வேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…

எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது. இது இருக்கட்டும்; எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, வெர்டனா எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று ஒருவர் கொடுக்க அது This is not a valid number என்று ஒரு எர்ரர் மெசேஜ் கொடுத்து அவரைக் கவிழ்த் தது. எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl +D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் குஞிச்டூஞு என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.

புதிய போல்டரில் டாகுமெண்ட்: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போதுதான் அதனைத் தனியாக ஒரு போல்டரில் வைத்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். இதற்கென மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து அங்கு புதிய ஒரு போல்டரை உருவாக்கிப் பின் மீண்டும் டாகுமெண்ட் வந்து போல்டரைத் தேடித் திறந்து சேவ் செய்திட வேண்டியதில்லை. டாகுமெண்ட் வேலை முடிந்தவுடன் Ctrl + S அழுத்தவும். பின் Alt +5 அல்லது Create New Folder பட்டனை அழுத்தவும். போல்டரின் பெயர் கேட்டு ஒரு கட்டம் கிடைக்கும். இதில் போல்டருக்கு ஒரு பெயர் கொடுத்து எண்டர் அழுத்தவும். பின் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து என்டர் அழுத்த புதிய போல்டரில் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும்.
எங்கே உள்ளது என் கிராபிக்ஸ்?: வேர்டில் பல பக்கங்கள் கொண்ட டாகுமெண்ட் ஒன்றை டெக்ஸ்ட், படங்கள், சார்ட்கள் மற்றும் கிராபிக்ஸ் படங்கள் ஆகியவற்றுடன் அமைக்கிறீர்கள். திடீரென ஒரு குறிப்பிட்ட கிராபிக்ஸ் படம் ஒன்றில் சிறிய மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணுகிறீர்கள். அல்லது சார்ட் ஒன்றுக்குக் கொடுத்த தலைப்பினை மாற்றி அமைக்க முடிவெடுக்கிறீர்கள். போட்டோ ஒன்றை மாற்றி இன்னொன்றை பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்கள். ஆனால் அது எங்கே உள்ளது என்று தெரியவில்லை. பிரிண்ட் பிரிவியூ போனால் அனைத்து பக்கங்களின் சிறிய உருவம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சரியாகக் கண்டறிய முடிவதில்லை. இங்குதான் இன்னொரு வசதியினை வேர்ட் தருகிறது. இந்த வசதி மூலம் எத்தனை பக்கங்களை வேர்ட் சுருக்கிக் காட்ட முடியுமோ அத்தனை பக்கங்களை ஒரு பக்கத்தில் காட்டும். அப்படி பக்கத் தோற்றங்களைக் காட்டுகையில் நம் படம், சார்ட், போட்டோ போன்றவற்றை அவை எங்கிருக்கின்றன என்று பார்த்து எடிட் செய்திடலாம். இதற்கு முதலில் சம்பந்தப் பட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறக்கவும். பின் மெனு பாரில்
“Zoom” பிரிவைக் கிளிக் செய்து அதில் “Zoom” என்ற பிரிவில் என்டர் அழுத்தவும். பின்
“Zoom” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்றாலும் தெரியும்படி காட்டுமாறு செய்திடலாம். அதற்காக Many Pages என்ற பிரிவில் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறு செய்தால் எத்தனை பக்கங்கள் ஒரு திரையில் கொள்ளுமோ அத்தனை பக்கங்களின் தோற்றம் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நல்லது என்று எண்ணினால் இந்த விண்டோவில் Many Pages என்பதற்குக் கீழ் தெரிகிற சிறிய மானிட்டர் ஐகானில் அம்புக்குறியில் கிளிக் செய்தால் பக்கங்களுக்கான ஐகான்கள் ஆறு தெரியும். இதில் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அத்தனை பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
பைல்களைக் கண்டு திறக்க: பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து வேலை பார்க்கையில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் டாஸ்க் பாரில் ஏற்படுத்தப்படும். அதில் சம்பந்தப் பட்ட அப்ளிகேஷனுக்குரிய ஐகானும் பைலின் பெயரும் இருக்கும். அதனைப் பார்த்து நாம் எந்த பைல் வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து திறக்கலாம். ஆனால் ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறக்கையில் அவை குரூப்பாகக் காட்டப்படும். பைலின் பெயர் தெரியாது. ஒவ்வொரு முறையும் இந்த குரூப் ஐகானில் கிளிக் செய்து மேலே எழும் பட்டியலில் பைலின் பெயரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஒரு வழியாக ஆல்ட் + டேப் கீகளை அழுத்தலாம். வேர்ட் ஐகான்களோடு பைலின் பெயர் திரை நடுவில் தெரியும். அதனைக் கொண்டும் டாகுமெண்ட்டுகளுக்கிடையே ஊர்வலம் போகலாம். இவை எல்லாம் திறந்திருக்கும் பைல்களை உடனே காட்டாது. ஐகான்கள் அல்லது டாஸ்க்பாரின் கட்டங்கள் சென்று கிளிக் செய்திட வேண்டும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் + எப்6 அழுத்தினால் ஒவ்வொரு டாகுமெண்ட்டாக நாம் திறந்து பணியாற்றிய நிலையில் உடனுடக்குடன் தோன்றும்.
ரூலரில் அளவு அலகை மாற்ற: வேர்ட் தொகுப்பில் ரூலரை ஒரு சிலர் மிகவும் கர்ம சிரத்தையாகப் பயன்படுத்துவார்கள். அவை தரும் அளவுபடி படங்களை, கட்டங்களை, அட்டவணைகளை அமைப்பார்கள். பொதுவாக வேர்ட் தொகுப்பில் ரூலர்கள் அங்குல அளவில் தான் தரப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்து ஆட்களுக்குச் சரிப்பட்டு வராது. சென்டி மீட்டரிலேயே அனைத்தையும் அளந்து வரைந்து பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக ரூலர் சென்டி மீட்டரில் வேண்டும் என்றால் என்ன செய்வது? எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? தேவையே இல்லை.
அங்குலத்தில் உள்ள ரூலரை எப்படி சென்டிமீட்டருக்குக் கொண்டுவருவது? முதலில் ரூலரை எப்படி பெறுவது?
முதலில் View menu மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ரூலர் கோடு கிடைக்கும். இனி Tools மெனு சென்று Options என்னும் பிரிவில் கிளிக் செய்தால் டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் General என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக “measurement units” ” என்னும் பீல்ட் தரப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி ரூலர் நீங்கள் விரும்பிய அளவு அலகுகளில் கிடைப்பதால் அதனை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.
வேர்டில் தேதியும் நேரமும் : வேர்ட் டாகுமெண்ட்டில் தேதி மற்றும் நேரத்தினை அமைக்க ஒவ்வொருவரும் ஒரு மாதிரி டைப்பில் எதிர்பார்ப்பார்கள். டிபால்ட்டாக வேர்ட் பதியப்படுகையில் செட் செய்யப்பட்ட வகையில் தான் நாம் தேதி அல்லது நேரத்தினை இன்ஸெர்ட் செய்கையில் அமையும். இதனை நம் விருப்பப்படி மாற்றலாம்.

1. டாகுமெண்ட்டில் இருக்கையில் மெனுவில்

Insert

தேர்ந்தெடுத்து

‘Date and Time’

என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2.

Date and Time’

டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் இடது பக்கம் பல்வேறு வகை

களில் தேதி மற்றும் நேரம் அமைக்கும் வழிகள் காட்டப்படும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3.எப்போதும் இதே வகையில் தேதியும் நேரமும் அமைய வேண்டும் என்றால்

Default

என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். டாகுமெண்ட்டில் தேதி அச்சடிக்க: வேர்ட் தொகுப்பில் பெரிய அளவில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் அதில் அந்த டாகுமெண்ட் தயாரான தேதியினையும் சேர்த்து அச்சடிக்க எண்ணுவோம். ஏனென்றால் டாகுமெண்ட்டில் பிழைகளைப் பார்க்க எண்ணுபவர்கள் அச்சில் எடுக்கப் பட்ட டாகுமெண்ட்களையே பார்க்க எண்ணுவார்கள். அப்போது திருத்தங்களை அடுத்து எந்த காப்பி அச்செடுக்கப்பட்டது என்பதன நாம் தேதி வைத்துத்தான் கண்டறிய முடியும். தேதியைக் கொண்டு நாம் அந்த குறிப்பிட்ட அச்சுப் பிரதி எந்த திருத்தத்தின் பின் எடுக்கப்பட்டது என அறிய முடியும். தேதியை பக்கங்களில் டைப் செய்திட 1. டாகுமெண்ட்டைத் திறந்து மெனு பாரில்

Insert

என்பதில் கிளிக் செய்திடவும். பின் இதில்

Field

என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2.

Field

டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில்

Field Names

என்பதற்குக் கீழாக ஸ்குரோல் செய்து போனால்

Print Date

என்று ஒரு பீல்டு இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

3. பின்

Date Formats

என்பதற்குக் கீழாக தேதி/நேரம் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து இந்த டயலாக் பாக்ஸை மூடவும். இதன் மூலம் உங்களுடைய டாகுமெண்ட்டில் பீல்டு ஒன்று திறக்கப்படும். இதில் எப்போதெல்லாம் பிரிண்ட் எடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் டேட் அப்டேட் செய்யப்பட்டு அச்சாகும்.

One response

  1. […] வேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…1 […]

%d bloggers like this: