்கான 7.5% கமிஷனை, இந்த தளம் எடுத்துக் கொள்கிறது. இதனையும் நம்பாமல், வேலை தருபவர் முதலிலேயே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்த வேண்டும் என எண்ணினால், அந்த பணியையும் இந்த தளம் மேற்கொள்கிறது. திட்டத்தின் கட்டணத்திற்கான குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை இந்த தள அக்கவுண்ட்டில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும். இது டெபாசிட் போல வைத்துக் கொள்ளப்படும். சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி வேறு நிலைகளிலும் ஒருவர் வேலைத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். பல திறமை பெற்றவர்களைக் கொண்டு இயங்குபவர் ப்ராஜக்ட் மேனேஜராக (“Project Manager”) இயங்கலாம். இவர் வேலைத் திட்டத்தை வாங்கிக் கொண்டு தன்னுடன் இணைந்துள்ளவருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து பணி முடித்து பணம் பெறலாம். சர்வீஸ் புரோக்கராகவும் (“Service Broker”) ஒருவர் செயல்படலாம். பல நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் பலரிடம் சிறப்பான தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு, இந்த ஆன்லைன் குஞுணூதிடிஞிஞு ஆணூணிடுஞுணூ நிலை சரியாக இருக்கும். இவர் 8KMiles தளத்தினைத் தன் ஆன்லைன் அலுவலகமாக இயக்கித் தேவை பட்டவர்களுக்குச் சரியான வல்லுநர்கள் மூலம் வேலையை நிறைவு செய்து தரலாம். இதன் மூலம் நீங்கள் நிறுவனங்களையும் உங்கள் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, வேலை தொடர செலவில்லா ஆன்லைன் அலுவலகச் சூழ்நிலை கிடைக்கிறது. இனி தனக்கு சேவை வேண்டுபவர் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்? இவர் 8KMiles தளத்தில் “Buyer” ” என்பதில் கிளிக் செய்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். தன்னைப் பற்றியோ அல்லது தன் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். இவற்றைத் தந்தவுடன் ஒரு அக்கவுண்ட் ஒன்றையும் நீங்கள் திறக்க வேண்டும். இதற்கு உங்கள் கிரெடிட் கார்ட் (பன்னாட்டளவிலான கார்ட்) அல்லது பேங்க் அக்கவுண்ட் (தற்போதைக்கு அமெரிக்க பேங்க் அக்கவுண்ட் மட்டும்; விரைவில் ஆன் லைன் பேமென்ட் தரும் பே பால் அக்கவுண்ட் சேர்க்கப்பட உள்ளது) விபரம் தரப்பட வேண்டும். இதற்கு 8KMiles தளத்தில் “Setup Payment” என்ற மெனுவில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் “Authorize” என்பதில் கிளிக் செய்து பின் “Action” என்பதன் கீழாக உங்கள் கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் அக்கவுண்ட் தகவல்கள் தரப்பட வேண்டும். உடனே உங்கள் அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் இரு பணப் பரிமாற்றத்தினை 8KMiles தளத்திற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பணம் கட்டணம் அல்ல; உங்கள் கிரெடிட் கார்டினை அல்லது பேங்க் அக்கவுண்ட்டினை உறுதிப்படுத்தும் வேலையே ஆகும். உறுதி செய்து கொண்ட அடுத்த நிமிடம் இந்த பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் டில் திரும்பச் செலுத்தப்படும்.

