புற்று நோயின் தீவிரத்தை தவிர்க்க…

புற்றுநோய் மெல்ல மெல்ல மரணத்தைத் தரும் கொடிய வியாதி. வாய், வயிறு, ரையீரல் என்று உடலின் எந்தப்பாகத்தையும் புற்றுநோய் பதம் பார்த்துவிடும். இந்த கொடிய வியாதியால் மரணத்தை தழுவுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்புவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்லாந்து ஆய்வாளர்கள், மேற்கு பின்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்து 560 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் அனைவரும் 42 வயதில் இருந்து 61 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களது உடல் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டதோடு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தியது தெரியவந்தது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப்புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக ரையீரல் மற்றும் இரப்பை புற்றுநோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அவை என்னென்ன பயிற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 1.மெதுவாக ஓடுவது (ஜாகிங்), 2. நீச்சல் பயிற்சி, 3. படகு ஓட்டுதல். இவற்றோடு நீங்கள் வழக்கமாக செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஸ்குவாஷ் மற்றும் கால்பந்து விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: