எக்ஸெல் + கண்ட்ரோல் – எக்ஸெல் டிப்ஸ்… டிப்ஸ்…

எக்ஸெல் தொகுப்பில் கண்ட்ரோல் கீகள் மற்ற கீகளுடன் இணைந்து, ஷார்ட் கட் கீ தொகுப்பாக என்ன செயல்பாட்டினைத் தரும் என்பதனைப் பார்க்கலாம்.
Ctrl+A: அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்
Ctrl+B: எழுத்துக்களை போல்ட் (அழுத்தமானதாக) ஆக மாற்றும்
Ctrl+C: தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திடும்
Ctrl+D: செல்லில் நிரப்பும் பில் கட்டளைக்கு
Ctrl+F: ஏதேனும் ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பைண்ட் செயல்பாடு
Ctrl+G: கோ டு (Go To) கட்டம் கிடைக்கும்.
Ctrl+H: ரீபிளேஸ் என்ற கட்டளைக்கான கீகள்
Ctrl+I: தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை இடாலிக் எனப்படும் சாய்வாக மாற்றும்
Ctrl+K: ஹைப்பர்லிங்க் இடைச் செருகும்
Ctrl+N: புதிய ஒர்க் புக்கைக் கொண்டு வரும்
Ctrl+O: புதிய பைலைத் திறப்பதற்கான கீகள்
Ctrl+P: பிரிண்ட் கொடுப்பதற்கான கட்டளை தர
Ctrl+R: பில் ரைட் (Fill right) கட்டளை: இடது பக்கம் இருக்கும் செல்லின் மதிப்பை அப்படியே வலது புறமாக பில் அப் செய்திடும்.
Ctrl+S: பைலை சேவ் செய்திடும்
Ctrl+U: தேர்ந்தெடுத்த டேட்டாவின் கீழே கோடு அமைக்க
Ctrl+W: பைலை மூட
Ctrl+X: கட் கட்டளை; தேர்ந்தெடுத்த சொல்லை நீக்கி கிளிப் போர்டு கொண்டு செல்ல
Ctrl+Y: அப்போது நீக்கியதை மீண்டும் கொண்டு வர
Ctrl+Z: முன் செய்த செயலின் விளைவுகளை நீக்கி, முந்தைய நிலைக்குக் கொண்டு வர
Ctrl+1: பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸ் கொண்டுவர
Ctrl+2: போல்ட் என்ற அழுத்தமாக டேட்டாவினை அமைக்க
Ctrl+3: இடாலிக் எனப்படும் சாய்வாக டேட்டா அமைக்க
Ctrl+4: அடிக்கோடிட
Ctrl+5: குறுக்காக கோடிட
Ctrl+6: ஆப்ஜெக்ட் மறைக்கவும், காட்டவும் மேற்கொள்ளக் கூடிய டாகிள் கீ
Ctrl+7: ஸ்டாண்டர்ட் டூல் பாரினைக் காட்டவும், மறைக்கவும்
Ctrl+8: அவுட்லைன் அடையாளங்களைக் கொண்டுவர, மறைக்க
Ctrl+9: படுக்கை வரிசைகளை (Rows) மறைக்க
Ctrl+10: நெட்டு வரிசைகளை (Columns) மறைக்க
Ctrl+Shft+(: மறைத்த படுக்கை வரிசைகளை (Rows) மீண்டும் காட்ட
Ctrl+Shft+): மறைத்த நெட்டு வரிசைகளை (Columns) மீண்டும் காட்ட

எப்போதும் நினைவில் கொள்ள :
வலமிருந்து இடமாக ஒவ்வொரு செல்லாகச் செல்ல Tab தட்டவும்.
மேலும் கீழுமாகச் செல்களுக்குச் செல்ல Enter அழுத்தவும்.
Backspace அழுத்தினால் அப்போது உள்ள செல்லில் காணப்படும் தகவல்கள் அழிக்கப்படும்.
நீங்கள் இருக்கும் வரிசையில் முதல் இடத்திற்குச் செல்ல Home அழுத்தவும்.
Ctrl + ; (செமிகோலன்) கீகளை அழுத்த சிஸ்டத்தில் உள்ள அன்றைய தேதி பதியப்படும்.
Ctrl + Shift + : (கோலன்) கீகளை அழுத்த அப்போதைய சிஸ்டம் நேரம் பதியப்படும்.
ஒரு பார்முலாவைத் தொடங்க = (equal sign) அழுத்தவும்.
F7– செல்லில் உள்ள தலைப்பு மற்றும் சொற்களில் ஸ்பெல்லிங் பிழைகள் உள்ளதா என அறிய F7அழுத்தவும்.
அச்சில் செல்லை கட்டம் கட்ட எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்டைப் பிரிண்ட் எடுக்கையில் செல்களில் உள்ள டேட்டாவினைச் சுற்றி உள்ள கட்டமும் அச்சிடப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களா! கீழே கொடுத்துள்ளபடி செட் செய்தால் கட்டம் அச்சாகும்.
எங்கெல்லாம் செல்களைச் சுற்றிலும் மற்றும் குறுக்காகவும் பார்டர் வர வேண்டும் என திட்டமிடுகிறோமோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதன்மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் Format Cells என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் எப்படி எல்லாம் கோடுகள் வேண்டும் என்பதற்கேற்ப ஆப்ஷன் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேற வேண்டும். அச்சில் கோடுகள் அதன்பின் கிடைக்கும்.

எக்ஸெல் இன்ஸெர்ட் பங்சன்:
எக்ஸெல் தொகுப்பில் ஏதேனும் ஒரு செல்லில் Formula ஒன்றை அமைக்க வேண்டும் என்றால் பார்முலாவினை டைப் செய்திடாமல் அதற்கான Insert பங்சனைக் கையாளலாம். மெனு பார் சென்று அதில் Insert அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Function பிரிவைக் கிளிக் செய்தால் காட்டப்படும் விண்டோவில் தேவையான பார்முலாவினையும் செல்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதனை கீ போர்டிலிருந்து கையெடுத்து மவுஸை இங்கும் அங்கும் நகர்த்தி இந்த பணியினை மேற்கொள்கிறோம். அதற்குப் பதிலாக கர்சரைச் சம்பந்தப்பட்ட செல்லில் வைத்துவிட்டு Shift+F3 கீகளை அழுத்தினால் போதும். இன்ஸெர்ட் பங்சன் விண்டோ கிடைக்கும்.

வரிசைகளை மொத்தமாகத் தேர்ந்தெடுக்க எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (Column) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை (Ctrl + Spacebar) அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.

கீ போர்டைப் பாருங்கள்
நாம் வேகமாக டைப் செய்திடுகையில் சில வேளைகளில் அனைத்து எழுத்துகளும் தவறாக டைப் செய்யப்படும். காரணம்? கீ போர்டில் நம் விரல்கள் வழக்கமாக இல்லாமல் ஒரு கீ இடது பக்கமோ, வலது பக்கமோ தள்ளி இருக்கலாம். இதனைத் தவிர்த்து, எப்போதும் சரியாக இருக்க, உங்கள் கீ போர்டில் ஒரு வழி தரப்பட்டுள்ளது. கீ போர்டில் உள்ள ஜே மற்றும் எப் எழுத்துக்கான கீகளைப் பார்த்து இரண்டு ஆட்காட்டி விரல்களாலும் ஸ்பரிசித்துப் பாருங்கள். சிறிய மேடு ஒன்று இரண்டிலும் தட்டுப்படுகிறதா? வேகமாக டைப் செய்பவர்கள் மற்றும் முறையாக டைப் ரைட்டிங் கற்றுக் கொண்டவர்கள் மானிட்டரைப் பார்த்துத்தான் டைப் செய்திடுவார்கள். இவர்கள் கீ போர்டில் விரல்களைச் சரியான கீகளில் வைத்துத்தான் தாங்கள் டைப் செய்கிறோம் என்பதனைக் கீ போர்டைப் பார்க்காமலேயே உணர்ந்து கொள்ள இந்த இரண்டு கீகளிலும் சிறிய மேடு தரப்பட்டுள்ளது. இதை இரண்டு ஆட்காட்டி விரல்களும் உணர்ந்தால் உங்கள் விரல்கள் சரியான முறையில் கீகளைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன என்று பொருள்.

%d bloggers like this: