கவனிக்கலாமா கீ போர்டை!

தினந்தோறும் தான் கீ போர்டை நாம் கவனித்துப் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையாகக் கவனிக்கப் போகிறோம் என்று எண்ணுகிறீர்களா. பல புரோகிராம்களை நம் இஷ்டப்படி செட் செய்கிறோம். எம்.எஸ். ஆபீஸ், இணைய பிரவுசர்கள் என எதனை எடுத்தாலும் ஷார்ட் கட் கீகள் கொடுத்து நம் விருப்பத்திற்கேற்றபடி ட்யூன் செய்கிறோம். ஆனால் கீ போர்டை ஏதாவது செய்து, நமக்கு வசதியாக மாற்ற வழிகள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு ஏற்படுவதில்லை. ஆனாலும் கீ போர்டையும் நமக்கு ஏற்றபடி சற்று மாற்றி அமைத்து செட் செய்திட முடியும். அவற்றை இங்கு காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இதற்கான பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காணலாம்.

முதலில் Start கீ அழுத்தி பின் கிடைக்கும் மெனுவில் தேர்ந்தெடுத்து Control Panel செல்லவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் சிஸ்டம் சார்ந்த பல பிரிவுகள் கிடைக்கும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பிக்கு முந்தையதாக இருந்தால் Printers and Other Hardware என்னும் ஐகானிலும் விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால் Keyboard என்னும் ஐகானிலும் கிளிக் செய்திடவும். உடன் Keyboard Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Speed என்னும் டேபை அழுத்த கிடைக்கும் பிரிவுகளில் Character Repeat என்ற பிரிவினைக் காணவும். இதில் கொடுத்துள்ள நீள அளவைக் கோட்டில் Slow மற்றும் Fast என இரண்டு அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்துகையில் அந்த கீக்கான எழுத்து எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக திரையில் அமைக்கப்படவேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். குடூணிதீ என்பதனை நோக்கி அதில் உள்ள அளவுக் கோட்டினை இழுத்து அமைத்த பின் கீழே தரப்பட்டிருக்கும் நீள செவ்வகக் கட்டத்தில் எவ்வளவு மெதுவாக என்பதை ஒரு கீயை அழுத்திப் பார்த்து சோதனை செய்து கொள்ளலாம். பின் Slow மற்றும் ஓகே அழுத்தி வெளியேறலாம்.

இதன் பின் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்தினால் அதற்கான எழுத்துக்கள் மெதுவாக டெக்ஸ்ட்டில் அமையும். ஆனால் ஒரு கீயை அழுத்துகையில் மட்டுமல்ல, தொடர்ந்து வேகமாக இதுவரை டெக்ஸ்ட் டைப் செய்து பழக்கப்பட்டவர்கள் இப்போது சிறிது மெதுவாக டெக்ஸ்ட் டைப் ஆவதை உணர்வீர்கள். மேலும் ஒரு வரியை வேகமாக அழிக்க வேண்டும் என எண்ணி பேக் ஸ்பேஸை அழுத்த்த்துவீர்கள்; ஆனால் உங்கள் வேகத்திற்கு இடம் கொடுக்காமல் மேலே சொன்னபடி மெதுவாகவே அழிக்கப்படும். அப்போது ஏண்டா இதனை மெதுவாக அமைத்தோம் என வருத்தப்படுவீர்கள்.

இதே அமைப்பில் இன்னொரு விஷயத்தையும் மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டரில் செயலாற்றுகையில் செயலின் இதயத் துடிப்பைப் போல மின்னி மின்னி நமக்கு போக்கு காட்டுவது கர்சரின் துடிப்பே. இந்த துடிப்பினையும் வேகமாக இருக்கவேண்டுமா அல்லது மெதுவாக இருக்க வேண்டுமா என்பதனையும் இதே விண்டோவில் மேற்கொள்ளலாம். None / Fast என்ற இரு அளவுகளில் ஏதேனும் ஒரு நிலையில் அளவு கோட்டினை அமைக்கலாம். கர்சர் எப்படி துடிக்கும் என்பதனை அருகில் காட்டப்படும் கர்சர் துடிப்பதனைக் கொண்டு உணரலாம். நாம் விரும்பும்படி இதனையும் அமைத்துவிட்டு அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியே வரலாம்.
கீ போர்டு அது அமரும் இடத்துடன் பதிந்து அமர்ந்து இருப்பது நம் விரல்களின் இயக்கத்தை அதன் போக்கில் விடாமல், கஷ்டப்படுத்துவதாக இருக்கலாம். அதற்குப் பதிலாக அது சற்று உயர்ந்திருந்தால் நமக்கு வசதியாக இருக்கும். இதற்காகவே கீ போர்டின் பின்புறம் மேலாக இரு கிளிப்கள் தரப்பட்டிருக்கும். இதனை எடுத்து நீட்டி, உயர்த்தி வைக்கலாம். சற்று உயர்ந்த நிலையில் டைப் செய்வது எளிதாக இருக்கும்.

%d bloggers like this: