முப்பரிமான வடிவம் தரும் கூலிரிஸ்

உங்களுடைய இன்டர்நெட் பிரவுசிங் அனுபவத்திற்குக் கூடுதலான மசாலா சேர்க்க விரும்புகிறீர்களா? அதிக ஆர்வத்துடன் நாம் இன்டர்நெட் வெப் சைட்களில் பார்ப்பது, படங்க<ள், கிராபிக்ஸ் தோற்றங்கள், வீடியோ மற்றும் கேம்ஸ் விளையாட்டுக்கள். நம் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் இவற்றிற்கு முப்பரிமாண தோற்றம் தந்து, முற்றிலும் புதிய முறையில் இவற்றைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்த ஒரு ஆட் ஆன் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் இணிணிடூடிணூடிண். இதன் மூலம் மல்ட்டி மீடியாவைக் காண்பது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.

1. இதனை இயக்கிப் பார்க்க, நீங்கள் இன்டர் நெட் பிரவுசிங் செய்திட, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.
2. http://www.cooliris.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று கூலிரிஸ் ஆட் ஆன் தொகுப்பிற் கான புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும்.
3. இந்த ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் பயர்பாக்ஸினை இயக்கவும்.
4. இப்போது பயர்பாக்ஸ் திரை வித்தியாசமாக அமைந்திருக்கும்.
5. பயர்பாக்ஸ் கிடைத்தவுடன் அதன் டூல் பாரின் மேல் வலது மூலையில் கூலிரிஸ் ஐகான் அமைந்திருக்கும். அதில் கிளிக் செய்திடவும்.
6. கூலிரிஸ் இன்டர்பேஸ் திறக்கப்படும். இதில் மூன்று பிரிவுகளைக் காணலாம். மெனு, சர்ச் மற்றும் கீழாக ஸ்குரோல் என மூன்று பிரிவுகள் கிடைக்கும்.
7. இனி சர்ச் பாக்ஸ் சென்று உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோவினைத் தேடிப்பாருங்கள். அதே போல படங்களையும் தேடிப் பாருங்கள். எல்லாமே தம்ப்நெயில் படங்களாகக் காட்சி அளிக்கும். அதிலிருந்து தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். படம் காட்டப்படும்.
8. பேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற தளங்களுடனும் இதனைப் பயன்படுத்தலாம். எந்த தளங்களில் இது செயல்படும் என்பதனை http://www.cooliris.com/product/supported என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.
9. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயர்பாக்ஸை இயக்கி, அதில் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்கள் இருக்கும் பைல்கள் உள்ள போல்டருக்குச் செல்லுங்கள். அனைத்தும் தம்ப் நெயில் படங்களாக, பிலிம் ஸ்ட்ரிப் போலக் காட்டப்படும். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைக் கிளிக் செய்தால் அந்த படம் முன்வந்து உங்களுக்குத் திரையில் காட்டப்படும்.

10. இது எப்போதும் இயக்கத்தில் இருக்காது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து நீங்கள் வழக்கம்போல டேப் பிரவுசிங் செய்யலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பு வேண்டும் என்றால் மட்டும் இயக்கிப் பார்க்கலாம். இதனைக் கம்ப்யூட்டரிலிருந்து எடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை. பயர்பாக்ஸ் மெனுவிலிருந்து டூல்ஸ், ஆட் ஆன் கிளிக் செய்தால் உங்கள் சிஸ்டத்தில் பயர்பாக்ஸ் தொகுப்பிற்கென இணைக்கப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். அதில் இந்த பிரிவைத் தேர்ந்தெடுத்து, பின் அன் இன்ஸ்டால் கொடுத்தால் உடனே இது நீக்கப்படும். எனவே தைரியமாக இதனை இன்ஸ்டால் செய்து சோதனை செய்து பார்க்கலாம்; பிடித்திருந்தால் சிஸ்டத்தில் வைத்துக் கொண்டு இயக்கலாம்; இல்லையேல் நீக்கலாம்.

%d bloggers like this: