வாழ்க்கையை புரட்டிப்போடும் சர்க்கரை நோய்!

வாழ்க்கையை புரட்டிப்போடும் சர்க்கரை நோய்!

மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று தொல்லையில்லா வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1. சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?

2. சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?

3. சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.

4. பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.

முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரப்பையை அடைந்தவுடன் செரித்து இரப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

சர்க்கரை நோய்: நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல் லாது ஆல்பாசெல், பீட்டா செல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.

(ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.

(பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது) இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.

“ஏ’யும் “பி’யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.

சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.

சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.

கேசம் முதல் நகம் வரை: சர்க்கரை நோய் உச்சந்தலை கேசம் முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக் குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப்ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.

மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.

டயாபடிக் நெப்ரோபதி என்ற சிறுநீரகக் கோளாறு: சிறுநீரகம், உடலிலுள்ள கழிவுகள் இது நாம் உண்ணும் உணவில் உள்ள செரிமானத்திற்கு பிறகு ரத்தத்திலுள்ள வேண்டாத வேதியியல் பொருட்களை உடல் உறுப்புக்களால் ஏற்கப்பட்டு மீதி தேவை இல்லாத கழிவுப் பொருட்களான யூரியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுவது நெப்ரான் என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடி. இது கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். இது கெட்டுவிட்டால் யூரியா, கிரியாட்டின் மேலும் பொட்டாசியம் அதிகமாகி சிறுநீரகம் செயலிழக்கிறது.மூன்று மாதம் ஒரு முறை: பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு துல்லியமாக சீராக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிய கிளைக்கேர் சுலேட்டு நிமோக்குளான் அளவு பார்த்து சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நெப்ரான் என்ற சிறுநீரக உறுப்பு மிகவும் முக்கியமானது. சர்க்கரை நோயினால் இது பாதிக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.

இதற்கு முக்கிய பரிசோதனைகளான எச்.பி.ஏ.சி., என்ற கிளைகோ சிலேட் ஹிமோகுளோபின் ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள குளுகோஸ் அளவை துல்லியமாக மூன்று மாதமாக எப்படி சர்க்கரை வியாதி இருந்திருந்தது என்பதைக் காட்டும். இது முக்கிய பரிசோதனை. இரண்டாவது பரிசோதனை மைக்ரோ ஆல்பர்னியூரியா. இது சிறுநீரகத்தின் உயிர்நாடியான நெப்ரானின் செயல்பாட்டைக் குறிக்கும்.

கை, கால்களை முடக்கும்: மூளையைத் தாக்கி, உடலில் உள்ள கை, கால்களை செயல் இழக்கச் செய்து தற்காலிக ஸ்டிரோக் அல்லது நிரந்தர ஸ்டிரோக்கை உண்டாக்கி உடலின் பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது. சர்க்கரை இதய நோய் பாதிப்பு உயிரைப் பறிக்கும். மற்ற உறுப்பு பாதிப்புகளினால் உயிர் உடனே போகாது. வாழ்க்கை பாதிக்கும். சர்க்கரை நோய் எத்தனை காலம், ஓராண்டாகி, ஐந்து, பத்து, இருபது ஆண்டா என்பதைப் பொறுத்து இதய தாக்கத்தை சொல்லலாம். முப்பது ஆண்டுகளில் பல நூறு கட்டுரை, பல புத்தகங்கள் சர்க்கரை நோயினால் வரும் இதய நோய்கள் பல உள்ளன. இதற்கு இந்த கட்டுரை போதாது. முக்கியமா இதய நோயைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மைக்ரோ ஆஞ்சியோபதி, பெரிய ரத்தக் குழாய்களை தாக்கி, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உண்டாக்குகிறது. கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளங்கள் பாதிப்பால் இதய தசைகள் பாதிக்கப்பட்டு இதய வீக்கம் ஏற்பட்டு மையோபதி என்ற வியாதி டயபடிக் கார்டியோ மையோபதி என்ற இதய வீக்க நோய் ஏற்படுகிறது. இதை சர்க்கரை நோய் கண்டுபிடித்த நேரத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

இதய நோயாளி சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்த வர்களும் சரி, பைபாஸ் செய்தவர்களும் சரி, ஸ்டென்ட், பைபாஸ் கிராப்ட் இவைகளை பாதுகாத்து வர வேண்டும்.

ஏன்?

சர்க்கரை வியாதி கண்டவர்களுக்கு கரோனரி ஸ்டென்ட்டும், பைபாஸ் கிராப்ட்டும் எளிதில் அடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு தாறுமாறாக ஏறும் இறங்கும் சர்க்கரை அளவும் கெட்டக் கொழுப்புகளான டி.எச்.எப்., எல்.டி.எல்., தான் காரணம்.

புது பரிசோதனை: சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க இன்று வரை வெறும் வயிற்று சர்க்கரை அளவு பரிசோதனையும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு பரிசோதனையும் உடலில் குளுகோஸ் தாங்கும் திறனைக் கண்டுபிடிப்பது என்ற நிலை மாறி இப்போது சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை துல்லியமாக தெரிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிசோதனை எந்நேரமும் செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு. 6 சதவீதம் சர்க்கரை நோய் இல்லை 6.5 சதவீதத்துக்கு மேல் நோய் உள்ளது. இது எப்படி கரோனரி நோய்க்கு ஆஞ்சியோகிராம் கோல்டு ஸ்டென்டோ அதுபோல சர்க்கரைக்கு இது முக்கிய டெஸ்ட்

ரத்தக்குழாய் அடைப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப் பாட்டில் இருந்தால் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிய வேண்டும். (ஏ) ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை அடைப்பு இருக்கலாம் (பி) பத்து ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் 90 சதவீத அடைப்பு. ஒரு இடத்தில் அல்லது பல இடத்தில் அடைப்பு இருக்கலாம்.

(சி) 10 ஆண்டு முதல் 20க்குள் இருந்தால் அடைப்பு ஒரு இடத்தில் மட்டுமல்லாது ரத்தக் குழாய் முழுவதும் அடைப்பு இருக்கும். ஒரு குழாய் மட்டுமல்லாது பல குழாய் அடைப்பு இருக்கும். (டி) சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய் சிறுத்துப் போய் கரோனரி ரத்தக் குழாய் விட்டம் 2 மில்லி மீட்டர் அதற்கு குறைவாக இருக்கும். இது பரிதாபமான நிலை.

பைபாஸ் கிராப்ட் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீனஸ் கிராப்ட்டுக்கு சில காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கு மேல் வீனஸ் கிராப்ட் மூட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் வரை கிராப்ட் மூடாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

வீனஸ் கிராப்ட் இது இணைப்பு தான். லீமா, ரிமா என்ற ஆர்ட்டியல் கிராப்ட் கரோனரி ரத்தக் குழாய் போல் இயங்கும். வீனஸ் கிராப்ட் இணைப்பில் ரத்தம் உறைந்து மூடிவிடும். வீனஸ் கிராப்ட் நாளாவட்டத்தில் செயலிழக்கும். இந்த வீனஸ் கிராப்ட்டுக்கு ஆஞ்சியோ பிளாஸ் டிக்கு ஸ்டென்ட் வைக்கப்படுகிறது. இந்த ஸ்டென்ட் எளிதில் மூடிவிடும். மறு பைபாஸ் சிறந்தது. ஸ்டென்ட் அடைக்காமல், ஸ்டென்ட்டையும் மிகவும் பாதுகாக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.

நண்பனாக்கி கொள்ளுங்கள்: சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பல விளைவுகளோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் வியாதி வந்தது என்று கவலைப்பட்டு சோம்பேறியாய் மூலையில் இருப்பது நல்லதல்ல. சலிப்பு, வெறுப்பு இவைகள் அதிகமாக தாழ்வு உணர்ச்சி மேலோங்கி தற்கொலைக்கு தூண்டும். பல் தேய்த்து, குளிப்பது போல சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு தடவை நினைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

பேராசிரியர் சு.அர்த்தநாரி, 044-24890185.

%d bloggers like this: