உலக வரைபடத்தில் உங்கள் ஊரின் இடம், நேரம்

உலகின் எந்த மூலையிலும் உள்ள ஊர்களின் அப்போதைய நேரம், உலக வரை படத்தில் அதன் இடம், அந்த ஊரின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை, எந்த நாடு என அனைத்து தகவல்களையும் மிகக் குறைந்த நேரத்தில் காட்டும் இணைய தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. உசிலம்பட்டியில் இருந்து ஒரு வாசகர், அவர் ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகையினை உடனே அறிவதற்கான இணைய தளம் உள்ளதா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கான ஆசையினை நிறைவேற்றும் இணைய தளத்திற்காகத் தேடிய போது இந்த தளம் கிடைக்கப் பெற்றது. http://worldtimeengine.com/about என்ற முகவரியில் உள்ள தளம் தரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன.
ஒரே நேரத்தில் நீங்கள் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்ற ஊரின் நேரத்தை அறியலாம்.எடுத்துக் காட்டாக சென்னை,லண்டன்,மாஸ்கோ (Chennai and London and Moscow) எனக் கொடுத்து நேரம் அறிய எணி என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே இந்த மூன்று ஊர்களின் சாட்டலைட் படம் மேப்பாகக் காட்டப்படுகிறது. நீங்கள் கேட்கும் ஊரின் மேலாக அடையாளம் காட்டப்படுகிறது. படத்திற்கு மேலாக ஊர் பெயர், ஊர் உள்ள நாடு, அது காலையா அல்லது மாலையா, இரவா எனக் காட்டி அப்போதைய நேரம், கிழமை மற்றும் தேதி காட்டப்படுகிறது. கீழாக சாட்டலைட் மேப் தரப்படுகிறது. மேப்பில் அந்த ஊரின் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் சீதோஷ்ண நிலை காட்டப்படுகிறது. வழக்கம்போல் கூகுள் மேப்பில் ஸூம் செய்வது போல இதனையும் ஸூம் செய்து காணலாம். மூன்று வகை மேப்பினையும் காணலாம்.

இது பன்னாட்டளவில் பல ஊர்களுக்கு தொலைபேசி அல்லது இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த ஊர்களின் அப்போதைய நேரத்தைத் தெரிந்து செயல்பட உதவும். சரி, விஷயத்திற்கு வரவும். உசிலம்பட்டி என்ற ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை என்ன என்று சொல்லவில்லையே என்று திட்டாதீர்கள்.
இதோ அவை: Latitude (அட்சரேகை): 9.9689450 degrees, Longitude (தீர்க்க ரேகை) 77.7876820 degrees. நீங்களும் உங்கள் ஊரின் ரேகைகளைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

%d bloggers like this: