Daily Archives: ஓகஸ்ட் 14th, 2009

தற்கொலை செய்யும் தாவரங்கள்

கொலையும், தற்கொலையும் மனித இனத்தின் மோசமான மறுபக்கங்கள். தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன், சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான். இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு

உள்ளது.ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்தி வைத்துவிடுகிறது.

வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து தெரிவித்ததாவது:-

இதுவரை இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே காரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயல் இழக்கச் செய்துவிட்டாலும் அதன் மையப் பகுதி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தற்கொலைத் நிகழ்வு அதன் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்து செல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம், இலையுதிர் காலத்தில் தனது இலைகளை உதிர்த்துவிட்டு சாதகமான சூழலுக்கு காத்திருக்கும் அந்த மாற்றத்தைப் போன்றதுதான். அதே வேளையில் தாவரங்கள் மற்றொரு பாதுகாப்பு யுத்தியாக திடீர் ரசயானங்களை சுரந்தும் பூச்சி இனங்களுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றன.

இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினார்கள்.

புற்று நோயின் தீவிரத்தை தவிர்க்க…

புற்றுநோய் மெல்ல மெல்ல மரணத்தைத் தரும் கொடிய வியாதி. வாய், வயிறு, ரையீரல் என்று உடலின் எந்தப்பாகத்தையும் புற்றுநோய் பதம் பார்த்துவிடும். இந்த கொடிய வியாதியால் மரணத்தை தழுவுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்புவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்லாந்து ஆய்வாளர்கள், மேற்கு பின்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்து 560 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் அனைவரும் 42 வயதில் இருந்து 61 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களது உடல் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டதோடு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தியது தெரியவந்தது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப்புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக ரையீரல் மற்றும் இரப்பை புற்றுநோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அவை என்னென்ன பயிற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 1.மெதுவாக ஓடுவது (ஜாகிங்), 2. நீச்சல் பயிற்சி, 3. படகு ஓட்டுதல். இவற்றோடு நீங்கள் வழக்கமாக செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஸ்குவாஷ் மற்றும் கால்பந்து விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித வெடிகுண்டை’ கண்டுபிடிக்கும் `டிடெக்டர் அமெரிக்க மாணவர்கள் சாதனை

தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் உலக அமைதிக்கு எதிரானவர்கள். இவர்களால் ஏற்படும் பெரும் இழப்புகளை நாம் அவ்வப்போது செய்தி களாக படிக்கிறோம். இதுபோன்ற தற்கொலைப் படை யினரை தடுக்க என்ன செய்யலாம் என்று உலக நாடுகள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் மாணவர்கள் இதற்காக புதிய டிடெக்டரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் நில்டன் ரென்னோ என்பவர் தலைமையில் இதை வடிவமைத்து உள்ளனர். இந்த டிடெக்டர்கள் ஏற்கனவே உள்ள மேக்னடோ மீட்டர், மெட்டல் டிடெக்டர்கள் போல செயல்படும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும், கையடக்க அளவு உடையது. நெகிழும் தன்மை உடைய சென்சாரை கொண்டது. இந்த சென்சார் 2 பவுண்ட் எடையே இருக்கும். வயர்லஸ் முறையில் இயங்கும் இந்த சென்சார், வெடிகுண்டுகளை மேஜை, பூ ஜாடி உள்பட எங்கு மறைத்து வைத்திருந்தாலும் எளிதில் அடையாளம் காட்டிவிடும்.

மேலும் இதை உடலில் பொருத்திக் கொண்டு இருந்தால் தற்கொலைப் படையினர், ஆயுதம் தாங்கிய எதிரிகள் அருகில் நெருங்கினாலோ, நமக்கு அருகில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாலோ சென்சார் எச்சரிக்கை விடுக்கும். இதனால் நாம் உஷாராகிவிடலாம்.

இந்த நவீன டிடெக்டருக்கு ஐ.ஈ.டி. (இம்ப்ரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்) என்று பெயரிட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த விமானப்படை கண்காட்சியில் இந்த டிடெக்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.

இதை உருவாக்கிய மாணவர்கள் 7 பேர். அவர்கள் 1.ஸ்டீவ் போலண்ட், 2.ஆண்ட்ரி சுபைன், 3. பிரைன் கேல், 4.கெவின் குவாங், 5.மைக்கேல் சின், 6.விட்டலி சாட்கோவிஸ்கி, 7. அஸ்வின் லாலன்ட்ரன். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிடெக்டரை ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் போர் எல்லையில் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இளம்பருவத்திற்கு தேவையான உணவுகள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடிம்.

சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரைம், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாபிட்டு குடாக இருப்போரைம் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது.

நீங்களும் அழகான, வாளிபான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா? தொடர்ந்து படிங்கள்…

இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதபடும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.

வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களை குறிக்கும். இவர்கள் உடலில் வேகமான வளர்ச்சி 91/2 வயதில் தொடங்கி 131/2 ஆடுகள் வரை தொடர்கிறது.

பொதுவாக ஒரு பெண் சராசரியாக 121/2 வயதில் பூப்பெய்துகிறாள். அவளது உடலில் பெரிய அளவிலான வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது.

இவர்களுக்கான சத்தான உணவு பரிந்துரைகளின் பட்டியல் 10 முதல் 12 வயது, 13-15 வயது, 16-18 வயது என்ற 3 பிரிவுகளாக

உள்ளது.வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தைம், பொதுவான எடையில் 53 சதவீதத்தைம், உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தைம் எட்டியிருப்பார்கள்.

அந்த வளர் இளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் எடை இரு மடங்காக உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரைம், கொழுபு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாயப்பு உண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிப்பு நேரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. கருமுட்டை உற்பத்தி சுழற்சியைம், கால்சியம் அளவை 300 கிராம் முதல் 750 கிராம் வரையிலும் பராமரிபதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.

எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம்.

இன்றைய வளர் இளம் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது இருக்கிறது.

அதாவது… சாப்பிடுவதற்கு எதைத் தேர்வு செய்வது என்பதில் பெரிய அளவில் கட்டுப்பாடு வைத்துக்கொள்வது தங்கள் வயதை ஒத்தவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களால் தீவிரமாக ஈர்க்கப்படுதல் மது குடிக்க, புகை பிடிக்க மற்றும் முளையை பாதிக்கும் வகையில் நரம்பு மடலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மருந்துகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகுதல் ஸ்லிம் ஆக இருபதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தி விடுதல். உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருத்தல் பெற்றோரின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்ட உணவு பழக்கத்தை பின்

பற்ற வேண்டும் என்று கருதுதல்.

இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன.

சுப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்கபடும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந்த பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன.

அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து.

அதற்கு என்ன செய்யலாம்? அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேடும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேடும். அதை வராமலும் தடுக்க வேண்டும். உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேடும். தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். சத்து குறைவான உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும், சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனோரீதியாக கண்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.

மேலும், உடலுக்கு தேவையான சத்து கிடைபதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி, அதை பின்பற்ற வேடும்.

அதற்காக, பலவகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது குறைவான கொழுபுச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்வு செய்வது காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது கணிசமான அளவுக்கு சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

வளர் இளம் பருவ பெண்கள்

இனி என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி பார்போம்…

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெகள் தினமும் 30 முதல் 70 கிராம் வரைம், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரைம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும்.

டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பச்சை இலை காய்கறிகள்.

2. வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

3. கிழங்குகள் – தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.

4. குருப் – 1 காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

5. குருப் – 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளைம் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குருப் – 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரைம், கு 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரைம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்கறிகளை போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றைம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

– இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.

பன்முகச் சந்தைப்படுத்தலால் யாருக்கு லாபம்…?

அண்மைக்காலமாக புற்றீசல்களாக பெருகி வருவது “சங்கிலித் தொடர்’ விற்பனை முறையான எம்.எல்.எம். (பன்முகச் சந்தைப்படுத்தல்). இதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நட்பாசையில் ஏராளமான மத்தியதரக் குடும்பங்கள் இதில் இறங்குகின்றன.

ஏற்கெனவே இந்தை சந்தைப்படுத்துதலில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சக்கைப்போடு போட்டன. நாளடைவில் மோசடி எனப் பெயர் வாங்கிவிட்டன.

யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு உப தொழில் இருக்கும். நம்பிக்கையுடன் கையில் பேஸ்ட், சோப்பு, பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சகிதமாக வலம் வந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் ஏராளமான கற்பனையில் படு சுவாரசியமாக இந்த விற்பனையில் ஈடுபட்டனர். விளைவு முதன்முதலில் சேர்ந்தவர்கள் பலர் நல்ல லாபம் ஈட்டினர். ஓரே குடும்பத்தில் பலர் உறுப்பினர் ஆனார்கள். ஆனால் முக்கால்வாசிப் பேர் உள்ளதும் போனதே என நொந்தனர்.

இந்த வர்த்தகத்தில் பல திட்டங்களும், முறைகளும் உள்ளன. அதில் வெற்றிகண்டவர்கள் சிலர் மட்டுமே. சாதாரணமாக, நேரடி வர்த்தகத்தைவிட இந்த வர்த்தகம்தான் எதிர்காலத்தில் நடைமுறையில் இருக்கும் என இத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுவதுண்டு.

இன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி ஏராளமானோர் இத் துறையில் இறங்கிவருகின்றனர். இதில் எத்தனை சதவிகிதம் பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக, இந்த வர்த்தகமுறையில் சங்கிலித் தொடரை சரியாக முடிக்காதவர்கள் தோல்வியைத்தான் சந்திக்கின்றனர்.

ஆரம்பத்தில் வெறும் ரூ.6 ஆயிரம் கட்டினால் போதும். அப்புறம் பாருங்கள் நீங்கள் 24 வது மாதத்தில் அதிகம் லாபம் பெறலாம் என்பார்கள்.

24 மாதங்களுக்குப் பிறகு லாபம் கிடைக்காதவர்கள் கேள்வி கேட்டால், நீங்கள் மாதாமாதம் இத்தனை நபரைச் சேர்க்க வேண்டும், இவ்வளவு பொருள்களை விற்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகை கிடைக்கும் என்பார்கள்.

மாதத்துக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு சோப்பு, பேஸ்ட், பவுடரை வாங்கினால்தான் ரூ. 500 கிடைக்கும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் ஒருவருக்கு 20 சதவிகித லாபம் என்று வைத்துக் கொண்டாலும் ரூ.1000 கிடைக்கும்.

இங்கு அதுவும் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக வெளியில் அதிகமாக விற்பனையாகும் பொருள்களை ஏஜன்சி எடுத்தால் கூட 20 சதவிகித லாபம் போக தவணை முறை, பின் தேதியிட்ட காசோலை வசதி, இன்சென்டிவ், டிஸ்ப்ளே, இதர சலுகைகள் என குறிப்பிட்ட தொகையையும் நிறுவனத்தினரே தருகின்றனர்.

இப்படிப்பட்ட சலுகைகளை எல்லாம் விட்டுவிட்டு எம்எல்எம் முறையில் பொருள்களை வாங்குவது சிரமமானது என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூச்சம், கெüரவம் இதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

ஒரு நபரை இந்த முறையில் சேர்ப்பதற்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று, போலியாக முகஸ்துதி செய்து, எப்படியாவது மனதை வசியப்படுத்த வேண்டியிருக்கிறது.

அப்படி தாராள மனசு வைத்து சேரும் நபர்கள் கேட்கும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்குள் அப்பாடா…என்ன பிழைப்பு என்ற கேள்வி மனதுக்குள் எழுவதுண்டு.

ஒருவழியாக குறிப்பிட்ட நபர்களை சேர்த்தபிறகு, அதன் பலன் எப்படியிருக்கும் என்றால், விடாமல் மீட்டிங் நடத்த வேண்டும். தேவையற்ற பொய்களைக் கூறியே ஆக வேண்டும்.

இதெல்லாம் தொடர்ந்து செய்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஆனால், எத்தனை பேர் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

இப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில், சவாலாக சிலர் இத் தொழிலில் வெற்றிபெற்றும்விடுகின்றனர்.

முழுநேரத் தொழிலாக பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். பகுதி நேரமாக பார்ப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

இன்று ஏராளமானோர் பணத்தைக் கட்டி, கடினமான விதிமுறைகளின் காரணமாக போட்ட பணத்தையே திரும்ப வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இப்படி சேர்ந்த பணத்தை அந் நிறுவனங்கள் சுருட்டி வைத்துக் கொள்கின்றன. திரும்பத் தருவதுமில்லை. இப்படி இருந்தால் ஏழைகள் எப்படி இத்தொழிலை தொடரமுடியும் என்பதுதான் நமது கேள்வி.

மொத்தத்தில் இன்று புதிய எம்எல்எம் நிறுவனங்கள் முளைத்து வருவது நல்லதா கெட்டதா என்பதை உடனே கூறிவிட முடியாது. இதற்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால் ஏமாற்றமடையாமல் தடுக்க வழி கிடைக்கும்.

யார் “எம்எல்ஏ’க்கள்?

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.

இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.

இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.

காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி “ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?’ எனக் கேட்டார்.

பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்.

“ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?’ எனக் கேட்டார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் “எங்கே ஜீவானந்தம்?’ எனக் கேட்டார்.

அவரது குடிசை வீட்டுக்குச் சென்று “வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்’ என்றார் காமராஜர். “இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்’ என்றார் ஜீவானந்தம்.

இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.

காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக – தலைகீழாக மாறியிருக்கிறது.

ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.

அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்…

அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.

அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு “அதிகாரப்பூர்வமாகவே’ சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்…

பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு.

இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) உருவாக்கியுள்ளது. அது அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

உலகில் இப்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் இவ்வகை சப்மரீனைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்க இந்தியா பெரும்பாடுபட்டது என்று சொல்லலாம்.

டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் சாதாரண சப்மரீன்களைக் கட்டுவது என்பது எளிது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் சப்மரீனைக் கட்டுவது என்பது எளிதல்ல. இந்தியா டீசலினால் இயங்கும் சப்மரீன்களை ஏற்கெனவே தயாரித்து வருகிறது. டீசல் சப்மரீன்களை வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால், அணுசக்தி சப்மரீன்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அதைத் தயாரிப்பதற்கு உதவி அளிப்பதும் கிடையாது. ஆகவே இந்தியா சொந்தமாக அணுசக்தி சப்மரீனை வடிவமைத்துத் தயாரிக்க வேண்டியதாயிற்று.

டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சப்மரீன்களால் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்பியாக வேண்டும். நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அது சத்தம் எழுப்பும். அதன் காரணமாக அது இருக்கின்ற இடத்தை எதிரி சப்மரீனால் கண்டுபிடித்து எளிதில் தாக்க இயலும்.

இரண்டாவதாக டீசல் எஞ்சின் இயங்குவதற்கு காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஆகவே, மேலே வந்து நீரில் மிதந்த நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் நீருக்குள் மூழ்கிய நிலையில் பாட்டரி மூலம் – மின்சாரம் மூலம் சப்மரீன் செயல்படும். இக் காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல் – எலக்ட்ரிக் சப்மரீன் என்று அழைக்கப்படுகின்றன. எதிரியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனால் இயங்க இயலாது.

அணுசக்தி சப்மரீன் இந்த வகையில் மேலானது. இந்த சப்மரீனில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணு உலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். மறுபடி 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இராது. அணுசக்தி சப்மரீன் ஒன்றினுள் போதுமான உணவுப் பொருள் இருக்குமானால் அது தாய்த் துறைமுகத்துக்கு வராமல் நீருக்குள் இருந்தபடி உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி சப்மரீன் நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது. அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலை இயங்குவதற்கு காற்று தேவையில்லை. எனவே நீருக்கு அடியிலிருந்து வெளியே தலைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீருக்குள் கடலுக்குள் எங்கிருக்கிறது என்பதை அனேகமாகக் கண்டுபிடிக்க இயலாது.

அணுசக்தி சப்மரீனில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். இந்த சப்மரீன் அட்லாண்டிக் கடல், பசிபிக் கடல், இந்துமாக் கடல் என உலகின் எந்த ஓர் இடமாக இருந்தாலும் அங்கே இருந்தபடி எதிரி நாட்டை நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.

அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்கள் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளைப் பெற்றுள்ளன. இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீனில் இப்போதைக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளே இடம் பெறும். எதிர்காலத்தில் மேலும் அதிக தொலைவு செல்லும் ஏவுகணைகள் இடம்பெறலாம்.

இந்தியா அணுசக்தி சப்மரீனை உருவாக்க சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகின. பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம். மின்சார உற்பத்திக்கான அணுஉலைகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் மின்சார நிலையங்களுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. சப்மரீனுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. மின்சார நிலையங்களுக்கான அணு உலைகள் வடிவில் பெரியவை. பொதுவில் அணு உலைகள் கடும் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவை. இக் கதிர்வீச்சு ஆபத்தானவை. பெரிய அணுமின் நிலையங்களில் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படாதபடி தடுக்க கனத்த சுவர்கள் இருக்கும்.

இவற்றுடன் ஒப்பிட்டால் அணுசக்தி சப்மரீனில் இடம்பெறுகின்ற அணு உலையானது வடிவில் சிறியதாகவும் சக்திமிக்கதாகவும் உள்ளது. சப்மரீனில் பணியாற்றுகின்ற ஊழியர்களை கதிர்வீச்சு தாக்காதபடி சிறப்பான பாதுகாப்பு உள்ளது.

சப்மரீனில் இடம்பெறும் அணு உலையில் பயன்படுத்தப்படுகிற அணுசக்திப் பொருள் வேறானது. பொதுவில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் சப்மரீனின் அணு உலையில் இடம்பெறும். இந்தியா இதையும் தயாரிக்க வேண்டி வந்தது.

அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக சப்மரீனில் சுழலி இயங்க சப்மரீன் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். சப்மரீனுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.

சப்மரீனுக்கான அணு உலை எடை மிக்கது. ஆகவே சப்மரீனில் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணு உலை சப்மரீனில் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் சப்மரீன் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி சப்மரீனில் இடம்பெறும் அணு உலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சப்மரீனைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.

எல்லா வகை சப்மரீன்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சப்மரீன்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த சப்மரீன்களைக் கண்டுபிடித்து விட முடியும். எதிரி சப்மரீனின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய சப்மரீனின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி சப்மரீனை எதிரி சப்மரீன்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.

இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் இந்த சப்மரீன் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

இந்தியாவின் டீசல் – எலக்ட்ரிக் சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீன் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது. இதுபோன்று மேலும் பல அணுசக்தி சப்மரீன்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.

எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் சரி, எந்தவிதத் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, அது அணுசக்தி தொடர்பான பணிக்குப் பயன்படுத்தப்படலாம் என்றால் அதை யாரும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என அமெரிக்கா விதித்த தடை (இந்தியா – அமெரிக்கா அணுசக்தி உடன்பாடு கடந்த ஆண்டில் கையெழுத்தானது வரையில்) அமலில் இருந்த காரணத்தால் அணுசக்தி சப்மரீன் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருள்களை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. இப்படியான பல பிரச்னைகளைச் சமாளித்துத்தான் இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

சர்வக்ஞர் கூறும் அறம்

நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்து அறம் மற்றும் நீதிக்குத் தான் முதலிடம். முக்தி அடைவதுதான் அக்கால மனிதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. அதற்கு முக்கியமான கருவி அறம். இந்த மனித உலகில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் அற இலக்கியங்களின் முக்கிய நோக்கமாகும்.

தார்மிகக் காவியங்களும் சாஸ்திர நூல்களும் கூறுவது இதனைத்தான். காவியங்களில் ஏதோ ஓர் அரசனின் அல்லது மகா புருஷனின் கதை இருந்தாலும் அதன் லட்சியப் பின்னணி தருமத்தை நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தில் அவர்கள் வாழும் பொழுது எப்படி நாலு பேருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். நன்னடத்தையால் பெயர் பெற்றார்கள் என்று சொல்வது தான் அந்த நூல்களின் குறிக்கோள் என்று சொல்லலாம். நீதி இல்லாமல் அறம் இல்லை; நல்லொழுக்கம் இல்லாமல் நற்கதி இல்லை. அதனால் அறத்தைப் போதிக்கிற எல்லோரும் நீதியைச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பிற மொழிகளிலும் நீதி இலக்கியங்கள் உள்ளன. கர்நாடகத்தில் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மக்கள் கவிஞர் சர்வக்ஞர். இவர் எப்பொழுதும் லோகசஞ்சாரம் செய்பவர். அப்படி அவர் ஊர்ஊராகச் செல்கிறபொழுது ஆங்காங்கே தான் கண்ட, உண்ட அனுபவங்களையும் கற்றுக்கொண்டதையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள முடியும். தான் இப்படித்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக சர்வக்ஞர் ஒரு பாடலில் தெரிவிக்கிறார்:

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தால் ஆனவனோ?

சர்வபேரிடமும் ஒவ்வொன்றைத் தான் கற்றுக் கல்வியின்

மேருவாய் ஆனான் சர்வக்ஞன்

“த்ரிபதி’ எனும் பெயர் கொண்ட மூன்றடிகளால் எழுதப்பட்ட உரைப்பாக்களை இவர் எழுதியுள்ளார். கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் வழியாகத்தான் இந்த மூன்றடி வடிவ உரைப்பாக்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவம் கொண்டதால் இப்பாடல்கள் மக்களுக்கு உகந்த பாடல்களாயின. த்ரிபதிகள் மூலமாக சர்வக்ஞர் தம் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். எளிய மக்களுக்குப் புரிகின்ற நிலையில் மிக எளிமையாக உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்றார். கேட்டால் போதும் அவை மனதில் தங்கும் இயல்புடையவையாகும்.

சர்வக்ஞர் என்பது இவருடைய இயற்பெயர் அல்ல. மக்களிடமிருந்து கிடைத்த விருதுப்பெயர் அல்லது பட்டப்பெயராக இருக்கலாம் அல்லது கன்னட வீரசைவ வசனக்காரர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையே தமது காவியத்தில் புனைபெயராக வைத்துக்கொள்கிற பழக்கம் கர்நாடகத்தில் உண்டு. அதைப்போல் இவரும் தெய்வத்தின் பெயரையே தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கலாம். அனைத்தும் அறிந்த அறிவன் இறைவன் மட்டும்தான். அவ்விறைவனை மனத்துள் நிலைத்து வைத்துக் கொண்டுள்ளதன் குறியீடாகவும் இது இருக்கலாம்.

அனைவரும் தம் உறவினர் என்று வாழ்ந்த உலகக் குடிமகன் இவர். எனவே, யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்கிறார். சமூகத் தொண்டே வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி வாழ்ந்தவர். வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களைப் பற்றியும் பாடுகிறார்.

இசையில்லாப் பாட்டும் இன்பமில்லா வாழ்வும்

இசைவில்லா அரசனின் ஆட்சியும் பாழூரின்

மிசை வாழும் கூகை காண் சர்வக்ஞா

அரசன் என்றாலே அத்துடன் தியாகக் குணத்தையும் கொண்டிருக்க வேண்டும். அப்படி அல்லாத அரசனின் ஆட்சி பாழடைந்த ஊரிலுள்ள கூகைபோல் என்கிறார் அவர்.

கோடி வித்தைகளில் உழவே சிறந்தது.

நாட்டில் இராட்டைகளும் சுழலும். இலையெனில்

வாட்டங்கள் மிகுமே சர்வக்ஞா

இப்பாடலில் விவசாயத்தின் சிறப்பை அழகாகக் கூறுகிறார். கோடி வித்தைகளை ஒருவர் கற்றிருந்தாலும் விவசாயத்தை என்றும் மறக்கக் கூடாது. ஆட்சி நிர்வாகத்திற்கான அடிப்படைப் பொருளாதாரமாக இருப்பது விவசாயமே ஆகும்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்

உழந்தும் உழவே தலை’….

என்கிற குறளுடன் இதை இணைத்துப் பார்க்கலாம். வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் ஓர் எளிமையான சூத்திரத்தை நம்முன் வைக்கிறார். அது,

அன்னம் படைப்போருக்கும் உண்மை உரைப்போருக்கும்

தன்போல் பிறரைப் பார்ப்போருக்கும் கையிலாயம்

கண்முன் காட்சியாம் சர்வக்ஞா

அன்னம் படைப்பது, உண்மை உரைப்பது, தன்னைப் போலவே பிறரையும் காண்பது ஆகிய இம்மூன்றும் சர்வக்ஞன் கூறுகின்ற சூத்திரம். இதன் மூலமாகத் தானத்தையும், தானம் செய்கிறவன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறார். இவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முக்தியை அடையலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதனால், தானம் கொடுப்போனுக்கும் இறைவனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்கிறார்.

சர்வக்ஞரின் உலக அனுபவம் பரவலானது. அவருக்கு சாஸ்திர ஞானமும் இருந்தது. அதைவிட விவகார ஞானம் அதிகமானது. வாழ்க்கையில் எது சரி, எது சரியல்ல என்ற பார்வையின் மூலமாகத்தான் நீதியை நிலைநாட்டப் புறப்படுகிறார். சில நேரங்களில் அவரது உரைப்பாக்கள் சிந்திக்கவும் வைக்கின்றன. சர்வக்ஞர் புதிதாக எந்தத் தத்துவத்தையும் சொன்னவர் அல்ல. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் எளிமையாகச் சொல்கிறார்.

நல்லவன் இல்லாத ஊரும் கள்ளனுடன் தொடர்பும்

பொய்யன் சொல்லும் – இம்மூன்றும் சகதியில்

முள்ளை மிதித்தாற் போல் சர்வக்ஞா

என்கிறார். நாம் எந்தவிதமான மனிதர்களுடன் பழகுகிறோமோ அதே குணம் நமக்கும் வந்துவிடும். அதனால், எப்பொழுதும் நல்லவருடனான நாட்டத்துடனேயே இருக்க வேண்டும்.

ஒள்ளியருடன் இணைந்த கள்ளன் ஒள்ளியனாம்

ஒள்ளியன் கள்ளனுடன் இணையில் அவனொரு

கள்ளனே ஆவான்காண் சர்வக்ஞா

நல்லவரிடம் இருக்கிற சில குறைகளைப் பொருள்படுத்தக் கூடாது. அவர்களிடம் இருக்கின்ற நற்செய்திகளை மட்டும் காண வேண்டும் என்று கூறும்போது இப்படிக் கூறுகிறார்:

பழங்களில் வளைந்துள்ளது வாழை

பழமது சுவையில் மிகுவதுபோல் பெரியார்தம்

பிழையும் நன்மைக்கே சர்வக்ஞா

பெண்ணைப் பற்றி சர்வக்ஞர் பலவிதமான கருத்துகளைக் கூறுகிறார். நாட்டுப்புறப் பாடல்களில் வரும் கருத்துகளுடன் அதை ஒப்பிடலாம். பெண்ணின் அழகு, ஈர்ப்பு, குடும்ப வாழ்க்கை, சஞ்சல குணங்களை எல்லாம் அழகாகச் சொல்கிறார்.

மனிதருடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் முக்கியக் காரணம் வாழ்க்கையை நாம் காணும் விதம். நமது பார்வைதான் நமது சிந்தனைகளை வழிநடத்துகிறது. எல்லாவற்றையும் எல்லோரையும் பார்க்கின்ற கண்தான் நம் எல்லாச் செயல்களுக்கும் முக்கியக் காரணம்.

கண்ணினால் புண்ணியம் கண்ணினால் பாவம்

கண்ணினால் இகம் பரம் எனவே – உலகிற்கு

கண்ணே காரணம் சர்வக்ஞா

நாம் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வது கண்ணின் மூலமாகத்தான். ஐம்புலன்களில் கண்ணே சிறந்தது. கண் பார்த்ததை மனம் விரும்புகிறது. பல விஷயங்களைப் பேச்சைவிடக் கண்ணே மிகுதியும் உணர்த்துகிறது.

கண்ணைப் போலவே நாக்கைப் பற்றியும் சர்வக்ஞர் கூறுகிறார். நாம் பேசும் பேச்சு அடுத்தவர் மனதில் புண் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிட்டும்.

கத்தியால் ஆனபுண் மாயுமே

சுற்றியாடும் நாவினால் ஆனபுண் – மாயுமோ

சாகும் நாள்வரையும் சர்வக்ஞா

இது திருவள்ளுவர் சுட்டும் “தீயினாற் சுட்ட புண்’ எனும் குறளை நினைவுபடுத்துகிறது.

உடலெனும் புற்றிற்கு நாக்கே பாம்பாகும்

கடும் கோபமெனும் விடமேற தன்மை கெட்டு

மடிய நேரிடும்காண் சர்வக்ஞா

வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் கூறுகின்ற பல விஷயங்கள் சுவையாகவும் மனதில் நிற்கும்படியும் உள்ளன. கடவுள், கோயில், பக்தி, குரு முதலிய விஷயங்களைச் சொல்கிறபொழுது சர்வக்ஞருடைய கற்பனை தெளிவாக விளங்குகிறது. வாழ்க்கையில் கிட்டும் அனுபவம்தான் எல்லா நீதிகளையும்விட மிகப்பெரியது என்பது அவருடைய கருத்தாக உள்ளது.