இந்த பணம் செலுத்தும் முறை சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் நீங்கள் Projects மெனு சென்று உங்கள் தேவைகளை பதியலாம். அந்த மெனுவில் உங்கள் வேலை குறித்த தகவல்களைத் தெளிவாகத் தர பல ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இவை தரப்பட்டவுடன் அவை ப்ராஜக்ட் குறித்து தேடுகையில் பட்டியலிடப்படும். நீங்கள் விரும்பினால் இதனை “Invite Only”, என்ற அடிப் படையிலும் வைக்கலாம். அப்போது நீங்கள் விரும்புபவர்கள் மட்டுமே இதனைக் காண முடியும். உங்கள் திட்டம் பதியப்பட்டவுடன் பல சர்வீஸ் புரவைடர்கள் அதற்கான பட்ஜெட் மற்றும் தங்கள் தகுதிகள், அனுபவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பார் கள். உடன் நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து பேசி முடிவிற்கு வரலாம். எப்போது எந்த அளவில் இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என உறுதி செய்திடலாம். அதே போல பணம் வழங்கும் நிலைகளையும் அமைத்திடலாம். உங்களிடம் காண்ட்ராக்ட் பெறுபவர் உங்களுக்காக மேற்கொள்ளும் வேலையை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கேற்ற கம்ப்யூட்டர் வசதிகள் அமைந்த சூழ்நிலையை 8KMiles தளம் சிறிய கட்டணத்தில் வழங்கும். இதில் மட்டுமே உங்கள் சர்வீஸ் புரவைடர் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தலாம். இதனால் நீங்கள் பணம் செலுத்த செலுத்த அந்த பணி உங்கள் கைகளில் கிடைக்கும். வேலை முடியும் ஸ்டேஜ் களுக்கேற்ப இன்வாய்ஸ் பெற்று தளத்தின் மூலம் பணம் வழங்கலாம். உங்கள் வேலைக்கான சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி உங்கள் சார்பாகப் பணியாற்றும் புராஜக்ட் மேனேஜர்கள், பிரதிநிதிகளையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் இயங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறு பணியை முடித்துப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒரு நபரை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தலாம். அத்தகைய நபர்களையும் இந்த தளத்தில் அடையாளம் கண்டு பயன்படுத்தலாம். இந்த தளம் தகவல் தொழில் நுட்ப பணிகள் மட்டுமின்றி வறு எத்தகைய வேலை என்றாலும் இணைப்பை ஏற்படுத்துகிறது. கம்பெனிக்கான அறிக்கைகள் தயார் செய்தல், பட்ஜெட் உருவாக்குதல், மொழி பெயர்த்தல், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்தல், சில்லரை பொருட்கள் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தல், அக்கவுண்டிங் செய்தல் என ஒரு சிறிய நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளுக்கும் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு வேலைகளை முடிக்க இந்த தளம் உதவுகிறது. இன்டர்நெட் இணைந்த கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இவை அனைத்தையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. திறமைசாலிகளுக்கு உலகச் சந்தையை இந்த தளம் விரித்து வாய்ப்புகளைத் தருகிறது. சிறிய நிறுவனங்களும், உலகத் தரத்திலான தகவல் கட்டமைப்பில் இயங்கி பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இது உதவுகிறது.

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த தளம் குறித்து இதனை உருவாக்கி இதன் செயல் து�ணைத்தலைவராக இயங்கும் பிரபு கருணாகரன் அளித்த பேட்டி.

இந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

நான் அமெரிக்காவில், மேல் படிப்பிற்காகச் சென்ற போது, அங்குள்ள நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட அதிக மூலதனம் இல்லாமல் தவிப்பதனைப் பார்த்தேன். அதே நேரத்தில் நம் ஊர் இளைஞர்கள் பொறியியல் மட்டுமின்றி கம்பெனி நிர்வாகம் மற்றும் சார்ந்த பணிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதனையும் கண்டேன். இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தால், அனைவருக்கும் பலனாக இருப்பது மட்டுமின்றி, இவர்களின் நிறுவனங்களும் நாடுகளும் வளம் பெறும் என்ற அடிப்படையில் இந்த நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டோம். இவர்கள் சந்திக்கச் சரியான ஒரு பிளாட்பாரம் அமைப் பது மற்றும் அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிஸ்டங்களை அமைத்துக் கொடுப்பது என்ற இரு வழி உதவிகளை வழங்கும் வகையில் தளம் ஒன்றை அமைப்பதை எங்கள் இலக்காக வைத்துக் கொண்டுள்ளேம். என் நண்பர்கள் டாக்டர் சுரேஷ்,விக்டர், ஹரீஷ், பத்மநாபன் மற்றும் பிரவீண் ஆகியோருடனும் இது குறித்துப் பல நாட்கள் சிந்தித்ததன் விளைவாகவே இந்நிறுவனம் உதயமானது. பல ஆண்டுகள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து பல சோதனைகளையும் நடத்தினோம். அனைத்தும் சரியாக அமைந்து வெற்றிகரமாக இயங்க முடியும் என்ற நிலையில் சென்ற மார்ச் 31 அன்று இதனைத் தொடங்கினோம்.

இந்த நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?
இந்த உலகப் பரப்பின் விட்டம் 8000 மைல்களாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே, உலகமனைத்தையும் உங் கள் கைகளில் கொண்டு வருகிறோம் என் பதை உணர்த்த இந்த நிறுவனத்தின் பெயர் 8KMiles என அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நிறுவனம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது?
முதலீட்டுச் செலவின்றி தங்கள் தரத்தை உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்திட விரும்பும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; தங்களிடம் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் திறமையை, அனைத்து நாடுகளிலும் உள்ள நிறுவனத்தேவைக்குப் பயன்படுத்திடத் திட்டமிடும் நிறுவனங்கள்; விற்பனை மற்றும் வர்த்தக ரீதியில் அசாத்திய திறமை கொண்டு நல்ல நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபராக இயங்கும் திறமைசாலிகள்; வணிகத் திட்டங்களைச் சரியாக அமல்படுத்தி லாபம் ஈட்ட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் சுதந்திரமாகச் செயல்பட்டு தங்களின் திறமையைப் பணமாக்கி வாழ விரும்பும் வல்லுநர்கள் ஆகியோரே எங்களின் இலக்குகள்.

பதிந்து கொள்ள எவ்வளவு கட்டணம்? திறமையுள்ள நம் இளைஞர்களுக்கு அது தடையாக இருக்காதா?
கொஞ்சம் கூட கட்டணம் இல்லை. பதிந்து கொள்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் தரப் பரிசோதனை செய்தபின் இலவசமாக இமெயில் வசதி, தகவல் வெளியே கொண்டு வர சேட் போர்ட், வீடியோ கான்பரன்சிங், சட்டரீதியான பாதுகாப்பு, பணப் பரிமாற்றத்திற்கான நியாயமான வழிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இதனை ப் பயன்படுத்தலாம். இந்திய கிராமங்களில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக அளவில் இளைஞர்கள் பொறியியல் படித்துத் திறமை இருந்தும் அவற்றைக் காட்டச் சரியான வாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவே நிறைய பணம் தேவைப்படுகிறது. இவர்கள் குழுவாக இணைந்தோ அல்லது தனி நபராகவோ இந்த தளம் மூலம் உலக அளவிலான வாய்ப்பினைப் பெறலாம். இதன் வழி வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மட்டும் திட்டச் செலவில் 7.5% கட்டணமாகப் பெறுகிறோம். கம்ப்யூட்டர், சர்வர், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை இவர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினால் பயன்படுத்தும் நேரத்திற்கு மட்டும் மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம்.

என்ன மாதிரியான சாப்ட்வேர் கட்டமைப்பினை ஆன்லைனில் வழங்குகிறீர்கள்?

லினக்ஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர்களையும் ஆன்லைனில் அளிக்கிறோம். இவை தங்களுக்குப் போதாது என்று எண்ணுபவர்கள், எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கேட்டாலும் உடனே அமைத்துத் தருகிறோம்.

உங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்?
அறிவுத் திறனைக் கொண்டு என்னவெல்லாம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு திறமைசாலி செய்ய முடியுமோ அனைத்தையும் எங்கள் தளம் மூலம் மேற்கொள்ளலாம். ஒரு சிலவற்றை இங்கு கூறுகிறேன். நிறுவன நிர்வாகத்திற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை உருவாக்குதல், வெப் சைட் உருவாக்கி நிர்வகித்தல், கிராபிக் டிசைன்ஸ் மற்றும் மல்ட்டிமீடியா புரோகிராம்களைத் தயாரித்தல், நிறுவனங்களுக்குத் தேவையான டேட்டா பேஸ்களை உருவாக்கி தொடர்ந்து அப்டேட் செய்தல், ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங்கிற்குத் தேவையானதை அமைத்துக் கொடுத்தல், கட்டடக் கலை பொறியியலுக்குத் தேவையானவற்றைத் தயாரித்தல், டாகுமென்ட் தயாரித்து எடிட் செய்து தருவது, ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகளை எடிட் செய்தல், வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், அக்கவுண்டிங் சாப்ட்வேர்களை உருவாக்குதல், உடல்நலம் சார்ந்த அறிவுரை வழங்க அப்ளிகேஷன்களை தயாரித்தல், ஆன்லைனில் ஆபீஸ் அசிஸ்டண்ட்களை உருவாக்கி உதவுதல் என ஒரு நிறுவனத்தின் அனைத்து தேவைகளையும் இதன் மூலம் நிறைவேற்றலாம். இவற்றிற்கான சிஸ்டங்கள் எதிலும் இவர்கள் முதலீடு செய்திட வேண்டியது இல்லை. இவற்றை எங்கள் தளம் ஆன்லைனிலேயே தரும். அத்துடன் வேலை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு, பணம் பெற்றுத் தருதலை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

இதே முறையில் உங்களின் எதிர்கால விரிவாக்கம் எப்படி இருக்கும்?

இந்த தளம் மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்த வல்லுநர் அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதே போல, தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பாகச் செயலாற்றக் கூடிய நிறுவனங்களும் இங்கு கூட்டாக எங்கள் நிறுவனத்திடம் இருக்கும். பன்னாட்டளவில் இவர்களை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு செலவும் இல்லாமல், வர்த்தக முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதி செய்வோம். பொதுமக்களாகிய தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து வகை நிறுவனங்களும் எளிதாக எந்தச் செலவுமின்றி அணுக வழி செய்யும் நிறுவனப் பிரிவுகளையும் தளங்களையும் அமைக்க இருக்கிறோம். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் இமெயில் மூலமாக contactus@8kmiles.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். எங்களைப் பற்றி அமெரிக்க ஐரோப்பிய நாளிதழ்கள், சாப்ட் வேர் அமைப்புகள் எழுதிய குறிப்புகள் மற்றும் பேட்டியைக் கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.

http://www.prweb.com/releases/8KMiles/Web20/prweb2275634.htm

http://www.youtube.com/watch?v= 2LKEjpWOKyQ

http://www.prweb.com/releases/2009/07/ prweb2613924.htm

http://telephonyonline.com/business_services/news/cloudcomputing

smallbusinessoutsourcing0707/index.html

டேட்டா ரெகவரி

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன. இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப் பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

. இதனை http://raid 2raid.com/)http:// raid2raid.com/ get/raid2raid.exe

என்னும் முகவரி கொண்ட தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கூப்பேஸ் வைரஸ் – ஜாக்கிரதை

பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் எச் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும். இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும். இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக ஏறத்தாழ 30 லட்சம் பேர் உள்ளனர். எனவே தான் இது குறித்து இந்திய அரசின் India Computer Emergency Response Team அமைப்பு இந்த எச்சரிக்கை யினை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும். இந்த அறிவுரையையும் அந்த அரசு அமைப்பு தந்துள்ளது.

கூகுள் குரோம் பிரவுசரை உங்களுடையதாக்க ….

தன் அசாத்திய வேகத்தினால் பலரின் கவனத்தை ஈர்த்த குரோம் பிரவுசர், அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. பின் வாடிக்கை யாளர்களுக்கு ஏற்கனவே மற்ற பிரவுசர்களில் பழகிப் போன சில வசதிகள் இல்லாததால், தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அண்மையில் இதில் சேர்க்கப்பட்ட சில கூடுதல் வசதிகள் குரோம் பிரவுசருக்கென நிலையான சில வாடிக்கையாளர்கள் இருப்பது நமக்கு வரும் பல கடிதங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இவர்களின் விருப்பத்திற்கேற்ப அதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப் படுகின்றன.

இவற்றில் பல மற்ற பிரவுசர்களிலும் செயல்படும்.

Alt + Left Arrow: முந்தைய பக்கத்திற்குச் செல்ல

Alt + Right Arrow: அடுத்த பக்கத்திற்குச் செல்ல; இதனைப் பயன்படுத்த முந்தைய பக்கத்திற்கு ஏற்கனவே சென்றிருக்க வேண்டும்.

F5:பக்கத்தினை மீண்டும் ரீ லோட் செய்திட

Ctrl + clicking a link: வெப்சைட்டில் தரப் பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால் புதிய டேப்பில் அது திறக்கப்படும்.

Shift + clicking a link:வெப்சைட்டில் தரப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால் புதிய விண்டோவில் அது திறக்கப்படும்.

Ctrl + N: புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

Ctrl + T: புதிய டேப் ஒன்று திறக்கப்படும்

Ctrl + W: அப்போது பயன்பாட்டில் இருக்கும் டேப் மூடப்படும்.

Ctrl + Shift+N:பிரைவேட் பிரவுசிங் என்று அழைக்கப்படும் Ctrl Incognito வகையில் விண்டோ திறக்கப்படும்.

Ctrl + O அழுத்திப் பின் பைல் பெயர் கொடுத்தால் கூகுள் குரோம் பிரவுசரில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல் திறக்கப்படும்.

Alt+F4: அப்போதைய விண்டோ மூடப்படும்.

Ctrl+Shft+T : நீங்கள் கடைசியாக மூடிய டேப் திறக்கப்படும். கூகுள் குரோம் இந்த வகையில் நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய பத்து தளங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது.

Drag link to tab: வெப்சைட் ஒன்றில் தரப்படும் லிங்க்கினை இழுத்துச் சென்று ஒரு டேப்பில் விட்டால் அந்த டேப்பில் லிங்க் காட்டும் தளம் திறக்கப்படும்.

Drag link to space between tabs: லிங்க்கிற்குத் தொடர்புள்ள தளத்தினை டேப் ஸ்ட்ரிப்பில் நீங்கள் இழுத்து விடும் டேப்களுக்கு இடையே உள்ள இடத்தில் புதிய டேப் திறக்கப்படும்.

Ctrl+1 முதல் Ctrl+8 வரை: குறிப்பிடப் பட்டுள்ள எண்ணுக்கான எண்ணிக்கையில் உள்ள டேப்பிற்கு நீங்கள் செல்வீர்கள். நீங்கள் கொடுக்கும் எண் டேப்களின் வரிசையில் குறிப்பிட்ட டேப் எங்கு உள்ளது என்பதைப் பொறுத்தது.

Ctrl+9: கடைசி டேப்பிற்குக் கொண்டு செல்லும்.

Ctrl+Tab அல்லது Ctrl+PgDown: அடுத்த டேப்பிற்குக் கொண்டு செல்லும்.

Ctrl+Shift+Tab அல்லது Ctrl+PgUp: முந்தைய டேப்பிற்குச் செல்லும்.

Alt+Home: நீங்கள் அமைத்துள்ள ஹோ பேஜிற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

குரோம் அட்ரஸ் பார் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

1. அட்ரஸ் பாரில் தேடுதலுக்குண்டான சொல்லை டைப் செய்தால் உங்கள் பிரவுசருக் கென நீங்கள் அமைத்துள்ள டிபால்ட் சர்ச் இஞ்சின் இயக்கப்பட்டு தேடல் நடைபெறும்.

2. குறிப்பிட்ட தளத்திற்குண்டான முகவரியில் ‘www.’ மற்றும் ‘.com’ஆகிய வற்றிற்கு இடையே உள்ள சொல்லை மட்டும் டைப் செய்து Ctrl+Enter அழுத்தவும். முகவரி முழுவதும் தானாக அமைக்கப்பட்டு தளம் திறக்கப்படும்.

3. இணைய தள முகவரியினை டைப் செய்து Ctrl+Enter தட்டினால் தளமானது புதிய டேப்பில் திறக்கப்படும்.

4. வெப் அட்ரஸ் ஏரியாவில் குறிப்பிட்ட சொல் மட்டும் ஹைலைட் செய்யப்பட F6 அல்லது Ctrl+L அல்லது Alt+D தட்டவும்.

கூகுள் குரோம் பிரவுசரின் சில வசதிகளுக்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:

Ctrl+B:புக்மார்க்ஸ் உள்ள பாரினை காட்டவும் மறைக்கவும் செய்திடும்.

Ctrl+Shift+B:புக்மார்க் மேனேஜரைத் திறக்கும்.

Ctrl+H: ஹிஸ்டரி பேஜ் திறக்க.

Ctrl+J: டவுண்லோட் பேஜ் திறக்க.

Shift+Escape: டாஸ்க் மேனேஜரைப் பார்க்க.

Shift+Alt+T:டூல்பார் மையமாக்கப்பட்டு வலது மற்றும் இடது அம்புக்குறி கீகளை அழுத்துகையில் அதற்கேற்ப பட்டன்களுக்கு கர்சர் செல்லும்.

குரோம் பிரவுசரில் வெப் பேஜ்களுக்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:

Ctrl+P: அப்போதைய இணையப் பக்கத்தினை பிரிண்ட் செய்திட.

Ctrl+S : அப்போதைய இணையப் பக்கத்தினை சேவ் செய்திட.

F5 : அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் சர்வரில் இருந்து கொண்டு வர.

Esc:சர்வரில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் தளப் பக்கத்தை நிறுத்த.

Ctrl+F இணையப் பக்கத்தில் ஏதேனும் சொல்லைத் தேடத் தேவையான

Ctrl+G கட்டம் திறக்க.

Ctrl+Shift+G அல்லது

Shift+F3:இதே கட்டத்தில் தேடப்படும் சொல் அடுத்து உள்ள (அதே இணைய தளத்தில்) இடத்தைக் கண்டறிந்து காட்ட.

Ctrl+F5 அல்லது Shift+F5 இதே கட்டத்தில் தேடப்படும் சொல் இதற்கு முன்பு உள்ள (அதே இணைய தளத்தில்) இடத்தைக் கண்டறிந்து காட்ட.

நடுவே ஸ்குரோல் வீல் உள்ள மவுஸில் அந்த வீலை நகர்த்தினால் தானாக ஸ்குரோல் வேலை மேற்கொள்ளப்படும். மவுஸை நகர்த்தினால் அந்த தளம் அந்த திசைக்கேற்ப நகர்த்தப்படும்.

Ctrl+F5 அல்லது Shift+F5 ஏற்கனவே ஒரு தளம் இறக்கப்பட்டு கம்ப்யூட்டரின் மெமரியில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் முதலில் இருந்து தளம் இறக்கப்பட.

Ctrl+U: இணைய தளத்தின் சோர்ஸ் கோடினைப் பெற.

ஒரு வெப்சைட்டில் உள்ள லிங்க்கிற்கு புக் மார்க் அமைத்திட அந்த லிங்க்கினை புக்மார்க் பாருக்கு இழுத்துச் சென்று விட வேண்டும்.

Ctrl+D:நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டிற்கு புக் மார்க் அமைத்திட.

F11: முழுத்திரையில் இணையப் பக்கத்தினைப் பார்க்க. பின் மீண்டும் முழுத் திரையிலிருந்து விலகி வழக்கமான முறையில் பார்க்க.

Ctrl++ அல்லது Ctrl and scroll mousewheel up: வெப்சைட்டில் உள்ள அனைத்தையும் பெரிது படுத்திப் பார்க்க.

Ctrl+ அல்லது Ctrl and scroll mousewheel down: வெப்சைட்டில் உள்ள அனைத்தையும் சிறியதாக்கிப் பார்க்க.

Ctrl+0: இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தையும் நார்மல் அளவிற்குக் கொண்டு வர.

நீங்கள் அடிக்கடி உங்கள் ஹோம் பேஜில் உள்ள தளத்திற்குச் சென்று அதனைக் காண விரும்புபவரா? அப்படியானால் அதனை ஒரே கிளிக்கில் கிடைக்கும்படியான பட்டனை கூகுள் குரோம் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options” தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options” டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Basics”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Home page”என்பதற்குக் கீழாக “Show Home button on the toolbar”என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

5. “Close”கிளிக் செய்து டயலாக் பாக்ஸினை மூடவும்.

டவுண்லோட் செய்யப்படும் பைல்கள்

கூகுள் குரோம் பிரவுசர் வழியாக டவுண்லோட் செய்யப்படும் பைல்கள், பிரவுசரால் டிபால்ட்டாக ஏற்படுத்தப்பட்ட போல்டரில் தான் சேவ் செய்யப்படும். “Documents” போல்டரில் “Downloads” டைரக்டரியில் தான் இவை சேவ் செய்யப்படுகின்றன.

நாம் டவுண்லோட் செய்யப்படும் பைலின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் சேவ் செய்திட விரும்புவோம். இதற்கு பிரவுசர் நம்மிடம் இந்த டவுண்லோட் செய்யப்படும் பைலை எங்கு சேவ் செய்திட என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டால்தான் சரிப்படும். அப்போது நாம் விரும்பும் டிரைவ் மற்றும் போல்டரின் பெயரை டைப் செய்திட முடியும். திரைப்பட பைல்கள் என்றால் Movies என்று ஒரு டைரக்டரியிலும், ஆடியோ பாடல்கள் என்றால் Songs என்னும் டைரக்டரியிலும், அப்ளிகேஷன் புரோகிராம் என்றால் சாப்ட்வேர் என்னும் டைரக்டரியிலும் எனப் பிரித்து டவுண்லோட் செய்திடலாம்.

இதற்கான டயலாக் பாக்ஸ் கிடைத்திடக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options”தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options”டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Minor Tweaks”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Download Location” என்பதற்குக் கீழாக “Ask where to save each file before downloading” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

பயர்பாக்ஸ் தளத்தை குரோம் பிரவுசரில் பார்க்க:

சிலர் இரண்டு பிரவுசரகளைத் திறந்து வைத்து இரண்டின் மூலமாகவும் இணைய தளங்களைப் பார்வையிடுவார்கள். குரோம் மற்றும் பயர்பாக்ஸில் பார்த்துக் கொண்டிருந்தால், பயர்பாக்ஸில் குறிப்பிட்ட டேப்பினை அப்படியே இழுத்து வந்து குரோம் பிரவுசரில் விட்டால் இங்கு புதிய டேப்பில் அந்த தளம் திறக்கப்படுவதனைக் காணலாம். யு.ஆர்.எல். முகவரி எல்லாம் தனியே காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் வேலையே வேண்டாம். இதற்கு பயர்பாக்ஸ் டேப் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று இடது பட்டனை அழுத்தியவாறு அப்படியே இழுத்து வந்து குரோம் பிரவுசரில் விட்டுவிடலாம்.

இதற்கு முன்கூட்டியே குரோம் பிரவுசரில் புதிய டேப் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பது நல்லது. இல்லாமல் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் டேப் ஒன்றில் விட்டால் அதில் உள்ள தளம் மறைந்து போகும்.

குரோம் பிரவுசரை டிபால்ட் பிரவுசராக்க:

குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடும்போதே அதனை உங்கள் டிபால்ட் பிரவுசராக அமைத்திடவா என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது யெஸ் அழுத்திவிட்டால் அப்போதிருந்து நீங்கள் லிங்க் ஒன்றை அழுத்தினால் குரோம் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த தளம் லோட் ஆகும். இன்ஸ்டால் செய்கையில் இதற்கு வேண்டாம் சொல்லி பிரவுசரை அமைத்துவிட்டீர்கள். பின் இதன் பயன்பாட்டினால் ஈர்க்கப்பட்டு அதனை டிபால்ட் பிரவுசராக அமைத்துக் கொள்ள விரும்பினாலும் அதனை அவ்வாறாக அமைக்கலாம்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options”தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options” டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Basics”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Default browser” என்பதற்குக் கீழாக “Make Google Chrome my default browser” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

5. “Close”கிளிக் செய்து டயலாக் பாக்ஸினை மூடவும்.

ஒவ்வொரு டேப்பின் மெமரி அளவைக் காண:

குரோம் பிரவுசரில் பல டேப்களில் தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். இந்த டேப்பில்திறக்கப்படும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு அளவினாதாக இருக்கும். ஒரு சில ஒரு ஸ்கிரீனில் அடங்கி விடுவதாக இருக்கும். சில பல பக்கங்களைக் கொண்டதாகவும், நீளமானதாகவும் இருக்கும். இவை உங்கள் கம்ப்யூட்டர் மெமரியில்தான் இடம் பிடித்து உங்களுக்குக் காட்சி அளிக்கின்றன. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு டேப்பில் உள்ள தளங்களும் மெமரியில் எவ்வளவு இடத்தைப் பிடிக் கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

மிக அதிகமான தகவல்களைக் கொண்டுள்ள தளத்தினைக் காண்கையில் இதனை அறிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் அத்தகைய வேளைகளில் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சினையின் தன்மையை உணர்ந்து சரி செய்திட அவற்றின் மெமரி அளவைத் தெரிந்து கொள்வது உதவும்.

கூகுள் குரோம் இதற்கென பிரவுசர் மற்றும் அதில் உள்ள டேப்கள் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தை அறிய டாஸ்க் மேனேஜர் ஒன்றைக் கொண்டுள்ளது. இதனைப் பெற கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும்.

1.கூகுள் குரோம் விண்டோவின் மேல் பகுதியில் ரைட் கிளிக் செய்து “Task Manager” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. பின் Shift + Escஅழுத்தவும்.

3. பின் “Control the Current Page” என்ற பட்டனை அழுத்தவும். அதன்பின் “Developer” என்பதில் கிளிக் செய்து “Task Manager”என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டாஸ்க் மேனேஜர் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இப்போது பிரவுசர் மற்றும் ஒவ்வொரு டேப்பும் எடுத்துக் கொள்ளும் மெமரியின் அளவுகள் அடங்கிய அடிப்படைத் தகவல்கள் உள்ள கட்டம் கிடைக்கும். இன்னும் அதிகத் தகவல்கள் வேண்டும் என்றால் Stats for nerds என்ற பட்டனை அழுத்தவும். இதனை யு.ஆர்.எல். பாரில் about:memory என்பதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பெறலாம். இங்கு பிரவுசர் மற்றும் ஒவ்வொரு டேப்பும் எடுத்துக் கொள்ளும் மெமரி மற்றும் சார்ந்த செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம்.