கிராமப்புறங்களுக்கான வயர்லெஸ் இன்டர்நெட்

ஐந்து லட்சம் இந்தியக் கிராமங்களை இலக்காகக்கொண்டு வயர்லெஸ் இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினை ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி இந்த இன்டர்நெட் சேவை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் மொபைல் போன்க ளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13 கோடியை நெருங்கி வருகிறது. அடுத்து மொபைல் போன் வளர்ச்சியின் பெரும்பகுதி கிராம மக்களிடையே தான் ஏற்படும். இதனால் மொபைல் வழி பல கூடுதல் மதிப்பு கொண்ட சேவைகள் வழங்குவதில் பல சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. ரிலையன்ஸ் இவற்றைச் சமாளிக்கும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இன்டர்நெட் சேவையினை வழங்கிட தற்போது மூன்று புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

பாரத் நெட் பிளான் என்னும் அதிவேக இன்டர்நெட் சர்வீஸ் திட்டம் ஏறத்தாழ 20 ஆயிரம் கிராமங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்கு வாரம் ஒன்றுக்கு ரூ. 98 கட்டணமாகும்.
கிராமீன் வி.ஏ.எஸ். என்னும் திட்டம் சந்தையில் பொருட்கள் விலை, விவசாயம் குறித்த செய்திகள், கால்நடை வளர்ப்பு சார்ந்த தகவல்கள், பருவநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்கும். இவை பெரும்பாலான இந்திய மொழிகளிலும் தரப்படும்.

எம்2எம் (M2M) அப்ளிகேஷன்கள் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும். தண்ணீர் மட்ட கட்டுப்பாடு, பால் மற்றும் வேளாண்மை சங்கங்களுக்கான தகவல் பரிமாற்றம், மீன் மற்றும் கோழி வளர்ப்பு, மண் பரிசோதனை ஆகியவற்றிற்கான தகவல்களும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

ஒரு மறுமொழி

%d bloggers like this: