கூகுள் குரோம் பிரவுசரை உங்களுடையதாக்க ….

தன் அசாத்திய வேகத்தினால் பலரின் கவனத்தை ஈர்த்த குரோம் பிரவுசர், அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. பின் வாடிக்கை யாளர்களுக்கு ஏற்கனவே மற்ற பிரவுசர்களில் பழகிப் போன சில வசதிகள் இல்லாததால், தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அண்மையில் இதில் சேர்க்கப்பட்ட சில கூடுதல் வசதிகள் குரோம் பிரவுசருக்கென நிலையான சில வாடிக்கையாளர்கள் இருப்பது நமக்கு வரும் பல கடிதங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இவர்களின் விருப்பத்திற்கேற்ப அதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப் படுகின்றன.

இவற்றில் பல மற்ற பிரவுசர்களிலும் செயல்படும்.

Alt + Left Arrow: முந்தைய பக்கத்திற்குச் செல்ல

Alt + Right Arrow: அடுத்த பக்கத்திற்குச் செல்ல; இதனைப் பயன்படுத்த முந்தைய பக்கத்திற்கு ஏற்கனவே சென்றிருக்க வேண்டும்.

F5:பக்கத்தினை மீண்டும் ரீ லோட் செய்திட

Ctrl + clicking a link: வெப்சைட்டில் தரப் பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால் புதிய டேப்பில் அது திறக்கப்படும்.

Shift + clicking a link:வெப்சைட்டில் தரப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால் புதிய விண்டோவில் அது திறக்கப்படும்.

Ctrl + N: புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

Ctrl + T: புதிய டேப் ஒன்று திறக்கப்படும்

Ctrl + W: அப்போது பயன்பாட்டில் இருக்கும் டேப் மூடப்படும்.

Ctrl + Shift+N:பிரைவேட் பிரவுசிங் என்று அழைக்கப்படும் Ctrl Incognito வகையில் விண்டோ திறக்கப்படும்.

Ctrl + O அழுத்திப் பின் பைல் பெயர் கொடுத்தால் கூகுள் குரோம் பிரவுசரில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல் திறக்கப்படும்.

Alt+F4: அப்போதைய விண்டோ மூடப்படும்.

Ctrl+Shft+T : நீங்கள் கடைசியாக மூடிய டேப் திறக்கப்படும். கூகுள் குரோம் இந்த வகையில் நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய பத்து தளங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது.

Drag link to tab: வெப்சைட் ஒன்றில் தரப்படும் லிங்க்கினை இழுத்துச் சென்று ஒரு டேப்பில் விட்டால் அந்த டேப்பில் லிங்க் காட்டும் தளம் திறக்கப்படும்.

Drag link to space between tabs: லிங்க்கிற்குத் தொடர்புள்ள தளத்தினை டேப் ஸ்ட்ரிப்பில் நீங்கள் இழுத்து விடும் டேப்களுக்கு இடையே உள்ள இடத்தில் புதிய டேப் திறக்கப்படும்.

Ctrl+1 முதல் Ctrl+8 வரை: குறிப்பிடப் பட்டுள்ள எண்ணுக்கான எண்ணிக்கையில் உள்ள டேப்பிற்கு நீங்கள் செல்வீர்கள். நீங்கள் கொடுக்கும் எண் டேப்களின் வரிசையில் குறிப்பிட்ட டேப் எங்கு உள்ளது என்பதைப் பொறுத்தது.

Ctrl+9: கடைசி டேப்பிற்குக் கொண்டு செல்லும்.

Ctrl+Tab அல்லது Ctrl+PgDown: அடுத்த டேப்பிற்குக் கொண்டு செல்லும்.

Ctrl+Shift+Tab அல்லது Ctrl+PgUp: முந்தைய டேப்பிற்குச் செல்லும்.

Alt+Home: நீங்கள் அமைத்துள்ள ஹோ பேஜிற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

குரோம் அட்ரஸ் பார் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

1. அட்ரஸ் பாரில் தேடுதலுக்குண்டான சொல்லை டைப் செய்தால் உங்கள் பிரவுசருக் கென நீங்கள் அமைத்துள்ள டிபால்ட் சர்ச் இஞ்சின் இயக்கப்பட்டு தேடல் நடைபெறும்.

2. குறிப்பிட்ட தளத்திற்குண்டான முகவரியில் ‘www.’ மற்றும் ‘.com’ஆகிய வற்றிற்கு இடையே உள்ள சொல்லை மட்டும் டைப் செய்து Ctrl+Enter அழுத்தவும். முகவரி முழுவதும் தானாக அமைக்கப்பட்டு தளம் திறக்கப்படும்.

3. இணைய தள முகவரியினை டைப் செய்து Ctrl+Enter தட்டினால் தளமானது புதிய டேப்பில் திறக்கப்படும்.

4. வெப் அட்ரஸ் ஏரியாவில் குறிப்பிட்ட சொல் மட்டும் ஹைலைட் செய்யப்பட F6 அல்லது Ctrl+L அல்லது Alt+D தட்டவும்.

கூகுள் குரோம் பிரவுசரின் சில வசதிகளுக்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:

Ctrl+B:புக்மார்க்ஸ் உள்ள பாரினை காட்டவும் மறைக்கவும் செய்திடும்.

Ctrl+Shift+B:புக்மார்க் மேனேஜரைத் திறக்கும்.

Ctrl+H: ஹிஸ்டரி பேஜ் திறக்க.

Ctrl+J: டவுண்லோட் பேஜ் திறக்க.

Shift+Escape: டாஸ்க் மேனேஜரைப் பார்க்க.

Shift+Alt+T:டூல்பார் மையமாக்கப்பட்டு வலது மற்றும் இடது அம்புக்குறி கீகளை அழுத்துகையில் அதற்கேற்ப பட்டன்களுக்கு கர்சர் செல்லும்.

குரோம் பிரவுசரில் வெப் பேஜ்களுக்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:

Ctrl+P: அப்போதைய இணையப் பக்கத்தினை பிரிண்ட் செய்திட.

Ctrl+S : அப்போதைய இணையப் பக்கத்தினை சேவ் செய்திட.

F5 : அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் சர்வரில் இருந்து கொண்டு வர.

Esc:சர்வரில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் தளப் பக்கத்தை நிறுத்த.

Ctrl+F இணையப் பக்கத்தில் ஏதேனும் சொல்லைத் தேடத் தேவையான

Ctrl+G கட்டம் திறக்க.

Ctrl+Shift+G அல்லது

Shift+F3:இதே கட்டத்தில் தேடப்படும் சொல் அடுத்து உள்ள (அதே இணைய தளத்தில்) இடத்தைக் கண்டறிந்து காட்ட.

Ctrl+F5 அல்லது Shift+F5 இதே கட்டத்தில் தேடப்படும் சொல் இதற்கு முன்பு உள்ள (அதே இணைய தளத்தில்) இடத்தைக் கண்டறிந்து காட்ட.

நடுவே ஸ்குரோல் வீல் உள்ள மவுஸில் அந்த வீலை நகர்த்தினால் தானாக ஸ்குரோல் வேலை மேற்கொள்ளப்படும். மவுஸை நகர்த்தினால் அந்த தளம் அந்த திசைக்கேற்ப நகர்த்தப்படும்.

Ctrl+F5 அல்லது Shift+F5 ஏற்கனவே ஒரு தளம் இறக்கப்பட்டு கம்ப்யூட்டரின் மெமரியில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் முதலில் இருந்து தளம் இறக்கப்பட.

Ctrl+U: இணைய தளத்தின் சோர்ஸ் கோடினைப் பெற.

ஒரு வெப்சைட்டில் உள்ள லிங்க்கிற்கு புக் மார்க் அமைத்திட அந்த லிங்க்கினை புக்மார்க் பாருக்கு இழுத்துச் சென்று விட வேண்டும்.

Ctrl+D:நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டிற்கு புக் மார்க் அமைத்திட.

F11: முழுத்திரையில் இணையப் பக்கத்தினைப் பார்க்க. பின் மீண்டும் முழுத் திரையிலிருந்து விலகி வழக்கமான முறையில் பார்க்க.

Ctrl++ அல்லது Ctrl and scroll mousewheel up: வெப்சைட்டில் உள்ள அனைத்தையும் பெரிது படுத்திப் பார்க்க.

Ctrl+ அல்லது Ctrl and scroll mousewheel down: வெப்சைட்டில் உள்ள அனைத்தையும் சிறியதாக்கிப் பார்க்க.

Ctrl+0: இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தையும் நார்மல் அளவிற்குக் கொண்டு வர.

நீங்கள் அடிக்கடி உங்கள் ஹோம் பேஜில் உள்ள தளத்திற்குச் சென்று அதனைக் காண விரும்புபவரா? அப்படியானால் அதனை ஒரே கிளிக்கில் கிடைக்கும்படியான பட்டனை கூகுள் குரோம் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options” தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options” டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Basics”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Home page”என்பதற்குக் கீழாக “Show Home button on the toolbar”என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

5. “Close”கிளிக் செய்து டயலாக் பாக்ஸினை மூடவும்.

டவுண்லோட் செய்யப்படும் பைல்கள்

கூகுள் குரோம் பிரவுசர் வழியாக டவுண்லோட் செய்யப்படும் பைல்கள், பிரவுசரால் டிபால்ட்டாக ஏற்படுத்தப்பட்ட போல்டரில் தான் சேவ் செய்யப்படும். “Documents” போல்டரில் “Downloads” டைரக்டரியில் தான் இவை சேவ் செய்யப்படுகின்றன.

நாம் டவுண்லோட் செய்யப்படும் பைலின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் சேவ் செய்திட விரும்புவோம். இதற்கு பிரவுசர் நம்மிடம் இந்த டவுண்லோட் செய்யப்படும் பைலை எங்கு சேவ் செய்திட என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டால்தான் சரிப்படும். அப்போது நாம் விரும்பும் டிரைவ் மற்றும் போல்டரின் பெயரை டைப் செய்திட முடியும். திரைப்பட பைல்கள் என்றால் Movies என்று ஒரு டைரக்டரியிலும், ஆடியோ பாடல்கள் என்றால் Songs என்னும் டைரக்டரியிலும், அப்ளிகேஷன் புரோகிராம் என்றால் சாப்ட்வேர் என்னும் டைரக்டரியிலும் எனப் பிரித்து டவுண்லோட் செய்திடலாம்.

இதற்கான டயலாக் பாக்ஸ் கிடைத்திடக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options”தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options”டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Minor Tweaks”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Download Location” என்பதற்குக் கீழாக “Ask where to save each file before downloading” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

பயர்பாக்ஸ் தளத்தை குரோம் பிரவுசரில் பார்க்க:

சிலர் இரண்டு பிரவுசரகளைத் திறந்து வைத்து இரண்டின் மூலமாகவும் இணைய தளங்களைப் பார்வையிடுவார்கள். குரோம் மற்றும் பயர்பாக்ஸில் பார்த்துக் கொண்டிருந்தால், பயர்பாக்ஸில் குறிப்பிட்ட டேப்பினை அப்படியே இழுத்து வந்து குரோம் பிரவுசரில் விட்டால் இங்கு புதிய டேப்பில் அந்த தளம் திறக்கப்படுவதனைக் காணலாம். யு.ஆர்.எல். முகவரி எல்லாம் தனியே காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் வேலையே வேண்டாம். இதற்கு பயர்பாக்ஸ் டேப் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று இடது பட்டனை அழுத்தியவாறு அப்படியே இழுத்து வந்து குரோம் பிரவுசரில் விட்டுவிடலாம்.

இதற்கு முன்கூட்டியே குரோம் பிரவுசரில் புதிய டேப் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பது நல்லது. இல்லாமல் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் டேப் ஒன்றில் விட்டால் அதில் உள்ள தளம் மறைந்து போகும்.

குரோம் பிரவுசரை டிபால்ட் பிரவுசராக்க:

குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடும்போதே அதனை உங்கள் டிபால்ட் பிரவுசராக அமைத்திடவா என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது யெஸ் அழுத்திவிட்டால் அப்போதிருந்து நீங்கள் லிங்க் ஒன்றை அழுத்தினால் குரோம் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த தளம் லோட் ஆகும். இன்ஸ்டால் செய்கையில் இதற்கு வேண்டாம் சொல்லி பிரவுசரை அமைத்துவிட்டீர்கள். பின் இதன் பயன்பாட்டினால் ஈர்க்கப்பட்டு அதனை டிபால்ட் பிரவுசராக அமைத்துக் கொள்ள விரும்பினாலும் அதனை அவ்வாறாக அமைக்கலாம்.

1. Tools பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2. “Options”தேர்ந்தெடுங்கள்.

3. “Google Chrome Options” டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் “Basics”என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இதில் “Default browser” என்பதற்குக் கீழாக “Make Google Chrome my default browser” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

5. “Close”கிளிக் செய்து டயலாக் பாக்ஸினை மூடவும்.

ஒவ்வொரு டேப்பின் மெமரி அளவைக் காண:

குரோம் பிரவுசரில் பல டேப்களில் தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். இந்த டேப்பில்திறக்கப்படும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு அளவினாதாக இருக்கும். ஒரு சில ஒரு ஸ்கிரீனில் அடங்கி விடுவதாக இருக்கும். சில பல பக்கங்களைக் கொண்டதாகவும், நீளமானதாகவும் இருக்கும். இவை உங்கள் கம்ப்யூட்டர் மெமரியில்தான் இடம் பிடித்து உங்களுக்குக் காட்சி அளிக்கின்றன. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு டேப்பில் உள்ள தளங்களும் மெமரியில் எவ்வளவு இடத்தைப் பிடிக் கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

மிக அதிகமான தகவல்களைக் கொண்டுள்ள தளத்தினைக் காண்கையில் இதனை அறிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் அத்தகைய வேளைகளில் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சினையின் தன்மையை உணர்ந்து சரி செய்திட அவற்றின் மெமரி அளவைத் தெரிந்து கொள்வது உதவும்.

கூகுள் குரோம் இதற்கென பிரவுசர் மற்றும் அதில் உள்ள டேப்கள் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தை அறிய டாஸ்க் மேனேஜர் ஒன்றைக் கொண்டுள்ளது. இதனைப் பெற கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும்.

1.கூகுள் குரோம் விண்டோவின் மேல் பகுதியில் ரைட் கிளிக் செய்து “Task Manager” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. பின் Shift + Escஅழுத்தவும்.

3. பின் “Control the Current Page” என்ற பட்டனை அழுத்தவும். அதன்பின் “Developer” என்பதில் கிளிக் செய்து “Task Manager”என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டாஸ்க் மேனேஜர் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இப்போது பிரவுசர் மற்றும் ஒவ்வொரு டேப்பும் எடுத்துக் கொள்ளும் மெமரியின் அளவுகள் அடங்கிய அடிப்படைத் தகவல்கள் உள்ள கட்டம் கிடைக்கும். இன்னும் அதிகத் தகவல்கள் வேண்டும் என்றால் Stats for nerds என்ற பட்டனை அழுத்தவும். இதனை யு.ஆர்.எல். பாரில் about:memory என்பதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பெறலாம். இங்கு பிரவுசர் மற்றும் ஒவ்வொரு டேப்பும் எடுத்துக் கொள்ளும் மெமரி மற்றும் சார்ந்த செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம்.

%d bloggers like this: